
Date uploaded in London – – 30 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Quiz Serial No.92

1.அறுபடை வீடுகளில் எந்த இரண்டு தலங்களில் பழம் இருக்கிறது?
xxxx
2.முருகன் பெயரைச் சொன்னவுடன் எந்த இரண்டு பறவைகள் நினைவுக்கு வரும்?
xxx
3.கந்த புராணத்தையும் , கந்த சஷ்டிக் கவசத்தையும் இயற்றியோர் யாவர்?
xxxx
4.சங்க இலக்கிய நூல்களில் எந்த நூல் முழுக்க முழுக்க முருகன் புகழைப்பா டுகிறது ? காய் இயற்றியவர் யார் ?
xxxx
5.சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை என்னும் எட்டு நூல்களில் முருகன் பற்றிய பாடல்கள் எதில் உள்ளன?
xxxx
6.சுவாமிநாதன், தண்டாயுதபாணி , செந்தில் ஆகிய முருகன் பெயர்களை அறுபடை வீடுகளில் எதனுடன் தொடர்புபடுத்துவீர்கள் ?
xxxx
7.திருப்பதி பாலாஜியை/ வெங்கடாசலபதியை முருகன் என்று பாடியவர் யார் ?
xxxx
8.காங்கேயன் என்றால் என்ன பொருள்?
xxxx
9.எந்த இரண்டு நட்சத்திரங்களை முருகன்/கந்தனுடன் தொடர்புபடுத்துவீர்கள் ?
xxxx
10.ஊமையாகப் பிறந்து முருகன் அருளால் கவிபாடும் திறன் பெற்ற புலவர் யார் ? அவர் பாடிய முக்கிய நூல்கள் என்ன?
xxxx

விடைகள்
1.பழம் உதிர் சோலை, பழம் நீ (பழனி)
xxxx
2.மயிலும் , சேவலும்
xxxx
3.கந்த புராணம் ஆசிரியர்- கச்சியப்ப சிவாச்சார்யார்
கந்த சஷ்டிக் கவச ஆசிரியர்- தேவராய சுவாமிகள்
xxxx
4.திருமுருகாற்றுப்படை; அதை நக்கீரர் இயற்றினார்.
xxxx
5.பரிபாடலில் உள்ளன.
xxxx
6.சுவாமிமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் குடிகொண்டுள்ள முருகனின் பெயர்கள் அவை .
xxxx
7.அருணகிரிநாதர் திருப்புகழ் நூலில் இப்படிப்பாடியுள்ளார்
xxxx
8.முருகனையும் பீஷ்மரையும் கங்கையின் மைந்தர்கள் என்று குறிப்பிட்ட காங்கேயன் என்ற பெயரைப் பயன் படுத்துவார்கள்
xxxx
9.கார்த்திகை , விசாகம் ஆகிய இரண்டு விண் மீன்களை;
Xxxx
10.குமார குருபரர் ; அவர் பாடிய பல நூல்களில் மிகவும் பிரபலமானவை :
மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், சகல கலாவல்லி மாலை, மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்; கந்தர் கலிவெண்பா.
xxxx

—subham—-
Tags- முருகன் கேள்வி பதில் , QUIZ முருகன், கந்தன் QUIZ
முருகன் கேள்வி பதில்
Tamil and Vedas
https://tamilandvedas.com › tag
30 Apr 2016 — பழனியிலுள்ள முருகன் சிலை எத்தனை பொருட்களால் ஆனது? 7.முருகப் பெருமானுடன் தொடர்புடைய முக்கிய எண் எது? 8.பழனி மலையில்