பெருவனம் சிவன், கூர்க்கான்சேரி மகேஸ்வரன் கோவில்கள்-41(Post.12,861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,861

Date uploaded in London – –   29 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 41

கோவில் எண்கள் –47,48,49, 50

47.பெருவனம் மஹாதேவன் கோவில்

த்ரிசூர்  மாவட்டத்தில் பெருவனம் சிவன் கோவில் இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது; ஒரு ஹெக்டேர் பரப்புக்கு வியாபித்த பெரிய கோவில் இது.

சதுர வடிவ கர்ப்பக்கிரகம் இதன் பழமைக்கு சான்று பகர்கிறது

மூன்று நிலைக்கோபுரம்; அறுகோண வடிவ கூரை.

கருவறையிலுமும் வெளிப்புறச் சுவர்களிலும் உள்ள சிற்பங்களைக் காண்பதற்காக கலை ரசிகர்கள் படை எடுக்கிறார்கள் .

வெளியே இருக்கும் நாலம்பலத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.விழாக்காலத்தில் கோவில் ஜெகஜ்ஜோதியாகத் திகழும்.

ஆண்டு விழாவின்போது ஆராட்டுப்புழா , சேர்ப்பு, ஊரகம் , சாத்தான்கூடம் கோவில்களிலிருந்து வரும் யானை ஊர்வலங்கள் இங்கே கூடும். பஞ்சாரி மேளம், பாண்டி மேளங்களைக் கொட்டி முழக்குவர் .

அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்பைக் கண்டு களிக்க , பெரும் கூட்டம் கூடும்.

48.கூர்க்கான்சேரி மகேஸ்வரன் கோவில்

சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு கட்டிய இந்த மகேஸ்வரன் கோவில் கோவில், த்ரிசூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கிறது . இங்கு நடக்கும் தைப்பூச மகோற்சவம் 7 நாட்களுக்கு நடக்கிறது.அப்போது மகேஸ்வரன் மகனான சுப்ரமண்ய சுவாமிக்கு நேர்த்திக் கடனாக காவடி ஆடுவோர் பெரும் திரளாக வருகிறார்கள். கடைசி நாள் விழாவில் காவடி ஆட்ட ஊர்வலம் நடக்கும். 10 குழுக்கள் காவடிகளைச் சுமந்து ஆடிக்கொண்டு செல்லுவார்கள்.ஒவ்வொரு குழுவிலும் 30 அம்பலக் காவடிகளும் 60 பூக் காவடிகளும் இருக்கும் .

அப்லக் காவடி என்பது கோவில் வடிவக் காவடி ; ஒவ்வொன்றும் 6 முதல் 10 அடி உயரம் வரை இருக்கும். காவடி ஆட்டம், மயிலாட்டம் முதலிய கிராமீய கூத்துக்கள் பகலிலும், பின்னர் இரவிலும் நடக்கின்றன யானை ஊர்வலம், வாண வேடிக்கைகள், கொட்டு மேளம் ஆகியவையும் இருக்கும். இந்த உத்சவம் தவிர, ஓணம் பண்டிகையின்போது ஓணக்களி கொண்டாடப்படும்.

49.ஆராட்டுப்புழா ஐயப்பன் கோவில்

த்ரிசூர் நகரிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் ஆராட்டுப்புழா ஐயப்பன்/ தர்ம சாஸ்தா கோவில் இருக்கிறது இங்கு ஆண்டுதோறும்  மார்ச் மாதத்தில்  7 நாட்களுக்கு பூரம் விழா நடைபெறும். அதில் ஐந்தாம் நாள் பரவெப்பு நடக்கும். உற்சவ மூர்த்தியான திடம்பு அலங்கரிக்கப்பட்ட யானையில் ஏற்றப்படும். அதைத்  தொடர்ந்து 8 யானைகள் வரும். யானைகளுக்கு பக்தர்கள் பழங்கள் , வெல்லம் முதலியன அளிப்பர் ; ஆறாவது நாள் விழா தரிசனத்துக்கு உரியது அதுதான் பூரம் விழா. 61 யானைகள் அணிவகுத்து நிற்கும். பஞ்ச வாத்யம், நாதஸ்வரம் முழங்கும் . மறுநாள் ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் .

திருப்ரையார் ராமர் கோவிலில் உள்ள  பள்ளியோடம் என்னும் படகில் ராமபிரான் எழுந்தருளுவார் .

பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ள அப்பள்ளியோடத்தின் ஒரு புறம் வாலில் மணி தொங்க, மண்டியிட்டு அமர்ந்த கோலத்தில்  கைகளை கூப்பி அமர்ந்த கோலத்தில் அனுமன் உருவம் இருக்கும் . இப்பள்ளியோடத்தில் மீன மாதம்(பங்குனி)  இராமசந்திர மூர்த்தி தீவ்ரா நதியை கடந்து ஆராட்டுபுழா தர்மசாஸ்தா ஆலயத்திற்கு பூரம் உற்சவம் காண எழுந்தருள்கின்றார்.

 Picture from natarajan blog; thanks. (see the picture in swamiindolog.blogspot.com)

பள்ளியோடம் என்பது கேரள மாநிலத்தில் இந்துக் கோவில்களில் பயன்படுத்தப்படும் பெரிய படகுகள். இப்படகுகளில் 100 முதல் 120 ஆட்கள் வரை செல்ல முடியும். இப்படகுகள் அஞ்சிலி மரம் என்னும் மரத்தினைக் கொண்டு செய்யப்படுகின்றன.

Paḷḷiyōṭam (பள்ளியோடம்) [paḷḷi-ōṭam] noun < பள்ளி [palli] +. A kind of boat; படகுவகை. [padaguvagai.] (சிலப்பதிகாரம் அரும்பதவுரை [silappathigaram arumbathavurai] 14, 74, உரை. [urai.])

50.திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்

த்ரிசூர் நகரின் முக்கியக்கோவிலான வடக்குநாதன் / சிவன் கோவிலிலி ருந்து  ஒரு கி.மீ தொலைவில் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்  அமைந்துள்ளது. திருசூர் பூரம் விழாவில் திருவம்பாடி அணியும் பரமேக்காவு  அணியும் போட்டா போட்டியில் இறங்கும். யானைகளின் எண்ணிக்கை, வாண வேடிக்கைகள், கொட்டு மேளம், ஏனைய கூத்து வகைகளில் போட்டி இருக்கும்

ஏப்ரல் மாதம் நடக்கும் பூரம் விழாவில் எட்டாம் நாள் விழாதான் முக்கியமானது ; வட்டாரக் கோவில்களிலிருந்து புறப்படும் ஊர்வலங்கள் வடக்கு நாத சிவனை தரிசனம் செய்த பின்னர் அருகிலுள்ள மைதானத்தில் எதிரும் புதிருமாக நிற்பார்கள்; அப்போது வண்ணக்குடைகளை மாற்றுதல், , குடமட்டம் நடக்கும். பல்வேறு தாளத்தில் வேகம் அதிகரிக்க அதிகரிக்க மேளங்களைக் கொட்டுவர். ஒவ்வொரு அணியும் அதிக பட்சம் 15 யானைகளைக் கொண்டுவரலாம்.. திருவம்பாடி கோவில் பஞ்ச வாத்யம் புகழ்பெற்றது. அதிகாலையில் துவங்கும் வாண வேடிக்கைகள் சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் .

இந்த கோவிலின் முக்கிய தெய்வங்கள் குழந்தை வடிவில் கிருட்டிணன், பத்திரகாளி தேவியுமாவர். இங்கு இருவருக்கும் சமமான வழிபாடு உண்டு .பிள்ளையார், சாஸ்தா, பிரம்மராட்சர்கள் ஆகியோருக்கு உப சந்நிதிகள் உள்ளன. பகவத் கீதை பாராயணம் கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும். கோவில் நிர்வாகம்  மக்களுக்கு தினமும் மதிய உணவை  இலவசமாக வழங்குகிறது.

—SUBHAM—

TAGS-  பள்ளியோடம், ஆராட்டுப்புழா,  ஐயப்பன்,  கோவில் கூர்க்கான்சேரி மகேஸ்வரன், பெருவனம் மஹாதேவன் கோவில், திருவம்பாடி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்

மனிதனின் பற்றுக்கும் முக்திக்கும் மனமே காரணம்! (Post No.12,860)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,860

Date uploaded in London –  –  29  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ஒரு வரி சுபாஷிதங்கள் 

மனிதனின் பற்றுக்கும் முக்திக்கும் மனமே காரணம்! 

ச.நாகராஜன்

அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ள சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் மேலும் சில இதோ 

1. ந பார்யாயா: பரம் சுகம்|

மனைவியுடன் அனுபவிப்பதான சுகத்தை விட இன்னும் மேலான சுகம் ஒன்றும் கிடையாது.

2. ந ஷ்வ: ஷ்வ உபாசீத் !

நாளைக்கு இதைச் செய்து கொள்ளலாம் என்று ஒருவன் ஒரு காரியத்தைத் தள்ளிப் போடக் கூடாது.

3. நாத்யந்தசரலைர்பாவ்யம் |

ஒருவன் மிகவும் எளிமையாக இருக்கக் கூடாது.

4. நாஸ்தி க்ராம: குத: சீமா|

கிராமமே இல்லை, அப்படியானால் எல்லை எங்கே உள்ளது?

5. நிகடஸ்தம் கரீயாம்ஸமபி லோகோ ந மன்யதே |

ஒருவன் மிகப் பெரியவனாக இருந்தாலும் அண்டை அயலார் அவனை அப்படி மதிப்பதில்லை.

6. நிர்தனஸ்ய குத: சுகம் |

பணமில்லாத ஏழைக்கு ஏது சுகம்?

7. நீசோ வததி ந குருதே ந வததி சுஜன: கரோத்யேவ }

நீசர்கள் சொல்வார்கள், செய்வதில்லை. நல்லோர் சொல்வதில்லை, ஆனால் செய்வார்கள்.

8. ந்யாய்யாம் வ்ருத்திம் சமாஸ்ரயேத் |

நியாயமான (சரியான) தொழிலை ஒருவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

9.நைகோ ரிபுமண்டலம் ப்ரவிஷேத் |

எதிரி மண்டலத்தில் ஒருவன் பிரவேசிக்கக் கூடாது.

10. நோபஹஸேந்நிர்ஜதம் த்யூதே |

சூதாட்டத்தில் தோற்ற ஒருவனைப் பார்த்து ஒருவன் சிரிக்கக் கூடாது.

11. பரோபகாரார்தம் இதம் சரீரம் |

மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே இந்த சரீரம் உள்ளது.

12. புண்யம் தஸ்ய ந ஷக்யதே கணயிதும் ய: பூர்ணகாருண்யவான் |

ஒரு புண்யவானின் புண்யத்தை ஒருவராலும் அளக்க முடியாது.

13. ப்ராணாயாம: பரம் பலம்!

ப்ராணாயாமம் செய்வது பலத்தைத் தரும்.

14. ப்ராயோ கச்சதி யத்ர பாக்யரஹிதஸ்தத்ரைவ யாந்த்யாபத: |

ஒரு துரதிர்ஷ்டசாலி செல்லும் போது அவனைத் தொடர்ந்து கூடவே ஆபத்துக்களும் தொடர்ந்து வரும்.

15. பஹுரத்னா வசுந்தரா |

பூமி ஏராளமான ரத்னங்களைக் கொண்டுள்ளது.

16. பர்த்ருமார்கானுசரணம் ஸ்த்ரீணாம் ச பரமம் வ்ரதம்|

கணவனின் வழியைப் பின் தொடர்ந்து செல்வதே ஸ்திரீகளுக்கான உத்தம விரதமாகும்.

17.பவேந்நித்யம் ப்ரியம்வத: |

பிரியமான வார்த்தைகளையே ஒருவன் பேச வேண்டும்.

18. மத்யே திஷ்டத்ரிசங்குவத|

திரிசங்குவைப் போல நடுவில் இரு.

19. மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ: |

மனிதனின் பற்றுக்கும் முக்திக்கும் மனமே காரணம்.

20. மூர்கஸ்ய நாஸ்த்யௌஷதம் |

மூர்க்கனுக்கு ஒரு வைத்தியமும் இல்லை.

21. மௌனம் சம்மதிலக்ஷணம் |

மௌனம் சம்மதத்திற்கான அறிகுறி.

22. யத்ர சௌரா ந வித்யந்தே தத்ர கிம் நிரீக்ஷகைக

எங்கே திருடர்கள் இல்லையோ அங்கே போலீஸுக்கு என்ன வேலை?

23. யதி ஹ்ருதயமசுத்தம் தஹி சர்வம் விருத்தம்

எங்கு இதயமானது அசுத்தமாக இருக்கிறதோ அங்கே எல்லாமே அசுத்தமாகத் தோன்றும்.

24. யத்யபி சுத்தம் லோகவிருத்தம் நாசரணீயம் |

சுத்தமாக இருந்தாலும் கூட லோகத்திற்கு எதிராக ஒன்றும் செய்யக் கூடாது.

25. ராமோ த்விர்நாபிபாஷதே |

ராமன் எதையும் இரண்டாம் முறை சொல்ல மாட்டார்.

***

Part 5 with Amritsar, Gwalior, Varanasi Temples; Rare Pictures from 1928 German book – (Post No.12,859)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,859

Date uploaded in London – –   28 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 5 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

In part five, rare pictures of Temples of Amritsar, Gwalior, Varanasi are posted; Opium, Bang preparations are shown in drawings.

xxxx

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

Golden Temple At Amritsar 100 years  ago

Amritsar Temple Plan

Gwalior Temple

Benares

Opium Preparation

Bhang Smoking

Kasi Temple

Pictures of Sikh Gurus

 Vishnu Temple in Kasi 

—Subham—

 Tags- Amritsar, Gwalior, Varanasi, Temples, Opium, Bhang preparation, Part 5, 1928 German book

QUIZ  விநாயகர் பத்து QUIZ (Post No.12,858)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,858

Date uploaded in London – –   28 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ பிள்ளையார் பத்து QUIZ (Post No.12,283) என்பது 16 ஜூலை 2023ல் வெளியானது ; பிள்ளையார் வினா-விடை (க்விஸ்) என்ற தொகுப்பு 2012 டிசம்பர் 31-ல் வெளியானது  இதோ விநாயகர் பத்து (Total 40 questions on Lord Ganapati in Tamil):

QUIZ SERIAL NUMBER—90

1.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள 6 அடி உயர பிள்ளையாருக்கு ஏன் முக்குறுணி விநாயகர் என்று பெயர் ?

XXXX

2. பொல்லாப் பிள்ளையார் எங்கே இருக்கிறார் ஏன் அப்படிப் பொல்லாதவர் ஆனார் ?

XXXXX

3. பாரதியாருக்குப்பிடித்த பிள்ளையார் எங்கே இருக்கிறார் ?

XXXXX

4.மாற்றுரைத்த பிள்ளையார் என்ன செய்தார்?

XXXXX

5.ஜப்பானியர்களும் இந்து தெய்வங்களை வணங்குகிறார்கள்ஜப்பானில் கணபதிக்கு என்ன பெயர்?

XXXX

6.ஒரு காரியத்தைத் துவங்கும்போது அது நினைத்த வடிவில் இல்லாமல் உருமாறிப்போன்னால் சொல்லும் பழ மொழியைப் பூர்த்தி செய்யுங்கள் .

பிள்ளையார் பிடிக்க ————-  ஆனது

(களி மண்ணில் பிள்ளையார்  உருவத்தைச் சமைக்க எண்ணிய ஒருவரின் செயலை விளக்கும் பழ மொழி இது)

XXXX

.7.கரும்பாயிரம் பிள்ளையார் எந்த ஊரில் இருக்கிறார் ?

XXXX

8.படிக்காசு விநாயகர் எங்கே இருக்கிறார் ஏன் அந்தப் பெயரை மக்கள் சூட்டினார்கள்?

XXXX

9.அச்சது பொடிசெய்த அது தீரன் என்று கணபதியை அருணகிரிநாதர் புகழ்வது ஏன் ?

XXXX

10. பல வகைப் பிள்ளையார்கள் இருக்கிறார்கள் ஆயினும் புரோகிதர்கள் எல்லா சடங்குகளையும் விநாயகரின் 16 பெயர்களைச் சொல்லி பூஜைகளைத் துவங்குவார்கள் அவை யாவை?

XXXXX

விடைகள்

1.மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள பெரிய பிள்ளையாருக்கு முக்குறுணி விநாயகர் என்று பெயர். பிள்ளையார் சதுர்த்தி அன்று முக்குறுணி அரிசியில் மிகப் பெரிய கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வர்; 21 லிட்டர் அரிசிமாவால் செய்யப்படும் ராட்சத கொழுக் கட்டையாகும். ஒருகுறுணி என்பது நாலு பட்டணம் படிக்குச் சமம். 3 குறுணி என்பது 12 படி அல்லது 21 லிட்டருக்குச் சமம்..

XXXX

2.நம்பியண்டார் நம்பியின் உணவை உண்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்திய பொல்லாப் பிள்ளையார் திருநாரையூரில் வெள்ளாற்றங்கரையிலே வீற்றிருக்கிறரர். இளம் வயதில் , தந்தைக்குப்பதிலாக  ஒருநாள் நம்பியாண்டார் நம்பி, அந்தக் கோவிலுக்குப் பூஜை செய்யச் சென்றார் . அவர் கொண்டுசென்ற பிரசாதத்தை விநாயகர் சிலை சாப்பிடவில்லை. உடனே தான் ஏ தோ தவறு செய்துவிட்டதாக எண்ணி, தலையை கருங்கல்லி ல் மோதிக் கொள்ளச் செல்லுகையில்  பிள்ளையாரே நேரில் தோன்றி பிரசாதம் முழுதையும்  தின்று தீர்த்தார் ; பொல்லாதவர் என்ற பெயரும் பெற்றார் ..

XXXX

3.பாரதியார் பாடிய, வணங்கிய, விநாயகர் புதுச்சேரியில் இருக்கிறார்; அவருடைய பெயர் மணக்குள விநாயகர்.

XXXX

4.விருத்தாசலம் (திரு முதுகுன்றம்) மாற்றுரைத்த பிள்ளையார், சுந்தரர்- பரவை நாச்சியார் வாழ்வுடன் தொடர்புடையவர். பரவை நாச்சியாருக்கென வேண்டி சுந்தரர், சிவ பெருமானிடமிருந்து பொற்காசுகளைப் பெற்றார். அவற்றை மணிமுத்தாற்றில் இடுவ்தற்கு முன் அப்பொன்னை மாற்றுரைத்து, அதற்கு இப்பிள்ளையாரைச் சாட்சியாக வைத்ததால், அவர் மாற்றுரைத்த பிள்ளையார் எனப் பெயர் பெற்றார்.

XXXX

5.ஜப்பானில் கணபதிக்கு கங்கிடன் KANGITEN  என்று பெயர்; கணேசன் என்ற பெயர் இப்படித் திரிந்துவிட்டது.

XXXX

6.பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆனது – என்பது பழமொழி

XXXX

7.கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற பிள்ளையாருக்குக் கரும்பு ஆயிரம் பிள்ளையார் என்று பெயர்.

XXXX

8.பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும் சம்பந்தரும், திருவீழிமிழலையில்

“வாசி தீர வே காசு நல்குவீர்” — என்று சிவ பெருமானை நோக்கிப் பதிகம் பாடினர். நாள்தோறும் கோவில் படியில் ஒரு தங்கக் காசு வீதம் வந்தது. அங்கிருக்கும் பிள்ளையார் படிக்காசு பிள்ளையார் ஆவார். இவர் பேரளத்திலிருந்து நாலு மைல் தொலைவில் கோவில் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் துதிக்கப் பெற்றவர்:-

XXXX

9.பிள்ளையாரை வணங்காமல் சென்றதால் சிவனுடைய ரதத்தின் அச்சு பொடிப் பொடியானதாம் . அதை அருணகிரி நாதர்  , திருப்புகழில் அழகாகப்பாடுகிறார் :

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி

கப்பிய கரிமுகன் அடிபேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

கற்பகம் எனவினை கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொரு திரள்புய மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்

அச்சு அது பொடிசெய்த அதிதீரா

அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்

அப்புனம் அதனிடை இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கணம் மணம் அருள் பெருமாளே.

XXXX

10. விநாயகர் பூஜையில் மஞ்சளில் பிள்ளையார் செய்து, அதன் மீது மஞ்சள் அரிசி அல்லது மலர்களால் பூஜிக்கப் வேண்டும் ; அதற்கான  16 நாமாக்கள்

மங்களம் வாய்ந்த ஸுமுகன்

ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தன்

கபில நிறம் வாய்ந்த கபிலன்

யானைக் காதுகள் உள்ள கஜகர்ணன்

பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்

குள்ளத் தோற்றமுள்ள விகடர்

சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்

தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்

நெருப்பைப்போல ஒளிவீசும் தூமகேது

பூத கண ங்களுக்குத் தலைவரான கணாத்யக்ஷன்

நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிய பாலசந்திரன்

யானை முகத்தையுடைய கஜானனன்

வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டன்

முறம் போன்ற காதுகள் உடைய சூர்ப்பகர்ணன்

தம்மை வணங்கி நிற்கும் பக்தகோடிகளுக்கு அருள்புரியும் ஹேரம்பன்

கந்தப் பெருமானின் அண்ணனான ஸ்கந்தபூர்வஜன்

–இவ்வாறு சொல்லப்படும் பிள்ளையாரின் 16 நாமங்களையும்

கல்வி கற்கும் போதும், வீட்டைவிட்டுப் புறப்படும்போதும்,

போர்க் காலத்திலும், இன்னலுற்றபோதும்

யாராவது வாசித்தாலும், கேட்டாலும் அவர்களுக்கு

எந்த இடையூறும் வராது. –கந்த புராணம்

எளிதில் நினைவிற்கொள்ள ஸ்லோக வடிவில்

ஸுமுகைஸ்சேகதந்தஸ்ச கபிலோகஜகர்ணக:

லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:

தூமகேதுர்கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானன:

வக்ரதுண்ட ஸூர்பகர்ண ஹேரம்பஸ்கந்தபூர்வஜ:

—SUBHAM—

TAGS- விநாயகர் பத்து, கேள்வி பதில், 16 பிள்ளையார் பெயர்கள், கைத்தல நிறைகனி, Quiz No.90

திரிசம்பரம் கிருஷ்ணன் கோவில் -40 (Post No.12,857)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,857

Date uploaded in London – –   28 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 40

கோவில் எண்கள் –45,46

45.திரிசம்பரம் கிருஷ்ணன் கோவில்

தளிப்பறம்பா ராஜ ராஜேஸ்வர கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இந்தப் புகழ்பெற்ற (Trichambaram Krishna Temple) கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. இதை வடக்கு குருவாயூர் என்று அழைப்பர். இது வட கேரளத்தில் உள்ள முக்கியக் கோவில். கண்ணனுர் (கண்ணூர்) மாவட்டத்தில் இருக்கிறது .

கம்சனை வதம் செய்துவிட்டு வந்த கிருஷ்ணனை, அதே ருத்ர ரூபத்தில் காட்டுகிறது இங்குள்ள கிருஷ்ணன் சிலை .

சிறப்பு அம்சங்கள்

சம்பர வனத்தில் சம்பர மகரிஷி தவம் செய்து இறைவனுடன் ஐக்கியமான புண்ய பூமி இது.

இந்தக் கோவிலில் உள்ள ஓவியங்கள் கண்களைக் கவரும் வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன. சிற்பங்களும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

சிற்பங்களும் ஓவியங்களும் 200 முதல் 400 ஆண்டுப் பழமையானவை. இங்கு அமைக்கப்பட்ட மரச் சிற்பங்கள் பாகவத புராண (கிருஷ்ணர் வரலாறு) நிகழ்ச்சிகளை சித்தரிக்கின்றன

இங்கு துர்க்கை அம்மன் குளத்துக்கு நடுவில் கோவில் கொண்டுள்ளது தனிச் சிறப்பு வாய்ந்தது.  துர்கா உறையும் குளம் புண்ய தீர்த்தம் என்பதால் யாரும் குளிக்க அனுமதி இல்லை. கோடை காலத்திலும் கூட குளம் வற்றாமல் ஒரே மட்டத்தில் நிற்பது ஒரு அதிசயமே

கோவில் வரலாறு

கேரளத்தின் ஒரு பகுதியை எலி வம்சத்தினர் ஆண்டார்கள். ஸம்ஸ்க்ருதத்தில் எலி வம்சத்தை மூஷக வம்சம் என்பார்கள். அதுல என்னும் கவி, மூஷக வம்ச காவியத்தை இயற்றினார். 11-ஆம் நூற்றாண்டு வரை அவர்கள் ஆண்டார்கள் அந்த வம்ச அரசர்களில் ஒருவரான வலபன் என்பவன் திருப்பணி செய்ததை காவியம் குறிப்பிடுவதால் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது என்பது புலப்படுகிறது .

இரண்டு வினோத வழக்கங்கள்

கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் ஆனக்கொட்டில் இருக்கும் அங்கே பல யானைகளைக் காணலாம். ஆனால் திருச் சம்பரம்கோவிலில் யானைகள் இல்லை; கிருஷ்ணன் கொன்ற கம்சனின் யானையின் பெயர் குவலயா பீடம். அவன் யானையைக் கொன்றபின்னர் கம்சனின் வம்சத்தையே துவம்சம் செய்தான். அதனால் இந்தப் பக்கமே யானைகளைக் கொண்டுவரக்கூடாது என்பது சம்பிரதாயம்.

இதைச் சோதிக்க முற்பட்ட ஒரு முஸ்லீம் வியாபாரியும் மன்னிப்புக் கேட்கும் சம்பவம் நடந்தது. அவர் வாங்கிய புதிய யானையில் கோவிலைச் சுற்றி பவனி வந்தார். கிழக்கு கோபுரம் அருகில் அந்த யானை வந்த பொழு து இடி ஓசையுடன் கோவில் கதவுகள் திறந்தன. யானை முன்கால்களை மடித்து அமரவே, மாவுத்தன் தூக்கி எறியப்பட்டான். வியாபாரியும் தவற்றை உணர்ந்து கோவிலுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார் .

இன்னொரு வினோத வழக்கம், சந்நிதி திறந்தவுடன் நைவேத்தியத்தை கிருஷ்ணனுக்கு படைப்பது ஆகும். ஏனென்றால் கம்சனைக் கொன்ற பின்னர், கண்ணன், பசியுடன் இருந்ததால் யசோதையிடம் சென்று அம்மா, சோறு போடு என்றானாம்.

துலுக்கப்படைகள் அட்டூழியம்

திப்பு சுல்தானின் துலுக்கப்படைகள்  இடிக்காத இந்துக் கோவில்கள் வட கேரளத்தில் இல்லை. திருச்சம்பரம் கிருஷ்ணன் கோவிலும் முஸ்லீம்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் கடந்த 200 ஆண்டுகளில் கோவில் திருப்பணிகள்  அடுத்தடுத்து நடந்தன. ஆயினும் நடுவிலுள்ள கர்ப்பக்கிரகப் பகுதி சதுர வடிவில் உள்ளதால் இது பழைய பகுதி என்பது வரலாற்று அறிஞர்களின் துணிபு.

இலஞ்சி மர அற்புதம்

கடுமையான தோல் நோயுடைய ஒருவர் ஆறாத புண்களுடன் இந்தக் கோவிலில் தஞ்சம் புகுந்தார்; கோவில் திறந்தவுடன் கண்ணனைத் தரிசித்துவிட்டு கோவிலுக்கு வெளியேயுள்ள இலஞ்சி மரத்துக்கு அடியில் அமர்ந்து பிராத்தனை செய்து வந்தார். மரத்தின் காய்கள் உடலில் விழும்போது வலியால் அலறுவார் ; கண்ணா இப்படி என்னைக் கொடுமைப்படுத்துகிறாயே என்று அலறியவுடன் மரம், காய் காய்ப்பதையே நிறுத்திவிட்டது; அவருக்கும் நோய் குணமானது இதை நினைவுபடுத்தும் வகையில் திருவிழாக்காலத்தில் கண்ணன் உருவம் மரத்துக்கு முன்னால் நிறுத்தப்படும். பக்தர்கள் அதன் இலையில் மோதிரத்ததை வைத்து தமது கோரிக்கைகளை எடுத்துரைப்பார்கள்.

வினோத விழா

கும்ப மாதத்தில் (மார்ச்) ஆண்டு உற்சவம் நடக்கும். அப்போது 6 கி.மீ. தொலைவிலுள்ள தாராம்குளங்கரை கோவிலிலிருந்து பலராமர் சிலை ஊர்வலமாக வரும். இரண்டு இடங்களிலும் யானைகள் தடை செய்யப்பட்டதால் கிருஷ்ணர், பலராமர் உருவங்களை அர்ச்சகர்கள் தலையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டே வருவார்கள் ; இரவு முழுதும் இந்த ஆட்டம் நடக்கும் ; இவை எல்லாம் கோவிலுக்கு வெளியேயுள்ள மைதானத்தில் நடப்பதால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்க்க வருகிறார்கள் .

முன் காலத்தில் கோவிலுக்குள் இந்த டான்ஸ்/ நடனம்  (திடம்பு நிருத்யம்) நடந்தது. ஒரு பக்தை இதைக்காண முடியாமல் வருந்தி பிரார்த்தித்தார். அப்போது நடனம் ஆடிய அர்ச்சகர்கள் மெய் மறந்து கோவிலுக்கு வெளியே 2 பர்லாங் தூரம் சென்று பூக்கொத்து இல்லத்தில் இருந்த பக்தை முன்னர் ஆடினார்கள். அவர்கள் தலையில் சுமந்து வந்த விக்கிரகங்களை அம்மையாரும் தரிசித்து மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து இப்போதும் கோவிலுக்கு வெளியே இந்த நடனம் நடக்கிறது .

.xxxxxx

46. வேட்டைக்கொரு மகன் கோவில்கள் 150

சிவ பெருமானை வேட்டைக்கொரு மகன் என்ற பெயரில் வேடுவன் (கிராத மூர்த்தி) வடிவத்தில் Vettakkorumakan Temple வணங்கும் 150 கோவில்கள் கேரளத்தில் உள. அவை பாலுசேரி, நீலாம்பூர், காயங்குளம் கிருஷ்ணாபுரம், எருவட்டிக்காவு, ஆலப்படம்பா, நீலேஸ்வரம், கோட்டக்கல், கோழா, ஒலசா படிஞ்சாரேப்பட்டு முதலிய இடங்களில் இருக்கின்றன.

அர்ஜுனன், சிவ பெருமானை வேண்டி பாசு பத அஸ்திரம் பெற்ற கதை எல்லோருக்கும் தெரியும்; காட்டில் சிவனை நோக்கி தவம் செய்கையில் மூகன்  என்ற அசுரன் பன்றியாக வந்து தவத்தைக் கலைக்கவே அர்ஜுனன் அம்பு எய்தான்; வேடர்கள் உருவத்தில் சிவனும் பார்வதியும் வந்திருந்ததால் சிவனும் பன்றி மீது அம்பு விட்டார். பன்றி இறந்தவுடன் யார் விட்ட அம்பு பன்றியைக் கொன்றது யார்?என்று பட்டிமண்டபம் நடத்தினர். அது கைகலப்பில் முடிந்தது; சிவன் மீது அர்ஜுனன் விட்ட அம்புகளை எல்லாம் வேட்டுவச்சி பார்வதி மலர் அம்புகளாக மாற்றினாள் . சிவனை வேட்டைக்கொரு மகன் என்று அழைத்து பழங்குடி இன மக்கள் கோவில் எழுப்பினர் .

பாலுசேரி என்னும் ஊர் கோழிக்கோட்டிலிருந்து 25 கே.மீ. வட கேரளம் எனப்படும் மலபார் பகுதியில் வேட்டக்கொரு மகன் கோவில்கள் அதிகம். அந்த வட்டார ராஜ வம்சத்தினர் அவரை வழிபட்டனர் .

ஐயப்பனை ஹரிஹர புத்ரன் என்று அழைப்பது போலவே வேட்டைக் கொரு மகனையும் சிவன்-    பார்வதி பிள்ளை என்று கருதும் கதையும் உண்டு. அவன் சிறுவயதில் அதிக விஷமங்களைச் செய்யவே,  கானகம் வாழ் ரிஷி முனிவர்கள் கவலையுற்று இறைவனிடம் முறையிட்டனர் விஷ்ணுவும் வேடன் போல வந்து ஒரு தங்க சூரிகாவை (கத்தி) காட்டினார்; அதை அவன் வேண்டவே, மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவனிடம் அளித்தார். அவன் முதலில் நுழைந்த இடம் பாலுசேரி கோட்டை.

அங்குள்ள கோவிலில் கொடி மரமும் கோபுரமும் இல்லை. ஆயினும் வருவோருக்கு எல்லாம் உணவு படைக்கப்படும் பாடல்கள் மூலம் வழிபடும் வினோத வழக்கம் இருக்கிறது ; அது தவிர பெரிய உருவத்தில் சித்திரங்களை வரைந்து, விழா முடிந்த பின்னர் அந்த வண்ணப்பொடியை விபூதி போல பிரசாதமாக வழங்கும் வழக்கமும் இருக்கிறது. ஆண்டுதோறும் ஐயப்பன் மண்டலபூஜை காலத்தில் 41 நாள் உற்சவம் நடக்கும் ;நாற்பத்தி ஒன்றாம் நாளில் வேட்டக்கொருமகன் உருவம் தரையில் சித்திரமாக வரையப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூஜை செய்யப்படுகிறது. சில கோவில்களில் இவ்வுருவம் 20x 12 அடி நீள அகலம் இருக்கும் .

பெரும்பாலான  கோவில்களில் இரண்டு கரங்கள் மற்றும் உருட்டி விழிக்கும் கண்கள், தாடி, முறுக்கு மீசையுடன் வேடன் உருவில், வலது தோளின் பின்புறம் அம்புறாத்துணி, வலக்கையில் உடைவாள், இடக்கை வேல், வில் இரண்டையும் சேர்த்துப் பிடித்திருக்க, கால்களில் தண்டை அணிந்த நிலையில் காட்சி தரும் வேட்டைக்கொரு மகன் படங்களே வழிபாட்டில் உள்ளன. சில இடங்களில் மட்டும் இதே உருவத்தில் சிலைகள் இருக்கின்றன ; இவரை வணங்கினால் பயம் விலகும் என்பது நம்பிக்கை .

பகவதி கோவில்களில் நடத்தப்பெறும் ‘களமெழுத்துப் பாட்டு’ போன்று இக்கோவிலிலும் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது தேங்காய் எறிச்சல், வெளிச்சப்பாடு ஆகியன நடக்கும்

பந்தீராயிரம் விழா : இந்தக் களமெழுத்துப் பூஜையின் போது இங்குள்ள இறைவனை மகிழ்விக்கச் செய்யும் சடங்காக ‘வேட்டக்கொருமகன் பாட்டு’ இடம் பெறுகிறது. இப்பாட்டின் ஒலிக்கேற்ப 12,000 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன.

–SUBHAM–

TAGS- வேட்டைக்கொரு மகன்,  கோவில்கள் , 12000 தேங்காய் , களமெழுத்துப் பாட்டு, கிராதமூர்த்தி, பாசுபத அஸ்திர கதை, திருச் சம்பரம், கிருஷ்ணன் கோவில், பாலுசேரி

அநிருத்தனைக் காப்பாற்றிய ஶ்ரீ கிருஷ்ணர்! (Post.12,856)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,856

Date uploaded in London –  –  28  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அநிருத்தனைக் காப்பாற்றிய ஶ்ரீ கிருஷ்ணர்!

ச.நாகராஜன்

ஶ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையில் பல சுவாரசியமான நிகழ்வுகள் உண்டு.

இவற்றைப் புராணங்களிலும், மஹாபாரதத்திலும், பின்னால் எழுந்த நூற்றுக் கணக்கான நூல்களிலும் காணலாம்.

ஶ்ரீ கிருஷ்ணரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு இது:

பலியின் புதல்வன் பாணன். அவன் மிகப் பெரும் வலிமை வாய்ந்த அசுரன்.

அவனுக்கு ஆயிரம் கரங்கள். ஒரே சமயத்தில் ஐநூறு வில்களை எடுத்து ஐநூறு பாணங்களைத் தொடுத்து அவனால் விட முடியும். அப்படி ஒரு வல்லமை!

அவன் ஒரு சிவ பக்தன். கடுமையான தவத்தை நெடுங்காலம் மேற்கொண்ட அவன் சிவ தரிசனம் பெற்றான்.

அவன் விசித்திரமான ஒரு வரத்தை சிவனிடம் யாசித்தான். தன் அரண்மனை வாயிலில் வாயில் காப்போனாக சிவன் இருக்க வேண்டும் என்ற வரம் அது.

சிவனும் வரத்தை ஈந்தார். வாயிலைக் காக்கும் பணியை மேற்கொண்டார்.

பாணனுக்கு அழகான ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் உஷா.

ஒரு நாள் தனது கனவில் அவள் அழகிய ராஜகுமாரன் ஒருவனைக் கண்டாள். அவனோடு மிகவும் சந்தோஷமாக வாழ்வதாக அந்தக் கனவில் அவள் கண்டாள்.

கனவிலிருந்து விழித்தெழுந்த பின்னரும் அந்த அழகிய ராஜகுமாரனை அவளால் மறக்க முடியவில்லை.

அவளுக்கு ஒரு தோழி. அவள் பெயர் சித்ரலேகா.

சித்ரலேகாவிற்கு அபூர்வமான ஒரு கலை தெரியும். 

தான் கண்ட அல்லது கற்பனை செய்யும் எந்த உருவத்தையும் அவளால் வரைய முடியும்.

அவளிடம் உஷா தான் கண்ட கனவைச் சொல்லவே, பல ராஜ குமாரர்களின் படத்தை வரைந்து காண்பிக்க ஆரம்பித்தாள் சித்ரலேகா.

அநிருத்தனின் படமும் அதில் ஒன்று.

அதைப் பார்த்த உஷா அசந்து போனாள்.

அச்சு அசலாகத் தன் கனவில் வந்த அதே உருவம் தான் அது!

சித்ரலேகா தனது யோகசக்தியினால் தனது அரண்மனையில் தூங்கிக் கொண்டிருந்த அநிருத்தனை அலாக்காகத் தூக்கி வந்து உஷாவிடம் ஒப்படைத்தாள்.

அநிருத்த்தனும் உஷாவும் மிகவும் சந்தோஷமாக உஷாவின் அரண்மனைப் பகுதியில் பல தினங்களைக் கழித்தனர்.

திடீரென்று ஒரு நாள் அநிருத்தனை பாணன் கண்டு விட்டான்.

அவனைக் கட்டிப் போட்ட பாணன், ஒரு தனி அறையில் அவனை அடைத்து விட்டான்.

அநிருத்தன் யார்?

ருக்மணிக்கும் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் பிறந்தவர் பிரத்தியும்னன்.

பிரத்தியும்னனுக்கும் ருக்மியின் மகளான ருக்மவதிக்கும் பிறந்தவர் அநிருத்தன். அதாவது அவர் கிருஷ்ணரின் பேரனாவார்.

கிருஷ்ணரின் ராஜ்யத்தில் அநிருத்தனைக் காணோமே என்று அனைவரும் தவிக்கலாயினர். தேவரிஷி நாரதர் த்வாரகைக்கு வந்த போது அநிருத்தனைப் பற்றிய சரியான தகவலை விரிவாகத் தந்தார்.

பாணனின் சோணிதபுரத்தை நோக்கி கிருஷ்ணரின் தலைமையில் யாதவர் படை வெகுண்டெழுந்து சென்றது.

அங்கு காவல் காத்ததோ சிவபிரான். அவர் யாதவர் சேனையை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்.

இரண்டு தெய்வீக சக்திகள் தம் தம் படையைக் காக்க ஶ்ரீ கிருஷ்ணரின் யாதவ சேனையின் அதிரடித் தாக்குதலைத் தாங்க மாட்டாத பாணனின் படை பயந்து பறந்தோடியது.

பாணன் நேரடியாகப் போர்க்களத்தில் குதித்தான்; கிருஷ்ணரை எதிர் கொண்டான்.

பாணனின் ஆயிரம் கரங்களில் இரு கைகளைத் தவிர அனைத்தையும் வெட்டினார் கிருஷ்ணர்.

சிவனின் வேண்டுகோளுக்கிணங்க பாணனை உயிரோடு விட்டார் ஶ்ரீ கிருஷ்ணர்.

ஶ்ரீ கிருஷ்ணர் அநிருத்தனையும் உஷாவையும் மீட்டு தன்னுடன் த்வாரகைக்கு அழைத்துச்  சென்றார்.

***

Part 4 with Kasi Temples, Ganga River, Hindu Cremation  ; Rare Pictures from 1928 German book on Hinduism- (Post No.12,855)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,855

Date uploaded in London – –   27 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 4 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

In part four, rare pictures of Kasi also known as Benares and Varanasi are posted; we see different temples, River Ganges, Pilgrims’ bathing and how Hindus cremate dead bodies on the banks of Ganga. One picture shows the plan of city of Kasi

xxxx

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

Dead body

Durga Temple, Kasi

Simultaneous cremation 

Dead bodies are washed

City Plan, Varanasi, Benares, Kasi

Nandhi/ Bull in front of Shiva

Hindu Pilgrims

Idol of Ganga Devi

–subham—

Tags-German book, year 1928, rare pictures, part 4, Hindu pilgrims, pictures of cremation, River Ganga, Kasi, city plan, Varanasi, Benares

ஷீரடி சாய்பாபா பொன்மொழிகள்: ஜனவரி 2024 நற்சிந்தனை காலண்டர் (Post.12,854)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,854

Date uploaded in London – –   27 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஜனவரி 1 புத்தாண்டு விழா, 12 விவேகானந்தர் ஜெயந்தி, 14 போகிப் பண்டிகை, 15 பொங்கல், 16 மாட்டுப்;பொங்கல் , திருவள்ளுவர், 17 உழவர் நாள்; 25 தைப்பூசம், 26 குடியரசு தினம் ; 30 காந்தி நினைவு தினம் .

அமாவாசை – ஜனவரி 10; பெளர்ணமி 25. ஏகாதஸி – 7, 21

xxxx

ஜனவரி 1 திங்கட் கிழமை

இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்தபின் , நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை. அவரே பொறுப்பேற்று உங்களை வழி  நடத்துவார் .

xxxx

ஜனவரி 2 செவ்வாய்க் கிழமை

இந்த உலகத்தில் ஒரு மதம் மட்டுமே உள்ளது; அது அன்பு மதம். இந்த உலகத்தில் ஒரே மொழிதான் உள்ளது. அது இதயத்தின்  மொழி,

xxxx

ஜனவரி 3 புதன் கிழமை

கடின உழைப்பால் பெறும் பொருளே நிலைத்து நிற்கும்.

xxxx

ஜனவரி 4 வியாழக் கிழமை

கோபம், பொறாமை, ஆணவம் ஆகிய மூன்றும் கொடிய நோய்கள். அதிலிருந்து விலகியே இருங்கள்.

xxxx

ஜனவரி 5 வெள்ளிக் கிழமை

அன்பே மிக உன்னதமானது ; அன்பு அலைகள் மேலெழும்பினால் உலகம் சுபிட்சம் ஆகிவிடும் .

xxxx

ஜனவரி 6 சனிக் கிழமை

நானிருக்க பயம் ஏன் ?

xxxx

ஜனவரி 7 ஞாயிற்றுக் கிழமை

கடவுள் முதல் மண்ணில் நெளியும் புழுக்கள் வரை எந்த உயிரிடத்திலும் உயர்வு தாழ்வு காட்ட வேண்டாம் .

xxxx

ஜனவரி 8 திங்கட் கிழமை

என்னுடைய, பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

XXXX

ஜனவரி 9 செவ்வாய்க் கிழமை

நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.

XXXX

ஜனவரி 10 புதன் கிழமை

நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

XXXX

ஜனவரி 11 வியாழக் கிழமை

நோயிலும் வறுமையிலும் வாடுவோருக்கு உதவுவதன் மூலம் கடவுளின் அன்புக்குப் பாத்திரர் ஆக முடியும்.

xxxx

ஜனவரி 12 வெள்ளிக் கிழமை

ஒருவன் தன் உடலில் சரிகைத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஆடம்பர அலங்காரத்துடன் இருக்கிறான். மற்றொருவன் கந்தைத் துணியை உடுத்திக் கொள்கிறான். இரண்டின் பலனும் உடலைப் போர்த்திக் கொள்வதேயன்றி வேறில்லை. அறுசுவை உணவோ, கூழோ எதை உண்டாலும் முடிவு ஒன்றுதான், வயிறு நிறைந்து பசி தீருவதே அது.

xxxx

ஜனவரி 13 சனிக் கிழமை  

யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைக்கிறேன்.எனக்கு வண்டியோ குதிரையோ ஆகாயவிமானமோ ரயில்வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன்.

xxxx

ஜனவரி 14  ஞாயிற்றுக் கிழமை

கோபம் என்பது கொதிக்கும் நீரைப் போன்றது ;அதை தேக்கி வைத்தாலும் அடுத்தவர் மீது ஊற்றினாலும் ஆபத்து தான். அமைதியாக இருந்து ஆற வைப்பது ஒன்றே அற்புத வழி.

 Xxxx

ஜனவரி 15 திங்கட் கிழமை

யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக நினைவில் வைக்கிறேன். யார் என்னை அன்புடன் கூவி அழைக்கிறார்களோ அவருக்கு நான் தாமதமின்றி உதவுகிறேன்.

Xxxx

ஜனவரி 16 செவ்வாய்க் கிழமை

கர்மங்களைக் குறைத்துக்கொள்ள ஒரே வழி அவைகளை  தைரியமாக அனுபவிப்பதுதான். அதற்கான சக்தியை நான் தருகிறேன்  .அப்போது துன்பம் என்ற எண்ணம் வராது .

Xxxx

ஜனவரி 17 புதன் கிழமை

நீ எதைச் செய்தாலும் நான் அறிவேன் ; உனது செயல்களை நல்லதாகவும் நடத்தை சரியாவையும் இருந்தால், அவற்றை ஆசீர்வதித்து உடனிருந்து கவனித்துக் கொள்வேன் .

Xxxx

ஜனவரி 18 வியாழக் கிழமை

மனம் முரட்டுத் தனமானது; அதை அடக்குவது எளிதல்ல; அதன் தயவு இல்லாமல் கடவுளைக் காணவும் முடியாது.

Xxxx

ஜனவரி 19 வெள்ளிக் கிழமை

ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.

 Xxxx

ஜனவரி 20 சனிக் கிழமை

துவாரகா மாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.

Xxxx

ஜனவரி 21 ஞாயிற்றுக் கிழமை

இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

xxxx

ஜனவரி 22 திங்கட் கிழமை

என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.

 xxxx

ஜனவரி 23 செவ்வாய்க் கிழமை

என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.

xxxxx

ஜனவரி 24 புதன் கிழமை

நீ என்னை அடைந்தால் நான் உன் மீது கடைக்கண் பார்வை செலுத்தி அருள் மழை பொழிவேன்.

xxxx

ஜனவரி 25 வியாழக் கிழமை

எப்போதும் கடவுளை நினை; அப்போது  அவர் என்ன செய்கிறார் என்பது உனக்குத் தெரியும்

xxxx

ஜனவரி 26 வெள்ளிக் கிழமை

தேவையற்ற சண்டை சச்சரவுகளிலிருந்து விலகியே நில்.

xxxx

ஜனவரி 27 சனிக் கிழமை

நீ கடவுளைத்  துதி ; நான் கடவுளின் அடிமைதான் .நான் உங்களுடைய தொண்டருக்குத் தொண்டன் .

xxxx

ஜனவரி 28 ஞாயிற்றுக் கிழமை

லாபமும் நஷ்டமும் பிறப்பும் இறப்பும் இறைவனின் கைகளில்தான் உள்ளது .

xxxxx

ஜனவரி 29 திங்கட் கிழமை

காம இச்சசைகளுக்கு அடிமையானோருக்கு முக்தி என்பது கிடைக்காது.

xxxx

ஜனவரி 30 செவ்வாய்க் கிழமை

என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.

 xxxx

ஜனவரி 31 புதன் கிழமை

 என்னிடன் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும், நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

BONUS SAYING

மனத்தை மகிழ்ச்சியோடு வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம். கவலை, அவசரம், பயம் ஆகியவற்றால் அலைக்கழிக்கப்படாமல் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் .

–subham–

TAGS– ஜனவரி 2024,   நற்சிந்தனை,  காலண்டர், ஷீரடி சாயிபாபா,  பொன் மொழிகள், சாய்பாபா

திப்பு சுல்தான் இடித்த தளிப்பறம்பா சிவன் கோவில் – 39 ( Post No.12,853)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,853

Date uploaded in London – –   27 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 39

 கோவில் எண்கள் –43,44

43.தளிப்பறம்பா ராஜ ராஜேஸ்வர கோவில்

கண்ணனூரிலிருந்து (கண்ணூர் ) 25 கி.மீ தூரத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் இருக்கிறது. கேரள மாநில 108 சிவன் கோவில் பட்டியலில் இதைக் காணலாம்.

இந்த வட்டாரத்தில் 3 கோவில்கள் இருக்கின்றன ; கர்ப்பிணிப் பெண்கள் மூன்றையும் தரிசிக்க வேண்டும் என்பது மலையாளி இந்துக்களின் சம்பிரதாயம் ; அவையாவன :

1.தளிப்பறம்பா ராஜ ராஜேஸ்வரர் சிவன் கோவில் Rajarajeshwara Temple at Taliparamba

2..த்ரிசம்பரம் கிருஷ்ணன் கோவில் Trichambaram Krishna Temple

3.கஞ்சிரகாட் வைத்தியநாதர் (சிவன்) கோவில் Kanhirangad Sree Vaidyanatha Temple

தளிப்பறம்பா ராஜராஜேஸ்வர  சிவன் கோவிலுக்கு சில பர்லாங் தூரத்தில் கிருஷ்ணன் கோவில் இருக்கிறது ; தளிப்பறம்பாவிலிரு ந்து 6 கி.மீ தொலைவில் வைத்தியநாதர் சிவன் கோவில் இருக்கிறது . இவைகளை வணங்கும் கர்ப்பிணிப்பெண்ணுக்கு நல்ல ஆயுள் ஆரோக்கியமும், பெரிய பதவிகளும் உள்ள பிள்ளைகள் பிறக்கும் என்பது வட்டார இந்துக்களின் நம்பிக்கை.

ராஜ ராஜேஸ்வர சிவன் கோவிலின் சிறப்புகள்

தட்சன் நடத்திய யாகத்தில் சிவ பெருமானை அவன் அவமதித்ததால் பார்வதி தேவி, யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்தாள்; சதி என்னும் வழக்கம் அப்போது தோன்றியது. சதியின் உடலைத் தூக்கிக்கொண்டு ருத்ர தாண்டவம்  ஆடினார் சிவன். அப்போது  பார்வதி தேவியின் உடற்கூறுகள் விழுந்த இடங்கள் எல்லாம் மாபெரும் சக்திக் கேந்திரங்களாக மாறின. சிலர் 51 இடங்கள் என்பர்; மேலும் சிலர் 108 இடங்கள் என்பர். சக்தி தேவியின் தலை விழுந்த இடமே தளிப் பறம்பு என்பது மலையாளிகளின் நம்பிக்கை.

திப்பு சுல்தானின் துலுக்கப்படைகள்

இந்தக் கோவிலுக்கு 7 நிலை ராஜ கோபுரம் இருந்தது ; மத வெறி பிடித்த  திப்பு சுல்தானின் துலுக்கப்  படைகள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், கோவிலை இடித்தன ; அவர்களில் படைத் தளபதி  ஒருவனை பாம்பு கடித்து இறக்கவே ஓடிவிட்டனர். இடிபாடுகளை இன்றும் காணலாம்.

கோவிலின் தோற்றம் – சுவை மிகு கதைகள்

பார்வதிக்கு சிவன் மூன்று லிங்கங்களை அளித்து பூஜை செய்ய உதவினார். மாந்தாதா என்ற சூரிய வம்சத்து அரசன், சிவனை வேண்டி தவம் புரியவே ஒன்றை அவனுக்குக் கொடுத்தார். அவன் பூஜை செய்த லிங்கம் காலப்போக்கில் பூமிக்குள் புதையுண்டது . அவனது வம்சத்தில் தோன்றிய முசுகுந்தன், தவம் இயற்றி இரண்டாவது லிங்கத்தைப் பெற்றான். அதுவும் காலத்தின் கோலத்தினால் மறையவே மூஷக வம்ச கேரள அரசன் சதஸோமன் , சிவனை வேண்டவே அவனுக்கு மூன்றாவது லிங்கம் கிடைத்தது. அதை அவன், அகஸ்தியர் சொன்னபடி, இங்கே நிறுவினான். பிற்காலத்தில் சூரிய வம்சத்தில் உதித்த ராம பிரானும் இங்கே வந்து சிவனை வழிபட்டார்  என்பது ஐதீகம். ஆக, கோவிலின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது.

லக்ஷ்மி புரம்

இந்த ஊரின் பழைய பெயர் லக்ஷ்மி புரம் ; பெரும் த்ரி கோவில் என்றும் சொல்லுவார்கள் .

கோழிக்கோடு ஜாமொரின் (இந்து மன்னர்கள்) களில் ஒருவர் பெரிய சிவ பக்தர்; அவர் கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து மாயமாக மறைந்தார்; தொலை தூரத்திலுள்ள திருவாங்கூர் மன்னர்களும் ஒவ்வொரு பட்டாபிஷேகத்தின்போதும் இந்தக் கோவிலுக்கு ஒரு யானையை தானம் செய்வார்கள்; திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, இந்த ஊர் நம்பூதிரி பிராமணர்களையும் வேத பாராயணத்துக்கு அழைத்தார்.  பெரும் த்ரிகோவில் அப்பனைத் தவிர , வேறு எந்த மன்னரைப் போற்றும் ஜெபத்திலும் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்று சொல்லி அழைப்பை நிராகரித்தனர்

பார்கவம்மா என்பவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து 15,000 பிராமணர்களை இங்கு குடியேற வழிசெய்தார் என்று கேரள மஹாத்ம்யயம் சொல்லும். மயூர வர்மா என்ற மன்னர் பிராமணர்களுக்கு நிறைய நிலம் ஒதுக்கினார் கல்வி, கேள்விகளில் இந்த ஊர்ப்பிராமணர்களுக்கு நிகரானவர் எவருமிலர் என்ற அளவுக்கு புகழ்க்கொடி நாட்டினர் .

சிவ யோகி கதை

ராகவேந்திரா என்ற இயற்பெயர் கொண்ட ஒருவர் தமது தவத்தினால் சிவ யோகி என்றும் அத்யாச்ரமி என்றும் பெயர் பெற்றார். வேணாட்டின் மன்னர் ரவி வர்மா குலசேகரர் (1299-1314)  காலத்தில் அவர் வாழ்ந்தார். சிவ யோகி போல மன்னரும் மாபெரும் அறிஞர்.. ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் சிவ யோகி மடம் இருக்கிறது. சிவ பெருமானே அவருக்கு காட்சி தந்ததாக பக்தர்கள் நம்புவர் .

காசி நகரத்தில் அறிஞர்கள் கூடி வாதப் பிரதிவாதங்களில்  இறங்குவது போல தளிப்பரம்பாவும் சான்றோர் குழுமும் இடமாகத் திகழ்ந்தது . தமிழ்ச் சங்கப்பலகை போல சான்றோர் மட்டுமே நுழையும் மண்டபங்களும் இருந்தன. அவர்களுக்கு கைகளுக்கு காப்புகளும் சால்வைகளும்  வழங்கப்பட்டன.

உத்தண்ட சாஸ்திரி கதை

கோழிக்கோடு ஜாமோரின் (இந்து மன்னர்கள்)  அரசவையில் ஆஸ்தானக் கவிஞர் உத்தண்ட சாஸ்திரி. ; அவர் நிர்குண உபாசகர்; கோவில் சிலைகளை வணங்க மாட்டார். கோவிலுக்கு விஜயம் செய்கையில் கைகூப்பி நிற்க மட்டும் செய்வார்; கீழே விழுந்து நமஸ்கரம் செய்தல், தொட்டுக் கும்பிடுதல் போன்றவை இராது ; ஆயினும் ராஜ ராஜேஸ்வர சிவலிங்கத்தைக் கண்ட மாத்திரத்தில் தன்னை அறியாமலே ஹர ஹர மஹாதேவ என்று கோஷமிட்டார்.; கீழே விழுந்து நமஸ்கரித்தார்.  நெடுஞ்சாண் கிடையாக  விழுந்ததோடு நில்லாமல்,  சமஸ்கிருதத்தில்  சிவன் மீது பாடல் எட்டுக் கட்டினார் அந்தக் கவிஞரின் கோகிலா சந்தேச நூலில், வட கேரளத்தின் தளிப்பரம்பா ,த்ரிசம்பரம்  , திருநாவாய், முதலிய முக்கியக் கோவில்களைக் காணலாம்.

கேரள  பாணி கோவில்

கோவிலின் அமைப்பு பிரமிடு வடிவ கூரையுடனும் முன்னும் பின்னும் தாழும் 2 கூரைகளுடனும் உள்ளது. பலிக் கல்லில் வினோத உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.1524-ம் ஆண்டில் கோவிலுக்கு நடந்த திருப்பணி பற்றிய கல்வெட்டும் காணப்படுகிறது .

ஒரு வினோத வழக்கம் என்னவென்றால் இந்தக் கோவிலில் பகல் நேரத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை; இரவு பூஜை முடிந்த பின்னரே இறைவனைத் தரிசிக்கலாம்..

சிவராத்திரி, விஷு பண்டிகை நாட்களிலும் மாத பிரதோஷ காலத்திலும் பெரும் கூட்டம் கூடுகிறது .

தென் இந்தியாவில் பிற கோவில்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பக்தர்கள் இக்கோவிலில் வந்து பிரஸ்னம் பார்ப்பது வழக்கம். பிரஸ்னம், வெளியே அமைந்துள்ள ஒரு பீடத்தில் வைத்து பார்க்கப்படும்.

கோவிலுக்குள்  இந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்கான தடை இருந்த போதும், 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிறித்துவரான திரைப்பட நடிகை மீரா ஜாஸ்மின் இக்கோவிலுக்குள்  நுழைந்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் அதற்கான பரிகார பூஜைக்கான தொகையை மீரா ஜாஸ்மின் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து தனது செயலுக்கு மன்னிப்பும் கோரினார்.

தளிப் பறம்பு  கோவிலில் நெய் அமுது படைப்பது ஒரு சம்பிரதாயம். இதனால் இங்கே செல்லுவோர் சிறு குப்பிகளில் கிடைக்கும் நெய் பிரசாதத்தை வாங்கி வருவார்கள்

xxxxx

44. காஞ்சிரக் காடு வைத்தியநாதர்/ சிவன் கோவில்

தளிப் பறம்பு  கோவிலில் பகல் நேரத்தில் பெண்கள் நுழைய தடை இருந்ததால்  ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இன்னும் ஒரு கோவிலை மன்னர் சத சோமன் கட்டினார் . இங்கே ஏனைய கோவில்களைப்போல பெண்கள் எந்நேரமும் சிவனை (வைத்தியநாதர்) வழிபட அனுமதி உண்டு 

பொதுவாக கணவனின் நீண்ட ஆயுளுக்காக பெண்கள் திங்கட்கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிக்கிறார்கள்; இதனால் திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் கூட்டம் அதிகம் இருக்கும் .ஆனால் காஞ்சிரக் காடு கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதான்  பெண்கள் கூட்டம் அதிகரிக்கும்; ஏனெனில் அங்கு சிவன்சூரிய அம்சம் பெற்றவர்; தனுர் மாத திருவாதிரை நாள் பெரிய விழா ஆகும் ; பிரதோஷ நாட்களிலும் கூட்டம் இருக்கும் .

—சுபம் —-

Tags– உத்தண்ட சாஸ்திரி,  கதை, சிவ யோகி ,திப்பு சுல்தான் ,தளிப்பறம்பா,  ராஜ ராஜேஸ்வரர்,  சிவன் கோவில் , காஞ்சிரக் காடு, வைத்தியநாதர்

காளத்தீ கண்டத்தே,  நெற்றியிலே,  கரத்திலே, அங்கமெங்கும் சிவனே! (Post No.12,852)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,852

Date uploaded in London –  –  27  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

காளத்தீ கண்டத்தேநெற்றியிலே, கரத்திலேஅங்கமெங்கும் சிவனே!

ச.நாகராஜன்

சொக்கநாதப் புலவர் தமிழின் தலை சிறந்த புலவர்களுள் ஒருவர்.

அவர் சிவபிரானை நோக்கினார். உடலெங்கும் விஷாக்கினி. வியந்து பாடுகிறார் இப்படி:

காளத்தீ கண்டத்தே காளத்தீ நெற்றியிலே

காளத்தீ யுன்றன் கரத்திலே – காளத்தீ

அங்கமெங்கும் வெவ்வழலை யாற்றினாள் ஞானப்பூம்

கங்கையென்னும் பெண்ணொருத்தி கண்டு

பாட்டின் பொருள்:

கண்டத்தே காளத்தீ – உனது கழுத்திலே காளத்தீ உண்டு

நெற்றியிலே காளத்தீ – நெற்றியில் காளத்தீ உண்டு

உன்றன் கரத்திலே காளத்தீ – உன் கையிலே காளத்தீ உண்டு

அங்கமெங்கும் காளத்தீ – உனது உடல் முழுவதும் காளத்தீ உண்டு.

வெம் அழலை – இந்த வெம்மையாகிய நெருப்பை

ஞானப்பூம் கங்கையென்னும் – ஞானத்தையும், பூ பொலிவையும் உடைய கங்கை என்னும்

பெண்ணொருத்தி கண்டு – பெண் ஒருத்தி கண்டு

ஆற்றினாள் – தணித்தாள்

காளத்தீ என்றால் விஷாக்கினி ஆகும். முதலில் உள்ள காளத்தீ பாற்கடலில் பிறந்த ஆலகால விஷத்தை சிவபிரான் கண்டத்திலே தாங்கியதைக் குறிக்கிறது.

அடுத்து இரண்டாவதாக வரும் காளத்தீ சிவபிரானின் நெற்றியிலே உள்ள நெற்றிக் கண் நெருப்பைக் கூறுகிறது.

அடுத்து மூன்றாவதாக வரும் காளத்தீ சிவபிரானின் கையிலே உள்ள நெருப்புருவமாகிய மழுவைக் குறிக்கிறது.

நான்காவதாக வரும் காளத்தீ சிவபிரானின் மேனி முழுவதும் நெருப்பாய் இருத்தலைக் குறிக்கிறது.

இப்படி அழல் உருவமாக அமைந்துள்ள சிவபிரானை கங்கை என்ற பெண் கண்டாள்; அதைத் தணித்தாள்.

கங்கையைத் தலையில் கொண்ட சிவபிரானின் தணல் வெப்பம் தணிந்தது!

ஞானப்பூ என்பதற்கு ஞானமாகிய அழகு என்ற ஒரு பொருளும் உண்டு.

இப்படி சிவபிரானைப் போற்றும் சொக்கநாதப் புலவர் சிவபிரானின் திரு நடனத்தைக் காண்கிறார்.

பாடுகிறார் இப்படி:

அம்பலா வின்னொருகா லாடினா லாகாதோ

உம்பரெலாங் கண்டதெனக் கொப்பாமோ – சம்புவே

வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்குந் தித்தியென

ஒற்றிப் பதஞ்சலிக்கு மூர்

பாடலின் பொருள் :

சம்புவே – சிவபிரானே

வெற்றிப் பதஞ்சலிக்கும் – வெற்றியை உடைய பதஞ்சலி மஹரிஷியின் பொருட்டும்

வெம்புலிக்கும் – கொடிய புலிக்காலர் பொருட்டும்  (வியாக்ரபாதரை இது குறிக்கிறது)

தித்தி என ஒற்றி – திதி என ஒற்றியாடி

பதம் சலிக்கும் – பாதம் ஓய்தற்குரிய

ஊர் – ஊராகிய

அம்பலவா – பொன்னம்பலவா

இன்னொரு கால் ஆடினால் ஆகாதோ – இன்னொரு காலால் ஆடினால் தகாதோ

உம்பர் எல்லாம் கண்டது – தேவர்கள் எல்லாம் பார்த்தது

எனக்கு ஒப்பு ஆமோ – எனக்கு சம்மதியாகுமோ!

இன்னொரு காலால் எனக்காக ஆடக் கூடாதா என்கிறார் புலவர்.

இப்படிப்பட்ட அற்புதமான தனிப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன.

***