
Post No. 12,805
Date uploaded in London – – – 6 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

மஹாத்மா காந்தி வைக்கம் போராட்டம் வெற்றி விழாவினைக் கொண்டாட 1937ம் ஆண்டு கேரளத்துக்கு வந்து 24 கோவில்களுக்குச் சென்றார்; வைக்கம் புரட்சி வீரர்களான திருவாங்க்கூர் மஹாராஜா, மஹாராணி , கேளப்பன் நாயர், மாதவன் பிள்ளை, கிருஷ்ண சுவாமி ஐயர் , மகா மேதையான சர் சி பி ராமசுவாமி அய்யர் ஆகியோரை கூட்டம் தோறும் பாரட்டினார் . தன் வாழ் நாளில் இவ்வளவு கோவில் களுக்கு ஒரு போதும் சென்றதில்லை என்றும் கேரளத்திலுள்ள அற்புதமான கோவில்களைப் பார்த்த பின்னர் தனக்கு கோவில் பற்றிய ஒரு புதிய பரிமாணம் தெரிய வந்தது என்றும் பேட்டிகளில் சொன்னார்.
xxxx
கோட்டயம் மகளிர் கூட்டம் 19-1-1937
ஹிந்தி மொழியில் காந்திஜி பேசினார்
” இந்த கேரள யாத்திரையில் முதல் தடவையாக பெண்கள் கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பினை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இங்கே குழுமியுள்ள உங்களுக்கு நான் கூடுதல் நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும். முதல் தடவையாக ஒரு சகோதரி ஹிந்தி மொழியில் வரவேற்புரை வழங்கியதை செவிமடுத்தேன் ; உங்கள் வரவேற்புக்கும் இந்தி மொழி வரவேற்பு உரைக்கும் நன்றி .
வைக்கம் பிரகடனம் பற்றி சில வார்த்தைகள் சொல்கிறேன்.பின்னர் ராஜகுமாரி கவுர் விரிவாகப் பேசுவார்.
இந்து மதத்தின் கறுப்புப் புள்ளி (சாபக்கேடு) தீண்டாமை என்றும், அது இந்து மதத்துக்கு பேராபத்தை விளைவிக்கும் என்றும் கூட்டம் தோறும்விளக்கிவந்தேன். அந்த சாபக்கேட்டினை விலக்க , மகாராஜாவின் பிரகடனம் தக்க தருணத்தில் வந்துள்ளது.
(எல்லா ஜாதி இந்துக்களும் திருவாங்க்கூர் சமஸ்தானத்தில் உள்ள 2200 கோவில்களிலும் நுழையலாம் என்ற பிரகடனத்தை 1936 நவம்பரில் மஹாராஜா வெளியிட்டார்)

பெண்கள்தான் மதத்தின் காவலர்கள் ; பெண்கள் தான் சமுதாயத்தின் தூய்மையின் காவலர்கள் என்பதையும் நான் அடிக்கடி சுட்டிக்காட்டடி வந்தேன். ஆகையால் இதுவும் (பிரகடனத்தை செயல்படுத்தல்) பெண்களின் பணியே. மதத்தை தூய்மையாக்குதல் என்பது இதயத்தை தூய்மை ஆக்கும் பணி . பிரகடனத்தின் உண்மைப்பொருளை பெண்கள் உணர்ந்தால் , ஆண்களைவிட பிரகடனத்தை திறம்பட செயல்படுத்த முடியும் “.
xxxxx
ஈசாவாஸ்யம் இதம் சர்வம்
காந்திஜிக்கு மிகவும் பிடித்த வாசகம் ஈஸா வாஸ்ய உபநிஷத்தில் உள்ள முதல் மந்திரம் ஆகும். கேரள பயணத்தின் கடைசி ஐந்து நாட்களில் ஒவ்வொரு கூட்டத்திலும் அந்த மந்திரத்தை விளக்கி எல்லோருக்கும் இதைப் பரப்புங்கள் என்றார்
” கடந்த நாலைந்து நாட்களாக நான் ஒரு மந்திரத்தை கூட்டங்களில் சொல்லிவருகிறேன் அதன் பொருள் என்ன ?
இந்தப் பிரபஞ்சம் முழுவதும், அணு அணு தோறும் இறைவன் இருக்கிறான் அப்படியானால் உங்கள் இதயத்தில் மட்டும் இன்றி எல்லோரிடத்தும் உளான். அவ்வளவு அருகில் இருக்கும் இறைவனுக்கே எல்லாவற்றையும் அர்ப்பணியுங்கள்; நீங்கள் அவற்றை துறப்பதோடு பிறர் பொருளை என்றும் நயவதீர்கள். இதை இந்துக்கள் உணர்ந்தால் வேற்றுமைக்கு இடமே இராது
Xxxx
13-1-1937 திருவனந்தபுரம் சொற்பொழிவு

அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்றேன். அர்ச்சகர் ஒவ்வொரு தெய்வம் பற்றியும் இந்தியில் சொன்னார்.;அவர் இது ஒவ்வொன்றும் தெய்வம் என்று சொல்லவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத, வருணிக்க இயலாத கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள பாலங்கள்தான் இந்தக் கோவில்கள் என்பதை நான் உணர்ந்தேன். நாமோ ஆழம் தெரியாத பரந்து விரிந்த கடற்பரப்பில் உள்ள ஒரு நீர்த்திவளைத்தான்; நாம் எல்லோரும் தத்துவ ஞானிகள் அல்ல. பாமரனுக்கும் பாமரன் நாம். ஆகையால் காண முடியாத கடவுளை அறிய தொட்டுப்பார்க்க ஏதும் தேவைப்படுகிறது; காணுவதற்கும் மண்டியிட்டு நமஸ்காரம் செய்யவும் ஒரு பொருள் கண்ணுக்கு முன்னால் தேவைப்படுகிறது; அது புஸ்தகமாக இருக்கலாம், கல் கட்டிடமாக இருக்கலாம்; அல்லது அதற்குள் உள்ள சிலைகளாக இருக்கலாம்.சிலருக்கு புஸ்தகங்கள் திருப்தி தரலாம்; இன்னும் சிலருக்கு கல் கட்டிடங்கள் திருப்தி அளிக்கலாம். இன்னும் பலருக்கு அங்கே காணக்கூடிய சக்தியைக் கண்டால்தான் திருப்தி ஆனால் உங்களை மூட நம் பிக்கைகளுடன் கோவிலுக்குள் செல்லுங்கள் என்று சொல்லவில்லை. நம்பிக்கையுடன் கோவிலுக்குள் செல்லுங்கள் ; அப்படிச் சென்றால் தூய்மை அடைவீர்கள் இறைவன் மீது மேலும் மேலும் நம் பிக்கை ஏற்படும்.
Xxxx

வைக்கம் 18-1-1937
“கோவிலுக்கு போனால் மட்டும் போதாது; பலரும் நம்பிக்கையினால் மட்டுமின்றி கோவிலுக்ச் செல்வதை ஒரு வழக்கமாக / சம்பிரதாயமாகக் கொண்டுள்ளனர் ஏன் கோவிலுக்குப் போக வேண்டும் என்று அவர்கள் சிந்த்திப்பதில்லை. இந்தியா முழுதும் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் கோவிலுக்குப் போகிறார்கள்; அவர்கள் அங்கே உறையும் இறைவனிடம் ஏதேனும் வரம் கேட்க போகிறார்கள். இப்பொழுது மஹாராஜா பிரகடனத்தை வெளியிட்ட பின்னர் நீங்கள் கோவிலுக்குப் போகையில் நான் கூடுதலாக ஒன்றை எதிர்பார்க்கிறேன் ; இவ்வளவு காலமும் ஒரு பிரிவினருக்கு கோவிலில் நுழைய உரிமை இல்லை ; ஏனெனில் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்களிடையே இருந்தது. இப்பொழுது அவர்களும் நமக்கு சமமானவர்கள் என்ற எண்ணத்துடன் நீங்கள் வர வேண்டும். கோவிலுக்குள் அவர்களை அ னுமதித்ததோடு சம பாவனை யும் இருக்க வேண்டும்
–subham—
Tags– கோவில் ஏன், வைக்கம், பெண்கள், ஈசாவாஸ்யம், காந்தி,