Greatest Tamil Prophet/ Poet Bharati slams Dravidian Baddies (Post No.12,823)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,823

Date uploaded in London – –   11 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

According to Rig Veda, the oldest book in the world, Kavi means seer, forecaster of the future and prophet. Ucanas Kavi was the topmost poet of the Rig Vedic age. Even Lord Krishna mentioned Ucanas and said he was the Ucanas among the Kavis in the Bhagavad Gita. From the word Kavi came the word Kaavya.

If the two Brahmin poets Kabilar and Paranar are the top most poets of Sangam age and if Tiru Valluvar is the top most poet of the Post Sangam age, Bharati is the top most poet of Modern Age in Tamil literature.

I have listed Bharati’s prophesies already in Tamil and came across some new prophesies in the past few days.

1.We must remember Bharati died in September 1921. But he asked us to sing and dance saying India got Independence. But it took 26 years after his death to become independent.

On Liberty
1.Come, that we may sing
For Freedom’s bliss is ours;
Come, that we may dance
For Liberty is ours!

He was thorough with the latest scientific advancements in the 1920s. He sang about the movement of atoms inside the element and prayed to God that he must also be ever active like atoms (electrons and Protons inside atom).

He was thorough with astronomy and sang about the countless universes and attributed everything to Brahma (Nakka Piraan in Tamil).

He predicted the Radio, TV, Zoom, Mobile communication well before they came in to use.

We will invent an instrument to hear in Kanchi

Hat a scholar speaks from the Benares city.–Bharati

2.Modi and Bharati

In one poem Bharati said three times that India will give the world Eternal Bliss or Liberation to all human beings. Now Narendra Modi’s World Yoga Day is accepted even by Muslim countries. If they practised Yoga in the real sense, they will become Hindus culturally. Liberation is also possible irrespective of their religious faiths.

The way all men will turn Divine

India to the world will show

Yes, India to the world will show

Indeed India to the world will show.–Bharati

3.Akhand Bharat

In one of his poems to little ones, he sang let us pray to Undivided Hindustan (Sethamillaatha Hindusthaanam in Tamil). This shows that the artificial geographical boundaries will disappear and Akhand Bharat would emerge, probably after Third World War. Students of history know that the boundaries of most countries changed completely after the two World Wars.

This is the land of the Vedas

Where great and good heroes were born;

Truly flawless is Hindustan

Adore this as God, my dear child.–Bharati

(Sethamillaatha in Tamil= not damaged= undivided= flawless)

4.Road Bridge to Sri Lanka

In another poem, he says let us level the Setu and build a bridge to Simhala Island (Sri Lanka). This is also going to happen and let us name the bridge  Bharati Rama Setu Bridge.

Bharati says

We will build a bridge to the Isle of Lanka

And elevate Sethu and make it road;

We will irrigate the central regions

With surplus water of Bengal .–Bharati

5.Aircraft Carrier and Destroyers

So far India is buying most modern war ships from foreign countries. In the past few days, we read the news items India is going to build its own war ships. Bharati  sang

We will make vehicles for the road or the air

And build ships which make the earth tremble .–Bharati

So we see another prophesy of Bharati coming true.

6.Dravidians Slammed

Anti God and Anti Indian Dravidian idiots are spreading two lies; Vatican gave them huge money to destroy Hinduism.

Hinduism and Sanaatanam are two different things; Hindu word is not in the Hindu scriptures at all and Santanam is like Dengue, Malaria and poisonous fevers and that must be eliminated, they said. Both are untrue.

Foreseeing Dravidian Drainage Mouthed fellows, Bharati sang in one of the poems Sanatanam That is Hinduism.

In that beautiful stanza, he listed all the world religions and said that all points out to the same truth. But expecting Vatican provoked/funded Dravidian men, he gave the epithet Sanaatan (Eternal) only to Hinduism in that stanza. What a forethought!!

It proved two things,

1.Hinduism and Sanaatan Dharma are one and the same.

2.Hinduism is the only religion which cannot be dated.

பூமியிலே கண்டம் ஐந்து……………….

பூமியிலே கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

 புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்து மதம்இஸ்லாம்யூதம்,

 நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்,

நல்ல கண் பூசி மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே:

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கென்றே

7.Vaikam Revolution

No more talk of caste and creed

No more talk of birth and breed;

Who first drew breath in this our land

Brahmin or other caste, with us he will stand.–Bharati

Vaikam Proclamation by Travancore Maharaja in November 1936 allowed all Hindus irrespective of their castes in to 2200 temples in Kerala. Gandhiji called the Proclamation a revolution. It happened only in 1936. The seeds of the movement were sowed only in 1921 and in 1922 Satyagraha agitation started. But the amazing thing is Bharati sang about the Harijan Liberation even before his death in 1921. Now we know he was the one who laid the foundation for Vaikam Revolution. So neither Kalappan Nair Nor Madhavan Pillai, nor Krishnaswami Iyer, nor Kesava Menon nor Mahatma Gandhi is the architect of Vaikam Revolution. It was Bharati who mentioned all the low castes in his Viduthalai, Viduthalai poem and proclaimed all are liberated and declared there is no caste distinction in India. Bharati’s words came true in Travancore’s 2200 temples in 1936.

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறையருக்கும் இங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

The more one reads Bharati’s poems, the more newer things are seen.

xxxxx

Bharati’s poems have four dimensions;1. he is a poet who sang about the emancipation of human beings, particularly women2.he is a poet who sang about the greatness of Tamil language; 3.he is a poet who sang about the Gods and divinity in great souls and last but not the least 4.he is a poet who sang about Independent India. He kindled patriotic spirit among Tamils.

5.Nature

No one has come even nearer to Bharati in the modern times. If I can add one more dimension to his poems, I would add Nature; there is no Tamil poet who can excel Bharati in appreciating Nature. He was the Wordsworth of Tamil literature.

Daffodils gave mental peace to Wordsworth; Swallows and House martins gave immense pleasure to Bharati and he learnt from them to be free, independent, ever active and go up spiritually (Vittu Viduthalyaki Nirpaai Antha Chittukuruvi Pole in Tamil)

Long Live Bharati; Long Live Tamil.

–subham—

Tags- Bharati, Prophet, Prophesies, Akhand Bharat, Vaikam, Sanatan Dharma, Dravidians, Hinduism, Nature.

உலகிலேயே பணக்கார பெருமாள் கோவில் தொடர்ச்சி – Part 30 (Post N.12,821)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,821

Date uploaded in London – –   11 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 30

கோவில் எண்–30 திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் தொடர்ச்சி

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் பற்றிய மேலும் சில சுவையான விஷயங்களை ஆராய்வோம்.

இது  108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவ வழிபாட்டிடங்களில் ஒன்று

பாகவத புராணம் உள்பட பல புராணங்களில் கோவிலைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஸ்தல வரலாற்றின்படி கலியுக ஆண்டு 950.ல் இந்தக் கோவிலை திவாகர முனிவர் என்பவர் கட்டினார் . அவருடைய பூஜைக்குரிய சாளக்ராம கல்லை ஒரு குழந்தை வாயில் போட்டு குதப்பியபோது முனிவர் கண்டிக்கவே அந்தக் குழந்தை ஓடி மறைந்தது; தன்னைக் காட்டில் வந்து காணும்படியும் சொன்னதாம். அங்கு அவர் சென்றபோது பிரம்மாண்டமான அனந்த பத்ம நாப சுவாமி உருவத்தைக் கண்டாராம். 

லட்ச தீபமும் முற ஜபமும் 

மார்த்தாண்ட வர்மா (1729) சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தை ஆண்டார் ; அவர் பெரிய ராஜ தந்திரி; போர் வீரர்; சோம்பேறிகளாக வாழ்ந்த குறுநில மன்னர்களை யுத்தத்தில் தோ    கடித்து நாடு பிடித்தார் 1750 ஆம் ஆண்டுக்குள்  நாகர்  கோவில் முதல் கொச்சி வரையுள்ள நிலப்பரப்பு அவரது ஆட்சிக்குள் வந்தது.

. தன்னுடைய ஆட்சியில், போரில் நடந்த, பாவங்களை  நீக்க அவர் தன்னுடைய செங்கோல், கிரீடம், வாள் எல்லாவற்றையும் கோவிலில் இறைவன் பாதங்களில் சமர்ப்பித்து மீண்டும் எடுத்துக் கொள்ளுவார். தான் இறைவனின் சார்பில் ஆளும் அடியார் என்பதைக் குறிக்க பத்மமனாப தாச என்று தம்மை அழைத்துக்கொண்டார். அவருக்குப்பின் வந்தோரும் இதே வழக்கத்தைக் கடைப்பிடித்தனர்

 தமிழ் நாட்டிலிருந்து நிறைய பிராமணர்களை வரவழைத்து ஆதரித்தார். இது மலையாளி நம்பூதிரிகளுக்கும் போத்திகளுக்கும் வருத்தம் அளிக்கவே ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை  எல்லோரையும் அழைத்து ரிக், யஜுர், சாம வேதத்தை எட்டு வாரங்களுக்கு பாராயணம் செய்ய வைத்தார் . ஒவ்வொரு வேதமும் எட்டு முறை பாராயணம்.  பிராமணர்களுக்கு பெரும் விருந்து அளித்தார் ; கோவிலில் லட்ச தீபம் ஏற்ற வைத்தார். வேத பிராமணர்களுக்கு விருந்தோடு விருதுகளையும் வழங்கினார். 56 நாள் ஜபம் லட்ச தீபத்  திருநாளில் நிறைவு அடையும்; அன்றைய தினம் மகர சங்கராந்தியாக இருக்கும்.இவை தவிர அரை ஆண்டுக்கு ஒரு முறை பத்ர தீபம் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் எண்ணெய் தீபங்களும் இப்போது மின்சார விளக்குகளும் எரிகின்றன. இப்போது ஊட்டுப் புராவும் சுருங்கிவிட்டது. பிரம்மாண் டமான அண்டாக் களையும் பானை களையும் மட்டும் காணலாம்.

ஏழு நிலைக் கோபுரம்

அனந்த அல்லது ஆதி சேஷன் என்னும் பாம்பின் மேல் பத்மநாப சுவாமி / பெருமாள் பள்ளிகொண்டதால் திருவனந்தபுரம் என்று பெயர் வந்தது.

ஏழு நிலைக் கோபுரம் ; தமிழ் நாட்டுப் பாணியில் இருக்கும். கோவிலின் தோற்றம் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்பது பக்தர்களின் நம்பிக்கை; கல்வெட்டுச் சான்று 1729ல் நடந்த திருப்பணிகளையே குறிப்பிடுகிறது

1200 சாளக்ராம கற்களை கடுசர்க்கரா மூலம் பிணைத்து தற்போதைய விக்கிரகத்தை உருவாக்கினார்கள்; கடு சர்க்கர என்பது சுண்ணாம்பு, கருங்கல், வெல்லப்பாகு, கடுகு கலவை ஆகும்.

பாம்பின் மீது யோக நித்திரையில் படுத்திருக்கும் பெருமாளை மூன்று  துவாரங்கள்/ வாசல்கள்  வழியில் தரிசிக்கலாம். பெருமாளுக்கு முன்னர் ஒரே கல்லிலான ஒற்றைக்கல் மண்டபம் இருக்கிறது.

பெருமாளின்  இடது கையில்  தாமரை மலரும் வலது கரம்  தொங்கும் நிலையிலும் உள்ளன . ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அவருடைய இரு பக்கங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருக்கிறார்

கோவிலைப் பற்றிய புள்ளி விவரங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்; 6000 கட்டிட ஊழியர்கள், 4000 மேஸ்திரிகள் 100 யானைகள் உதவியுடன் 7 மாதம் பணியாற்றி  கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி கற்சுவரை எழுப்பினர்; கோவில் 7 ஏக்கர் பரப்பில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி ஒவ்வொரு கோபுர வாசல் வழியே வரும் . கோவிலுக்கான த்வஜஸ்தம்ப / கொ டி மரம் 48 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து பூமியில் படாமல் யானைகள் மூலம் கொண்டுவரப்பட்டது. கொடி மரத்தை தங்கத் தகடுகள் மூலம் போர்த்தியிருக்கிறார்கள்.

கோவில் தூண்களில் அழகிய புராண சிற்பங்கள், கையில் விளக்கு ஏந்திய தீப ஸ்திரீக்கள் செதுக்கப்பட்டுள்ளன.ஓவியங்களும் உள்ளன.

கிருஷ்ணர், க்ஷேத்ரபாலர், சாஸ்தா, நரசிம்மர், வியாசர் ,சிவன், கணேசர் , ராமர், சீதா, லட்சுமணர், முதலிய பல சந்நிதிகளும் கோவிலுக்கு உள்ளன.

கோபுரத்தின் உயரம் 100 அடி. குலசேகர மண்டபத்திலுள்ள சிற்பங்கள் எல்லோருடைய கண்களையும் கவரும். அங்கு சிவன், விஷ்ணு, லட்சுமி உருவங்களை செதுக்கியுள்ளனர்.

திருவிழாக்கள்

மீனம் மாதத்தில் ஒன்றும் (மார்ச்-ஏப்ரல் )  துலாம் (செப்டம்பர் – அக்டோபர்) மாதத்தில் ஒன்றும் ஆக இரண்டு முக்கிய விழாக்கள் நடைபெறும். ஒவ்வொன்றும் பத்து நாட்களுக்கு நடக்கும்.

xxxx

பொக்கிஷம் பற்றி பத்திரிகைகளில் வெளியான செய்தி

இக்கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது  ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது. சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.

கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வௌ்ளி போன்றவற்றின் விவரங்களை மீண்டும் தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

—subham—

Tags- கோவில் எண் 30 , திருவனந்தபுரம்,  அனந்த பத்மநாப சுவாமி கோவில்  தொடர்ச்சி , லட்ச தீபம்,  முற ஜபம் 

முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயர் பெற்ற வீரன் (Post No.12,820)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,820

Date uploaded in London –  –  11 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கொங்குமண்டல சதகம் பாடல் 74

முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயர் பெற்ற வீரன்

ச.நாகராஜன்

பருத்திப்பள்ளி என்பது கொங்குமண்டலத்தில் கீழ்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்த உபநாடுகளில் ஒன்று. அது எழுகரை நாடுகளில் ஒன்று. சித்திரமேழி விண்ணகரம் எனப் பழைய பெயர் இந்த ஊருக்கு உண்டு.

பருத்திப்பள்ளி புவனேசுவர சுவாமி ஆலயத்தில் ஒரு சாசனம் இருக்கிறது.

இது ஒரு வீர வரலாற்றைச் சொல்கிறது.

வரலாறு இது தான்:

பருத்திப்பள்ளியில் செல்லர் குலத்துதித்த வலிமிகுந்த வீர வாலிபன் ஒருவன் இருந்தான். தென்கரை நாட்டில் (தாராபுரம்) சில பகைவர்கள் மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த வாலிபன் வேட்டுவ வீரர்கள் உள்ளிட்ட பல வீரர்களைச் சேர்த்து ஒரு சேனையை அமைத்தான். சேனைக்குத் தலைவனாகவும் ஆனான். சேனைத் தலைவனான அவன் இராஜ கட்டளைப்படி தாராபுரம் சென்று பகைவர்களை விரட்டினான். இந்த வலிமையைப் பார்த்து வியந்த கிருஷ்ணதேவ ராயர் அவனுக்கு ‘முதலிக் காமிண்டன்’ என்ற விருதுப் பெயரை அளித்துச் சிறப்பித்தார்.

கிருஷ்ணதேவ ராயர் கி.பி.1509 முதல் 1530 வரை விஜயநகரத்தை அரசாண்ட மன்னர். 

இந்த வரலாற்றை இருப்புலிப் பள்ளு சிறப்பித்துக் கூறுகிறது இப்படி :

வெற்றியுடனே கிருஷ்ணராயரிடத்தில் வர

   மேன்மைப்பட்டாபிஷேக முடிசூட்டி

முத்தின் சிவிகையில் வைத்து வலஞ்செய்துதான்

   முதலிக் காமிண்டனென்றும் விருதுங்கொடுத்து

நத்தூர் பருத்திப்பள்ளி நாடும் பூந்துறைநாடு

    நாலாறுநாடுதானு மேலுமையாப் பெற்றோன்

இந்த சம்பவத்தை கொங்குமண்டல சதகம் பாடல் 74இல் பதிவு செய்கிறது.

புதுமைப் படைவேட் டுவர் சூழத் தார புரத்துடனே

சதுர மிகுபடை யார்சம ராற்றிச் சயம்பெறவே

முதலிக்கா மிண்டனெனக்கிருஷ்ண ராயர் மொழிவிருதை

மதிகொள் பருத்திப் பளிச்செல்ல னுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : தாராபுரத்தில் வந்து எதிர்த்த பகைவரை, வேட்டுவப் படையைச் சேர்த்துக் கொண்டு அவர்களைத் துரத்தி வெற்றி கண்ட திறமையைக் கண்டு விஜயநகர அரசர் கிருஷ்ணராயர் முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயரை அளிக்க அதைப் பெற்ற பருத்திப்பள்ளிச் செல்லனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாகும்.

***

வைக்கத்துப் புரட்சி வீரன் பாரதி;  திராவிட சாக்கடை வாயனுக்கு பதில் (Post No.12,819)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,819

Date uploaded in London – –   10 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு மேலும் மூன்று சான்றுகளைக் கண்டு பிடித்துவிட்டேன்

தமிழ்நாட்டு சாக்கடை வாயர்களும் கூவம் நதி நீர் குடிப்போரும் இந்துமதம் ஒரு டெங்கு, மலேரியா என்று உளறி குடும்பத்தோடு படுநாசம் அடையப்போகிறார்கள் என்று பாரதிக்கு  அன்றே தெரிந்து விட்டது.

இதற்கு முன்னர் அவர் சொன்ன தீர்க்க தரிசி செய்திகள் :

1.சுதந்திரம் அடைவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்தவர் பாரதி. ஆயினும் ஆடுவோமே பள்ளுப்படுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடி சுதந்திரம் வரப்போவதை அறிவித்ததார்

2.காசிநகர்ப்புலபவன் பாடுவதை காஞ் சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்றார்; இன்று ரேடியோ டெலிவிஷன் மட்டுமின்றி மொபைல் போன் வழியாகவும் ஜூம் ZOOM  வழியாகவும் கேட்கிறோம்; பார்க்கிறோம்

3.ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் என்று பாடினார் ; கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வரும் செய்திகள் இந்தியாவே தனியாக விமானம் தாங்கிக்கப்பல் முதலியவற்றைக் கட்டப்போவதாக சொல்கின்றன

4.எல்லோரும் அமர நிலை அடையும் நிலையை இந்தியா உலகிற்களிக்கும் என்று ஒரே பாட்டில் 3 முறை சொல்லி சத்தியம்  செய்தார். இன்று நரேந்திர மோடி சொன்ன யோகா பயிற்சியை முஸ்லீம் நாடுகளும் கூட மனமுவந்து செய்கின்றன. இதில் இந்துக்கள் தீவிரம் காட்டினால் இந்துப் பண்பாடு உலகெங்கும் வேரூன்றும்.

XXXXXX

 இனி நடக்க வேண்டியவை

5.சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா என்று பாடியது இனி வரப்போகும் அகண்ட பாரதத்தைக் காட்டுகிறது; இந்துப் பண்பாடு தென் கிழக்காசிய, தென் ஆசிய நாடுகள் அனைத்திலும் 1500 வரை இருந்தது . சேதமில்லாத ஹிந்துஸ்தானம் என்பது அகண்ட பாரதம் வரப்போவதைக் காட்டுகிறது .

6.அதே போல சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் ;சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்பது இந்தியாவுடன் இலங்கையும் இணையப்போவதைக் காட்டுகிறது; குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்துக்கு சாலை- ரயில் பாதை வரப்போவதை பாரதி பாடிவிட்டார் .

XXXX

திராவிட சாக்கடை வாயனுக்கு, கூவம் நதி குடிப்போனுக்கு பாரதி சவுக்கடி !!

வாடிகன் அசிங்கங்களிடம் பணம் வாங்கும் கும்பலைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், திராவிடப் போர்வையில் விஷம் கக்கி வருவதை, நாம் அறிவோம். சனாதனம் வேறு இந்து மதம் வேறு என்று பரப்பி இந்துக்களை கிறிஸ்தவர்கள் குழப்புவதை நாம் அறிவோம். இந்த திகிடுதத்த  அயோக்கியர்கள் இப்படிச் செய்யப்போகிறார் ள் என்று அறிந்த பாரதி ஒரு பாட்டில் எல்லா மதங்களின் பெயர்களையும் சொல்லிவிட்டு, இந்துமதத்துக்கு மட்டும் சனாதனமாம் இந்துமதம் என்கிறார் . இது திராவிடர்களுக்கு கொடுத்த செமை அடி; சவுக்கடி . சனாதனம் என்றால் ஆதி அந்தமற்ற, அழிவே இல்லாத, முடிவே இல்லாத மதம் என்று பொருள்; இதிலிருந்தே மற்ற மதங்களுக்கு தோற்றமும் அழிவும் உண்டு என்பது தெளிவு. இந்துமதத்துக்கு தோற்றம் என்பதே இல்லை. ஏனைய மதங்கள்  தோன்றிய தேதிகளை என்சைக்ளோ பீடியாக்களில்  காணலாம் .

பூமியிலே கண்டம் ஐந்து……………….

பூமியிலே கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

 புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,

 நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்,

நல்ல கண் பூசி மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே:

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கென்றே

XXXXX

வைக்கத்துப் புரட்சி வீரன்  யார் ?

தமிழ்நாட்டில் தருதலை ,திராவிட  திகிடுதத்தங்கள்  ஈ வெ ராமசாமி நாயக்கரை வைக்கத்துடன் தொடர்புபத்தி பொய்யுரை பரப்பியதை நானே சென்ற மாதம்தான் அறிந்தேன்; காந்திஜியின் அந்தரங்க செயலாளர் மஹாதேவ தேசாய் எழுதிய திருவாங்கூர் இதிகாசம் என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தேன்.அதில் வைக்கத்து புரட்சி என்று சொன்னது காந்திகிஜி என்பதோடு சுமார் 15, 20 வைக்கம் வீரர்களின் பட்டியலும் இருக்கிறது;  தமிழ் நாட்டிலிருந்து ராஜாஜி பெயரும் நாகர்கோவில் டாக்டர் நாயுடு பெயரும் மட்டும் இருக்கிறது; அந்த கிளர்ச்சிக்ககான வித்து 1921ல் தான் ஊன்றப்பட்டது. 1936ல் வெற்றி அடைந்து கோவிலை எல்லா ஜாதியினருக்கும் திறந்து விட்டார்கள்; அந்தக் கிளர்ச்சியின் போது என்னென்ன ஜாதிகளுக்கு விடுதலை கேட்டார்களோ  அதை பாரதி 1921க்கு முன்னரே அப்படியே பாடிவிட்டார் . எனக்கு ஒரே வியப்பு.ஒருவேளை பாரதியின் பாட்டுதான் அவர்களை உசுப்பிவிட்டதோ என்று எண்ணி எண்ணி வியந்தேன்.  இதோ பாரதி  பாட்டு

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறையருக்கும் இங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

ஏழை யென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தி யாவில் இல்லையே  — பாரதியார்

நம்முடைய தீர்க்கதரிசி புலவர் சுப்பிரமணிய பாரதி 1921ல் இறந்துவிட்டார். ஆக காந்திஜி, வைக்கம் வீரர்களுக்கு எல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தவர் பாரதி.

திராவிடர்கள் நெகட்டிவ் சக்திகளின் NEGATIVE FORCES ஒட்டுமொத்த உருவம். மற்றவர்களை அழிப்பதையே அதிகம் பேசும் கும்பல் .

அது அழியப்போவதையும் பாரதி பாடிவிட்டார்.

தாழ்வு பிறர்க்கென்ன …………………………….

தாழ்வு பிறர்க்கென்னத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ (கெடுவான் கேடு நினைப்பான்)

XXXX

எனது 3 புதிய கண்டுபிடிப்புகள்

1.சனாதனம் புதியகண்டுபிடிப்பு; வைக்கம் இரண்டாம் கண்டுபிடிப்பு; 3. ஞா லம் நடுங்க அவரும் கப்பல்கள் மூன்றாம் கண்டுபிடிப்பு.

–SUBHAM—

TAGS- வைக்கம், விடுதலை, சநாதனமாம் இந்துமதம், கப்பல்கள்

உலகிலேயே ரகசிய,பணக்கார பெருமாள் கோவில்- Part 29 (Post No.12,818)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,818

Date uploaded in London – –   10 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 29

கோவில் எண்–30 திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில்

மஹாத்மா காந்தி மஹா கிண்டல் பேர்வழி; ஜோக் JOKE அடிப்பதில் மன்னன் ; வைக்கம் புரட்சி விழாவில் கலந்துகொள்ள திருவாங்கூர் மன்னரும் சத்தியாகிரக வீரர்களும் காந்திஜியை அழைத்தனர் ; அதில் ஒருவர் ஹரிஜன தலைவர். காந்திஜியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் ; காந்திஜி, எங்கள் ஹரிஜன பாய்ஸ்/ பையன்கள் ஹாஸ்டலுக்கு இரண்டு பசுமாடுகளை குஜராத் மாநிலத்திலிருந்து  அனுப்புங்களேன் என்றார். பொக்கைவாயில் நமட்டுச் சிரிப்பு நெளிய காந்திஜி சொன்னார்; ஓ கே , பணத்தைக் கொடு ;

ஹரிஜன தலைவர் சொன்னார்- நல்லாப் போச்சு ; பணத்துக்கு நான் எங்க போவேன்?

பொக்கை வாய் அதிரடிச் சிரிப்புடன் சொன்னது- திருவனந்தபுரம் கோவிலிலிருந்து திருடிக்கொண்டுவா.

இன்று காலை என்னை கோவிலுக்குள் அழைத்துச் சென்று, சுற்றிக் காட்டினார்கள்; எங்கு பார்த்தாலும் தங்கக் குடங்கள் !!

இது 1937-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த சம்பாஷணை ; வெளியில் இருந்த தங்கக் குடங்களைத்தான் காந்தி பார்த்தார்; அவை நித்திய பூஜையில் உள்ளவை; திறக்கப்படாத அறைகளைத் திறந்தவுடன் அம்புலிமாமா கதைகளைத் தோற்கடிக்கும்படி ரத்தினக் குவியல், பழங் காசுக் குவியல்; தங்க நகைகள் குவியல் தங்கப் பாத்திரக் குவியல் ; இந்தப் பெருமாள் பெத்த பெருமாள் ; திருப்பதி பாலாஜி கோவிலைச்  சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு பணக்காரர் ; ஆனால் பொக்கிஷத்தின் , பாதுகாவலர்களான  கேரள மன்னர் வம்சத்தினர்,  கோர்ட்டில்  வாதாடுகையில், ரகசியம் காக்க  வேண்டும் என்று  கோரிய பின்னர் ,சுப்ரீம் கோர்ட்டே வெளி உலகுக்குச் சொல்ல வேண்டாம். கணக்கு மட்டும் எழுதி வையுங்கள் என்று சொல்லிவிட்டது

உலகிலேயே அதிக வருவாய் உள்ள கோவில் திருப்பதி  பாலாஜி/ வெங்கடாசலபதி  கோவில்; உலகிலேயே அதிக பொக்கிஷமுள்ள கோவில்  திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் .

கோவிலின் பொக்கிஷ, புதையல் கதைகளை பின்னர் பார்ப்போம்; முதலில் பெருமாளை தரிசனம் செய்வோம்

கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம் ;நாட்டின் பெரிய  நகரங்களிலிருந்து விமானமும் ரயிலும் செல்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து செல்லுவோர் கன்யாகுமாரியிலிருந்து தேசீய நெடுஞ்சாலையில்  செல்லலாம் .

மூலவர்- அனந்த பத்மநாபன் அநந்த சயனம், புஜங்க சயனம், கிழக்கு நோக்கிய சந்நிதி

தாயார் – ஹரி லக்ஷ்மி

தீர்த்தம் – மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள்

விமானம் ஹேமகூட விமானம்

பிரத்தியட்சம் —  இந்திரன், சந்திரன், ஏகாதச ருத்திர்கள் முன்னிலையில் தோன்றி காட்சி அளித்தார்

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் உயரம், நீளம் மிகப் பெரியது ; ஆகையால் மூன்று வாசல்களின் வழியாக தலை, உடல், திருவடிகளை சேவிக்க வேண்டும் .

சிலையின் நீளம் 18 அடிகள்; பெருமாளின் வலது கைக்கு கீழே சாளக்ராம கல்லில் ஆன சிவலிங்கம் இருக்கும்; பெருமாளின் மத்தியப் பகுதியில் மூன்று அபிஷேக மூர்த்திகளைக் காணலாம். இவை பூதேவி ஸ்ரீ தேவிகள் ஆவர்

தென்புற பிரகாரத்தில் யோக நரசிம்மனும்,சந்நிதிக்கு முன்னால் ஹனுமானும் , சந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகிறார்கள் ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணை உருகுவதில்லை;  எவ்வளவு ஆனாலும் கெடுவதில்லை.

லட்சுமி வராகர் கோவிலும்ஸ்ரீ நிவாசர் கோவிலும் தெற்குப்பக்கத்தில் இருக்கின்றன

நம்மாழ்வார் பாடிய திருத்தலம் — மங்களாசாசனம் 3678-3688 (திவ்வியப்  பிரபந்தம்)

சுவையான கதைகள்

கேரள மன்னர்கள் தங்களை பத்மநாப தாஸ= இறைவனின் அடிமை என்று அழைத்துக் கொள்ளுவார்கள் ; திருவாங்கூர் மஹாராஜா அவரது ஆட்சி எல்லைக்கு வெளியே போகும்போது இந்தக் கோவிலுக்கு வந்து விடை பெற்றுக்கொள்ளுவார் ; தனது சாம்ராஜ்யத்துக்த் திரும்பி வந்தபின்னர் கோவிலுக்கு வந்து பெருமாளிடம் ஆஜர்= உள்ளேன் ஐயா சொல்லுவார்.; இதை காந்திஜியே திருவனந்தபுரம் சொற்பொழிவில் குறிப்பிடுகிறார் .

பிராமணர்களை வாழ்வித்த பெருமாள்

அந்தக்காலத்தில் அனாதைகள், விதவைகள், போக்கற்ற பிராமணர்கள்; சோம்பேறிப் பார்ப்பான்கள் ஆகியோர் பிழைப்புக்கு  வழிதேடி  திருவனந்தபுரத்துக்கு வந்துவிடுவார்கள்; ஏனெனில் பிராமணர்களுக்கு  கோவில் ஊட்டுப் புரா வில்  இருவேளை போஜனம் இலவசம்; விள க்கடியில் படித்து, கோவில் உணவினை உண்டு பெரிய நிலைக்கு வந்த பார்ப்பனர்களும் உண்டு; சோம்பேறிகளாகி சமுதாயத்துக்கு சுமையான பார்ப்பனர்களும் உண்டு; திருவாங்கூர் மகாராஜாக்கள் இவ்வாறு பல ஊட்டுப் புராக்களை மாநிலம் முழுதும் அமைத்தனர் .

நல்லார் ஒருவர் உளரேல்

இந்த அன்னதானங்கள், சோம்பேறிகளை உருவாக்காதா என்ற கேள்விகளை எழுப்பியோருக்கு  காஞ்சி பரமாசார்யார் பதில் சொல்லி இருக்கிறார். அப்படி அன்னதானம் சாப்பிடுவோரில் பல நல்லவர்கள் இருப்பார்கள்; அவர்கள் வாழ்த்தும் வாழ்த்து எல்லோருக்கும் க்ஷேமத்தைத் தரும் என்று; தமிழ் கவிஞர்களும் நல்லார் ஒருவர் உளரேல்  அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று பாடியது காஞ்சிப் பெரியவர் சொன்னதை உறுதி செய்கிறது .

மலையாள புலவர்கள் இந்த பிராமணர்களைக் கிண்டல் செய்து கவி பாடி இருக்கிறார்கள் குஞ்சசன் நம்பியார் என்ற கவிஞர் ஒவ்வொரு  ஜாதி பற்றி விமர்சித்தும்  கவி பாடினார் ; சாப்பாட்டு ராம பிராமணர்களை கொஞ்சசம் ஸ்ட்ராங் strongly ஆகவே வசை பாடி விட்டார்

இரண்டு கூடை பப்படத்தை அரைக்கும் வாய்

இரண்டு கூடை வாழைப்பழத்தை கலக்கும் வாய்

அவ்வாறு கலந்து, நல்ல நாட்டு சிமெண்ட் போல ஆக்கும் அது ;

இயன்றதை எல்லாம் உள்ளே தள்ளும்

இயலாதவற்றை  இலையில் விடும் ;

அவர்  விழுங்கும்  வேகம் வியப்புண்டாக்கும் ,

பார்ப்போர் விழிகளை வெளியே தள்ளும் .

இதுபோதாது என்று 56 நாட்களுக்கு பிராமணர்களுக்கு விருந்து படைக்கும் வைபவமும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்; அரசு செங்கோல் தழைக்க , செழிக்க எல்லா நம்பூதிரி பிராமணர்களும் இந்தக் கோவிலுக்கு வந்து ஜபம் செய்யும் வைபவம் அது

மேலும் பல கதைகளை தொடர்ந்து காண்போம் .

—சுபம்—

உலகிலேயே , பணக்கார பெருமாள் கோவில் ,

புகழ்பெற்ற கேரள, கோவில்கள், PART 29,  அனந்த பத்மநாப சுவாமி கோவில்

பாலஸ்தீனம் என்று ஒரு இடமே கிடையாது! (Post No.12,817)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,817

Date uploaded in London –  –  10 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாலஸ்தீனம் என்று ஒரு இடமே கிடையாது! 

ச.நாகராஜன்

இணையதளத்தில் பல அபூர்வமான செய்திகள் வருவதுண்டு.

நல்ல செய்திகளை கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ட்ரூத் பிரசுரிப்பது வழக்கம். 24-11-23 தொகுதி 91 இதழ் 30இல் வெளிவந்துள்ள தகவல் இது.

ராம் பதக் ஃபேஸ்புக்கில் 1-11-23 அன்று இதை பதிவிட்டிருக்கிறார்.

பதிவு இதோ:

1. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் காலனியாக 1948க்கு முன்னர் இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

2. பிரிட்டிஷ் காலனிக்கு முன்னர் இந்த முழு பிரதேசமும் 600 வருடங்கள் ஆடோமேன் சாம்ராஜ்யமாக (Ottoman Empire) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

3. ஆடோமேன் சாம்ராஜ்யத்திற்கு முன்னர் இந்த முழு பிரதேசமும் எகிப்தின் ஒரு பகுதியாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

4. எகிப்திய நாட்டிற்கு முன்னால் இந்த முழு பிரதேசமும் அயுபிட் வமிசத்தினரால் (Ayyubid Dynasty) ஆளப்பட்டு வந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

5. அயுபிட் வமிசத்தினருக்கு முன்னால் இது கிறிஸ்தவ ஜெருசலத்தின் பகுதியாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

6. கிறிஸ்தவ ஜெருசலத்திற்கு முன்னால்  இது பாடிமிட் அரசின் (Fatimid State) பகுதியாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

7. பாடிமிட் அரசு – இது பைஸாண்டைன் அரசாக (Byzantine State) முன்னர் இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

8. பைஸாண்டைன் அரசு – இந்த முழு பிரதேசமும் ரோமானிய அரசாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

9. ரோமானிய அரசிற்கு முன்னால் இந்த முழு பிரதேசமும் ஹாஸ்மோனியன் அரசாக (Hasmonean State) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

10. ஹாஸ்மோனியன் அரசு – இந்த முழு பிரதேசமும் செலுசிட் அரசாக (Selelucid State) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

11. செலுசிட் அரசு -இந்த முழு பிரதேசமும் மூன்றாம் அலெக்ஸாண்டரின் மாக்டோனியா அரசின் பகுதியாக (Part of Alexander the third of Macdonia State) இருந்தது.  பாலஸ்தீன நாடாக அல்ல.

12. அலெக்ஸாண்டரின் மாக்டோனியா அரசிற்கு முன்னால் இந்த பிரதேசம் அனைத்தும் பெர்சியா நாட்டின் பகுதியாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

13. பெர்சியா நாட்டிற்கு முன்னால் இந்த பிரதேசம் முழுவதும் பாபிலோன் அரசின் பகுதியாக (part of Babylon) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

14. பாபிலோன் சாம்ராஜ்யத்திற்கு முன்னால் இந்தப் பிரதேசம் முழுவதும் இஸ்ரேல் மற்றும் ஜுடே பகுதியாக (Part of Israel and Judea) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

15. இஸ்ரேல் மற்றும் ஜுடே பகுதியாக இருப்பதற்கு முன்னால் இந்த பிரதேசம் முழுவதும் இஸ்ரேல் அரசின் பகுதியாக இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

16. இஸ்ரேல் பகுதியாக இருப்பதற்கு முன்னால் இந்த பிரதேசம் 12 இஸ்ரேல் பூர்வகுடியினரின் இறையாட்சியாக (the theocracy of the 12 tribes of Israel) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

17. 12 இஸ்ரேல் பூர்வகுடியினரின் இறையாட்சிக்கு முன்னால் இந்த பிரதேசம் கானான் சுதந்திர அரசாக (The individual state of Canaan) இருந்தது. பாலஸ்தீன நாடாக அல்ல.

உண்மையில் சொல்லப் போனால் பூமியில் மற்ற எல்லா நாடுகளும் இருந்தன. பாலஸ்தீன நாடு மட்டும் இல்லை.

சட்டபூர்வமில்லாத ஒரு பூர்வகுடியினரால் பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டது.

அது அராபிய மயம். மத்திய கிழக்கைச் சேர்ந்த 99% மற்றும் ஏற்கனவே தரப்பட்ட ஆப்பிரிக்காவின் 20% பகுதியும் இணைந்தது. கீழ் பகுதியில் இஸ்ரேலின் 1%க்கு சற்று அதிகம்.

என்றாலும் அவர்களின் பசி தீரவில்லை.

பாலஸ்தீனத்திற்கான போடப்படும் சண்டை நியாயமா?

கேள்விக்கான பதிலை நீங்களே பெற்று விடலாம்!

***

ஆதாரம் நன்றி TRUTH Vol 91 Issue 30 Dated 24-11-23

QUIZ விந்திய மலை பத்து QUIZ (Post No.12,816)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,816

Date uploaded in London – –  –  9 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.விந்திய மலையுடன் எந்த முனிவரை உடனே நினைப்பீர்கள்ஏன் ?

XXXX

2.இந்தியாதான் உலகிலேயே பழமையான நாடு என்று காட்டும் குகைகள் மனித தடயங்களுடன் நடுக்காட்டில் உள்ளன. விந்திய மலையில் உள்ள அந்த குகையின் பெயர் என்ன?

xxxx

3. இந்திய தேசீய கீதத்தில் உள்ள இரண்டு மலைகள் எவை?

xxxx

4.விந்திய மலையின் தெய்வம் யார் ?

xxxx 

5.இந்த மலை எங்கே உள்ளது?

xxx x

6.விந்திய மலையில் உற்பத்தியாகும் நதிகள் எவை ?

xxxx

7.விந்திய மலைக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது?

xxxx

8.விந்திய மலையில் உள்ள புனிதத்தலங்கள் யாவை ?

XXXX

9.விந்திய மலை பற்றிய பழைய குறிப்புகள் எவை ?

xxxx

10.விந்திய மலையின் நீளம் என்ன ?

XXXX

விடைகள்

1.அகஸ்திய முனிவரை எல்லா புராணங்களும் விந்திய மலையுடன் தொடர்பு படுத்துகின்றன ; அதை  அவர் கர்வ பங்கம் செய்தார் .அதாவது வளர்ந்து கொண்டே இருந்த மலையை  மட்டம்  தட்டி, தென்னாட்டுக்கு ரோடு/ சாலை போட்டார்; 18 ஜாதி மக்களை தென்னாட்டில் குடியேற்றினார்.

XXXX

2.பிம்பேட்கா குகைகள் BHIMBETKA CAVES மத்திய பிரதேசத்தின் போபால் அருகிலுள்ளன ; அங்கு பழங்காலத்தில் , 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் ,மனிதர்கள் வாழ்ந்து ஓவியங்களை வரைந்துள்ளனர் ; நடுக்காட்டில் மனிதர்கள் வாழ்ந்தது, கரையோர நகரங்களிலும் மனிதர்கள் வாழ்ந்ததைக் காட்டுகிறது

xxxx

3.விந்தியம் , ஹிமாசலம்

xxxx

4.விந்தியாவாசினி

xxxx

5.இந்தியாவின் மத்தியப் பகுதியில் இருக்கிறது. இதற்கு இணையாக சாத்பூரா மலைத் தொடர் இருக்கிறது.

இரண்டையும் விந்திய மலை என்றே பொதுவாக அழைக்கிறார்கள் . இரண்டுக்கும் இடையே தப்தி நதி ஓடுகிறது.

Xxxx

6.கங்கை–யமுனையின் உபநதிகள் சம்பல் நதி, பேட்வா நதி, தாசன், கென், தமசா நதிகள், காலி சிந்து, பார்வதி நதிகள் ஆகியன விந்திய  மலையின் வட பகுதியில் உற்பத்தியாகின்றன. நர்மதா நதியும் ன் நதியும் தென் பக்க சரிவிலிருந்து உற்பத்தி ஆகின்றன

Xxxx

7.வைந்த் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு தடுத்தல் என்று பொருள்; இது உலகின் முதல் அகராதியான அமர கோசத்தில் இருக்கிறது; வடக்கே இருந்து தென் திசை நோக்கி வருவோரை  இது தடுத்தது; எல்லோரும் கடலோரமாகவே நடந்து தென்னகம் வந்தனர் அகஸ்தியர் பெரிய CIVIL  ENGINEER சிவில் என்ஜினீயர். திட்டமிட்டு சாலை போட்டார்; பிற்காலத்தில் இது வழியாக மெளரிய படைகள் கர்நாடகத்துக்கு வந்தன ; ஆனால் விந்திய மலையை சங்க இலக்கியங்கள் குறிப்பிடவில்லை  வியாத என்ற சம்ஸ்க்ருத சொல்லிலிருந்து வேடன் என்ற தமிழ்ச் சொல் வந்தது ; வ்யாத என்பது விந்த்ய என்று  மாறியிருக்கலாம். அசலம் என்றால் மலை; விந்த்ய +அசலம் = விந்த்யா சலம்

xxxxx

8.உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிர்ஜாபூரில் மலையின் ஒரு முனை இருக்கிறது; அங்குள்ள விந்தியாவாசினி கோவில் ஒரு முக்கிய சக்தி பீடம்; அதிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் மஹா காளி கோவிலும் ஒரு கு கைக் கோவிலும் உள்ளது ; இவை தவிர சிறிய பைரவர், சிவன் கோவில்களும்  இருக்கின்றன.

XXXXX

9.மஹாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் புராணங்களிலும்  விந்திய மலை பற்றிய குறிப்புகள் உள்ளன ; ஸ்ம்ருதி என்னும் சட்ட நூல்களில் உள்ளன. பீம்பேட்கா என்ற மனித இனத்தின் பழைய சுவடுகள் உடைய பிம்பேட்கா குகையையும் ஆதிவாசிகள் பீம் சேனனின் ஆசனம் என்றே அழைக்கின்றனர்; இங்கு 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தனர் .

xxxxx

10.இதன் நீளம் 675 மைல்கள் (1,086 கி.மீ ) ஒரு புறம் குஜராத்; மறு புறம் மத்திய பிரதேச- உத்தர பிரதேச எல்லை.

Bhimbetka caves

—SUBHAM—

TAGS- விந்தியாவாசினி கோவில், சாத்பூரா மலை, விந்திய மலை, QUIZ, பிம்பேட்கா குகைகள் BHIMBETKA CAVES, விந்திய கர்வ பங்கம், விந்திய மலை பத்து

குருவாயூருக்கு வாருங்கள்  தொடர்ச்சி – – PART 28 (Post No.12,815)

Kerala Governor Mohamed Arif Khan in Guruvayur

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,815

Date uploaded in London – –  –  9 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குருவாயூருக்கு வாருங்கள் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது ; இது இரண்டாம் பகுதி

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 28

கோவில் எண்–29 குருவாயூர் கிருஷ்ணன்

குருவாயூர் கிருஷ்ணனின் அற்புதங்களை எவரும் பட்டியலிட முடியாது. நோய்களைத் தீர்ப்பது முதல் மகப்பேறு இல்லாதோருக்கு குழந்தை பிறக்கவைப்பது, செல்வ மழை பொழிவது, தேர்வுகளில் வெற்றி பெறச் செய்வது பேரிடர்களிலிருந்தது காப்பாற்றியது என்று நீண்ட பட்டியல் அது; கேரள மக்கள் அடுக்கடுக்காக சொல்லுவார்கள்

குருவாயூரப்பனின் பெருமையைப் பேசும் பல நூல்கள் இருந்தாலும் மேப்பத்தூர் நாராயண பட்டதிரி எழுதிய நாராயணீயம் என்ற சம்ஸ்க்ருத நூல்தான் தலையாயது ; இந்தியா முழுதும் இந்த நூலை பாராயணம் செய்வோர் உளர்; ஏதேனும் பிரச்சினை வந்தால் அல்லது கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் நாராயணீயம் படித்தால் போதும் ; தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் கிடைக்கும் .நாராயண பட்டதிரிக்கு இருந்த கடுமையான வாத நோய் நாராயணீயம் இயற்றியதால் அகன்றது.

நாம் தேவாரத்தில் 10 பாடல்களை பதிகம் என்போம்; இதை சம்ஸ்க்ருதத்தில் தசகம் என்பர். இது போன்ற 100 தசகம் ஸ்லோகங்கள் உடைய இந்த நூலை குருவாயூரில் அமர்ந்து மனமுறுகிப் பாடினார். .எல்லோருக்கும் ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க இது உதவுகிறது 

திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று– பேயாழ்வார்

என்று ஆழ்வார்கள் கண்ட காட்சியினை நாராயண பட்டதிரி அக்ரே பஸ்யாமி – என் முன்னே காண்கிறேன் என்று சொல்லி வியக்கிறார்.

குருரம்மா Kururamma (1570–1640 AD) என்பவருக்கு குழந்தை இல்லை; கணவனை இழந்த அவர் கிருஷ்ணனையே குழந்தையாக எண்ணி போற்றியது பற்றி கேரளத்தில்  நிறைய கதைகள்  உண்டு. அதிகம் கல்வி அறிவில்லாத அவர் கண்ணனை தன் குழந்தையாக எண்ணி வாடா, போடா என்று அன்புடன் அழைத்தார்; கண்ணனின் விஷமங்களைக் கண்டித்தார். குருர் இல்லத்தின் மூத்த பெண்மணி என்பதால் அவர் குரூர் +அம்மா என்று அழைக்கப்பட்டடார் .

one of the priests 

கேரளத்தில் பல கோவில்களில் அற்புதம் நிகழத்திய மகான் வில்வமங்கள சுவாமிகள் அவரும் குருவாயூரப்பன் பக்தர்;  பூந்தானம் நம்பூதிரி  பாடிய ஞானப்பனா வும் குருவாயூர் கிருஷ்ணன் புகழ் பாடுகிறது.

அண்மைக்காலத்தில் குருவாயூரப்பனை வழிபட்டு குஷ்ட நோய் நீங்கிய உபன்யாச சக்கரவர்த்தியும் தனக்கென புதிய சொற்பொழிவுப் பாணியை வகுத்தவருமான அனந்த ராம தீட்சிதர் தினமும் தனது உரைகளில் குருவாயூரப்பனை நினைவுகூர்ந்தார்.

குருவாயுர் கோவிலில் 41 நாள் பஜனை செய்வது, வலம் வருவது போன்றன பலருடைய நேர்த்திக் கடன் ஆகும். சில ரூபாய்கள் மட்டுமே தேவைப்படும் மலர் முதல் 21 பூஜைகளை செய்யும் உதயாஸ்தமன பூஜா வரை பல வேண்டுதல்கள் உள்ளன.

குழந்தைக்கு முதல் உணவு ஊட்டும் சடங்கு,  இந்துக்களின் 40 சடங்குகளில் (சம்ஸ்காரம்) ஒன்று ; இதை அன்னப்ராஸ்னம் என்பர்; இவ்வாறு அன்னத்தை குழந்தைக்கு அளிக்கும் வைபவமும், கல்யாணங்களும் இங்கே நிறைய நடக்கின்றன. காலை 3 மணிக்குத் திறக்கும் கோவிலை இரவு 9 மணிக்கு மூடுவார்கள். மதியம் 1 முதல் 4 வரை மட்டும் மூடியிருக்கும் குருவாயூர் முழுதும் நாராயணநாராயண என்ற  கோஷத்தை மக்கள் உச்சரித்த வண்ணம் இருப்பார்கள்.

கோவில் அமைப்பு கேரள பாணியில் இருக்கிறது.

கோவிலில் உள்ள விக்கிரகம் விஷ்ணு விக்கிரகமே ; அதையே எல்லோரும் கண்ணனாக வழிபடுகின்றனர்.நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, துளசிமாலை/ தாமரை இருக்கின்றன.

14ம் நூற்றாண்டு முதல் உள்ள வரலாறே நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஆதி சங்கரர் காலம் முதல் கோவில் இருந்ததை செவி வழிச் செய்திகளும் சடங்குகளும் நிரூபிக்கின்றன. நாராயணன் நம்பூதிரி என்பவரின் குடும்பம் பரம்பரை தந்திரி (கோவில் தலைமை அர்ச்சகர்) ஆவார். கேரள அரசின் கட்டுப்பாட்டிலுள்ள குருவாயூர் தேவஸ்வம் போர்டு கோவிலை நிர்வகிக்கிறது

திருவிழாக்கள்

கும்ப மாதத்து பூச நட்சத்திரத்தில் 10 நாள் விழா துவங்கும்.

இது தவிர ஜன்மாஷ்டமி பெரிய ஏகாதசி நாட்களில் விழாக்கள் இருக்கும்

கோவிலில் கணபதி, அய்யப்பன்,, நாக தேவதைகளுக்கு தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன.

டில்லியில் குருவாயூர் கோவில் போலவே புதிய கோவிலைக் கட்டி அதை உத்தர குருவாயூரப்பன் கோவில் என்று அழைக்கிறார்கள் .

Xxxx

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த மலர்கள் துலாபாரத்தைக் கண்டோம்; இதோ மேலும் சில துலாபாரங்கள்

எடைக்கு எடை தங்கம்

குருவாயூர் கோவிலில் ,2006ஆம் ஆண்டில்,  பெங்களூர் கே.சி.பி மேனன் கொடுத்த 70 கிலோ தங்க துலாபாரம்தான் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெறுகிறது. பாலக்காட்டைச் சேர்ந்த அவருக்கு வயது 58. தனது வியாபாரம் கேரளம், பெங்களூரு, துபாயில் அமோகமாக நடப்பதால், தான் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை செலுத்துவதாக அவர் நிருபர்களிடம் சொன்னார். பெங்களூரிலிருந்து வந்த அவர் 70,  ஒரு கிலோ தங்கக்கட்டிகளைக் கொண்டுவந்தார்; அவரது கம்பெனியின் பெயர் ஷோபா டெவலப்பர்ஸ்.

Guruvayoor Devaswom officials told UNI P N C Menon, Chairman of Shobha Developers, Bangalore, gave 70 kg of gold for ‘thulabharam.’ ‘It is the biggest gold offering by an individual or institution in the history of the temple. The previous highest was two kg in 1970.’ Mr Menon, a native of Palakkad, running a group of institutions in Kerala, Bangalore and Dubai, told reporters the offering was made in fulfilment of a vow. ‘My business has reached such heights with the blessings of Lord Krishna and it is my humble gratitude to the Lord.’ The 58-year-old devotee, who flew in from Bangalore, brought 70 gold bars weighing one kg each for the offering.

இது 2006ம் ஆண்டில் டிசம்பரில் நடந்தது.அப்போது அந்த தங்கத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் ; இப்போது பன்மடங்கு அதிகம் (70,000 கிராம் X ரூ.6400)

xxxxxx

குருவாயூரில் துர்கா ஸ்டாலின்

August 10, 2023, 20:18 [IST] குருவாயூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு 32 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தைக் காணிக்கையாக வழங்கியுள்ளார். சந்தனம் அரைக்கும் இயந்திரத்தையும் குருவாயூரப்பனுக்கு காணிக்கை அளித்துள்ளார் துர்கா ஸ்டாலின்.

Xxxxx

குருவாயூர் கோவிலில் வாழைப்பழத்தை துலாபாரமாக வழங்கிய கேரள கவர்னர்

திருவனந்தபுரம்: மே 8, 2023 கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் குருவாயூர் கோயிலில் எடைக்கு எடை வாழைப்பழம் கொடுத்து துலாபாரம் நடத்தி தரிசனம் செய்தார். கேரள கவர்னரான ஆரிப் முகமது கான் குருவாயூர் கோயிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தார். இந்த கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் நடத்துவது முக்கிய வழிபாடாகும். கவர்னர் ஆரிப் முகமது கான் தனது எடைக்கு எடை வாழைப்பழம் துலாபாரம் கொடுத்தார். பிறகு சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினார்.

கோவிலுக்கு வெளியே நடத்தப்படும் துலாபாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவிலின் கிழக்கு நடைபந்தலில் அவருடைய எடைக்கு எடை (83 கிலோ) கதலிப்பழம் வழங்கப்பட்டது.

Xxxx

Thrissur:  october . 2023 On the auspicious occasion of Guruvayur Ekadashi, an offering was made by Nathan Menon, hailing from Thiruvananthapuram, by presenting golden crowns to Ayyappan and Guruvayurappan. The dedication of these  crowns took place on the second day of the Ekadashi lamp ceremony.

குருவாயூர் ஏகாதசி உற்சவத்தின்போது  திருவனந்தபுரம் நாதன் மேனன் சபரிமலை ஐயப்பனுக்கும் குருவாயூர் கிருஷ்ணனுக்கும் தங்க கிரீடங்களை காணிக்கையாக வழங்கினார்.

–subham—

tags – துர்கா ஸ்டாலின் , கேரள கவர்னர், 7 கிலோ தங்கம் துலாபாரம், கே சி பி மேனன்

தமிழுக்காகக் கொதிநெய்யில் கையை விட்டு சத்தியம் செய்த ஆணூர்ச் சர்க்கரை! (Post No.12,814)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,814

Date uploaded in London –  –  9 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

கொங்குமண்டல சதகம் பாடல் 52

தமிழுக்காகக் கொதிநெய்யில் கையை விட்டு சத்தியம் செய்த ஆணூர்ச் சர்க்கரை!

ச.நாகராஜன்

தமிழகத்தில் புலவர்களுக்கு அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் தனிப் பெரும் கௌரவத்தைக் கொடுத்து வந்தனர்.

புலவருக்குப் பரிசுகள் வழங்குதல், அவர் வாயிலிருந்து ஆசிச் சொற்களைப் பெறுதல், அவர் மனம் நோகாமல் நடத்தல் என்பனவற்றில் அனைவரும் கவனம் செலுத்தி வந்தனர்.

கொங்குமண்டலத்தில் தமிழ்ப் புலவனை இகழவே இல்லை என்று சத்தியம் செய்த ஒரு தலைவனின் அற்புத வரலாறு உண்டு.

இதை கொங்குமண்டல சதகம் 52ஆம் பாடலில் படம் பிடித்துக் காட்டுகிறது.

கீழ்கரை பூந்துறை நாட்டில் திருச்செங்கோடு நகரில் ஏகாலியர் (கொங்க வண்ணார்) மரபில்  வீரபத்திரன் என்னும் தமிழ்ப் புலவர் கல்வி கேள்விகளில் வல்லவராய்த் திகழ்ந்தார். மக்களிடம் பெரும் மதிப்பும் பெற்றார்.

தான் கற்ற கல்வியை அனைவருக்கும் நல்க எண்ணி அவர் ஊர் தோறும் விஜயம் செய்தார். மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.

ஒரு நாள் அவர் கொங்குமண்டலத்தில் காரையூரை அடைந்தார். அங்கு நாட்டுத் தலைவனாக விளங்கிய சர்க்கரை என்பாரை அவர் அணுகினார்.

சர்க்கரை அவரை உரிய விதத்தில் வரவேற்று அன்புடன் உபசரித்தார்.

சிறிது நேரம் அளவளாவிய பின்னர் அவருக்கு அமுது படைக்க எண்ணிய அவர் தன் வீட்டிற்குள் சென்று மனைவியிடம் அவருக்கு உணவு படைப்பதற்கு ஏற்றதைச் செய்யுமாறு கூறினார்.

அவர் மனைவியுடன் இருந்த சமயத்தில் வெளியே புலவருடன் இருந்த ஒருவர், “ஐயா! தங்களுக்கு உணவு படைக்கச் சிறிது நேரம் ஆகும் என நினைக்கிறேன்” என்று கூறினார்.

இதைக் கேட்ட புலவர் உள்ளே ஏதோ நம்மைப் பற்றி இழிவுரை நடந்திருக்கிறது என்று எண்ணினார். ஆகவே தான் வலிய வந்து இப்படி இந்த ஊழியர் சொல்கிறார் என்று நினைத்த புலவர் மதியார் வீட்டில் உணவு உண்ண வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். உடனே அந்த இடத்தை விட்டு அகன்றார்.

உள்ளேயிருந்து வந்த சர்க்கரை புலவரைக் காணாது திகைத்தார்.

அவர் சென்று விட்டார் என்பதைக் கேட்ட அவர் ஓடோடிச் சென்று அவரைக் கண்டு அவர் முன்னால் நின்றார்.

“புலவரே! என்ன நடந்தது? ஏன் வெளியே சென்று விட்டீர்கள்? எது நடந்திருந்தாலும் என்னை மன்னியுங்கள்” என்றார்.

உடனே புலவர்  மலர்ச்சியற்ற முகத்துடன், “எதிர்த்தோர்க்கு மிண்டன் வித்வான்களுக்குத் தொண்டன் என்ற விருது உங்கள் முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டு அறிந்து உங்களைச் சந்திக்க வந்தேன். உள்ளே சென்று நீங்கள் உணவு அருந்துவதாக உங்கள் ஊழியர்கள் மூலம் கேள்விப்பட்டேன். வந்தவர்களை உபசரித்து உணவு ஊட்டிப் பின் தான் புசிக்க வேண்டும் என்பது நல்ல குடிப்பிறந்தவர்களின் கடமை.

அதுமட்டுமின்றி, உண்ணுங்கள், உண்ணுங்கள் என்று உபசரிக்காதவர் வீட்டில் புசிப்பது தகாது என்பதால் திரும்பி விட்டேன். ஒரு புலவன் ஒருவரது இல்லத்திற்குச் செல்வது அவருக்கு கீர்த்தியை விளைவிப்பதற்கே ஆகும். இதற்கு முன் புலவர் புகழ்ந்து உங்களைப் பாடி இராவிடில் உங்களைத் தேடி நான் ஏன் வருகிறேன்? ஏராளமானோர் இருக்க உம்மை ஏன் நான் தேடி வருகிறேன்?” என்று கூறினார்.

இதைக் கேட்ட சர்க்கரையார் அதிர்ந்து போனார்.

“ஐயா! புலவர் திலகமே! அறிஞர்களின் வடிவம். பிறப்பு முதலியவற்றை விசாரித்தல் மரபு அல்ல. புலவர்கள் பிரசங்கங்களாலும் நூல்களாலும் உலகிற்கு நல்லதைச் செய்கிறார்கள்; பெருமை சேர்க்கிறார்கள். என்னை கௌரவிக்க வந்துள்ள உங்களை நான் இகழவில்லை. இதை இப்போதே மெய்ப்பிக்கிறேன்” என்று கூறிய சர்க்கரையார் நெய்யைக் கொதிக்க வைத்து அதில் தன் கையை விட்டுச் சத்தியம் செய்தார்.

அவர் இகழவில்லை என்பதை அறிந்து கொண்ட புலவர் திருப்தியுடன் அவருடன் அமர்ந்து உணவு உண்டார்.

பின்னர் அவர், “ஐயா மன்றாடியாரே! நீர் சத்தியம் செய்தும் என்  மனம் சமாதானம் ஆகவில்லை. உமது சத்தியம் உண்மை என்றால் என் எச்சில் வாயைக் கழுவி விடுவீரா?” என்று கேட்டார்.

உடனே மகிழ்ச்சியுடன் புலவரின் எச்சில் வாயையும் கையையும் சர்க்கரையார் கழுவி விட்டார்.

புலவர் மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.

உடனே அவர் மீது கொண்ட பெருங்காதலால் ‘காதல்’ என்னும் ஒரு பிரபந்தத்தையே இயற்றினார்; அதை அரங்கேற்றினார்.

புலவர் மகிழும் படி சர்க்கரையார் அவருக்கு பரிசில் அளித்தார்.

இந்த வரலாற்றை இரகுநாத சேதுபதி சமஸ்தான தளவாய் அண்ணாமலை பிள்ளை மீது பொன்னாங் காணி அமுதகவிராயர் கூறிய விருத்தத்தில் கூறுகிறார் இப்படி:

சீரிலகுமான்மணிப் பாய்சுமந்தான் கம்பர் சிவிகை

       பாண்டிய னேந்தினான்

     செல்வமுயர் கச்சியப்பன் உதை பொறுத்தனன்றிழ்சுட்டி 

     சோமனீந்தான்

தாரிலகு குமணனுந் தலை கொடுத்தான் சிவன்
      றானுமொரு தூது சென்றான்

        சர்க்கரையு மெச்சில் வாய் கழுவினான் காளத்தி

      தனதிருகை புற்றிலிட்டான்

பேரிலகு கம்பயனும் விரலாழி யீந்தனன் பெரியவன்

     பெண்  கொடுத்தான்

      பிணிமுகத் தான் கீரனைப் புரந்தான் பேதை முதுகிலன்

     மொருவனிட்டான்

பாருலகி லித்தமிழ்க் குத்தொண்டு செய்தபேர்

        பார்க்கிற்’  கணக்கில்லையே

       பரராசர் பணிகின்ற வண்ணாமலைக் குரிசில் பாதத்தை

       வருடினானே

இந்த அமுத கவிராயர் ஒரு துறைக்கோவையாகப் பாடிய இரகுநாத சேதுபதி கி.பி. 1647 முதல் 1662 வரை வாழ்ந்தவர்.

 எனவே முந்நூற்றி எழுபது வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

மகிழ்ந்துகா ரைப்பதியில் வாழ்சர்க் கரைதான்

புகழ்ந்து திரிபுல வோரை – இகழ்ந்து நான்

வையவில்லை யென்று சொல்லி மண்டலமெ லாந்துதிக்க

நெய்யிலே கையை விட்டா னேர்ந்து

–          செந்தமிழ்த் தொகுதி மூன்று – பக்கம் 22

–           

தூசர் குல வாணனுக்கோர் சோர்வுரைக்க வில்லையென

நேசமுட நேகாய்ந்த நெய்தனிறி கையை விட்டோன்

என இப்படி நல்லதம்பி சர்க்கரை – காதல் கூறுகிறது.

இப்படிப்பட்ட அற்புதமான வரலாற்றை கொங்குமண்டல சதகம் பதிவு செய்கிறது பாடல் 52இல் :

முகஞ்சோர்ந் தகன்றிடு மேகாலிப் பாவலன் முன்னநின்றே

யிகழ்ந்தே நிலையைய வென்று சுடுநெய் யினிற்கையைவிட்

டுகந்தே யுணுமெச்சில் வாயைக் கழுவி  யுவப்பியற்றி

மகிழ்ந்தே புகழ்பெரு சர்க்கரை யுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : தன்னை இகழ்ந்ததாகக் கேள்வியுற்று முகம் வாடித் திரும்பிச் சென்ற வீரபத்திரன் என்னும் ஏகாலியர் குலத்தில் உதித்த புலவரைப் பின் தொடர்ந்து சென்று மறித்து நின்று, ‘ஐயா உம்மை இகழவில்லை’ என்று கொதி நெய்யில் கையை விட்டுச் சத்தியம் செய்து, அப்புலவனின் எச்சில் வாயைக் கழுவி அப்புலவனை மகிழ்வித்த சர்க்கரை என்னும் உபகாரி வாழ்ந்ததும்

கொங்குமண்டலமேயாம்.

***

QUIZ கார்த்திகை பத்து QUIZ (Post No.12,813)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,813

Date uploaded in London – –  –  8 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Serial Number 84

1.சங்க இலக்கிய காலத்துக்கு முன்னதாக வந்த நூல் என்று கருதப்படும் தொல்காப்பியத்தில் கார்த்திகை விழா பற்றிய குறிப்பு இருக்கிறதா?

xxxx

2.சங்க இலக்கியத்தில் எந்த நூலில் கார்த்திகைத் திருநாள் விழாவைப் போற்றுகிறார்கள் ?

xxxx

3.தமிழ்நாட்டில் எந்த ஊரில் கார்த்திகை தீபத் திருநாள் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது?

xxxxxx

4.அன்றைய தினம் அங்கே என்ன நடக்கும்?

xxxx

5.கார்த்திகைக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு ?

xxxx

6.கார்த்திகை விழாவின் பின்னுள்ள விஞ்ஞான ரகசியம் என்ன ?

xxxx 

7.வானத்தில் கார்த்திகை நட்சத்திரம் எங்கே உளது ?

xxxx

8.வெளிநாட்டில் கார்த்திகை உண்டா?

xxxx

9.கார்த்திகை அன்று என்ன தின்பண்டங்களைச் செய்கிறார்கள் ?

Xxxx

10. கார்த்திகை நட்சத்திரத்தை தமிழ் அகராதிகள் நிகண்டுகள் என்ன பெயர்களில் அழைக்கின்றன?

XXXXX

விடைகள்

1.தொல்காப்பியத்தில்  கார்த்திகை விழா 

வேலி நோக்கிய விளக்கு நிலையும்–

தொல்.பொருள்.புறத்திணை இயல்-35

வேலி நோக்கிய விளக்கு நிலையும்– என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.

xxxx

2. அகநானூறு நற்றிணை , மலைபடுகடாம் , பரிபாடல் ஆகிய சங்க நூல்கள் இவ்விழாவினாக்க குறிப்பிடுகின்றன .

தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல் அகநானூற்றில் (141) இருக்கிறது

குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து

அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்

அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி (அகம்.141)

இதே போல அகம்.185, 11, நற்றிணை 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விழா சிறப்பிக்கப் படுகிறது.

வீரை வேண்மான் வெளியன் தித்தன்

முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்

வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்

கையற வந்த பொழுது – நற்றிணை 58

அகலிரு விசும்பின் ஆஅல் போல

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை – மலைபடுகடாம் – 10

xxxx

3.திருவண்ணாமலையில் பெரிய அளவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது .

Xxxx

4.கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி நாளில் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் .அன்று காலையில் அண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் பரணி தீபமும்  மாலையில் மலை உச்சியில் கார்த்திகை தீபமும் ஏற்றப்படும். கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இது பல நாட்களுக்கு எரியும்; சுமார் பத்து மைல் வரை தெரியும் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தரிசிக்க லட்சக் கணக்கான பத்தர்கள் வருகின்றனர்

ஹிந்துக்கள் அவரவர் வீடுகளில் 2 அல்லது 3 நாட்களுக்கு தீபம் ஏற்றுவர்; இதற்கு அகல் விளக்கும்  இலுப்பை எண்ணெயும்  பயன்படுத்தப்படும்.

வைணவர்கள் ரோகிணி நட்சத்திர நாளில் விளக்கு ஏற்றி பெருமாளுக்கு நைவேத்தியம் படைப்பார்கள்

xxxxx

5. முன்னொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது  சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகன் தமிழர் தம் தனிப்பெரும் கடவுள்!கார்த்திகை  மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்

xxxx

6.ஐப்பசி கார்த்திகை அடைமழைக் காலம். அப்போது பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் முதலியன பெருகும். அந்தக்காலத்தில் சொக்கப்பனை கொளுத்தும் போது பூச்சிகள் தானாகவே வந்து அதில் விழுந்து இறக்கும். மேலும் வீடுகளில் நடக்கும் சொக்கபனைகளில் பழைய துணிகள் இலை தழைகளை எரித்து வீட்டைச் சுத்தப்படுத்துவர்.  மனிதர்களுக்கு பைரோமேனியா PYROMANIA என்ற வியாதி உண்டு. தீவைத்தலில் ஆர்வம் என்று இதன் பொருள்; ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் குகைகளில் வாழ்ந்தபோது மிருகங்களை மிரட்டவும், உணவு சமைக்கவும் தீயை மூட்டி ஆடிப்பாடினார்கள் . அந்த ஜீன்கள் GENES  இன்னும் நம் ரத்தத்தில் உள்ளதால் சிறுவர்களும் இளைஞர்களும் எதையாவது தீ வைத்து எரிக்க ஆசைப்படுவர்; அவர்களுடைய இந்த சக்தியை முறையாக பயன்படுத்த இந்துக்கள் தீபாவளி, கார்த்திகை பண்டிகைகளை ஏற்படுத்தினார்கள். TO CHANNELISE THE PYROMANIAC URGE.

XXXX

7.வானத்தில் ஒரையன் ORION  (திருவாதிரை, மிருக சீர்ஷம்) நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகில் உற்று நோக்கினால் ஒரு நட்சத்திரக் கொத்து PLEIADES பிரகாசிக்கும். இதை பைனாக்குலரில் பார்த்தால் ஏழு நட்சத்திரங்கள் தெரியும்; முருகனும் அவரை வளர்த்த ஆறு பெண்களும் என்று நாம் சொல்லலாம். ஒரையன் நட்சத்திரக் கூட்டம் செவ்வக வடிவில் இருப்பதால் யாரும் எளிதில் கண்டுபிடிக்கலாம். நாலு மூலைகளில் நான்கு விண்மீன்கள் இருக்கும். (கார்த்திகை = பிளையடஸ் PLEIADES )

XXXXX

8. வெளிநாட்டில் இதே காலத்தில் தீபாவளி போல பட்டாசு வெடிக்கிறார்கள்; சொக்கப்பனை கொளுத்துகிறார்கள்; கிறிஸ்தவ மதம் பரவும் முன்னரே இவை இருந்தன. இன்றும் நீடிக்கின்றன; ஆயினும் ஒவ்வொரு நாட்டிலும் ஹாலோவீன் நாள் HALLOWEEN DAY, GUY FAWKES DAY  கை பாக்ஸ் டே என்றெல்லாம் புதிய கதைகளுடன் இணைத்துவிட்டனர் .லண் டனில் பட்டாசு முழக்கத்தைக் கேட்கலாம். சொக்கப்பனை கொளுத்துவது மட்டும் கிராமப்புறங்களில் மட்டும் நீடிக்கிறது . அன்றைத்தினம் பயங்கர உருவங்களை பறங்கிக் காயில் (PUMPKINS) வெட்டி அதற்குள் விளக்குகளை வைக்கிறார்கள் .

XXXX

9.அப்பம், நெல் பொரியை வெல்லப் பாகில் கலந்து செய்யப்படும் பொரி  உருண்டை மற்றும் , பாயசம் சர்க்கரைப் பொங்கல் , வடை இருக்கும். பிராமணர்  வீட்டில் கட்டாயம் அவல் / பொரி உருண்டையும் அப்பமும் இருக்கும் .

XXXX

10.தமிழ் அகராதியில் கார்த்திகை என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு நிகரான தமிழ் சொற்கள் – அறுமீன் , அழல், அங்கி, அளக்கர்,அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன் (இதில் சில சொற்கள் தமிழ் அல்ல).

—-subham—-

Tags- கார்த்திகை பத்து , க்விஸ், கேள்வி  பதில், பொரி , முருகன், சரவணப் பொய்கை,