Part 2 of Rare Pictures from 1928 German book on Hinduism- (Post No.12,842)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,842

Date uploaded in London – –   16 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 2 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

In part two different types of Hindu lamps and Yaga Spoons, ladles, Bells and goddess pictures are there.

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

Yaga Spoons and Utensils

Hindu Lamps and Bells

–subham—

Tags-German book, year 1928, rare pictures, part 2, lamps, Goddess pictures,, bells

மேலும் 3 ஐயப்பன் கோவில்கள் – 35 (Post No.12,841)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,841

Date uploaded in London – –   16 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 35

கோவில் எண்கள் –34, 35, 36

34.குளத்துப் புழை சாஸ்தா / ஐயப்பன் கோவில்

கேரளத்தில் குளத்துப் புழை , ஆரியங்காவு , அச்சன் கோவில் ஆகிய மூன்று ஐயப்பன் கோவில்களும் புகழ்மிக்கவை. நிறைய பக்தர்கள் சபரி மலைக்குச் செல்வதோடு அங்கும் சென்று சுவாமியை தரிசிக்கிறார்கள் ; ஐந்தாவது ஐயப்பன் கோவில், காந்த மலை என்ற இடத்தில் இருப்பதாகவும் அதை மனிதர்கள் அணுக முடியாதென்பதும் ஐதீகம் .

குளத்துப் புழை எங்கே இருக்கிறது?

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் குளத்துப் புழை உளது; தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டையிலிருந்து 50 கிமீ. கொல்லத்திலிருந்து 64 கி.மீ

சிறப்பு அம்சங்கள்

குளத்துப் புழையில் ஐயப்பன் குழந்தை வடிவில் இருப்பதால் பால சாஸ்தா என்று சொல்லுவார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலின் நுழைவாயில் மிகச் சிறியதாக இருக்கும். கேரள பாணியில் கட்டப்பட்ட இக்கோவில் மரத்தினால் கட்டப்பட்டது .

அங்குள்ள சந்நிதிகள்- யட்சியம்மன், நாகர், கணபதி,  மாம்பழத்துறையம்மன், பூதத்தார் .

இந்தக் கோவிலின் ஒரு சிறப்பு அம்சம் குழந்தை வரம் கிடைப்பதாகும் ; குழந்தை வேண்டுவோர் இங்கு தொட்டில் கட்டி சுவாமியை வேண்டுகிறார்கள் .

எட்டு கற்களின் கதை

இந்த ஊரில் ஓடும் நதியின் பெயர் கல்லடை ஆறு . இந்த வட்டார அரசன் தனது சேவகர்களுடன் வந்து உணவு சமைக்க அடுப்பு அமைத்தான். மூன்று கற்களை வைத்து அடுப்பு அமைக்கும்போது ஒரு கல் சற்று பெரிதாக இருந்ததால் சேவகர்கள் அதை உடைத்தார்கள்; அது 8 துண்டுகளாக உடைந்தது ;அப்பொழுது ரத்தம் வெளிப்படவே மலையாள ஜோதிடமான பிரஸ்னம் போட்டுப் பார்த்தார்கள்; அது பரசுராமர் ஸ்தாபித்த ஐயப்பன் கோவில் இடம் என்று அதில் தெரியவந்தது ; உடனே குழந்தை வடிவத்தில் ஐயப்பனை மன்னர் நிறுவினார் ; உடைபட்ட எட்டுக் கற்களும் கர்ப்பக்கிரகத்தில் உள்ளன

மச்ச கன்னி கதை

இங்குள்ள கல்லடை ஆற்றில் ஏராளமான மீன்கள் வளர்கின்றன ; அவைகளுக்கு பக்தர்கள் பொரி வாங்கிப் போடுகிறார்கள் ; இதன் பின்னுள்ள சுவையான கதை:–ஒரு மச்சகன்னி ஐயப்பன் மீது காதல் கொண்டு அவரை மணக்க விரும்பினாள் . அவர் மறுக்கவே இங்கு மீனாக இருக்கவாவது அருள்புரிய வேண்டும் என்றாள் ; அவ்வாறே மீனாக வளர்ந்தாள் . அதன் நினைவாக மீன்கள் போற்றப்படுகின்றன .

இவை எல்லாம் கட்டுக்கதை அல்ல; பக்தர்கள் இப்படி வேண்டி அதை அனுபவித்தது உண்டு என்பதை ஆழ்வார் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன

திருவேங்கட மலை சுனையில் மீனாக இருக்க குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார் ; அவர் சேரநாட்டு மன்னர் ; ஆயினும் திருப்பதி மலையில் நாரை, மீன், மலர் என்று பல பிறவிகளை வேண்டி பாடுகிறார். ஆகையால் மச்ச கன்னி கதையில் பசை உள்ளது

பெருமாள் திருமொழி 

ஆனாத செல்வத்து*  அரம்பையர்கள் தற் சூழ*

வான் ஆளும் செல்வமும்*  மண்-அரசும் யான் வேண்டேன்*

தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கடச் சுனையில்*

மீனாய்ப் பிறக்கும்*  விதி உடையேன் ஆவேனே குலசேகர ஆழ்வார்

XXXX

35.ஆரியங்காவு ஐயப்பன் கோவில்

ஆரியங்காவு எங்கே இருக்கிறது?

கொல்லம் மாவட்ட த்தில் , தமிழ் நாட்டின் எல்லையில் உள்ளது; தென்காசியிலிருந்து 21 கி.மீ; புனலூரிலிருந்து 33 கி.மீ  தொலைவில் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் இருக்கிறது ; ஆர்யன் என்பது ஐயப்பனையும் காவு என்பது அதமைந்த தோப்பையும் குறிக்கும்

சிறப்பு அம்சங்கள்

கேரள பாணி கோவில் ஆனாலும் தமிழ்நாட்டுப் பாணியில் பூஜைகள் நடைபெறுகின்றன .மதுரை செளராஷ்டிர சமூகத்தினருடன் தொடர்புடைய கோவில்!

ஐயப்பன்  புஷ்கலை என்ற பெண்ணை மணந்த தோற்றத்தில் தரிசனம் தருகிறார். யானை மீதமர்ந்து காட்சி தரும் ஐயப்பன் அருகில் புஷ்கலா தேவி நிற்கிறாள். ஆரியங்காவு ஐயனே என்று பக்தர்கள் கோஷம் எழுப்புவர்

கோவிலில் உள்ள மூர்த்திகள் — பார்வதி, லிங்க வடிவில் சிவன், நடுவில் ஐயப்பன் ; பரசுராமர் ஸ்தாபித்ததாக ஐதீகம்.

இங்கு கருப்பா நதி ஓடுகிறது ; வலிய கேட்டுத்தன், கருப்பசாமி , கருப்பை அம்மா ஆகியோரும் கோவிலில் வழிபடப்படுகின்றனர்

சபரிமலை போலவே 18 படிகள் இருக்கின்றன .

கோவில் நிலமட்டத்திற்கும் கீழே அமைந்துக்ள்ளது;  நல்ல ஓவியங்கள் உள்ளன

xxxx

கோவில் பற்றிய கதை

திருவிதாங்க்க்கூர் அரச வம்சத்தினருக்கு ஆடை நெய்து தரும் பொறுப்பு மதுரை செளராஷ்டிர பட்டுநூல்காரர்களிடம் இருந்தது. பெரிய வணிகர், தன் மகள் புஷ்கலையை அழைத்துக்கொண்டு துணிமணிகளுடன் புறப்பட்டார். ஆரியங்காவு வந்தபோது யானை, புலி உலவும் காட்டு வழியாகச் செல்ல மகள் அஞ்சியதால் அர்ச்சகர் வீட்டில் தங்கவைத்துவிட்டுச் சென்றார்; திரும்பி வருகையில் அவரை யானை துரத்தவே ஓடினார் ; ஒரு வேடன் வந்து அவரைக் காப்பாற்றினான். அவனுக்கு தான் அணிந்த பட்டு வஸ்திரத்தை அளித்தார். அவன் அதை அணிந்தபோது  பேஷ்பேஷ்; மாப்பிள்ளை போல இருக்கிறாயே என்று வியந்தார்; அப்படியானால் உங்களுக்கு பெண் இருந்தால் எனக்கு  கல்யாணம் கட்டுங்களேன் என்றவுடன் புஷ்கலையிடம் அழைத்துச் சென்றார்; அவள் ஏற்கனவே கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு சேவை செய்ததால் , அவரைப்போலவே இருக்கவே அவரை மணந்தாள் ; உண்மையில் வேடனாக வந்தது ஐயப்பன்தான் என்பது ஐதீகம் ; இப்பொழுதும் மார்கழி மாதத்தில் திருமண விழா மதுரை செளராஷ்டிர சமூக சீர்செட்டுகளுடன் நடத்தப்படுகிறது .

திருமண வைபவங்கள் கோவிலுக்கு வெளியேயுள்ள மண்டபத்தில் செளராஷ்டிர சமூக முறைப்படி நடக்கும் .

xxxx

36 அச்சன் கோவில் ஐயப்பன் கோவில்

ஆரியங்காவில் ஐயனாக இருந்த  ஐயப்பன் அச்சன் கோவிலில் அரசனாக வீற்றிருப்பதால் பக்தர்கள் அச்சன் கோவில் அரசனே என்று கோஷம் எழுப்பி வழிபடுகிறார்கள் .

எங்கே இருக்கிறது ?

தமிழ்‌நாட்டின், செங்கோட்டையிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ; புனலூரிலிருந்து 50 கிமீ. ஆரியங்காவுக்கு அருகில் இருக்கும் கோவில் இது . 14 கி.மீ.

அச்சன்கோவில் ஆற்றின் கரையில் அமைந்த இந்தக்கோவிலையும் பரசுராமரே நிறுவினார்

சிறப்பு அம்சங்கள்

இங்கு பூர்ணாபுஷ்கலா ஆகிய இரண்டு மனைவியருடன் ஐயப்பன் கல்யாண கோலத்தில் கிரஹஸ்தனாக காட்சி தருகிறார்..

பகவதி, மாளிகைபுரத்தம்மா , துர்கா, நாக யக்ஷி , நாகராஜா, கணேசர், கார்த்திகேயன், கருப்பசாமி, கறுப்பி அம்மா, சப்பாணி மாடன் முதலிய  தெய்வங்களும் கோவிலில் இருக்கின்றன ; கோவிலின் பின்புறத்தில் சர்ப்ப காவு இருக்கிறது; அங்கு நாகர் வழிபாடு நடக்கும்.

பாம்புக்கடி வைத்தியம்

பாம்புக்கடி வைத்தியத்துக்கு பெயர்   பெற்ற இடம் அச்சன்கோவில் ; இரவு நேரத்திலும் திறந்திருக்கும் கோவில் இது; இறைவன் மீது சார்த்தப்பட்ட சந்தனமும் தீர்த்தமும் பாம்புக்கடி விஷத்தை இறக்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ; எந்த நேரமானாலும் கோவில் மணியை அடித்தால் அர்ச்சகர் வந்து பிரசாதம் வழங்குவார்.

தனுர் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மண்டலபூஜை நடைபெறும். மகர மாதத்தில் ரேவதிபூஜையும் நிகழும். மண்டலபூஜையில் தேரோட்டமும் ரேவதிபூஜையில் புஷ்பாபிஷேகவும் முதன்மையான சடங்குகள்.

அச்சன்கோவில் புஷ்பாஞ்சலி

தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியன நடைபெறும் . மதியம் களபாபிஷேகம் . மாலையில் யானை மீது டன்  கணக்கில் பூக்கள் ஊர்வலம்  நடக்கும் ; அச்சன்கோவில் புஷ்பாஞ்சலிக்கு முன்னர் மதுரை முதலிய பூ மார் க்கெட்டுகள் காலியாகிவிடும். பக்தர்கள் டன்  கணக்கில் பூக்களை வாங்கி கோவிலுக்கு அனுப்புவார்கள்.

—subham—-

Tags-  அச்சன்கோவில் ,புஷ்பாஞ்சலி ,பாம்புக்கடி வைத்தியம் ,பூர்ணா, புஷ்கலா ,ஆரியங்காவு ,ஐயப்பன் கோவில், குளத்துப் புழை ,சாஸ்தா,எட்டு கற்கள், மச்ச கன்னி, கதை

ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா! (Post No.12,840)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,840

Date uploaded in London –  –  16 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா!

ச.நாகராஜன்

ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா,

உற்சாகத்திற்கு ஒரு புலவன் பாரதி அடா

தேசபக்தி ஊட்ட ஒரு புலவன் பாரதி அடா

தெய்வபக்தி ஊட்ட ஒரு புலவன் பாரதி அடா

பெண்மையைப் பேச ஒரு புலவன் பாரதி அடா

அதைப் போற்றத் தூண்டும் ஒரு புலவன் பாரதி அடா

மாயை பற்றிச் சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

அதில் மயங்காதே என்று சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

விஞ்ஞான மேன்மை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

அதை வரவேற்றுப் பாட ஒரு புலவன் பாரதி அடா

இந்து மத மேன்மை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

அதைப் போற்றிப் பாடல் தர ஒரு புலவன் பாரதி அடா

பாரதப் பெருமை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

அதைப் போற்றத் தூண்டும் ஒரு புலவன் பாரதி அடா

இமயமலை எங்கள் மலை என்று சொன்னான் பாரதி அடா

அதன் உயரமளவு ஏறி விட்டான் பாரதி அடா

தமிழின் பெருமை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

தமிழர் விழித்தெழச் செய்ய வந்த புலவன் பாரதி அடா

கவிக் கம்பன் பெருமை சொன்னான் பாரதி அடா

வள்ளுவரை ஏற்றி வைத்தான் பாரதி அடா

அனைத்தும் பாடிய ஒரு கவிஞன் பாரதி அடா

அதை முழுதும் சொல்ல ஒருவரும் இல்லை பாரதி அடா

உலகம் கண்ட பெருங்கவிஞன் பாரதி அடா

உண்மை சொன்னேன் நம் தமிழ்க் கவிஞன் பாரதி அடா

***

Rare Pictures from 1928 German book on Hinduism-1 (Post No.12,839)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,839

Date uploaded in London – –   15 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

–subham—

Tags-German book, year 1928, rare pictures, part 1, masks, Lakshmi 

QUIZ மஹாவீரர் பத்து QUIZ (Post No.12,838)

Mahavir, who controlled his five senses, 24th Tirthankara of Jain Religion

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,838

Date uploaded in London – –   15 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

QUIZ SERIAL NUMBER—88

Jain Symbol- Swastika 

1.மஹாவீ ரர் எங்கு, எப்பொழுது பிறந்தார் ?

xxxx

2. அவர் சமண மதத்தை ஸ்தாபித்தாரா ?

xxxx

3. மஹாவீரரின் தாய்தந்தையர் யாவர் ?

xxxx

4. மஹாவீரருக்கு தாய்தந்தை இட்ட பெயர் என்ன அவர் ஏன் வர்த்தமான மஹாவீரர் என்று அழைக்கப்பட்டடார் ?

xxxx

5. மஹாவீரர் இறந்தது எங்கே?

xxxx

6. தீர்த்தங்கரரில் இவருக்கு ஏன் அதிகப் புகழ்?

xxxx

7. புத்தர் கடவுள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லைமஹாவீரர் கடவுள் பற்றி என்ன சொன்னார்  ?

xxxx

8. சமணர்களின் கொள்கை என்ன ?சமணர்கள் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் சாப்பிட மாட்டார்கள்பல் தேய்க்கமாட்டார்கள் என்பதெல்லாம் சரியா?

xxxxx

9.சமணர்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

xxxx

10.சமணர்களின் புனிதத் தலங்கள் எவை புனித நூல் எது?

Xxxx

Gomateswara Monolith Statue in Sravana belagola, Karnataka; saint who controled sex desires.

விடைகள் 

1. மஹாவீரர் பிறந்த இடம் குண்டல்பூர் அல்லது குண்டலகிராமம் எனப்படும். வைசாலி அல்லது ஜமுயி குன்றுகள் என்றும் சிலர் சொல்வர். மூன்று இடங்களும் பீஹார் மாநிலத்தில்தான் உள்ளன.

இவர் சரியாக 2600 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார்; புத்தருக்கு முன்னர் பிறந்தவர்.

xxxx

2.அவர் சமண மதத்தை ஸ்தாபிக்கவில்லை.; தீர்த்தங்கரரர்கள் என்னும் 24 வழிகாட்டிகளில் அவர் கடைசியாக வந்தவர்.

xxxx

3.தாயின் பெயர் த்ரிசலா தேவி ; தந்தையின் பெயர்  தந்தையின் பெயர் சித்தார்த்தன் ; அவர் ஒரு சிற்றரசர்

Xxxx

4.அவருடைய பெயர் வர்த்தமானர் வளங் கொழிக்கச் செய்ப்பவர் என்று பொருள்; அவர் தாயின் கருவில் இருந்தபோதே வளர்ச்சி  ஏற்பட்டது ; ஏராளமான மலர்கள் பூத்துக்குலுங்கின’ இவர் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடித்ததால் மகாவீர் எனப்பட்டார்; புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் என்பது அவ்வையார் வாக்கு; புலனை வென்ற வர்த்தமானரும் , ஆஞ்சநேயரும் மட்டுமே இந்தியாவில் மாவீரர் பட்டம் பெற்றவர்கள் .

xxxx

5.பீஹார் மாநிலத்தில் உள்ள பாவாபுரி என்னும் இடத்தில் அவர்   முக்தி அடைந்தார்; அப்போது அவருக்கு வயது 72..அவர் தகனம் செய்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது

xxxx

6.மஹாவீரருக்கு முன்னர் 23 தீர்த்தங்கரர்கள் இருந்தாலும் இவரைத்தான் கடைசி தீர்த்தங்கரர் என்பார்கள்; அதனாலும் அவரது போதனைகளே நமக்குக்  கிடைத்திருப்பதாலும், வரலாற்றுச்  சான்றுகள் கிடைப்பதாலும் இவரே புகழ் பெற்றவர்; மேலும் புத்தர் போல மக்களிடையே உரையாற்றி தனது போதனைகளைப் பரப்பினார் ; புத்தரை க்ஷத்ரிய மன்னர்கள் ஆதரித்தது போல இவரை வைஸ்யர் எனப்படும் வணிகர்கள் ஆதரித்தனர் .xxxxxx

7. சமணர்கள் அல்லது மஹாவீரர் கடவுள் என்று படைப்போன் ஒருவன் உளான் என்று நம்புவதில்லை தாய்ப்பசுவை ஒவ்வொரு கன்றும் எப்படி அடையாளம் காண்கிறதோ, அவ்வாறே அவரவர் வினைகள் அவரவரை அடையாளம் கண்டு ஒட்டிக்கொள்ளும்; அதற்கேற்ப பலனும் கிட்டும். என்பது அவர் கொள்கை; ஆகையால் இதை நாஸ்தீக மதம் என்றே சொல்லவேண்டும் .எங்கும் நிறைந்த தூய ஆன்மாக்களே வழிகாட்டிகள்; அவர்கள் நிலையை எல்லோரும் எய்தலாம்.ஜனன- மரண வட்டத்திலிருந்து மீள்வதே வாழ்க்கையின் குறிக்கோள்; இந்துக்களைப் போலவே கர்மவினை, மறுபிறப்பு, மோட்சம் ஆகியவற்றில் நம்பிக்கை உண்டு .ஆனால் அவைகளை  நிர்வகிக்கும் ஒருவன் இல்லை; கடவுள் இல்லை.

xxxx

8.நல்ல பேச்சு, நல்ல செய்கை, நல்ல சிந்தனை இருந்தால் பிறப்பு- இறப்புச் சுழலிலிருந்து விடுபடலாம் (இந்துக்கள் இதையே த்ரி கரண சுத்தி என்பர் ; தமிழ் இந்துக்கள் இதையே வாய்மை, உண்மை, மெய்மை என்பர்); இவை தவிர அஹிம்சை, திருடாமை , பற்றின்மை, உண்மை பேசுதல், புலன் இன்பம் தவிர்த்தல் ஆகிய குணங்களையும் சமணர்கள் வலியுறுத்துவார்கள்.

இரவு நேரத்தில் சாப்பிட்டால் புழுப் பூச்சிகள் உணவில் இருந்தாலும் திரியாது என்பதால்  இருட்டில் சாப்பிட மாட்டார்கள்; பல் தேய்த்தால் புழுப் பூச்சிக இறக்க நேரிடும் என்பதால் தேய்க்கமாட்டார்கள் ; ஆயினும் இக்காலத்தில் சமணத்துறவிகள் மட்டுமே இதைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் குளிப்பதும் இல்லை.

Xxxxx

9.இரண்டு பிரிவுகள் – திகம்பரர் (உடைகளை அணியமாட்டார்கள்); ஸ்வேதாம்பரர் (வெள்ளை உடை தரிப்போர்).

xxxxxx

10.புனிதத் தலங்கள்

வைசாலி, மகாவீரர் பிறந்த இடம், பீஹார்

பாவாபுரி, மகாவீரர் மறைந்த இடம்,பீஹார்

தேவ்கர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்

சிகார்ஜி சமணக் கோயில்கள், ஜார்க்கண்டு

சத்ருஞ்ஜெய மலை. குஜராத்

பாலிதானா கோயில்கள், குஜராத்

கிர்நார் சமணக் கோயில்கள், (நேமிநாதர் முக்தி அடைந்த இடம்), குஜராத்

தில்வாரா கோயில், இராஜஸ்தான்

கோமடேஸ்வரர், சிரவண பெலகோலா , கர்நாடகம்

ஜைன காஞ்சி, தமிழ்நாடு

மஹாவீரர் போதனைகளை பலர் தொகுத்து அளித்துள்ளனர்இவை ஒரே புஸ்தகத்தில் இல்லைஇவைகளை  ஆகம சூத்திரங்கள் என்பர்

—subham —-

TAGS- மஹாவீரர், சமண மதம், கடவுள் இல்லை, கர்மா வினை , பீஹார், போதனைகள், தாய், தந்தை, வர்த்தமான

சாமியே! சபரி மலை சாஸ்தாவே ! சரணம் ஐயப்பா!! -34 (Post No.12,837)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,837

Date uploaded in London – –   15 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 34

கோவில் எண்–33

33.சபரிமலை சாஸ்தா / ஐயப்பன் கோவில்

சபரிமலை எங்கே இருக்கிறது?

கேரளத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது; செங்கன்னூர் ரயில் நிலயத்தில் இறங்கி பக்தர்கள் செல்வர். எருமேலியிலிருந்து காட்டு வழியாகச் சென்றால் 61 கி.மீ ; வண்டிப்பெரியாரிலிருந்து சென்றால் 13 கிமீ. சாலக்காயத்திலிருந்து 8 கி.மீ; தற்போது பம்பா நதி வரை சாலை வசதிகள் இருப்பதால் பலரும் அதுவரை சென்று பின்னர் மலையில் ஏறி ஐயப்பனை தரிசிக்கின்றார்கள் .

சிறப்பு அம்சங்கள்

கேரளத்தில் அதிகம் பேர் விஜயம் செய்யும் கோவில் இது ; ஆண்டுக்கு 2 கோடி பக்தர்கள் வருவதால் உலகிலேயே அதிகம் பக்தர்கள் வரும் பட்டியலில் இருக்கிறது.

ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் வரலாம்; ஆனால் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்ல முடியாது .

41 நாள் விரதம் அனுஷ்டித்து மாலை அணிந்து இரு முடி தாங்கி பக்தர்கள் செல்கிறார்கள்.

ஐயப்பன்  யார் ?

பெரிய தத்துவத்தை பாமர மக்களுக்குப் புரிய வைக்க வேடிக்கையாக கதை சொல்லுவார்கள்; விஷ்ணு மோகினி வடிவம் எடுத்துக்கொண்ட காலத்தில் சிவ பெருமான் அவளைக் காதலித்து பெற்ற பிள்ளை என்பது பாமர மக்கள் சொல்லும் கதை; ஆனால் காஞ்சி மஹா சுவாமிகள் போன்றோர் உண்மைப் பொருளை விளக்கியுள்ளனர் ; நாராயணனின் வசீகர கருணா சக்தியும் சிவனின் ஞான சக்தியும் இணைந்து ஏற்பட்ட தேஜோ மய ஒளியில் தோன்றியது ஹரி ஹர புத்ரன் ; அதாவது இரண்டு சக்திகளின் இணைப்பு .

மணிகண்டன் கதை

இன்னும் ஒரு கதையும் உண்டு ; பந்தள மகாராஜா பம்பா நதிக்கரைக்குச் சென்றபோது கழுத்தில் மணி கட்டப்பட்ட (மணிகண்டன் ) குழந்தையைக் கண்டு அரண்மனைக்குக் கொண்டுவந்தார் ; அதற்குப் பின்னர் மகாராணிக்கு ஒரு குழந்தை பிறந்தது; இருவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர்.யாருக்கு அடுத்த பட்டம் சூட்டுவது என்ற பிரச்சனை வந்தபோது ராணி ஒரு தந்திரம் செய்தாள் ; தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் புலிப்பால் கொண்டு வந்தால் அதைச் சாப்பிட்டு நோயைத் தீர்க்க முடியும் என்றும் சொன்னாள் ; முதல் பிள்ளையான மணிகண்டன், கானகம் ஏகினார்; புலிப்பாலை எடுத்துக்கொண்டு புலி மீது சவாரி செய்து பந்தளத்தில் நுழைந்தார்; அவர்  தெய்வீக சக்தியை அறிந்த மக்களும் மன்னரும் என்றும்  அருள் பாலிக்க வேண்டியதால் நீலி மலையில் அமர்ந்து தவம் செய்தார்.

அந்தக் காலத்தில் உதயணன் என்ற மலைக்கள்ளன் ஒவ்வொரு ஊரையும் கொள்ளையடித்து மக்களை அச்சுறுத்தவே எல்லோரும் ஊர்தோறும் ஐயப்பனை — ஐயனாரை — ஆர்யனை — காவல் தெய்வமாக நிறுவினார்கள் . தர்ம சாஸ்தா என்பவர் தருமத்தை நிலைநாட்டி ,உதயணனை கொன்றுவிட்டு சபரிமலையில் சென்று மறைந்தார்;அந்த இடத்தில் தான் தற்போதைய கோவில் இருக்கிறது .

ஐயப்பன் என்னும் தர்ம சாஸ்தா புலி மீது வந்தபோது இருமுடி தாங்கி வந்தார்; அதை நினைவுபடுத்தும் வகையில் இன்றும் தோளில் அல்லது தலையில் இரு முடி தாங்கிச் செல்கிறார்கள் ; ஒரு பக்கம் அய்யப்பன் மீது அபிஷேகம் செய்வதற்கு தேங்காயில் நெய்யும் மறு பக்க முடிச்சில்  வழிநடைக்குத் தேவையான உணவுப் பண்டங்களும் இருக்கும் .

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

அந்தக் காலத்தில் காட்டு வழியாக நடந்த வந்த பக்தர்கள் கோவிலுக்குச் செல்லுகையில் காலணி அணிய மாட்டார்கள்; ஆகையால் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்ததை ; சாமி சரணம், ஐயப்ப சரணம், சாமியே ஐயப்பா என்று ஆடியும் பாடியும் செல்லுவார்கள்.

18 படிகள்

தங்கத்தால் மூடப்பட்ட சாஸ்தா கோவிலை நெருங்கியவுடன் 41 நாள் விரதம் இருந்தோர் மட்டும் 18 படிகளில் ஏறி சந்நிதியை அடைவார்கள் . இந்த 18 படிகளுக்கும் தத்துவ விளக்கங்கள் உண்டு.

சுருக்கமாக சொல்ல  வேண்டுமானால், இறைவனை அடைய ஆத்மா செய்யும் பயணத்தை விளக்க வந்தது சபரிமலை யாத்திரை; அப்படி இறைவனை அடைய 41 நாள் விரத காலத்தில் எப்படி தூயவர்களாக இருந்தார்களோ அப்படி தினமும் இருக்க வேண்டும் ; இரு முடிகளில் ஒன்று பிராரப்த கர்மா ; அதாவது நாம் செய்த வினை; அதை அழித்தால் முன் முடியிலுள்ள தேங்காயை கழற்றி எறிவது போல  உடலையும் நீக்கிவிடலாம்..

XXXXX

பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய சொற்களின் பொருள்

ஆர்ய = பண்பாடு மிக்கவன்; அஜ்ஜ = பிராகிருத திரிபு= ஐயர் / ஐயன் = தமிழ் வடிவம் ;

அவனே எனது அப்பன்/ குரு = ஐயப்பன்

XXXX

 ஐயப்பனின் உருவம் 

அமர்ந்த நிலையில் ஐயப்பன் காட்சி  தருகிறார்  அவரது முழங் கால்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும் ; இரவில் சந்நிதியை மூடுகையில் ஹரிவராசனம் என்னும் தாலாட்டுப் பாடலைப் பாடுவார்கள் . இது சம்ஸ்க்ருத மொழியில் உள்ளது 

xxxxx

5 முக்கிய ஐயப்பன் கோவில்கள்

குளத்துப்புழையில் பாலன் வடிவம்

ஆரியங்காவில்  பிரம்மசாரி வடிவம்

அச்சன்கோவிலில் கிரஹஸ்த வடிவம் ; பூர்ணா, புஷ்கலா தேவியருடன்

சபரிமலையில் வானப் பிரஸ்த வடிவம்

பொன்னம்பல மேடு என்னும் காந்த மலையில் யோகி வடிவம்

XXXX

மகர ஜோதி

கார்த்திகை மாதம் விரதத்தை துவங்குவோர் மகர சங்கராந்தி அன்று மகர ஜோதியைத் தரிசித்துவிட்டு விரதத்தை முடிப்பர்; இப்போது கோடிக்கணக்கானோர் வருவதால், 41 நாள் முழுதும் தர்சனம் நடைபெறுகிறது.

மகர ஜோதி ஒரு காலத்தில் இயற்கையாக சூரியன் மறையும் போது ஏற்பட்டது; தற்போது  பழங்குடி மக்கள் தீ மூட்டி ஜோதியை உண்டாக்கி பழைய வழக்கத்தைக் காப்பாற்றி வருகின்றனர் .

Xxxx

மாளிகைபுரத்து அம்மன்

சபரிமலை ஐயப்பனின் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் மாளிகைபுரத்தம்மன் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் வணங்குவார்கள். 100 மீட்டர் தூரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மஞ்சள் மாதா என்பது இன்னும் ஒரு பெயர்..பந்தளம் அரச குடும்பத்தின் குல தெய்வம் ஆவார்.

கன்னி அய்யப்பன், குருசாமி

முதல் தடவை விரதம் இருந்து செல்லும் ஐயப்ப பக்தரை கன்னி ஐயாப்பன் என்பர் ; அதிக காலம் சபரிமலைக்குச் சென்றுவரும் முதிர்ந்த பக்தரை  குரு வாக ஈற்றுஞ் அவர் கையில் மாலை, ஆடைகளை வாங்கி அணிவர். குரு சாமி தனது அனுபவத்தாலும், பக்தி முதிர்ச்சியினாலும் கன்னி ஐயப்பனை வழிநடத்துவார் ; பொதுவாக அவர் ஒழுக்கம் உடையவராக இருப்பார் .

–SUBHAM—

TAGS- கன்னி அய்யப்பன், குருசாமி ,மாளிகைபுரத்து அம்மன் ,மகர ஜோதி ,

5 முக்கிய ஐயப்பன் கோவில்கள் ,18 படிகள் மணிகண்டன்,  ஐயப்பன் கதை , சபரிமலை, சாஸ்தா

ஆசார்யர், தந்தை, தாய், சகோதரன், சகோதரி பெருமை! (Post No.12,836)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,836

Date uploaded in London –  –  15 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆசார்யர்தந்தை, தாய், சகோதரன்சகோதரி பெருமை! 

ச.நாகராஜன் 

ஶ்ரீ பக்தி கௌஸ்துபம் என்ற நூலில் அருமையான தர்ம நெறிகளும், வாழ்வியல் உண்மைகளும் அரிய செய்திகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மிகப் பெரிய, அரிய இந்த நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ள ஒரு சில ஸ்லோகங்களை இங்கு காணலாம்; அதன் மூலம் நூலின் அருமையைப் புரிந்து கொள்ளலாம்.

மாதரம் பிதரம் வ்ருத்தம் பார்ய்யாம் சுதம் சிசும் |

குரும் விப்ரம் ப்ரபன்னம் ச கல்போவிப்ரத் ஷ்வஸன் ம்ருத: ||

                        ஶ்ரீமத் பாகவதம் 10/45/7

ஶ்ரீ சுகதேவர் கூறியருளுவது : தகுதியுள்ள ஒரு மனிதன் தனது வயதான பெற்றோர்களையும், கற்புள்ள மனைவியையும், குழந்தைகளையும், பிராமணர்களையும், தன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளவர்களையும் ஆதரிக்காவிடில் அவனை ஜீவன்ம்ருத (நடமாடும் பிணம்) என்றே சொல்லலாம்.

அவனை உயிர் வாழ்ந்தும் இறந்தவனே என்று கூறலாம்.

**

புரு, யயாதி மன்னனின் இளைய மகன் கூறியது:

கோனுலோகே மனுஷ்யேந்த்ர பிதுராத்மக்ருத: புமான் |

ப்ரதிகர்த்தும் க்ஷமோ யஸ்ய ப்ரஸாதாத்விந்ததே பரம் ||

                              ஶ்ரீமத் பாகவதம் 9/18/43 

ஓ, மன்னா! (யயாதி).  இந்தப் பரந்த உலகில் எந்த ஒருவனேனும் தனது தகப்பனுக்கு கைம்மாறு செய்ய  முடியுமா? (அவன் ஆற்றிய செயல்களுக்காக என்பது பொருள்). அவனுடைய கருணையினாலேயே முக்தி கிடைக்கப்பெறும். அவனாலேயே உடலானது உருவாக்கப்பட்டது. அதற்கு பதிலாக எதையும் செய்ய முடியுமா?

முடியாது என்பது பொருள். அப்படி கைம்மாறைச் யாராலும் உலகத்தில் செய்ய முடியாது.

 உத்தமஷிசந்திதம் குர்ய்யாத் ப்ரோகத்காரி ச் மத்யம: |

அஸ்ரத்தயோதம: குர்யாத் அகர்த்தோர்ச்சரிதம் பிது: ||

                                          ஶ்ரீமத் பாகவதம் 9/18/44

என்றபோதிலும் கூட,

தந்தையின் எண்ணத்தை எவன் ஒருவன் அறிந்து அவன் சொல்லாமலேயே அதன்படி செயலாற்றுகிறனோ அவனே மகன்களில் உத்தமன். தந்தை சொல்வதைச் செய்பவம் மத்தியமானவன். தந்தை கூறியதை அசிரத்தையுடன் செய்பவன் அதமன்.  எவன் ஒருவன் தந்தை கூறியதைச் செய்யாமல் விட்டு விடுகிறானோ அவன் மகனே அல்ல; வெறும் மலமே!

**

தேவதைகளின் கூற்று:

ஆசார்ய்யோ ப்ரஹ்மணோ மூர்த்தி: பிதா மூர்த்திப்ரஜாபதே” |

ப்ராதா மருத்பதேர்மூத்திர்மாதா சாக்ஷாத் க்ஷிதேஸ்தனு: ||

                                          ஶ்ரீமத் பாகவதம் 6/7/29

ஆசார்யர் வேதத்தின் மூர்த்தி (கருத்துருவம்). தந்தை படைப்புக் கடவுளான ப்ரம்மாவின் மூர்த்தி (கருத்துருவம்). சகோதரன் இந்தினின் மூர்த்தி. தாயாரோ பூமிக்குச் சமமானவள்.

**

தயாய பகினி மூர்த்திதர்மஸ்யோ சாதிதி: ஸ்வயம் |

அக்னேரப்யாகதோ மூர்த்தி: சர்வபூதானி சாத்மன: ||

                                          ஶ்ரீமத் பாகவதம் 6/7/30

சகோதரி அன்பின் திருவுருவம் (மூர்த்தி); வந்திருக்கும் விருந்தாளியோ (அதிதி) தர்மத்தின் திருவுருவம்; ஒரு வருகையாளரோ அக்னியின் திருவுருவம்; எல்லா உயிர்களும் இறைவனின் திருவுருவமே.

                                ஶ்ரீமத் பாகவதம் 4/21/46

**

Pandya ,Choza, Pallava Coins from Smith 1908 Book (Post No.12,835)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,835

Date uploaded in London – –   14 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Early History of India

Vincent A Smith

1908

Coins of India Pictures

Indo-Greek coins

Pallava, Pandya, Choza Coins

Kanishka

–subham—

Tags- Ancient Indian coins, Choza, Pandya, Pallava

Rare Pictures from India’s Past, 1927- Part two (Post No.12,834)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,834

Date uploaded in London – –   14 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

India’s Past

By  A A Macdonell

Year 1927

Part Two

Beautiful Pictures of North Indian Temples

Sanchi stupi

Vasco Da Cama

Alexander

Buddhi 

William Jones

Map of Main Rivers

—subham—

Tags-  A Macdonell, India’s Past,Rare pictures, Part 2

QUIZ புத்தர் பத்து QUIZ (Post No.12,833)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,833

Date uploaded in London – –   14 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL NUMBER—87

1.புத்தர் பிறந்த இடம் எது அது எந்த நாட்டில் உள்ளது ?

xxxx

2.புத்தரின் முதல் பெயர் என்ன?  புத்தரின்மனைவிமகன் பெயர் என்ன ?

xxxxx

3.புத்தர் எத்தனை வயதுவரை வாழ்ந்தார்எவ்வாறு எங்கே இறந்தார் ?

xxxx

4.அவர் முதலில் உரையாற்றிய இடம் எது ? அவர் என்ன போதித்தார் ?

xxxxx

5.புத்தர் உபதேசம் உள்ள நூலின் பெயர் என்ன? எண்வகை மார்க்கம் என்பது என்ன ?

xxxxx

6.அவர் மனம் மாற காரணமாக இருந்த விஷயங்கள் என்ன ?

xxxxx

7.அவருடைய அப்பாஅம்மா பெயர்கள் என்ன ?

xxxxx

8.புத்தர் இறந்த பின்னர் என்ன நடந்தது ? புத்தரையும் தசாவதாரத்தில் சேர்த்தவர் யார்

xxxxx

9.பெண்களை சேர்க்க புத்தர் ஏன் மறுத்தார்பின்னர் அவர் மனதை மாற்றியது யார்?

xxxxx

10. புத்தர் பிறப்பதற்கு முன்னர் அவருடைய தாயார் கண்ட கனவு என்ன ?

xxxxx

விடைகள்

1.புத்தர் பிறந்த இடம் கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினி.; அது நேபாளம் என்னும்  நாட்டில் உள்ளது  2500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பிறந்தார் என்றாலும் அவர் பிறந்த ஆண்டு பற்றிய சர்ச்சை இன்றுவரை ஓயவில்லை . நமக்கு 2900 ஆண்டுகள் முன்னர்  முதல் 2500 ஆண்டுகள் வரையுள்ள காலத்தில் அவர் பிறந்த தேதி வைக்கப்படுகிறது . புத்தர் வைகாசி பெளர்ணமியில் விசாக நட்சத்திரத்தில் பிறந்தார்; இதை வெசாக் (வைசாக்) என்பர்.

xxxx

2.புத்தருக்கு அம்மா, அப்பா சூட்டிய பெயர் சித்தார்த்தன் புத்தரின் மனைவி பெயர் யசோதரா  மகன் பெயர் ராகுலன். புத்தர் என்ற அடைமொழிக்கு ஞானோதயம் கண்டவர் என்று பொருள்.

xxxx

3.அவர் 80 வயது வரை வாழ்ந்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷி நகரில் இறந்தார் ஒருவன் கெட்டுப்போன பன்றி மாமிசத்தைக் கொடுத்தான்; ஆ பன்றி இறைச்சியா என்று கதறிய அவர், அது தொண்டையில் சிக்கவே மரணம் சம்பவித்தது ; இன்னும் சிலர் , அதனால் நோயுற்று அவர் இறந்தார் என்பர்.

xxxxx

4.புத்த கயாவில் போதி மரம் என்னும் அரசமரத்தின் கீழ் புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டபோது அவருக்கு வயது 35. காசிக்கு ஆறு மைல்  தூரத்தில் கங்கையும் வருணாவும் கலக்கும் இடத்தில் சாரநாத் மான்கள் பூங்கா இருக்கிறது ; அந்த ஊரில்தான் புத்தர் முதல் சொற்பொழிவினை நிகழ்த்தி நான்கு போதனைகளை அளித்தார் .

1.நாம் அனுபவிக்கும் துன்பம் 2 அதன் காரணம் 3.துன்பத்தின் முடிவு 4. அதிலிருந்து விடுபடும் வழிகள்

xxxx

5. புத்தரின் உபதேசம் அடங்கிய நூல் தம்ம பதம் எனப்படும். இதில் 26 அத்தியாயங்களில் பாலி மொழியில் புத்தர் சொன்ன பாடல்கள் இருக்கின்றன. இது பெளத்தர்கள் வேதப் புஸ்தகம் ; அவர் கடவுள் பற்றி ஒன்றும் போதிக்கவில்லை; எந்த சடங்குகளையும் விதிக்கவில்லை ; ஆனால் எண்வகை மார்க்கத்தை ஒருவன் பின்பற்றினால் போதும் என்றார் ; அவர் போதித்த 8 கொள்கைகள் — 1.நல்ல நோக்கு; 2.நல்ல தீர்மானம்; 3.நல்ல பேச்சு; 4. நல்ல செயல்கள் ; 5. நல்ல வாழ்க்கை ; 6. நல்ல முயற்சி ; 7.நல்ல எண்ணம் ; 8. நல்ல ஆழ்ந்த சிந்தனை . முதல் 7 இருந்தால் மனம் ஒரே இடத்தில் நிற்கும்.

xxxx

6.புத்தர் கண்ட நான்கு காட்சிகள் -வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார்.; இவை அவருடைய சிந்தனையைத் தூண்டிவிட்டன ; பலரிடமும் கேள்வி கேட்டு விட்டு, திருப்தி அடையாததால்,  அரச மரத்துக்கு அடியில் தியானத்தில்  அமர்ந்தார் ; மறுபிறப்பு, கர்ம வினை , பாவ புண்ணியம் என்பதை அவரும் ஒப்புக்கொண்டார் 

xxxx

7.புத்தரின் அப்பா பெயர் சுத்தோதனர்; சாக்கிய வம்சத்து சிற்றரசர்; அவருடைய மனைவி மாயாதேவி புத்தரின் அம்மா .

xxxxx


8.புத்தர் இறந்த பின்னர் அவரை தகனம் செய்தனர்; அந்த அஸ்திக்கும் (சாம்பல்) எலும்புகளுக்கும் போட்டாபோட்டி ஏற்பட்டது; ஆளாளுக்கு கிடைத்தை எடுத்துக் கொண்டுசென்றனர்; பலர் அதன் மீது ஸ்தூபி எழுப்பினர்; புத்த ஜாதகக்கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியோர் இந்து மதக் கதைகளை புத்தரின் பூர்வ ஜென்மத்தில் போதி சத்துவராக இருந்தபோது நடந்ததாக சித்தரித்தனர்; இதே தந்திரத்தைப் பின்பற்றி ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த ஜெயதேவர் என்ற கவிஞர் தான் எழுதிய கீத கோவிந்தம் பாடல்களில் புத்தரை ஒன்பதாவது அவதாரமாக சேர்த்தது அஷ்டபதி பாடல் இயற்றினார் ; ஏற்கனவே பாரத நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட  புத்த மதத்துக்கு அத்தோடு முடிவு ஏற்பட்டது ; இதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரே புத்த பிட்சுக்களின் ஒழுக்கமற்ற வாழ்வைக் கிண்டலடித்து மஹேந்திர பல்லவன்  மத்த விலாஸப் பிரஹசணம் என்ற சம்ஸ்க்ருத நாடகத்தை இயற்றினார் .

xxxx

9. பெண்களை புத்த பிட்சுணிகளாக ஏற்றால் தனது மார்க்கத்தில்  ஒழுக்கச் சிதைவு ஏற்படும் என்று அஞ்சினார்; ஆயினும் அவரது பிரதம சீடனும் உறவினனும் ஆன  ஆனந்தன் என்பவன் மன்றாடிய பின்னர் பெண்களையும் அனுமத்தித்தார்; இப்படிப்பெண்களை அனுமத்தித்தால் 500 ஆண்டுகள் மட்டுமே இந்த மதம் இருக்கும் என்றார் . அவர் அஞ்சியபடியே புத்த மதம் சுருங்கியது; ஆயினும் புத்தர், சம்ஸ்க்ருத மொழியைப் புறக்கணித்ததால் இந்தியாவில் புத்தமதம் அழிந்தது என்பது விவேகானந்தரின் கருத்து

xxxx

10. புத்தரின் தாய் மாயா தேவி பிரசவ வேதனையில் துடித்தபோது அவரது கனவில் 6 தந்தங்கள் உடைய வெள்ளை யானை தோன்றி அவருடைய வயிற்றில்  புகுந்தது. இந்தக் கனவு, பல இடங்களிலும் சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளது .

— subham —

Tags- கெளதம புத்தர், க்விஸ் , பிறப்பு, இறப்பு, எண்வகை மார்க்கம், அவதாரம், பெண்கள் , அப்பா, அம்மா, மனைவி, மகன், பெயர், Quiz 87