Part 3 with Strange Hindu Saints ; Rare Pictures from 1928 German book on Hinduism- (Post No.12,851)


A Hindu saint’s head is buried in sand.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,851

Date uploaded in London – –   26 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 3 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

In part three strange Hindu saints are pictured. Several Hindu saints “torture” themselves by lying on a bed of nails or hanging sharp instruments from different parts of their body. But for them it is not at all “torture”. They want to show the world that Hindus treat body as a shirt or an upper garment which can be discarded easily. And they wanted to show pain, or no pain depends upon your mental status. What is pain for us is NOT a pain for them.

xxxx

Brahmins worship Sun and Goddess,  3 times a day.

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

–subham—

Tags-German book, year 1928, rare pictures, part 3, Hindu saints, pictures

Shirdi Sai Quotes : January 2024 ‘Good Thoughts’ Calendar (Post.12,850)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,850

Date uploaded in London – –   26 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

January 1 – New Year Day;  12- Swami Vivekananda Jayanthi;  14- Bogi Pandikai; 15- Makara Sankranathi- Pongal  16- Cow/Go Pongal , Tiruvalluvar Day; 17 Farmers day; 25 Thai Poosam, 26 Republic Day ; 30 Gandhiji Death Anniversary .

New Moon Day – January 10; Full Moon Day 25. Ekadasi Hindu Fasting Days- 7, 21

xxxxxx

January 1 Monday

The wise are cheerful and content with their lot in life.

xxxx

January 2 Tuesday

If you are wealthy, be humble. Plants bend when they bear fruit.
xxxx
January 3 Wednesday

Spend money in charity; be generous and munificent but not extravagant.

Xxxx

January 4 Thursday

Get on with your worldly activities cheerfully, but do not forget God.

xxxx

January 5 Friday

Whatever creature comes to you, human or otherwise, treat it with consideration.

xxxx

January 6 Saturday
See the divine in the human being.

Do not bark at people and don’t be aggressive, but put up with others’ complaints.

Xxxx

January 7 Sunday

God is not so far away. He is not in the heavens above, nor in hell below. He is always near you.

xxxx

January 8 Monday

If anyone gets angry with another, they wound me to the quick.
If you cannot endure abuse from another, just say a simple word or two, or else leave.
xxxx

January 9 Tuesday

I stay by the side of whoever repeats my name.

Do not be idle: work, utter God’s name and read the scriptures.

xxxx

January 10 Wednesday

What God gives is never exhausted, what man gives never lasts.

Be contented and cheerful with what comes.

xxxx

January 11 Thursday

If you avoid rivalry and dispute, God will protect you.
xxxx

January 12 Friday

I have to take care of my children day and night and give an account to God of every paisa.

xxxx

January 13 Saturday

People abuse their own friends and family, but it is only after performing many meritorious acts that one gets a human birth. Why then come to Shirdi and slander people?
xxxx

January 14 Sunday

What you sow, you reap. What you give, you get.

xxxx

January 15 Monday

I will not allow my devotees to come to harm.

If a devotee is about to fall, I stretch out my hands to support him or her.

xxxx

January 16 Tuesday

I think of my people day and night. I say their names over and over.
My treasury is open but no one brings carts to take from it. I say, “Dig!” but no one bothers.
xxxx
January 17 Wednesday

My people do not come to me of their own accord; it is I who seek and bring them to me.
xxxx


January 18Thursday

This body is just my house. My guru has long ago taken me away from it.

xxxx

January 19 Friday

Those who think that Baba is only in Shirdi have totally failed to know me.
xxxx

January 20 Saturday
I cannot do anything without God’s permission.

Xxxx

January 21 Sunday

God has agents everywhere and their powers are vast.

Xxxx

January 22 Monday

Give food to the hungry, water to the thirsty, and clothes to the naked. Then God will be pleased.

xxxx

January 23 Tuesday

Saburi (patience) ferries you across to the distant goal.

The four sadhanas and the six Sastras are not necessary. Just has complete trust in your guru: it is enough.

xxxx
January 24 Wednesday

Why fear when I am here?

xxxx

January 25 Thursday

I am formless and everywhere; I am in everything and beyond. I fill all space.

xxxx

January 26 Friday

If one devotes their entire time to me and rests in me, need fear nothing for body and soul.

xxxx
January 27 Saturday

My business is to give blessings. My eye is ever on those who love me.

xxxx
January 28 Sunday
I get angry with none. Will a mother get angry with her children? Will the ocean send back the waters to the rivers?
xxxx

January 29 Monday
Surrender completely to God.

xxxx

January 30 Tuesday

Trust in the Guru fully. That is the only sadhana.

xxxx
January 31 Wednesday
I am the slave of my devotee.

Whatever you do, wherever you may be, always bear this in mind: I am always aware of everything you do.
—subham—

BONUS QUOTES
Do not be obsessed by the importance of wealth.

Do not kick against the pricks of life.

xxxx
Speak the truth and truth alone.
No one wants to take from me what I give abundantly.

Do not fight with anyone, nor retaliate, nor slander anyone.

—–SUBHAM—

TAGS- Shirdi, Sai Baba, Quotes, January 2024, Calendar

முல்லைக்கல் ,திருநக்கரா  கோவில்கள் – PART 38 (Post No.12,849)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,849

Date uploaded in London – –   26 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 3

கோட்டயம், ஆலப்புழை கோவில் எண்கள் –41, 42

41முல்லைக்கல் தேவி கோவில்

முல்லைக்கல் ராஜ ராஜேஸ்வரி கோவில்

ஆலப்புழை நகரில் முல்லை மலர்த் தோட்டத்தில் அமைந்த தேவி கோவில் இது. பல வினோத அம்சங்கள் இந்தக் கோவிலுக்கு இருக்கிறது.

முல்லை, மல்லிகை, பிச்சி முதலிய மலர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை; இவைகளை ஜாஸ்மின் JASMINE என்ற பெயரில் ஆங்கிலத்தில் அழைப்பார்கள் .

முதலில் சிறப்பு அம்சங்களைக் காண்போம்.

தேவியை பகவதி, துர்கா, அன்னபூர்ணேஸ்வரி என்று பல பெயர்களில் அழைப்பார்கள் . ஏனெனில் முதலில் இருந்தது அன்னபூர்ணேஸ்வரி விக்கிரகம் .

தேவிக்கு மேல் கூரை கிடையாது. வானத்தைப் பார்த்து நிற்கிறாள் .

முன்னாலுள்ள கோபுரத்தைத் தவிர கேரள பாணியில் எதுவும் இல்லை.

பின்னால் ஆனைக்கொட்டிலும், இறைவியைச் சுற்றி கணேசர், சுப்பிரமணியர், நாகர், நவக்கிரகங்கள் கிருஷ்ணர் , ஹனுமார், ஐயப்பன் சந்நிதிகள் இருக்கின்றன.

கோவிலின் தோற்றம் பற்றிய சில கதைகள்

செம்பகசேரி தம்புரான்/ ராஜா முல்லை மலர்த் தோட்டத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில் தேவியே வந்து பூப்பறிப்பதைக் கண்டதாகவும் அதனால் அங்கு தேவிக்கு கோவில் எழுப்பியதாகவும் சிலர் சொல்லுவர்.

குளத்துநாட்டிலிருந்து வந்த பிராமணர் ஒருவர், தான் கொண்டுவந்த தேவி சிலையை முல்லை மலர்ச் செடிக்கு அடியில் வைத்துவிட்டு குளத்தில் குளிக்கச் சென்றுவிட்டுத் திரும்பியகாலையில் சிலையை எடுக்க முயற்சித்தார். ஆனால் சிலை நிலத்தில் வேரூன்றிவிட்டது.தேவியின்  திருவுளத்தை அறிந்த பிராமணர் அங்கேயே கோவில் கட்ட ஏற்பாடு செய்தார் .

சிப்பாய்கள் கொண்டு வந்த சிலை என்றும், திப்பு சுல்தான் படைகளுக்கு அஞ்சி மலபாரிலிருந்து வெளியேறிய நம்பூதிரிப் பிராமணர்கள் கொண்டுவந்த சிலை என்றும், கொடுங்கல்லூர் பகவதியை வணங்கிய தம்புரான் அவளை தன்னுடைய ஊரான ஆலப்புழைக்கு கொண்டுவர விரும்பியதாகவும் அவளே கனவில் தோன்றியவுடன் ஆலப்புழையிலேயே கோவில் எழுப்பியதாகவும் எண்ணற்ற கதைகள் .

சுமார் 500 ஆண்டுப் பழமை உடையது .

முதலில் இருந்த அன்னபூரணி சிலையை  யாரோ ஒருவர் கட்டித் தழுவ, அதில் விரிசல் ஏற்பட்டவுடன் 1962ம் ஆண்டில் புதிய ராஜ ராஜேஸ்வரி தேவிசிலை நிறுவப்பட்டது .

41 நாள் சிறப்பு விழா

நவம்பர்- டிசம்பரில் நடக்கும் 41 நாள் சிறப்பு  உற்சவம் மிகவும் புகழ்பெற்றது; கடைசி 11 நாட்களில் உற்சவத்தோடு இசை, கூத்து, உபன்யாசம் போன்றவையும் நடைபெறும்; வழக்கமான யானை ஊர்வலம் அன்னதானம் முதலியனவும் இருக்கும். இதைத் தவிர நவராத்திரி காலத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

பிரசாதங்களும் இக்கோவிலில் தனித்துவம் உடையவைதான். உளுந்து வடை முதல் இனிப்பு பணியாரங்கள் வரை பலவும் தேவிக்குப் படைக்கப்படுகின்றன.

XXXXXXX

42.திருநக்கரா மகாதேவர் கோவில், கோட்டயம்

கோட்டயம் நகரின் நடுவிலுள்ள சிவன் கோவில் இது.

நீண்ட வடிவிலுள்ள கேரளத்தின் நடுப்பகுதியில் கோட்டயமும் ஆலப்புழையும் இருக்கின்றன

தேக்கம்கூர் மன்னர் இந்தக் கோவிலைக் கட்டினார் ; 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது பரசுராமர் பிரதிஷ்டை செய்த சிவன் என்பது ஐதீகம் மேலும் இதை சுயம்பூ (தானாக உதித்த) லிங்கம் என்பார்கள் .

கோவிலின் தோற்றம் பற்றி வழக்கம்போல பல கதைகள் உண்டு

மன்னருக்கு திருஸூர் வடக்குநாதன் மேல் அலாதிப் பிரியம். ஆயினும் வயது ஆக ஆக அவரால் திருசூர் வரை யாத்திரை செய்ய இயலவில்லை. இது மனத்தை வருத்தியது; ஒருநாள் இரவில் கனவில்,  வடக்குநாதர் தோன்றி,  மன்னர் இருக்கும் இடத்திற்கே தான் , வருவதாகச் சொன்னார். அதே நேரத்தில் வயலை  உழுதுகொண்டிருந்த விவசாயிகள் பூமிக்கடியிலிருந்து லிங்கத்தையும் நந்தியையும்  கண்டெடுத்தனர். மன்னருக்கு மட்டற்ற மகிழ்ச்சி ; உடனே கோவில் எழுப்பினார்  அந்தக் கோவில் நக்கரா குன்றின் மீது அமைக்கப்பட்டது . முன்னரே தான் அழைத்துவந்த ஒரு ஏழை நம்பூதிரிப் பிராமணரையே பூஜைக்கு அமர்த்தினார் .

2 சிறப்பு அம்சங்கள்

இந்தக் கோவிலில் உள்ள மரச் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடு உடையவை .

கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள ஓவியங்கள் காமச்சுவை மிக்கவை.

கோவில் விழாக்கள்

மீனம்/ மார்ச் மாதத்தில் நடக்கும் ஆராட்டு உற்சவத்தால் இக்கோவில் மிகவும் பிரசித்தம் அடைந்தது; அந்த விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்

பண்டிகைக் காலத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சபரிமலை விழாக்காலத்தில் எல்லா ஐயப்ப பக்தர்களும் கோவிலுக்கு வருகின்றனர் ; ஆயினும் முதலில் கண்ட பத்து நாள் ஆராட்டு உற்சவம்தான் சிறப்பானது. கோட்டயம் நகரம் முழுதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். எங்கும் தோரணங்கள் அசைந்தாடி பக்தர்களை வருக வருக என்று வரவேற்கும்.

கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் கர்பக்கிரக  வட்டாரத்துக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழைய முடியாது ஆனால் இக்கட்டுரையில் கண்ட கோட்டயம்,  ஆலப்புழை  கோவில்களில்  எல்லோரும் தரிசனம் செய்யலாம் .

—subham—

Tags- கேரளம் , PART 38, முல்லைக்கல்,   கோவில், திருநக்கரா ,மகாதேவர்,  கோட்டயம், ஆலப்புழை , தேவி

நிகோலா டெஸ்லா – ஏழு அறிவுரைகள்! (Post No.12,848)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,848

Date uploaded in London –  –  26 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

நிகோலா டெஸ்லா – ஏழு அறிவுரைகள்!

ச.நாகராஜன்

உலகின் ஆகப்பெரும் விஞ்ஞானிகளில் ஒருவர் நிகோலா டெஸ்லா.

தோற்றம் :28-6-1856

மறைவு : 7-1-1943

இவர் ஒரு படைப்பாளி. எலக்ட்ரிகல் எஞ்ஜினியர். மெக்கானிகல் எஞ்ஜினியர். எதிர்காலத்தைக் கண்டவர். ஆன்மீகவாதி. மனிதகுலத்தின் மீது அபார பற்றுக் கொண்டவர்.

உலகம் இன்று ஒளிர்வதே இவரால் தான்! ஆம், இவர் தான் ஏ.சி. எனப்படும் ஆல்டர்னேடிங் கரண்டைக் கண்டுபிடித்தவர் இவரே. பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தவர் இவர்.

இவரது வாழ்க்கையை ஒவ்வொருவரும் படிப்பது இன்றியமையாதது.

 வளமான வாழ்க்கைக்கு நிகோலா டெஸ்லா ஏழு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அவையாவன:

1) மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாதீர்கள்.

இந்த உலகம் நம்மிடமிருந்து என்ன எடுத்துக் கொள்கிறது என்பதில் கவனம் செலுத்துவதை விட, நாம் இந்த உலகத்திற்கு என்ன தருகிறோம் என்பதில் கவனம் வையுங்கள்!

2) உள்முகமாகப் பார்ப்பது உங்களைத் தெளிவாகப் பார்க்க உதவும்.

ஆழ்ந்து உள்முகமாகப் பார்ப்பது உங்களது உண்மையான ஆத்மாவைக் காண்பிப்பதோடு, இந்த வாழ்க்கையில் உண்மையாகவே நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை உணர வழி வகுக்கும்.

3) மற்றவர்களை விட முன்னேறிச் செல்வது ஓகே தான்!

உண்மையான கண்டுபிடிப்பாளர்கள் ஓகே தான் – அவர்களது கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட! விட்டு விடாதீர்கள்! நீங்கள் எவ்வளவு திறன் உடையவர்கள் என்பதில் கர்வம் கொள்ளுங்கள்.

4)ஒருபோதும் கற்பதையும் படிப்பதையும் விட்டு விடாதீர்கள்!

உலகம் ஏராளமான கருத்துக்களையும் யோசனைகளையும் தருகிறது. பத்திரிகைகளை வெறுமனே புரட்டுவதை விட எப்படி அனைத்தும் உருவாக்கப்படுகின்றன என்பது உண்மையான படைப்பாளர்களை ஊக்குவிக்கும்.

5) பொறுமையாக இருங்கள், முன்னே சென்று கொண்டே இருங்கள்!

பொறுமை என்பது ஒரு நெடிய பயணம். உங்களது கனவுகளை நனவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றிய கவலை வேண்டாம். அவற்றை நனவாக்கப் பாடுபட்டுக் கொண்டே இருங்கள்.

6) படைப்பாற்றலை நிறுத்தி விடாதீர்கள்

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொன்னாலும் சரி, ஒருபோதும்

படைப்பதை நிறுத்தி விடாதீர்கள். உலகம் இன்னும் சற்று நல்லதாக ஆக உங்கள் திறமைகளைப் பயன்படுத்துங்கள்.

7) பணம் மட்டுமே தான் எல்லாம் என்பதல்ல

படைப்பது படைப்பதற்காகவே தான். பரிசுகள் வரும் என்றால் அது நல்லது தான். வரவில்லையெனில், நீங்கள் படைத்திருப்பதே பெரும் செல்வம் தான்!

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்களுக்காக :

7 life lessons from Nikola Tesla

Once you learn the 7 life lessons from Nikola Tesla you’ll live a much better life.

§  Don’t pay attention to what others are doing.

instead of focusing on what the world can take form us, we need to focus on what we can put into the world.

§  Looking inward, help you see clearer.

Reflection is an important part of being your authentic self and being true to what you want in life.

§  It’s okay to be ahead of everyone else

Tesla reminds us that real creators are okay with people not accepting their ideas. Don’t give up. Be proud of what you are capable of.

§  Never stop learning and reading

The internet is full of information and ideas. Rather than sift through journals, reading stories and ideas of how things were done can ignite real creativity in people.

§  Be patient and just push on

Patience goes a long way. Don’t worry about how long it will take to achieve your dreams. Just keep working on them.

§  Never stop creating.

No matter what anyone says- even you, don’t stop making things. Use your talent to help make the world better.

§  Money isn’t everything.

Tesla cheers us to create for creation’s sake. If there are rewards to be had, great: but if not, creation can be reward enough.

***

கல்பாத்தி, காடம்புழா  கோவில்கள் -37 (Post No.12,847)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,847

Date uploaded in London – –   25 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 37

கோவில் எண்கள் –3940

39.கல்பாத்தி விஸ்வநாத சுவாமி கோவில்

Sri Visalakshi Sametha Sri Viswanathaswamy temple, popularly known as Kasi Viswanathaswamy Temple or locally as Kundukovil(Kundambalam)

பாலக்காட்டில் கல்பாத்தி கிராமத்திலுள்ள விஸ்வநாத சுவாமி  கோவில்,  நீலா நதிக்கரையில் அமைந்துள்ளது. கோவிலையும் நதியையும் ஒருங்கே காண்போருக்கு காசியின் கங்கை நதி படித்துறைகள் நினைவுக்கு வரும். கல்பாத்தி தேர்த் திருவிழா மிகவும் புகழ்பெற்றது .

இந்தக்கோவிலுக்கு  உள்ளூர் மக்கள் இட்ட பெயர் குண்டுக்கோவில் அல்லது குண்டம்பலம் .

சிறப்பு அம்சங்கள்

லெட்சுமி அம்மாள் என்பவர் வாரணாசி எனப்படும் காசியிலிருந்து ஒரு பாண லிங்கத்தைக் கொண்டுவந்து பாலக்காட்டு  ராஜாவிடம் கொடுத்து கோவில் கட்டுமாறு வேண்டிக்கொண்டார். அத்தோடு 1000 பணம் கொடுத்து நித்ய பூஜைகளை  மாயூரம் கோவில்  சிவ ஆகமப்படி நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.  இன்றும் கூட மாயவரம் கோவில் விழாவும் கல்பாத்தி தேர்த் திருவிழாவும் ஒரே காலத்தில் நடப்பதைக் காணலாம் .

தமிழ் நாட்டைச் சேர்ந்த பிராமண குடும்பங்கள் திருவனந்தபுரத்திலும் பாலக்காட்டிலும் குடியேறிய காலம் அது. பாலக்காட்டு ராஜா ஒரு பழங்குடி இனப்பெண்ணைத்  திருமணம் செய்துகொண்டதால், நம்பூதிரி பிராமணர்கள் அவருக்கு சமயச் சடங்குகளில்  உதவ மறுத்தனர் ; அப்போது அவர் தமிழ்நாட்டுப் பிராமணர்களின் உதவியை நாடினார் . அவர்கள் வேதங்களில் வல்லவர்கள்; ஆகையால் தேர்த் திருவிழாவையே வேத பாராயண விழாவாக மாற்றினார்கள் . 41 நாள் கொண்ட ஒரு மண்டலம் முழுதும் ஒவ்வொரு கிராமத்திலும் வேதபாராயணம் செய்தனர். பாலக்காட்டில் கிராமம் என்றால்  பிராமணர் குடியிருப்பு என்று பொருள்; தமிழ்நாட்டில் அக்கிரஹாரம் என்று சொல்லுவதற்குச் சமம்.

ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடக்கும் கல்பாத்தி தேர்த்திருவிழா இந்த வட்டாரத்தில் பூரி ஜகந்நாதர் தேர்த்திருவிழா போல பல்லாயிரக்கணக்கான பக்தர்களைக்  கவர்ந்திழுக்கும் . பத்து நாட்களுக்கு நடக்கும் உற்சவத்தில் 3 நாட்களுக்கு தேரை இழுத்துவருவார்கள்.

கல்பாத்தி ரதோற்சவத்தின் போது ,  நான்கு கோவில்களிலிருந்து வரும் 6 ரதங்கள், வீதிகளில் வலம் வருகின்றன.சிவனுக்கு பெரிய தேர் , கணபதிக்கும் முருகனுக்கும் 2 சிறிய ரதங்கள்; அருகிலுள்ள 3 கோவில்கள் அனுப்பும் 2 கணபதி ரதங்கள், ஒரு கிருஷ்ணர் ரதம் ஆக 6 ரதங்கள் பவனி வருவதால் பக்தர்கள் போட்டிபோட்டுக்கொண்டு இழுத்து வருவார்கள் .

பெளர்ணமி நாளில் நடக்கும் அன்னாபிஷேகம் இதில் முக்கிய நாளாகும் ; அந்தக்காலத்தில் பிராமணர்களுக்கு நிலபுலன்கள் சொந்தமாயிருந்தன. அதில் விளைந்த அரிசியை கோவிலின் அன்னதானத்துக்கு வழங்கினார்கள்  இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் அப்படி வடிக்கப்பட்ட அன்னம்/ சோறு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டபின்னர் ஆற்றிலும் குளத்திலும் வாழும் மீன்களுக்கு உணவாக படைக்கப்பட்டது.

கல்வெட்டு தரும் தகவல்

கோவில்  கொடிமரத்திற்கும் நந்தி மண்டபத்திற்கும் நடுவில் கோயில் முற்றத்தில்  ஒரு துண்டுக்கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டு மலையாள சகாப்தம் 600 [1424-25 AD] இல் பாலக்காட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இட்டிக்கொம்பி அச்சன் என்பவரால் அளிக்கப்பட்ட கொடைகளைப் பதிவு இதில் உள்ளது. இதனால் கோவில் அதற்கு முன்னதாகவே நிறுவப்பட்டிருக்க வேண்டும்.கோவிலுக்குள் நுழையும் போது வலது பக்கம் இரண்டு ஆலமரங்கள் உள்ளன. முதல் ஆல மரத்தின்கீழ் நாகர்கள் உள்ளன. இதுவே இக்கோயிலின் தல மரம் ஆகும். “விஷ்ணு அம்சம்” என்று கருதி இந்த மரத்திற்கும் நாகத்திற்கும் பூசை செய்யப்படுகிறது.

விசுவநாதசுவாமி , எட்டுத் திசைக்கு அதிபர்களின் ஒருவரான குபேரரை நோக்கி கிழக்கு திசையில் உளளார். அதற்கு அருகே தெற்கில் விசாலாட்சி உள்ளார்.

மாயவரத்தில் உள்ள மயூரநாதர் கோவிலில் நடக்கும் பூசை முறையே இங்கு நடைபெறுகிறது.  காமிகாகமம் முறைப்படி பூசை நடந்து வருகிறது.

கோவில் எண்- 40 காடம்புழா பகவதி / பார்வதி கோவில்

காடம்புழா  பகவதி அல்லது  பார்வதி கோவில் பற்றி பல சுவையான கதைகளும் வினோதமான சடங்குகள், நேர்த்திகடன்கள் பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன .

கோவில் எங்கே இருக்கிறது ?

மலப்புரம் மாவட்டத்தில் கோட்டக்கல்லிலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது.. கோபுரம், கொடி மரம் இல்லாவிடினும் பல வினோத வழக்கங்கள் இருக்கின்றன

சிறப்பு அம்சங்கள்

இந்தக் கோவில் பார்வதி அல்லது பகவதி கோவில் என்று சொல்லப்பட்டாலும் விக்கிரகமோ  சிலையோ இல்லை. உலோகத்தினாலான ஒரு கண்ணாடியே கர்ப்பக்கிரகத்தில் இருக்கிறது. புழா என்று சொன்னவுடன் ஒரு நதி இருப்பதை எதிர்பார்ப்போம் ; அப்படி எந்த ஆறும் இங்கு ஓடவில்லை .கர்ப்பக்கிரகத்துக்கு எதிரேயுள்ள மேடையில் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட நரசிம்ம சக்கரமும் ஸ்ரீ சக்கரமும் இருக்கின்றன.

சுவையான இரண்டு கதைகள்

அர்ஜுனன் பாசுபதாஸ்த்ரம்  பெறுவதற்கு சிவனை நோக்கி தவம் இருந்த காலையில் சிவனும் பார்வதியும் வேட்டுவன், வேட்டுவச்சி  ரூபத்தில் வந்து ஓரு பன்றி மீது அம்புவிட்டு அர்ஜுனை வம்புக்கு இழுத்த கதையை நாம் அறிவோம். அந்த பார்வதியை வேடுவச்சி உருவத்தில் வழிபடுகின்றனர் இங்கு .

இன்னொரு கதை என்னவென்றால் ஆதி சங்கரர், அவருடைய சீடர்களுடன் யாத்திரை மேற்கொண்ட சமயத்தில் காட்டின் நடுவில் ஒரு ஒளி அதிக தேஜஸ்ஸுடனும் வெப்பத்துடனும் தோன்றவே அதை வியந்து நோக்கினர் ; அந்த ஒளி ஒரு பூமியிலுள்ள பொந்தில் சென்று மறைந்தது  சங்கரர் நரசிம்ம மூர்த்தியை பிரார்த்தித்தார் ; அப்போது, அது தேவியின் வடிவம் என்பதை உணர்ந்து அங்கு கோவிலை நிர்மாணித்தார் .

முட்டறுக்கல் வழிபாடு

முட்டு என்றால் தடைகள், இடையூறுகள் , கஷ்டங்கள் ; கோளறு திருப்பதிகம் எப்படி கிரகங்களால் வரும் தடைகளை அகற்றுமோ அதே போல முட்டுகளை ; தடைகளை அகற்ற இங்கு இந்த சிறப்புவழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் கொண்டுவரும் தேங்காயை தேவி சந்நிதியில் உடைக்கும் அர்ச்சகர், அது உடையும் விதத்தைக் கொண்டு ஆரூடம் சொல்லுவார். இந்துக்கள் அல்லாதோரும் கூட இதில் நம்பிக்கை வைத்து இங்கு வருகின்றனர் ; இவ்வாறு இங்கு  பக்தர்கள் உடைக்கும் தேங்காய்கள் எண்ணிக்கை பல்லாயிரம் பல்லாயிரம் ஆகும் .

பூ  மூடல் வழிபாடு

பாசு பத அஸ்திரக் கதையில் சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் ஏற்பட்ட மோதலில் அர்ஜுனன் எய்த அம்புகள் அனைத்தையும் பார்வதி தேவி பூக்களாக மாற்றி சிவன் மார்பில் விழும்படி செய்தாள் .இதைச் சிறப்பிக்கும் வகையில் இங்கு பூ வால் தேவியை வழிபடும் பூமூடல் நடைபெறுகிறது; இதற்கு பதிவு செய்ய பெரிய க்யூ நிற்கிறது .

இந்தப் பகுதியில் இருவாச்சி  மலர்கள் அதிகம் கிடைப்பதால் தேவி பூஜைக்கு அதை அதிகம் பயன்படுத்துகின்றனர் .

—SUBHAM—

TAGS-

கேரள மாநிலம் ,  108 கோவில்கள், PART 37, முட்டறுக்கல், பூமூடல், பார்வதி, பகவதி, காடம்புழா , கோவில், கல்பாத்தி , ரதோற்சவம் , தேர்த்திருவிழா

லட்சம் பேரை ஊக்குவித்தவர்; ஆயிரக் கணக்கானோர் வாழ்வு வளம் பெற வழி வகுத்தவர்! (Post No.12,846)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,846

Date uploaded in London –  –  25 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

(MY ELDER BROTHER S NAGARAJAN OF BENGALURU HAS WRITTEN AN ARTICLE IN THREE PARTS ABOUT OUR ELDEST BROTHER S SRINIVASAN  OF CHENNAI WHO PASSED AWAY ON 10TH DECEMBER 2023. MYSELF, LONDON SWAMINATHAN, MY BROTHERS S.NAGARAJAN, PROF.S.SURYANARAYANAN AND S MEENKSHI SUNDAR WERE IN CHENNAI TO ATTEND HIS FUNERAL. OUR YOUNGEST SISTER MRS LALITHA NATARAJAN COULD NOT ATTEND IT.)

 தினமும் செய்த கணபதி ஹோமத்தால் வருவோரின் எதிர்காலத்தை அறிந்து சொல்லும் அபூர்வ சக்தியைப் பெற்றார் சீனிவாசன் .

லட்சம் பேரை ஊக்குவித்தவர்ஆயிரக்கணக்கானோர் வாழ்வு வளம் பெற வழி வகுத்தவர்! – 1

ச.நாகராஜன்

ஒரு பெரிய இழப்பு

மனிதனாகப் பிறந்து மனிதனாக வாழ்வது சிறப்புஅதில் மாமனிதராக வாழ்வது இன்னும் சிறப்புடையதாகும்.

இந்த மாமனிதருள் இன்னும் சிறப்புடையவர் பற்றி வள்ளுவர் கூறுகையில் ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் என்கிறார்.

பிறருக்கு சேவை செய்பவனே உயிர் வாழ்பவன் என்பதே இதன் கருத்து.

விவேகானந்தரோ “They alone live who live for others, the rest are more dean than alive” என்கிறார்.

இப்படி தனக்கு என்று இருப்பவற்றை மறந்து மற்றவர்களின் பிரச்சினைகளைப் போக்குபவர் தேவர்களுக்கும் மேலான உலகத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் “வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்” என்பது வள்ளுவர் வாக்கு.

இந்த இலக்கணத்திற்குப் பெரிதும் பொருத்தமாக் அமைந்த திரு சந்தானம் சீனிவாசன் 2023 டிசம்பர் மாதம் பத்தாம் தேதி இரவு சுமார் 11 மணிக்கு சிவலோக ப்ராப்தி அடைந்தார் என்ற துயரமான செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

(தோற்றம் : 29-3-1944 மறைவு : 10-12-2023)

தேசபக்தக் குடும்பப் பின்னணி

திரு சீனிவாசன் ஆழ்ந்த ஆன்மீகக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர். ஆகவே இயல்பாகவே அனைத்து நற்குணங்களும் அவரை தேடி வந்து அடைந்தன என்பது இயல்பே.

இவரது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர்.

மதுரை தினமணி நாளிதழுக்கு பொறுப்பாசிரியராகப் பதவியேற்று ஆயிரத்திதொள்ளாயிரத்து ஐம்பதுகளிலிருந்து மதுரையிலே வசித்து வந்தார்.

மீனாட்சி பக்தர். சிறந்த ஆன்மீகவாதி. நல்ல பேச்சாளர். எழுத்தாளர். கிருதிகளை இயற்றியவர். காஞ்சி பெரியவாள், சிருங்கேரி அபிநவ வித்யா தீர்த்தர், ஶ்ரீ சத்யசாயிபாபா உள்ளிட்ட பெரும் மகான்களின் ஆசி பெற்றவர். அவர்களது உபதேச உரைகள் நாடெங்கும் பரவக் காரணமாக இருந்தவர்.

இவரது பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அனைத்து ஆன்மீக சிந்தனையும் கொண்டு இயல்பாகவே மதுரையில் வளர்ந்தார் சீனிவாசன்.

ஸ்வாமிஜி கிருஷ்ணா

பிரபல சித்தரும் கணபதியை பிரத்யக்ஷமாகக் காண்பவரும் பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்பவருமான அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்களைக் குருவாகக் கொண்டார் திரு சந்தானம்.

இதனால் சந்தானம் குடும்பத்தினர் அவர் பால் ஈர்க்கப்பட்டனர்; அவரது அனுக்ரஹத்திற்குப் பாத்திரமாயினர்.

திரு சீனிவாசன் மீது பேரன்பு கொண்ட ஸ்வாமிஜி அவருக்கு கணபதி ஹோமத்தை உபதேசம் செய்ய சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் காலையில் கணபதி ஹோமத்தி விதிப்படி செய்து வரலானார் சீனிவாசன்.

இதனால் ஏற்பட்ட சித்திகளை அவர் வெளியில் சொன்னதே இல்லை.

ஆனால் நூற்றுக் கணக்கானோர் அனுதினமும அவரை அணுகி வரலாயினர். சாமானியன் முதல் பெரும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் வரை அவரை அணுகி தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டனர்; கணபதி அருளுக்குப் பாத்திரமாயினர்.

ஒருவரது முகத்தைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றிய அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றிருந்தார் சீனிவாசன்.

இதனால் அற்புதங்களும் அதிசயங்களும் அன்றாடம் நிகழ்ந்த வண்ணம் இருந்தன – அவரை அணுகி வந்தோருக்கு.

இதில் குறிப்பிடத்தகுந்த முக்கிய அம்சம் எந்த ஒருவரிடமிருந்தும் அவர் ஒரு பைசாவும் பெறவில்லை; பெறக்கூடாது என்ற நியதியைக் கடைசி வரை கடைப்பிடித்து வந்தார்.

இதனால் சாமானியனும் கூட அவரை அணுகும் பெரும் பாக்கியத்தைப் பெற்றனர்.

நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், மானேஜர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் என சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் அவரை அணுகலாயினர்.

இந்தியா முழுவதும் உள்ள பல நகர்களிலும் வாழ்வோர் அவரை பக்தியுடனும் மரியாதையுடனும் அணுகி வந்தனர். இது நாளடைவில் பல்கிப் பெருகி துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களும் அவர் பால் ஈர்க்கப்பட்டனர்.

பிறருக்கு உதவி என்னும் இந்த மாபெரும் யாகத்தில் இவரது துணைவியார் திருமதி ராஜலெக்ஷ்மி, மகன்கள் பிரகாஷ், மகேஷ்,சங்கரன், புதல்வி சங்கரி ஆகியோரும் பங்கு கொண்டு தங்கள் பங்கு உதவியைச் செய்ததால் இந்தக் குடும்பமே கணபதி குடும்பமாக அமைந்தது.

இனி இவரது வாழ்க்கையில் பணி பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம்

PART TWO

மதுரை மில்லில் பணி (HARVEY MILLS, MADURAI)

டெக்ஸ்டைல் துறையில் எஞ்ஜினியராக ஆன திரு சீனிவாசன் மதுரை மில்லில் பணியாற்றத் தொடங்கினார்.

அது மதுரா கோட்ஸ் MADURA COATS ஆக ஆனது. தொடர்ந்து பணியாற்றிய அவர் அங்கு நிர்வாகிகளை பயிற்றுவிக்கும் பயிற்சியாளராக மாறினார்.

இது அவரது சுயமுன்னேற்றம், க்ரியேடிவிட், டிசைன், நுண்ணறிவு கூடுதலுக்கான வழிகள், சாதாரண வாழ்க்கை பிரச்சினைகளை எப்படிப் போக்குவது என்பதை அறியவும், அவற்றை தம்மிடம் வருவோருக்கு பயிற்றுவிக்கவும் வழி வகுத்தது.

பயிற்சி வகுப்புகள்

பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் பணி ஓய்வு பெற்ற சீனிவாசனுக்கு அருமை நண்பராக வாய்த்தார் என்.சி. ஶ்ரீதரன்.

அவர் டி.வி.எஸ். நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்று சுயமாக நிர்வாக இயல் மற்றும் சுயமுன்னேற்றத் துறையில் ஆகச் சிறந்த பயிற்சியாளராக ஆனார்.

இவரும் சீனிவாசனும் ஆத்மார்த்த நண்பர்கள். இருவரும் இணைந்தனர்.

இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள தலையாய பெரும் நிறுவனங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட ஏராளமான இடங்களிலிருந்து அழைப்புகள் குவிந்தன.

பற்பல ஆண்டுகள் தினந்தோறும் என்று சொல்லக் கூடிய அளவில் சிறிய குழுவினருக்கும்  பெரிய குழுவினருக்கும் பயிற்சிகள் தரப்பட்டன.

திரு சீனிவாசன் தனது ஜோக்குகளுக்குப் பெயர் பெற்றவர். அற்புதமான பெரும் எண்ணங்களை மனதில் விதைப்பதற்கு அவரது பேச்சாற்றலில் துணையாக நின்று உதவியது அவரது ஜோக்ஸ்.

கருத்துக்களை அவர் தேர்ந்தெடுத்த விதமே தனி.

தினமும் நூற்றுக் கணக்கில் பேப்பர், புத்தகங்கள், இணையதளம் ஆகியவற்றிலிருந்து துணுக்குகள், கட்டுரைகள், கார்ட்டூன்கள், பொன்மொழிகள் உள்ளிட்டவற்றைச் சேர்த்த வண்ணம் இருப்பார்.

“கட்டிங், அண்ட் ஒட்டிங்” என்போம் இதை.

இப்படி அவர் தயாரித்த பல பெரும் பைல்கள் வைக்கவே பல பீரோக்களும் பெட்டிகளும் தேவைப்பட்டன.

நூல்களின் எண்ணிக்கை வேறு பெருகின.

இவை அனைத்தையும் அவர் தன்னிடம் ஆலோசனைக்கு வருவோரிடமும், தான் செல்லும் இடங்களில் ஆற்றிய உரைகளிலும் பயன்படுத்தலானார்.

புகழ் பெருகியது.

மறைவதற்கு ஒரு வாரம் முன்னதாகக் கூட ஏராளமான பேப்பர் கட்டிங்குகளை அவர் சேகரித்ததை அவர் துணைவியார் கூறுகிறார்.

அந்தரங்க ஆலோசனை

மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. ஒன்று போல இன்னொன்று இருக்காது. ஒருவரைப் போல அச்சு அசலாக இன்னொருவர் இருப்பதில்லை. ஆக இப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள கஷ்டப்பட்டவர்கள் இவரை அணுகினர்; அந்தரங்க ஆலோசனை பெற்றனர்; பிரச்சினைகளிலிருந்து விடுபட்டனர்.

இப்படி வருபவர்கள் அனைவரையும் வரவேற்று அவர்களை உரிய விதத்தில் உபசரிப்பது என்பது ஒரு கஷ்டமான காரியம்.

ஆனால் இதைத் திறம்படச் செய்தது சீனிவாசன் அவர்களின் குடும்பம்.

தொடர்ந்து வருவோரைத் தொந்தரவாக அவர்கள் கருதியதில்லை.

மாறாக அவர்கள் பிரச்சினை தீரவேண்டுமே என்பதில் தான் அக்கறை செலுத்தினர்.

எப்போதும் வரவேற்பு; போன் கால்; முன்னறையில் வருகையாளர்கள்!

அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ என்றால் மகன் கிருஷ்ணபிரகாஷ்மருமகள் லாவண்யா லண்டன் என்றால் மகேஷ் மருமகள் சுகன்யாதுபாய் என்றால் சங்கரி மாப்பிள்ளை அனந்த்சென்னை என்றால் சங்கரன் மருமகள் பிரேமா – வருகை புரிவோரை வரவேற்று அவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு திரு சீனிவாசனைக் காண உதவி புரிவர்.

வருபவர்கள் அனைவரையும் குடும்பத்தினரும், உறவினர்களும் நண்பர்களும் நன்கு அறிவோம்; ஆனால் அவர்கள் பிரச்சனைகள் எங்களுக்கு ஒரு போதும் தெரியாது – அவர்களாகச் சொன்னால் தவிர.

அதைப் போக்குபவர் அவர் என்பதை அவர்கள் சொல்லித் தான் அனைவரும் அறிந்து கொண்டோம்.

மஹாகணபதியின் துணையும் ஸ்வாமிஜி கிருஷ்ணாவின் தொடர்ந்த அருளும் இருப்பதே இதற்குக் காரணம் என்பதை அனைவரும் பேசிக் கொள்வோம்.

இப்படித் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையோ அதற்கு உட்பட்டவர்களையோ இந்தக் கட்டுரையில் அவர்களது அந்தரங்கம் கருதிச் சொல்ல முடியாது.

குடும்பப் பண்பு

குடும்பத் தலைவர் என்ற முறையில் மனைவி, மக்கள் மீது அலாதி அக்கறை செலுத்தி அவர்களை வழி நடத்தியவர் அவர்.

தந்தை, தாய் பால் அவர் வைத்திருந்த பெருமதிப்பு அலாதி.

ஸ்வாமிஜி கிருஷ்ணா அவருக்கு குரு மட்டுமல்ல, தெய்வமும் கூட.

தம்பிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தின் மீது அவர் காட்டிய பரிவும் அன்பும் பாசமும் தனி. அதே போல மனைவி வகை உறவினர்கள் அனைவரும் அவரது வழிகாட்டுதலில் பெரிதும் திருப்தியுற்றனர்.

நண்பர்கள் என்றாலோ அது ஒரு பெரிய பட்டியல் – அதைச் சொல்லி முடியாது.

அடுத்த கட்டுரையில் அவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் அவர் எழுதிய நூல்கள் பற்றிச் சிறிது பார்ப்போம்.

PART 3

ஒரு சின்னக் கணக்கு ஒன்றை போட்டுப் பார்த்தால் திரு சீனிவாசன் அவர்களால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை ஒரு சிறிது அறிய முடியும்.

ஒரு பயிற்சி வகுப்பிற்கு சுமார் 40 முதல் 800 பேர் வரை வருவது வழக்கம். ஒரு மாதத்தில் 20 நாட்கள் இப்படிப்பட்ட வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் நடப்பது வழக்கம். ஆக இப்படித் தொடர்ந்து சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக அவர் தனது சேவையைத் தொடர்ந்து வந்தார்.

இந்தக் கணக்கின் படி மாதத்திற்கு 5000 என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு லட்சம் பேர் என்ற எண்ணிக்கையை அடைகிறோம். ஆனால் நிஜத்தில் எண்ணிக்கை மேலும் கூடுதலாக இருந்தது என்பது தான் உண்மை.

இது தவிர ஒவ்வொரு நாளும் அவரைப் பார்ப்பவரின் தொகையை மனதில் எடுத்துப் பார்த்தால் அது பல்லாயிரமாக இருப்பது தெரிய வரும்.

இந்த அதிசயத்தை எண்ணிப் பார்த்தால் அவர் ஒரு அதிசய மனிதர் என்பதை அறியலாம்.

இது ஒருபுறமிருக்க அவரது எழுத்துப் பணியும் சிறப்பாக அமைந்தது.

தம்பி திரு மீனாட்சிசுந்தர் நடத்திய ஜெம்மாலஜியும் ஜோதிடமும் மாத இதழில் அவர் கட்டுரைகளை எழுதினார்.

இன்னொரு தம்பி லண்டன் திரு சந்தானம் சுவாமிநாதன் அவர்கள் நடத்திய www.tamilandvedas.com என்ற இணையதள ப்ளாக்கில் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை தன் பெயரிலும் ‘கத்துக்குட்டி’ என்ற புனைப்பெயரிலும் எழுதி வந்தார்.

இவை ‘நவீன ஞான மொழிகளாக’ திகழ்ந்தன.

இந்த பிளாக்கில் வரும் கட்டுரைகளை நாள் தோறும் சுமார் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை படித்து வந்தனர்; படித்து வருகின்றனர்.

நவீன ஞானமொழிகளின் தொகுப்பு இரு பாகமாக இப்போது மலர்கின்றன.

இன்னொரு புத்தகம் நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம் ஆகும்.. தனக்கே உரிய பாணியில் கிரகங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் எழுதியுள்ளதால் இது ஒரு கலைக் களஞ்சியமாக அமைந்துள்ளது.

இந்த மூன்று புத்தகங்களையும் பங்களூர் நிறுவனமான www.pustaka.co.in வெளியிடுகிறது.

இது ஒரு புறமிருக்க லண்டனிலிருந்து ஞானமயம் என்ற தொடர் ஒளிபரப்பு வாரந்தோறும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடை பெற ஆரம்பித்தது.

இதில் பங்கு பெற ஆரம்பித்த திரு சீனிவாசன் பல்லாயிரக்கணக்கானோரை தன் கருத்துக்களாலும் அதைத் திறம்பட ஜோக்குகளுடன்  கூறும் திறனாலும் கவர்ந்தார்.

பல நாடுகளிலும் உள்ள ஏராளமானோர் இந்த ஞானமயம் நிகழ்ச்சியைக் கேட்டு இவரது உரைகளைத் தொடர்ந்து பாராட்டினர்.

இந்னொரு தம்பியான திரு சூரியநாராயணன் இசை மற்றும் ஆன்மீகக் கருத்துக்களை இவருடன் பகிர்ந்து வந்தார்.

இப்படி எண்ணங்களாலும் செயல்களாலும் தனது உரைகளாலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் திறனாலும் அனைவருக்கு ஊக்கம் அளிக்கும் பெரும் பணியாலும் உயர்ந்த வாழ்க்கையைக் கொண்டவர் திரு சீனிவாசன்.

அவர் நம்மிடையே பூத உடலுடன் இல்லை என்பது மனதை வருத்தமுற வைக்கிறது.

ஆனால் அவரது புகழுடல் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

****************

tags- Santanam Srinivasan , லட்சம் பேரை ஊக்குவித்தவர், ஆயிரக்கணக்கானோர், வாழ்வு வளம் பெற வழி வகுத்தவர், சந்தானம் சீனிவாசன்

SEE YOU ALL ON 25-12-2023

C U ALL ON 25TH DECEMBER ,2023

C U ALL ON 25TH DECEMBER ,2023

C U ALL ON 25TH DECEMBER ,2023

QUIZ குரு நானக் பத்து QUIZ (Post No.12,845)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,845

Date uploaded in London – –   17 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL NUMBER—89

1.குரு நானக் எங்கே எப்போது பிறந்தார்?

xxxx

2.அவருடைய தாய் தந்தையர் யாவர்?

Xxxxx

3.குரு நானக்கின் சீடர்கள் யார்அவருக்குப் பின்னர் சீக்கிய மதத்தில் எத்தனை குருமார்கள் வந்தனர் ?

Xxxx

4.அவர் எப்போதுஎங்கே இறந்தார்?

Xxxx

5.குரு நானக் ஏன் சீக்கிய மதத்தை தோற்றுவித்தார் ?

Xxxxx

6.அவருடைய உபதேசங்கள் என்ன அவைகளை எங்கே படிக்கலாம்?

Xxxxx

7. குரு நானக் அற்புதங்களைச் செய்தாரா ?

Xxxx

8.அவர் எங்கெங்கு பயணம் செய்தார் ?

xxxxx

9.குரு நானக் திருமணம் ஆனவரா குழந்தைகள் உண்டா ?

xxxx

10. அவர் மாமிசம் சாப்பிவிட்டாரா ?

xxxx

விடைகள்

1.குரு நானக், 15 ஏப்ரல் 1469ல் பிறந்தார். சீக்கிய மதத்தை நிறுவிய அவர் , கபீரின் சீடர் . ராய் பொய்டி தால்வாண்டி கிராமத்தில் ஒரு இந்து மதக் குடும்பத்தில் பிறந்தார்; இப்போது  அது பாகிஸ்தான் எல்லைக்குள் லாகூர் அருகில் இருக்கிறது  நன்கானா  சாஹிப் என அழைக்கப்படுகிறது. அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. Rai Bhoi di Talvandi [now Nankana Sahib, Pakistan], near Lahore in Pakistan.

xxxxxx

2.தந்தை பெயர் மேத்தா கல்யாண் தாஸ் பேடி (களு மேத்தா) , நானக்கின் தாயார் பெயர் திரிப்பா தேவி .  சகோதரியின் பெயர்  பீபி நானகி .அவரும்  ஒரு ஆன்மீகவாதி. .

xxxxx

3.அவருக்குப் பின்னர் சீக்கிய மதத்தில் ஒன்பது குருமார்கள் வந்தனர் ; கடைசியாக வந்த குருகோவிந்த சிம்மன் இனி குரு ஸ்தானத்தில் யாரும் வேண்டாம் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.

xxxxx

4.குரு நானக்  22 செப்டம்பர் 1539ல் இறந்தார். அவர் இறந்த இடமும் பாகிஸ்தானுக்குள்தான் இருக்கிறது ; அவர் இறந்த நரோவால் கர்தார்பூர் என்னும் இடத்தில் தர்பாரசாஹிப் குருத்வாரா கட்டப்பட்டுள்ளது

Gurdwara Darbar Sahib Kartar Pur in Narowal, Pakistan.

xxxx

5.கடவுள் ஒருவரே; அவர் எல்லா மதத்திற்கும் பொதுவானவர்; உருவமற்றவர்   என்று  சொல்லவும் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும்  பொதுவான மத்திய பாதையைக் காட்டவும் ; அர்த்தம் புரியாமல் செய்யப்படும் சடங்குகள் தேவை இல்லை என்று காட்டவும் புதிய மதத்தை உருவாக்கினார். ஜாதிப்பிரிவினைகளையும் அவர் எதிர்த்தார்.

சீக்கியர்களும் மறுபிறப்பு, கர்ம வினைகொள்கைகளில் நம்பிகை உடையவர்கள். மேலும் இந்துக்கடவுளரின் பெயர்கள், ஓம் ஆகியன சீக்கிய வேதப்புஸ்தகத்தில் இருக்கின்றன ; சீக்கியர்கள் ஆதிக்கிரந்தம் என்னும் புஸ்தகத்தை வழிபடுகின்றனர் ; சுருக்கமாகச் சொன்னால் இந்துமதத்துக்கு மிகவும் நெருக்கமானது .

XXXX

6. குருநானக்கின் 3 போதனைகள்

வந்த் சக்கோ: தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்தல், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.

கிரட் கரோ: சுரண்டல் அல்லது மோசடி இல்லாமல், நேர்மையாக ஒரு வழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுதல்.

நாம் ஜப்னா: பரிசுத்த நாமத்தை ஜபித்தல், இதனால் எல்லா நேரங்களிலும் கடவுளை (இறைவன் -ஓயாத பக்தி) நினைவில் கொள்ளுதல்.

குரு கிரந்த சாஹிப் என்னும் சீக்கிய மத வேதப்  புஸ்தகத்தில் அவருடைய மற்றும் அவருக்குப்பின் வந்த குருமார்களின் போதனைகளைக் காணலாம்

XXXX

7.குரு நானக் பல அற்புதங்களைச் செய்ததாக பக்தர்கள் நம்புகின்றனர்; நதிகளின் போக்கையும் சூரிய சந்திரர்களின் போக்கையும் மாற்றினார்; நோய்களைத் தீர்த்தார்; அக்ஷய பாத்திரம் போல உணவு படைத்தார்  என்பன சில .

XXXX

8.குரு நானக் நிறைய மாநிலங்களுக்கும்,பல நாடுகளுக்கும் சென்றார். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்தவர் ,  வங்காளம், அசாம், தமிழ்நாடு, காஷ்மீர், லடாக், திபெத், இலங்கை  ,அரேபிய தீபகற்பத்தில் உள்ள பாக்தாத், மெக்கா மற்றும் மதினா ;அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். இவர் லாசா (திபெத்) செல்லும்போது, தவாங் வழியாக பூடானைக் கடந்து சம்துராங் சு வழியாக திபெத்துள் நுழைந்தார். . இன்னும் சில பயணங்கள் பற்றி உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

xxxxx

9.குரு நானக்,16 வயதில் சுலக்கினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு சிரீசந்த், இலட்சுமிசந்த் இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

XXXX

10.சீக்கிய குருத்வாரா நடத்தும் லங்கார் என்னும் 24 மணி நேர உணவுக்  கூடங்களில் மாமிசம் சமைப்பதோ பரிமாறுவதோ இல்லை; குரு நானக்கும் மாமிசம் சாப்பிட்டதில்லை என்பதே பெரும்பாலோர் கருத்து. ஆனால் சீக்கியர்கள் மாமிசம் சாப்பிடுவார்கள் . சில பிரிவினர் மாமிசமோ , முட்டையோ சாப்பிடுவதில்லை.

—SUBHAM—

TAGS- குரு நானக் பத்து, கேள்வி பதில், குருத்வாரா , மாமிச உணவு

கேரளத்திலும் ஒரு மூகாம்பிகை கோவில் -36 (Post No.12,844)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,844

Date uploaded in London – –   17 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 36

கோவில் எண்கள் –37, 38

37.பரவூர் மூகாம்பிகை கோவில்

கர்நாடகத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை  கோவில் புகழ் ஆதி சங்கரரால் பரப்பப்பட்டது ; ஸ்ரீ சக்கரத்துடன் சரஸ்வதி தேவி அங்கே கொலு வீற்றிருக்கிறாள் ; அவளது புகழை எம். ஜி. ஆரி.ன் வைர வாளும் ஜெயலலிதாவின் தங்க நகைகளும் தமிழர்களிடையே பரப்பியதை முன்னரே ஒரு கர்நாடக  கோவில் கட்டுரையில் தந்துள்ளேன் .

எங்கே இருக்கிறது ?

எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கிறது வடக்கு பரவூர். இதை தட்சிண மூகாம்பிகை கோவில் என்று  சொல்லுவார்கள். இதுவும் சரஸ்வதி கோவில்தான் .

கோவில் வரலாறு

முன்னர் பரவூர், கொச்சி சமஸ்தானத்தில் இருந்தது; பரவூரில் இருந்த சிற்றரசர் பரவூர்  தம்புரான் கர்நாடகத்திலுள்ள மூகாம்பிகையை வணங்க அடிக்கடி செல்லுவார். அவருக்கு வயது ஆக ஆக, கர்நாடகம் வரை செல்லுவது இயலாது போயிற்று . ஒரு நாள் மிகவும் வருத்தம் அடைந்து கண்ணீர் விட்டபோது அன்று இரவு அவருக்கு மூகாம்பிகையே கனவில் தோன்றினாள் . இறைவி இவ்வளவு அருகில் வந்ததை எண்ணி மகிழ்ந்து பரவூரில் தாமரைக் குளத்துக்கு நடுவில் கோவில் கட்டி மூகாம்பிகையை அமர்த்தினார்.

கொச்சி மன்னர் , இந்தக்கோவிலை திருவாங்கூர் தேவஸ்வம்போர்டுக்கு மாற்றினார்

துர்கா லட்சுமி சரஸ்வதியைக் கொண்டாடும் 9 நாள் நவராத்ரி உற்சவம் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது ; மலையாளிகள் இந்துக்களின் 40 ஸம்ஸ்காரங்களில் ஒன்றான வித்யாரம்பத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்; விஜய தசமியன்று நெல்லில் அல்லது தானியத்தில் ஹரியின் பெயரை எழுதி குழந்தையின் கல்வியைத் துவக்குவது வித்யாரம்பம்.

சரஸ்வதி என்பதால், அறிவு நாட்டம் உடைய சிறுவர்களும் பெரியோரும் எப்போதுமே மூகாம்பிகையை வணங்குவர் . இந்தக் கோவிலில் கணபதி,கார்த்திகேயன் மஹாவிஷ்ணு, ஹனுமான், யக்ஷி, வீரபத்ர மூர்த்திகளும் வழிபாட்டில் இருக்கின்றன.

கோவில் கேரள கட்டிடக் கலை பாணியில் இருக்கிறது.

xxxx

38.எர்ணாகுளம் சிவன் கோவில்

எர்ணாகுளம் நகருக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது என்பது பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது ;ரிஷி நாகர்குளம் என்பதே பேச்சு வழக்கில் எர்ணாகுளம் ஆக மருவிவிட்டது . இதோ அந்தக் கதை :-

தேவல என்ற சீடன் இமய  மலையில் தன் குருவுக்குப் பணிவிடைகள் செய்துவந்தான் ; ஒரு நாள் யாக யக்ஞங்களுக்கு மரங்களையும் சுள்ளிகளையும் (சமித்து) சேகரிக்கையில், ஒரு பாம்பினைக் கண்டு பயந்துபோய் அதைக் கொன்றுவிட்டான்.இதை அறிந்த ரிஷி, கோபத்தில் அவனை நீயும் பாம்பாகிப் போ என்று சபித்தார்; அவன் முகம் பாம்புபோல மாறியது ; மன்னிப்புக் கேட்டு கெஞ்சியவுடன் பல்லாண்டுகளுக்கு சிவாய நம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து வா; உன் முகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்றார் . அவனை எல்லோரும் நாக ரிஷி என்று அழைத்தார்கள் அவனும் பல சிவன் கோவில்களுக்கு யாத்திரை மேற்கொண்டு வருகையில் ஒரு நாள் பஹுலாரண்யம் என்னும் இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் காண்பாய் என்று கனவில் செய்தி வந்தது . அது அர்ஜுனன் செய்த லிங்கம்.

அதைக் கண்டுபிடித்து எடுத்த்துக்கொண்டு சென்றபோது எல்லோரும் பாம்பு முக ரிஷியைக் கண்டு கற்களை வீசித் துன்புறுத்தினர்; லிங்கத்தை எடுத்துக்கொண்டு போக முயற்சித்தபோது சிவலிங்கம் பூமியில் ஒட்டிக்கொண்டது . உடனே அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றார் . ஆனால் குளத்திலிருந்து வெளியே வரவில்லை ; இதனால் மக்கள் அந்தக்குளத்தைத் ரிஷி நாகர் குளம் என்றழைக்க அது எர்ணாகுளம் என மருவியது .

சிவலிங்கம் இருந்த இடத்தில் துச்சத்து கைமல் என்பவர் கோவில் கட்டினார் . மகர சங்கராந்தி காலத்தில் எட்டு நாள் உற்சவம் நடைபெறுகிறது  மக்கள் எர்ணாகுளத்தப்பன் என்று பக்தியோடு வழிபடுவர் .தர்பார் ஹால் மைதானத்திற்குள் கோவில் அமைந்துள்ளது. இது கொச்சி மகாராஜாக்களின் 7 அரச கோவில்களில் ஒன்றாகும். கடைசியாக  1846 ஆம் ஆண்டில் திவான் ஸ்ரீ எடக்குன்னி சங்கர வாரியாரின் உதவியுடன் திருப்பணிகள் செய்யப்பட்டன.

—subham—

Tags- பரவூர், மூகாம்பிகை கோவில், எர்ணாகுளம், சிவன் கோவில் , வித்யாரம்பம்

பலரது பார்வையில் அரை கிளாஸ் நீர்! (Post No.12,843)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,843

Date uploaded in London –  –  17 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பலரது பார்வையில் அரை கிளாஸ் நீர்! 

ச.நாகராஜன் 

நல்ல நம்பிக்கை உடையவரை ஆங்கிலத்தில் ஆப்டிமிஸ்ட் (OPTIMIST) என்கிறோம்.

தோல்வி மனப்பான்மை உடையவரை ஆங்கிலத்தில் பெஸ்ஸிமிஸ்ட் (PESSIMIST) என்கிறோம்.

உடன்மறை சிந்தனை பாஸிடிவ் திங்கிங். (POSITIVE THINKING)

எதிர்மறை சிந்தனை நெகடிவ் திங்கிங். (NEGATIVE THINKING)

இது மட்டுமின்றி ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமானதாகவே இருக்கக் கூடும்.

இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போமா?

ஒருவர் ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு நீரை நிரப்பி ஆப்டிமிஸ்டிடம் காண்பிக்கிறார்.

ஆப்டிமிஸ்ட் கூறுகிறார் : கிளாஸ் பாதி அளவு நிரம்பி இருக்கிறது.

பெஸ்ஸிமிஸ்ட் கூறுகிறார் : கிளாஸ் பாதி காலியாக இருக்கிறது.

இதையே ஒரு எஞ்சினியரிடம் காட்டிய போது அவர் கூறுகிறார்:

“இந்த கிளாஸ் டம்ளர் அதற்கான நீரை விட ஓவர் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது!”

இதையே ஒரு கம்யூனிஸ்டிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்”

“இந்த கிளாஸில் நிறைய நீர் இருக்கிறது அதை மற்ற கிளாஸ்களுக்கு சரி சமமாக விநியோகிக்க வேண்டும்.”

இதையே ஒரு உளவியலாளரிடம் (சைக்காலஜிஸ்ட்) காட்டியபோது அவர் கூறுகிறார் :

“இந்த கிளாஸில் உள்ள நீர் உங்களை எப்படி உணரவைக்கிறது?”

இதையே ஒரு க்வாண்டம் இயற்பியலாளரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:

இந்த நீரானது கிளாஸுக்கு உள்ளேயும் இருக்கலாம் அல்லது வெளியேயும் இருக்கலாம் அல்லது இரு இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இது நிஜமான நீராகவும் இருக்கலாம் அல்லது வெறும் வெட் வெக்டாராகவும் (WET VECTOR) இருக்கலாம்.

இதையே இடர் ஏற்புத்துணிவு முதலீட்டார்களிடம் (VENTURE CAPITALIST) காண்பித்தபோது அவர் கூறுகிறார்:

“இந்த கிளாஸானது சீர்குலைக்கும் பான விநியோக அமைப்பில் 50 சதவிகித பயனருக்கான அளவிலிருக்கிறது.”

இதை ப்ராஜக்ட் மானேஜர் ஒருவரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:

“இந்த கிளாஸானது எவ்வளவு தேவையோ அதற்கு மேல் இரு மடங்காக இருக்கிறது.

ஒரு மார்கெட் நிபுணரிடம் காட்டிய போது அவர் கூறுகிறார்:
“உங்களது கிளாஸை ரீ-சைஸிங் (அளவை மாற்றல்) செய்ய வேண்டும்.”

ஒரு ஹெல்த் கோச்சிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:

“இப்போதென்ன போச்சு, இந்த கிளாஸை காலியாக்கி மீண்டும் நீர் நிரப்ப வேண்டியது தானே!”

ஒரு ஜங்கியனிடம் (ஜங் என்னும் பிரபல உளவியலாளர் கொள்கைப் பிடிப்புடையோர்) காட்டியபோது அவர் கூறுகிறார்:

“ஆ! இந்த கிளாஸ்!! இது முழுமையின் அடையாளம். ஆக்க சக்தி கொண்டது. நமது உள்ளடங்கிய பிரக்ஞையை பிரதிபலிக்கிறது. பாதி நிரம்பி இருந்தால் என்ன, பாதி காலியாக இருந்தால் என்ன, இது உங்களின் உள்ளார்ந்த ஆத்மாவை அல்லவோ தெளிவான உருவெடுத்தலாகக் காண்பிக்கிறது.”

இதை ஒரு பண்பாட்டு ஆலோசகரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:

“கிளாஸில் எது தான் இருக்கட்டுமே, அது அனைத்து மக்களையும் ஒருங்கிணக்கும் திறனுடன் இருக்க வேண்டும், அது தான் முக்கியம்!”

எதையும் முன்னெடுத்துச் செல்லும் ஒருவரிடம்  (ப்ரோஆக்டிவ் பர்ஸனிடம்) காட்டியபோது அவர் கூறுகிறார்:

“நிஜம் என்னவென்றால் அது முழுமையாக இருந்தது. நான் தான் மறுபடியும் இப்படி நிரப்பினேன்.

எதையும் ஆராயும் ஒரு பிரச்சனைக்காரர் கூறுகிறார்:

“கிளாஸில் நிஜமாக உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஆராய வேண்டும்….”

எப்போதும் எதற்கெடுத்தாலும் கவலைப்படும் ஒருவர் கூறுகிறார்:

“ஐயோ! மீதி இருக்கும் அரை கிளாஸ் தண்ணீரும் காலைக்குள் ஆவி ஆகி விடுமே!”

ஒரு இயற்பியலாளரிடம் அரை கிளாஸ் நீரைக் காட்டியபோது அவர் கூறுகிறார்:

“நிஜமாகப் பார்த்தால் கிளாஸில் பாதியளவு நீர் இருக்கிறது. மீதி பாதியளவு காற்று இருக்கிறது. ஆகவே கிளாஸ் முழுமையாக நிரப்பப்பட்டு இருக்கிறது.”

ஒரு கருத்தரங்கத் தொகுப்பாளரிடம் இதைக் காட்டியபோது அவர் கூறுகிறார்:

“கிளாஸ் பாதி நிரம்பி இருக்கிறதா, பாதி காலியாக இருக்கிறதா என்பது ஒரு பிரச்சனை அல்ல; விவாதத்தைத் தொடங்கி வைக்க பத்து நிமிடங்கள் வேண்டும். ஏன் இந்த பவர்பாயிண்ட் ப்ரஸண்டேஷன் வேலை செய்யவில்லை என்பது தான் விளங்கவில்லை.”

ஒரு செயற்கை நுண்ணறிவு மாடல் அழகி (AI MODEL) கூறுகிறார்:

“பாதி கிளாஸ் நிரம்பி இருக்கிறதா அல்லது பாதி கிளாஸ் காலியாக இருக்கிறதா என்பதா முக்கியம்,  எனது கோடிங் (CODING) இருப்பதைக் கூடக் குடிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறதே!”

பால் ஹோகனிடம் (PAUL HOGAN) இதைக் காட்டியபோது அவர் கூறுகிறார்: “ இது கிளாஸே இல்லை!”

ஒரு சந்தர்ப்பவாதியிடன் இதைக் காட்டியபோது அவர் கருத்து ஏதும் கூறவில்லை. கிளாஸை டபக்கென்று பிடுங்கி இருக்கும் நீரைக் குடித்து விட்டார்.

இதை ஒரு பத்திரிகையாளரிடம்/ டி.வி.சேனல் ஒளிபரப்பாளரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்: “நாம் எல்லோரும் கிளாஸைப் பார்த்தவாறே எப்படி புன்னகை புரியப் போகிறோம்?”

ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது?

பார்ப்பவர் பார்வை பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்.

யத் பாவம் தத் பவதி!

உள்ளத்தின் உணர்விற்கேற்ப உண்மை அமைகிறது; அவ்வளவு தான்! 

பலரது பார்வையைப் பார்த்து விட்டீர்கள், உங்கள் பார்வை என்ன? விமரிசனம் என்ன, ஒரு வரி எழுதிப் போடுங்கள்! 

***

(இணையதளத்தில் படித்த ஆங்கில விமரிசனங்களின் தொகுப்பு)