
Post No. 12,801
Date uploaded in London – – – 5 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Quiz Serial No.82
1.எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான பெயர் என்ன ?
XXXX
2.எவரெஸ்ட் சிகரத்தை வென்ற முதல் பெண்மணி யார் ?
XXXX
3.எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறியவர்கள் யார் ?
XXXX
4.எந்த தேதியில் எவரெஸ்ட் மீது ஏறினார்கள் ?
XXXX
5.எவரெஸ்ட் சிகரத்துக்கு ஏன் அப்படி பெயர் கொடுத்தனர் ?
XXXX
6.எவரெஸ்ட்சிகரம் எந்த நாட்டில் உள்ளது?
XXXX
7.இந்த சிகரத்தின் உயரம் என்ன? இன்னும் உயரம் அதிகரித்து வருகிறதா ?
XXXX
8.இந்த சிகரத்துக்குச் செல்ல எத்தனை பாதைகள் உள்ளன ?
XXXX
9.சிகரத்தின் மீது ஏறுவதற்கு கட்டணம் உண்டா?
XXXX
10.எவரெஸ்ட் சிகரத்தை விண் வெளியிலிருந்து காண முடியுமா?
XXXX

விடைகள்
1.நேபாளத்தில் சாகர்மாதா என்றும், சீனாவில் சோமோலுங்மா என்றும் இந்த சிகரத்துக்குப் பெயர்; இவைதான் ஒரிஜினல் பெயர்கள் ; சம்ஸ்க்ருதத்தில் தேவ கிரி, தேவ மாதா என்று அழைத்தனர்.
XXXX
2.ஜூங்கோ டாபே .Junko Tabei என்ற ஜப்பானிய பெண்மணி 1975ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரம் மீது ஏறி சாதனை படைத்தார்.
XXXXX
3. முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் நியுஜிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரியும் நேபாள செர்பா டென்சிங் என்பவரும் சிகரத்தை வென்று சாதனை படைத்தகனார்.
XXXXX
4.இருவரும் சிகரத்தில் ஏறிய நாள் 29 மே 1953
XXXX
5. முதல் இந்திய சர்வேயர் George Everest ஜார்ஜ் எவரெஸ்டின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது
XXXXX
6. எவரெஸ்ட் சிகரம் திபெத் (சீனா)- நேபாள எல்லையில் உள்ளது. இரண்டு நாடுகளில் எதாவது ஒன்றின் அனுமதி பெற்ற பின்னரே ஏறமுடியும்
XXXX
(7). முதலில் 8,840 மீ (29,002 அடி) என அளக்கப்பட்டது ; பின்னர் அதன் உயரம் 8,848 மீ (29,029 அடி) என்று உறுதி செய்தனர் . வருடத்துக்கு 4 மில்லிமீட்டர் வரை உயர்ந்து வருகிறது
XXXX
8. நேபாளம் வழியாகவும் சீனா வழியாகவும் செல்ல இரண்டு பாதைகள் உள்ளன
XXXXX
9.அனுமதிக் கட்டணம் 9000 பவுண்டுகள் (9000கX ரூ.100). பின்னர் இன்ஸ்யூரன்ஸ் , ஷெர்பா உதவி, ஆக்சிஜன், உணவு, உடை முதலியன இதே போல இன்னும் ஒரு மடங்கு வைத்திருக்க வேண்டும்.
XXXX
10.விண் வெளியில் பறந்த வீரர்கள் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் நேபாள கம்பெனிகள் ஹெலிகாப்டர் சுற்றுலா மூலமும் பயணிகளுக்கு சிகரத்தைக் காட்டுகிறது


—SUBHAM—
TAGS– Quiz Serial No.82, QUIZ எவரெஸ்ட் பத்து QUIZ