
Post No. 12,817
Date uploaded in London – – 10 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பாலஸ்தீனம் என்று ஒரு இடமே கிடையாது!
ச.நாகராஜன்
இணையதளத்தில் பல அபூர்வமான செய்திகள் வருவதுண்டு.
நல்ல செய்திகளை கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ட்ரூத் பிரசுரிப்பது வழக்கம். 24-11-23 தொகுதி 91 இதழ் 30இல் வெளிவந்துள்ள தகவல் இது.
ராம் பதக் ஃபேஸ்புக்கில் 1-11-23 அன்று இதை பதிவிட்டிருக்கிறார்.
பதிவு இதோ:
1. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் காலனியாக 1948க்கு முன்னர் இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
2. பிரிட்டிஷ் காலனிக்கு முன்னர் இந்த முழு பிரதேசமும் 600 வருடங்கள் ஆடோமேன் சாம்ராஜ்யமாக (Ottoman Empire) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
3. ஆடோமேன் சாம்ராஜ்யத்திற்கு முன்னர் இந்த முழு பிரதேசமும் எகிப்தின் ஒரு பகுதியாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
4. எகிப்திய நாட்டிற்கு முன்னால் இந்த முழு பிரதேசமும் அயுபிட் வமிசத்தினரால் (Ayyubid Dynasty) ஆளப்பட்டு வந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
5. அயுபிட் வமிசத்தினருக்கு முன்னால் இது கிறிஸ்தவ ஜெருசலத்தின் பகுதியாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
6. கிறிஸ்தவ ஜெருசலத்திற்கு முன்னால் இது பாடிமிட் அரசின் (Fatimid State) பகுதியாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
7. பாடிமிட் அரசு – இது பைஸாண்டைன் அரசாக (Byzantine State) முன்னர் இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
8. பைஸாண்டைன் அரசு – இந்த முழு பிரதேசமும் ரோமானிய அரசாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
9. ரோமானிய அரசிற்கு முன்னால் இந்த முழு பிரதேசமும் ஹாஸ்மோனியன் அரசாக (Hasmonean State) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
10. ஹாஸ்மோனியன் அரசு – இந்த முழு பிரதேசமும் செலுசிட் அரசாக (Selelucid State) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
11. செலுசிட் அரசு -இந்த முழு பிரதேசமும் மூன்றாம் அலெக்ஸாண்டரின் மாக்டோனியா அரசின் பகுதியாக (Part of Alexander the third of Macdonia State) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
12. அலெக்ஸாண்டரின் மாக்டோனியா அரசிற்கு முன்னால் இந்த பிரதேசம் அனைத்தும் பெர்சியா நாட்டின் பகுதியாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
13. பெர்சியா நாட்டிற்கு முன்னால் இந்த பிரதேசம் முழுவதும் பாபிலோன் அரசின் பகுதியாக (part of Babylon) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
14. பாபிலோன் சாம்ராஜ்யத்திற்கு முன்னால் இந்தப் பிரதேசம் முழுவதும் இஸ்ரேல் மற்றும் ஜுடே பகுதியாக (Part of Israel and Judea) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
15. இஸ்ரேல் மற்றும் ஜுடே பகுதியாக இருப்பதற்கு முன்னால் இந்த பிரதேசம் முழுவதும் இஸ்ரேல் அரசின் பகுதியாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
16. இஸ்ரேல் பகுதியாக இருப்பதற்கு முன்னால் இந்த பிரதேசம் 12 இஸ்ரேல் பூர்வகுடியினரின் இறையாட்சியாக (the theocracy of the 12 tribes of Israel) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.
17. 12 இஸ்ரேல் பூர்வகுடியினரின் இறையாட்சிக்கு முன்னால் இந்த பிரதேசம் கானான் சுதந்திர அரசாக (The individual state of Canaan) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

உண்மையில் சொல்லப் போனால் பூமியில் மற்ற எல்லா நாடுகளும் இருந்தன. பாலஸ்தீன நாடு மட்டும் இல்லை.
சட்டபூர்வமில்லாத ஒரு பூர்வகுடியினரால் பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டது.
அது அராபிய மயம். மத்திய கிழக்கைச் சேர்ந்த 99% மற்றும் ஏற்கனவே தரப்பட்ட ஆப்பிரிக்காவின் 20% பகுதியும் இணைந்தது. கீழ் பகுதியில் இஸ்ரேலின் 1%க்கு சற்று அதிகம்.
என்றாலும் அவர்களின் பசி தீரவில்லை.
பாலஸ்தீனத்திற்கான போடப்படும் சண்டை நியாயமா?
கேள்விக்கான பதிலை நீங்களே பெற்று விடலாம்!
***
ஆதாரம் நன்றி TRUTH Vol 91 Issue 30 Dated 24-11-23