
Post No. 12,803
Date uploaded in London – – 6 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு வரி சுபாஷிதங்கள்
வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்!
ச.நாகராஜன்
1. சிஷ்யஸ்யோபகர்த்தா சத்பதஸ்ய ச தர்ஷக: |
ஒரு குரு சிஷயனுக்கு உதவுகிறார்; தகுந்த வழியைக் காண்பிக்கிறார்.
2. சித்தே வாசி க்ரியாயாச்ச சாதூநாமேகசித்ததா |
மனம், வாக்கு, செயல் ஆகியவற்றை ஒரு சாது ஒரே மாதிரியாகக் கொண்டிருப்பார்.
3. சின்னே மூலே நைவ பத்ரம் ந ஷாகா |
வேரை அறுத்து விட்டால் இலையும் இல்லை, கிளையும் இல்லை.
4. ஜடரம் கோ ந விபர்த்தீ கேவலம்!
யாருக்குத் தான் வயிறு இல்லை?
5. ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி |
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே (பாரதியார்)
6. ஜாமாதா தசமோ க்ரஹ: |
மருமகன் பத்தாவது கிரகம் தான்!
7. ஜிதக்ரோதேன சர்வம் ஹி ஜகதேதத்திஜீயதே |
யார் ஒருவன் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் உலகையே ஜெயித்து விடுவான்.
8. ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம் |
வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்.
9. ததா சதுர்பி: புருஷ: பரீக்ஷயதே ச் ருதேன, ஷீலேன, குலேன, கர்மணா |
ஒரு மனிதன் நான்கு விதங்களால் பரிக்ஷிக்கப்படுகிறான். அறிவு, ஒழுக்க நடத்தை, குலம், செயல் ஆகிய நான்கே அவை.
10. தப: சீமா முக்தி: |
தவத்தின் முடிவு முக்தியே.
11. தஸ்கரஸ்ய குதோ தர்ம: |
திருடனுக்கு ஏது தர்மம்?
12. தே புத்ரா யே பிதுர்பக்தா: |
தந்தையிடம் பக்தி செய்பவர்கள் (மரியாதையோடு நடப்பவர்கள்) மட்டுமே புத்திரர்கள்.
13. துராசாரோ ஹி புருஷோ லோகே பவதி நிந்தித: |
உலகில் துராசாரமான நடத்தைகளைக் கொண்டவன் நிந்திக்கப்படுவான்.
14. துர்லபம் பாரதே ஜன்ம மானுஷ்யம் தத்ர துர்லபம் |
பாரதத்தில் ஜன்மம் எடுப்பது அரிது; அதிலும் மானுடனாக ஜன்மம் எடுப்பது இன்னும் அரிது.
15.துஷ்டஜனம் தூரத: ப்ரண்மேத் |
துஷ்டர்களுக்கு தூரத்திலிருந்து வணக்கம் சொல்ல வேண்டும்.
16. தைவமேவ ஹி சாஹாய்யம் குருதே சத்வஷாலினாம் |
சத்வசாலிகளுக்கு விதியே துணை செய்கிறது.
17. தைவ துர்பலதாம் கதே த்ருணமபி ப்ராயேண வஞ்சாயதே |
விதி எதிர்த்து நிற்கும் போது புல் கூட இடியாகத் தோன்றும். (அல்லது புல் கூட வைரம் போலக் கடினமாகத் தோன்றும்)
18. தைவி விசித்ரா கதி: |
விதியின் வழிகள் விசித்திரமானவை.
19. த்ரவ்யேண சர்வே வஷா: |
செல்வத்தால் அனைத்தும் வசமாகும்.
20. தனமூலமிதம் ஜகத் |
இந்த உலகமே செல்வத்தை அடிப்படையாகக் கொண்டது.
21. தீர: சமயம் ப்ரதிக்ஷேத் |
தைரியசாலிகள் தகுந்த சமயத்தை எதிர்நோக்கி இருத்தல் வேண்டும்.
22. தைர்ய சர்வார்த்தசாதகம் |
தைரியமே அனைத்தும் அடைவதற்கான வழி.
23. ந ச க்ரோதசமோ ரிபு: |
கோபத்திற்குச் சமமான எதிரியே இல்லை.
24. ந ஞானேன வினா மோக்ஷம் |
ஞானமின்றி முக்தி அடைய முடியாது.
25. ந புத்ராத்பரமோ லாப: |
புத்திரனை விட அதிகமான செல்வம் ஒன்று இல்லை.
***