குருவாயூருக்கு வாருங்கள் குழந்தை  சிரிப்பதைப் பாருங்கள்- PART 27 (Post.12,811)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,811

Date uploaded in London – –  –  8 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 27

கோவில் எண்–29 குருவாயூர் கிருஷ்ணன் 

கோவில்

ஒரு முறை கேட்டாலும் காதில் ரீங்காரம் செய்யும் கண்ணதாசனின் பாடல் இது.

குருவாயூருக்கு வாருங்கள்

ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்

உட்கார்ந்திருப்பதை காணுங்கள்

கண்ணனின் மேனி கடல் நீலம் அவன்

கண்கள் இரண்டும் வான் நீலம்

கடலும் வானும் அவனே என்பதைக்

காட்டும் குருவாயூர் கோலம்

சந்தியா காலத்தில் நீராடி அவன்

சந்நிதி வருவார் ஒரு கோடி

நாராயண நாராயண ஹரி ஹரி

நாராயண நாராயண

மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு

மாலைகள் இடுவார் குறை ஓடி

உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்

ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்

பச்சைக் குழந்தையை பார்க்கும் போதே

பாவையர் தாய்மை ரீங்காரம்

நாராயண நாராயண ஹரி ஹரி

நாராயண நாராயண

மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி

அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி

நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று

நித்தம் தருவாள் ஸ்ரீதேவி

நாராயண நாராயண ஹரி ஹரி

நாராயண நாராயண

சாத்திரம் தந்த கண்ணனுக்கு

ராத்திரி பூஜை ஜகஜோதி

பாத்திரம் கண்ணன் பால் போல்

மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி

கேரளத்தில் புகழ்பெற்ற கோவில்கள் சபரிமலை சாஸ்தா, திருவனந்தபுரம் பெருமாள், குருவாயூர் கிருஷ்ணன்,திரிசூர் சிவன், வைக்கம் மஹாதேவன் .

இன்று குருவாயூர் கிருஷ்ணனை தரிசிப்போம்.

குருவாயூர் எங்கே இருக்கிறது? Where is Guruvayur?

திரிஸூர் (திருச்சூர்) மாவட்டத்தில் இருக்கிறது அங்கிருந்து 27 கிமீ. திருவனந்தபுரத்திலிருந்து 292 கி.மீ; கொச்சியிலிருந்து 80 கி.மீ ; கோழிக்கோட்டிலிருந்து 90 கி.மீ

சிறப்பு அம்சங்கள்

1. பிறந்த குழந்தையாக இருந்தபோதே உலகத்தில் அற்புதங்களை செய்து 120 வயது வரை அதிசயங்களைக் காட்டிய ஒரே கடவுள் கண்ணன். அவனைக் குழந்தை  வடிவத்திலேயே தரிசிக்க உதவும் ஸ்தலம் குருவாயூர்.

2. நாராயண பட்டதிரி என்ற மஹான் தன்னுடைய நோய் நீங்க நாராயணீயம் பாடி, குவாயூர் அப்பன் புகழை உலகம் அறிய உதவினார்.

3. இங்குள்ள கண்ணன், அஞ்சனக் கல் என்ற விசேஷ கல்லில் செதுக்கப்பட்டுள்ளார்.

4. குருவாயூர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது துலாபாரம் தான். துலா என்றால் தராசு; அதில் ஒருவர் நின்று அவர் பாரம்/ எடை எவ்வளவோ அவ்வளவுக்கு தன்னால் இயன்றதைக் கொடுப்பது துலாபாரம். .நாட்டின் பிரதமர், ஜனாதிபதி முதல் சாலையில்  செல்லும்  பாமர பக்தன் வரை தங்கக்கட்டிகள் முதல் துளசி வரை எதையும் துலாபாரம் கொடுப்பார்கள். சேரன் செங்குட்டுவன் ஒரு பிராமணனுக்கு தன எடைக்கு எடை தங்கக்கட்டி கொடுத்த செய்தி சிலப்பதிகாரத்தில்  இருக்கிறது. இந்துக்களின் துலா பரம் சுமேரியா வரை பரவியது. அங்கும் துலாபாரம் கொடுத்தனர். நாடு முழுதும் பல கோவில்களில் இது இருந்தாலும் குருவாயூர் துலாபாரத்தை மிஞ்ச எவராலும் முடியாது

5.குருவாயூர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அடுத்ததாக நினைவுக்கு வருவது யானைகள்தான் ; இங்கு நடந்த யானைப் பந்தயத்தில் முதலாவது வரும் யானைதான் பகவானைச் சுமக்கும் பாக்கியம் பெற்றதாகும். கேசவன் முதலிய யானைகள் இவ்வாறு புகழ்பெற்று , ப  க்தர்கள் சிலை யும்  வைத்துவிட்டார்கள்

6.குருவாயூர் சென்ற எவரும் அருகிலுள்ள யானைகள் முகாமுக்கு செல்லாமல் வரமாட்டார்கள்; நூற்றுக் கணக்கான வளர்ப்பு யானைகளை ஒரு சேரக் காணலாம் .

7. நிர்மால்ய தரிசனம் ; முதல் நாள் செய்த அலங்காரத்தை அதி காலை 3 மணிக்கு கோவில் சந்நிதி திறந்தவுடன்  கலைக்கத் துவங்குவார்கள் ; அந்த பழைய அலங்காரத்தில் காண்பது நிர்மால்ய தரிசனம்.

இதுவும் இங்கு ஒரு சிறப்பு .

xxxxx 

கீழே உள்ளது சுய புராணம்படிக்காமலும் அடுத்த பகுதிக்குப் போகலாம்

ஒரு எச்சரிக்கை :

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் குருவாயூர் கோவில் அருகில் லாட்ஜ் எடுத்து இரவு 2 மணிக்கே குளித்துவிட்டு கோவிலுக்குள் போய் நின்றோம். மராத்தான் போட்டி போல ஒரு 100 அல்லது 200 பேர் முதல் வரிசையில் நின்றோம் . எங்கள் தூரத்து உறவினரும் (அதே ஊர்க் காரர்) கூடவே வந்திருந்தார். சிக்னல் signal கிடைத்தவுடன் ஓடினோம். கொஞ் சம் தவறி விழுந்து இருந்தால் பின்னல் வந்தவர்கள் எங்களை மிதித்து chutney சட்னி ஆக்கி இருப்பார்கள். பின்னர் உறவினரிடம் சொன்னோம்; மிக்க நன்றி; வயதானவர்களுக்கு இதைக் காட்டாதே , அப்பா; கோவிலுக்குள் மரணம் ஏற்பட்டு நாள் முழுதும் கோவிலை மூடிவிடப் போகிறார்கள் என்று . ஆகவே ஓட்டப்பந்தயத்தில் வெல்ல முடிந்தால் மட்டும் நிர்மாலய தரிசனத்துக்குப் போங்கள் ; அந்தக் காலத்தில் இந்த அதி காலை 3 மணிக்கு எவரும் வந்திருக்கமாட்டார்கள் போலும்! இப்பொழுது எங்கும் கூட்டம் அதிகம் .

மக்களுக்குப் பேராசை பெருத்துவிட்டதுஉழைக்காமலே refugee அகதி என்று சொல்லி 10  பெட்ரூம் bed room வாங்கும் அயோக்கியர்கள் பெருத்து விட்டார்கள்;  எனக்கு ஓட்டுப்போட்டால் இதுவும் அதுவும் free free ப்ரீ என்று சொல்லும் அயோக்கியர்கள், அதை நம்பும் மஹா அயோக்கியர்கள் நிறைந்த காலம் இது.  கடவுளைக் கும்பிட்டு ,சுருக்கு வழியில், வேலை செய்யாமலே ப்ரமோஷன் வாங்க வேண்டும் என்று நினைக்கும் அ + பக்தர்கள் கோவிலுக்கு அதிகம் வருவதால் கொஞ்சம்  எச்சரிக்கையாக இருங்கள். ஆனால் எங்களைக் கூட்டிச் சென்ற உறவினர் எங்களுக்கு ஸ்பெஷல் சந்தன பிரசாதம் முதலியவற்றை வாங்கித் தந்ததையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்  1971–ம் ஆண்டில் என் பெரிய அண்ணன் கல்யாணம் குருவாயூரில் நடந்த பொழுது  கோவிலுக்குள் ஓடிப்பிடித்து விளையாடினோம்;. கூட்டம் இல்லாத உண்மை பக்தர்கள் காலம் அது.)

xxxxx

8.குருவாயூருக்கு ஏன் அந்தப் பெயர் ?

குரு பகவானும் (ஜூப்பிட்டர் jupiter/ வியாழன்/ பிருஹஸ்பதி), வாயு பகவானும் வணங்கிய தலம்  உலகில் ஏற்பட்ட முதல் சுனாமி TSUNAMI தாக்குதலை இந்துக்கள் பாகவத புராணத்தில் பதிவு செய்தனர் உலகிலேயே முதல் முதலில் சுனாமி பற்றி ரிப்போர்ட் செய்தவர்கள் இந்துக்களே; அவ்வளவு மஹா மேதாவிகள். துவாரகா (குஜராத்தில் உள்ள இடம்) மூழ்குவதை அறிந்த கண்ணன் தனது சிலையை மூழ்காமல் பாதுகாக்கும் பொறுப்பை உத்தவரிடம் கொடுத்தார். அவர் குருவையும் வாயுவையும் வேண்டிக்கொள்ள அவர்கள் அந்த சிலையை மீட்டெடுத்து குருவாயூரில் பிரதிஷ்டை செய்தனர் .

9.இதை பூலோக வைகுந்தம் என்றும் தென்னக துவாரகை என்றும் அழைப்பர்.; கேரள மக்கள் எப்போதும் முனங்கும் வேண்டுகோள் , குருவாயூரப்பாகாப்பாத்தப்பா என்பதுதான். ஏனெனில் இங்கு நடந்த அற்புதங்கள்  ஆயிரம் ஆயிரம் ! பாமர மக்களுக்கு ஏற்பட்ட அற்புதங்களின் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது .

10.காண்டவ வனத்தை அர்ஜுனனும் கண்ணனும் அழிக்கப் போவதாக அறிவித்தனர். அந்த இடத்தில் வாழ்ந்த நாகர் என பொதுமக்கள் காடு திருத்தி நாடக்குவது மன்னர் கடமைதான். இருந்தாலும் காண்டவ கவனத்தை விட்டுவிடுங்களேன் என்று மன்றாடினார்கள் காண்டவ இனத்தவரை கோண்ட் GONDS என்றும் அந்த நிலத்தை கோண்ட்+ வன GOND+ VANA/FOREST என்றும் எழுதுவார்கள்வெள்ளைக்கார முட்டாள் களும்  நம்ம ஊர் முட்டாள்களும் அர்த்தம் புரியாமலே கோண்ட்வானா லாண்ட் GONDWANA LAND என்று மேப் MAP புகளில் எழுதி வருகின்றனர் நாகர் இனத்ததுக்கும் பாண்டவ இனத்துக்கும் இடையே பகைமை வளர்ந்தது. இந்த நேரத்தில் அந்த வம்சத்தில் வந்த பரீட்சித் ஒரு நாக சந்நியாசியை அவமானப்படுத்தவே ஏழே நாட்களில் உன்னை ஒரு நாகன் கொல்லுவான் ; பிடி சாபம் என்கிறார். பரீட்சித் பிரம்மாண்ட பாதுகாப்பு அரணை ஏற்படுத்தி ஒளிந்து கொண்டார்; அரண்மனைக்குள் பழங்கள் கொண்டுவரும் கூடையில் ஒரு நாகர் ஒளிந்து வந்து பரீட்சீத்தைத் தீர்த்துக்கட்டினார் ; உடனே அவர் மகன் ஜனமேஜயன் , கிடைத்த நாகர்களை பிடித்து படுகொலை செய்யவே ஆஸ்தீகர் என்பவர் தலையிட்டு சமாதான உடன்படிக்கை செய்வித்தார் ( இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்படிக்கையை பிராமணர்கள் தினமும் நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் ).

இப்படி நாகா இன  மக்களை பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் படுகொலை செய்ததால் அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. அவனை குருவாயூருக்குப் போய் தவமிருந்தால் குஷ்ட நோய் நீங்கும் என்று தத்தாத்ரேயர் அறிவுரை வழங்கினார். அவரும் அவ்வாறே செய்து நோய் நீங்கியதால் குருவாயூரப்பன் மஹிமை எல்லோருக்கும் புரிந்தது .

தொடரும் ……………………………………..

–SUBHAM—

TAGS– கேரள கோவில்கள்,  PART 27, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் , நிர்மால்ய தரிசனம், துலாபாரம் , யானைகள் முகாம்

Leave a comment

Leave a comment