கேரளத்தில் 3 ராமர் கோவில்கள்!- PART 24 (Post No.12,800)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,800

Date uploaded in London – –  –  5 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 24

கோவில் எண்கள்- 26,27

கேரளத்தில் 3 ராமர் கோவில்கள்

108 வைணவ தலங்களில் கேரளத்தில் உள்ள மேலும் ஒரு கோவிலைக் காண்போம் .

கோவில் எண் 26 திருக்காட்கரை / த்ரிகாக்கரா

ஆலவாய்- திருஸூர் (திருச்சூர் ) ரயில் மார்க்கத்தில் இரு ஞாலக் கொடி (இரிஞ்சாலக்குடா) ஸ்டேஷனிலிருந்தும், அங்கமாலி ஸ்டேஷனிலிருந்தும், 15 கி.மீ தூரத்தில் திருக்காட்கரை / த்ரிகாக்கரா  விஷ்ணு கோவில் இருக்கிறது . ஆல்வாயிலிருந்து 7 கி.மீ.

மூலவர் – திருக்காட்கரையப்பன் , நின்ற திருக்கோலம், தெற்கு நோக்கிய சந்நிதி.

தாயார்- பெருஞ் செல்வ நாயகி , வாத்சல்யவல்லி

தீர்த்தம் – கபில தீர்த்தம்

விமானம் – புஷ்கல விமானம்

பிராத்தியட்சம் ஆனது- கபில முனிவர்  முன்னிலையில்

சிறப்பு அம்சங்கள்

நம்மாழ்வார் பாடிப் பரவியதால் 1200 ஆண்டுக்கும் மேலான வரலாறு உடைய கோவில்

நேந்திரம் வாழை எப்படித் தோன்றியது என்ற தாவரவியல் BOTANY கதையும் உண்டு .

மலையாள மக்கள் இவரை வாமன ரூபமாகப் பார்ப்பதால் ஓணம்  பண்டிகை இங்கு பெரிய உற்சவம்.

வாமன அவதாரம் – மஹாபலி – ஓணம் பண்டிகை கதை எல்லோரும் அறிந்ததே. ரிக் வேதமும் திருக்குறளும் வாமன அவதாரத்தை விதந்து ஓதுகின்றன .

சுவையான கதைகள்

இந்த ஸ்தலத்தில் வசித்த ஒரு பக்தனின் தோட்டத்தில் வாழை மரங்கள் சரியானபடி காய்த்துக் குலை தள்ளவில்லை  பெருமாளே! உனக்கு தங்கத்தினால் ஆன வாழைப்பழ சீப்பினை செய்து வைக்கிறேன்; என்னுடைய தோட்டம் நன்றாகப் பூத்துக் குலுங்க வேண்டும் என்று வேண்டினான்; என்ன அதிசயம்! வாழை மரங்கள் குலை தள்ளியதோடு அவை எல்லாம் புது வகை நேந்திரம் பழமாக  விளைந்தன.

இன்று கேரளத்துக்குச் செல்லும் எவரும் நேந்திரங்காய் /வாழைக்காய் வறுவல் வாங்காமல்  திரும்புவதில்லை ; அந்த அளவுக்கு பிரசித்தம் ஆகிவிட்டது .

இரண்டாவது கதை என்னவென்றால் அந்த பக்தன் கொடுத்த தங்க வாழைப்பழ சீப்பு கோவிலிலிருந்து காணாமற்போனது; ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற பழமொழிக்கு இணங்க அங்கிருந்த யோகியை மன்னன் திருடன் என்று பிடித்து துன்புறுத்தினான். அந்த யோகி தற்கொலை செய்துகொண்டு, பிரம்ம ராட்சஸ் என்னும் பேயாக மாறி ஊரையே துன்புறுத்தியது.

(பிராமணர்கள் தவறான முறையில், அகால மரணம் அடைந்தால் பேயாக மாறி தவிப்பார்கள்; அந்த வகைப் பேய்களுக்கு பிரம்ம ராக்ஷஸன் என்று பெயர். பிராமணர்களைக் கொன்றால் வரும் பாவத்துக்கு பிரம்ம ஹத்தி என்று பெயர்) .

கதை இத்தோடு முடியவில்லை. அந்த யோகி தற்கொலை செய்துகொள்ளும்போது சொல்லியபடி மூங்கில் கூரை போட்டு கோரைக் கொள்ளியை வெளிச்சத்துக்கு ஏற்றினார்களாம் .பின்னர் பிரம்ம ராட்சசனாக திரிந்த யோகிக்கு மக்கள் கோவில்கட்டி தினசரி நைவேத்தியம் படைத்ததாக  ஸ்தல வரலாறு சொல்லும்.

XXXXX

FOLLOWING INFORMATION IS TAKEN FROM FACEBOOK

1. பண்டைய காலத்தில் மகாபலியின் ஆசனம் இருந்த இடத்தில் தற்போது மாதிரி ஆசனம் ஒன்று காணப்படுகிறது. இது கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ளது. கேரள மக்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர்.

2. வட்ட வடிவில் கேரள பாணியில் அமைந்த எழில் மிகு திருத்தலம்.

3. முகப்பிலுள்ள கூம்புவடிவ கோபுரத்தில் வாமனர் திருவுருவம் மரசிற்பமாக காட்சியளிக்கிறது. மகாவிஷ்ணுவின் குள்ளமான அந்தணர் வடிவமே வாமனர் அவதாரமாகும்.

4. கருவறையில் மகாபலிக்கு காட்சியளித்த வடிவத்திலேயே மகாவிஷ்ணு அருள்பலிக்கிறார்.

5. கோயிலுக்கு வெளியே தனி சன்னதிகளில் பகவதி தேவி, சாஸ்தா, சுந்தர யக்ஷி, கோபால கிருஷ்ணன் மற்றும் நாகர் அருள்பாலிக்கின்றனர்.

6. மகாபலியால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் கோயில் அருகே தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் பழமையை எண்ணிப் பார்க்கையில் நமக்கு மெய் சிலிர்க்கிறது.

7. தமிழ் கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன என்பது மிக சிறப்பு.

நம்மாழ்வார் – 3612-22

xxxxx

27.தலைச்சேரி திரு வெண் காடு ராமர் கோவில்

தலைச்சேரியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இந்த ராமர் கோவில் இருக்கிறது

வெண்  என்றால் வெள்ளை  ; இது பெரிய காட்டுப்பகுதி  ஸ்வேத என்ற ஸம்ஸ்க்ருதச்  சொல்லின் பொருள் வெள்ளை ; ஆகையால் இதை ஸ்வேதாரண்யம் என்றும் அழைப்பர் ; இதே பெயரில் தமிழ் நாட்டிலும் கோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது .

XXXXX

கேரளத்திலிருந்து ஒரு பிராமணர் காசி யாத்திரை சென்றார். அங்கு காவி உடை தரித்த சந்யாசிகள் குழு ஒன்றினைக் கண்டு கும்பிடு போட்டார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று ஒரு சந்யாசி கேட்டார் .

தலைச்சேரி என்று பிராமணர் விடை கொடுத்தார்

அவ்வளவு புனிதமான இடத்தை விட்டு இவ்வளவு தூரம் வரத் தேவையே இல்லையே என்று எல்லோரும் ஏகோபித்த குரலில் மொழிந்தார்கள் . வட கேரளத்திலுள்ள இந்த ராமர் கோவில் அவ்வளவு சிறப்புடைத்து .

கேரளத்தில் பகவதி, சிவன், பெருமாள் கோவில்கள் நிறைய உள்ளன. ஆனால் ராம பிரானுக்கோ 3 கோவில்கள் மட்டுமே உள . குரு வாயூருக்கு அருகிலுள்ள திருப்பிரயார் கோவிலை முன்னரே தரிசித்தோம். இது அடுத்த கோவில்; மூன்றாவது கோவில் பாலக்காடு அருகில் திரு வில்வமலாவில் இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

இங்கு கோபுரத்தை பித்தளைத் தகடுகளால் போர்த்தியதைப்  பழைய

நூல்களில் காண முடிகிறது .

பலிக்கல்லில் உள்ள ஒரு கல்வெட்டு கி.பி. 826ம் ஆண்டைச்சேர்ந்ததால் இதன் பழமை தெரிகிறது .

முதலில் சுவையான கதையைக் கேளுங்கள்

அகஸ்தியமாமுனிவர் இந்தக் காட்டின் வழியே வருகையில் இரண்டு வேடர்கள் அவருக்கு துன்பம் விளைவித்தனர். அகஸ்தியர் இருவரையும் சபிக்கவே அவர்கள் மன்றாடினர் . உடனே அகஸ்த்தியர் அவ்விருவரையும் இரண்டு சிவன் கோவில்களில் தவம் இருந்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்கிறார். அவ்வாறே ஒருவர் தவமிருந்து ஸ்வேத முனி என்றும், மற் றொருவர்  நீல முனி என்றும் பெயர் பெற்றனர்

ஸ்வேத முனி தவம் செய்த இடம் ஸ்வேதாரண்யம் ஆனது = திரு வெண் காடு ; அங்கே அவர் சிவ பெருமானுடன் பெருமாள் கோவிலையும் கட்டினார் ; அதுவே நாம் காணும் ராமர் கோவில்

நீல ரிஷி சிவனை வழிபட்ட இடம் நீலேஸ்வரம் சிவன் கோவில் ஆனது.

ஸ்வேதர் ஸ்தாபித்த சிவன் உக்கிர சொரூபம் ஆனதால்  எதிரே இன்னுமொரு சிவனையும் பிரதிஷ்டை செய்தனராம் ; ஆக ஒரே மைதானத்தில் 3 கோவில்கள் உள ; இரண்டு சிவனுக்கு ஒன்று ராமருக்கு.

கேரளத்தில் ராமர் என்று சொல்லும் கோவில்களில்  இருப்பது பெருமாள் தான். இந்த ராமர் கோவிலிலும் 4 கைகள் உள்ள ராமன் சங்கு , சக்கரம் கதை, அபய முத்திரைகளுடன் காட்சி தருகிறார்.

இந்த ரூபம் அவர் கர தூஷணன் என்ற 2 அசுரர்களை வதம் செய்தபோது எடுத்த உருவம்; ஆகையால் கோவிலில் கதகளி நடனத்தில் கூட கர தூக்ஷண வதத்தைத் தான்  நடிக்கிறார்கள்.

கோவிலைப் பற்றிய மேலும் சில கதைகளையும் காண்போம்.

தொடரும் ……………………………

Tags- கோவில் எண் 26,  திருக்காட்கரை /,த்ரிகாக்கரா , தலைச்சேரி , திரு வெண் காடு , ராமர் கோவில்,ஒருவர் ஸ்வேத முனி ,  நீல முனி ,மூன்று ராமர் கோவில்கள்

Leave a comment

Leave a comment