Rare Dravidian Pictures from 1904 book – 2 (Post No.12,812)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,812

Date uploaded in London – –  –  8 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx

Following are rare pictures from the book; second batch

Winter India

Eliza Ruamah Scidmore

New York, The Century Co.

1904

If you need copyright free pictures from London, please contact me.

CHIDAMBARAM TEMPLE

PATTU DIKSHITAR

JEWELLER

MOUNT ABU, JAIN TEMPLE

CAMEL CARAVAN 

 JAIPUR AUDIENCE HALL

HOLY GANGES WATER

HINDU SAINTS

—subham—

Tags- Copyright free, pictures, Dravidians, dancers, Hindu fakirs, saints, Hindu woman, Tamil children, 100 year old book.

குருவாயூருக்கு வாருங்கள் குழந்தை  சிரிப்பதைப் பாருங்கள்- PART 27 (Post.12,811)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,811

Date uploaded in London – –  –  8 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 27

கோவில் எண்–29 குருவாயூர் கிருஷ்ணன் 

கோவில்

ஒரு முறை கேட்டாலும் காதில் ரீங்காரம் செய்யும் கண்ணதாசனின் பாடல் இது.

குருவாயூருக்கு வாருங்கள்

ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்

உட்கார்ந்திருப்பதை காணுங்கள்

கண்ணனின் மேனி கடல் நீலம் அவன்

கண்கள் இரண்டும் வான் நீலம்

கடலும் வானும் அவனே என்பதைக்

காட்டும் குருவாயூர் கோலம்

சந்தியா காலத்தில் நீராடி அவன்

சந்நிதி வருவார் ஒரு கோடி

நாராயண நாராயண ஹரி ஹரி

நாராயண நாராயண

மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு

மாலைகள் இடுவார் குறை ஓடி

உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்

ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்

பச்சைக் குழந்தையை பார்க்கும் போதே

பாவையர் தாய்மை ரீங்காரம்

நாராயண நாராயண ஹரி ஹரி

நாராயண நாராயண

மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி

அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி

நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று

நித்தம் தருவாள் ஸ்ரீதேவி

நாராயண நாராயண ஹரி ஹரி

நாராயண நாராயண

சாத்திரம் தந்த கண்ணனுக்கு

ராத்திரி பூஜை ஜகஜோதி

பாத்திரம் கண்ணன் பால் போல்

மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி

கேரளத்தில் புகழ்பெற்ற கோவில்கள் சபரிமலை சாஸ்தா, திருவனந்தபுரம் பெருமாள், குருவாயூர் கிருஷ்ணன்,திரிசூர் சிவன், வைக்கம் மஹாதேவன் .

இன்று குருவாயூர் கிருஷ்ணனை தரிசிப்போம்.

குருவாயூர் எங்கே இருக்கிறது? Where is Guruvayur?

திரிஸூர் (திருச்சூர்) மாவட்டத்தில் இருக்கிறது அங்கிருந்து 27 கிமீ. திருவனந்தபுரத்திலிருந்து 292 கி.மீ; கொச்சியிலிருந்து 80 கி.மீ ; கோழிக்கோட்டிலிருந்து 90 கி.மீ

சிறப்பு அம்சங்கள்

1. பிறந்த குழந்தையாக இருந்தபோதே உலகத்தில் அற்புதங்களை செய்து 120 வயது வரை அதிசயங்களைக் காட்டிய ஒரே கடவுள் கண்ணன். அவனைக் குழந்தை  வடிவத்திலேயே தரிசிக்க உதவும் ஸ்தலம் குருவாயூர்.

2. நாராயண பட்டதிரி என்ற மஹான் தன்னுடைய நோய் நீங்க நாராயணீயம் பாடி, குவாயூர் அப்பன் புகழை உலகம் அறிய உதவினார்.

3. இங்குள்ள கண்ணன், அஞ்சனக் கல் என்ற விசேஷ கல்லில் செதுக்கப்பட்டுள்ளார்.

4. குருவாயூர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது துலாபாரம் தான். துலா என்றால் தராசு; அதில் ஒருவர் நின்று அவர் பாரம்/ எடை எவ்வளவோ அவ்வளவுக்கு தன்னால் இயன்றதைக் கொடுப்பது துலாபாரம். .நாட்டின் பிரதமர், ஜனாதிபதி முதல் சாலையில்  செல்லும்  பாமர பக்தன் வரை தங்கக்கட்டிகள் முதல் துளசி வரை எதையும் துலாபாரம் கொடுப்பார்கள். சேரன் செங்குட்டுவன் ஒரு பிராமணனுக்கு தன எடைக்கு எடை தங்கக்கட்டி கொடுத்த செய்தி சிலப்பதிகாரத்தில்  இருக்கிறது. இந்துக்களின் துலா பரம் சுமேரியா வரை பரவியது. அங்கும் துலாபாரம் கொடுத்தனர். நாடு முழுதும் பல கோவில்களில் இது இருந்தாலும் குருவாயூர் துலாபாரத்தை மிஞ்ச எவராலும் முடியாது

5.குருவாயூர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அடுத்ததாக நினைவுக்கு வருவது யானைகள்தான் ; இங்கு நடந்த யானைப் பந்தயத்தில் முதலாவது வரும் யானைதான் பகவானைச் சுமக்கும் பாக்கியம் பெற்றதாகும். கேசவன் முதலிய யானைகள் இவ்வாறு புகழ்பெற்று , ப  க்தர்கள் சிலை யும்  வைத்துவிட்டார்கள்

6.குருவாயூர் சென்ற எவரும் அருகிலுள்ள யானைகள் முகாமுக்கு செல்லாமல் வரமாட்டார்கள்; நூற்றுக் கணக்கான வளர்ப்பு யானைகளை ஒரு சேரக் காணலாம் .

7. நிர்மால்ய தரிசனம் ; முதல் நாள் செய்த அலங்காரத்தை அதி காலை 3 மணிக்கு கோவில் சந்நிதி திறந்தவுடன்  கலைக்கத் துவங்குவார்கள் ; அந்த பழைய அலங்காரத்தில் காண்பது நிர்மால்ய தரிசனம்.

இதுவும் இங்கு ஒரு சிறப்பு .

xxxxx 

கீழே உள்ளது சுய புராணம்படிக்காமலும் அடுத்த பகுதிக்குப் போகலாம்

ஒரு எச்சரிக்கை :

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் குருவாயூர் கோவில் அருகில் லாட்ஜ் எடுத்து இரவு 2 மணிக்கே குளித்துவிட்டு கோவிலுக்குள் போய் நின்றோம். மராத்தான் போட்டி போல ஒரு 100 அல்லது 200 பேர் முதல் வரிசையில் நின்றோம் . எங்கள் தூரத்து உறவினரும் (அதே ஊர்க் காரர்) கூடவே வந்திருந்தார். சிக்னல் signal கிடைத்தவுடன் ஓடினோம். கொஞ் சம் தவறி விழுந்து இருந்தால் பின்னல் வந்தவர்கள் எங்களை மிதித்து chutney சட்னி ஆக்கி இருப்பார்கள். பின்னர் உறவினரிடம் சொன்னோம்; மிக்க நன்றி; வயதானவர்களுக்கு இதைக் காட்டாதே , அப்பா; கோவிலுக்குள் மரணம் ஏற்பட்டு நாள் முழுதும் கோவிலை மூடிவிடப் போகிறார்கள் என்று . ஆகவே ஓட்டப்பந்தயத்தில் வெல்ல முடிந்தால் மட்டும் நிர்மாலய தரிசனத்துக்குப் போங்கள் ; அந்தக் காலத்தில் இந்த அதி காலை 3 மணிக்கு எவரும் வந்திருக்கமாட்டார்கள் போலும்! இப்பொழுது எங்கும் கூட்டம் அதிகம் .

மக்களுக்குப் பேராசை பெருத்துவிட்டதுஉழைக்காமலே refugee அகதி என்று சொல்லி 10  பெட்ரூம் bed room வாங்கும் அயோக்கியர்கள் பெருத்து விட்டார்கள்;  எனக்கு ஓட்டுப்போட்டால் இதுவும் அதுவும் free free ப்ரீ என்று சொல்லும் அயோக்கியர்கள், அதை நம்பும் மஹா அயோக்கியர்கள் நிறைந்த காலம் இது.  கடவுளைக் கும்பிட்டு ,சுருக்கு வழியில், வேலை செய்யாமலே ப்ரமோஷன் வாங்க வேண்டும் என்று நினைக்கும் அ + பக்தர்கள் கோவிலுக்கு அதிகம் வருவதால் கொஞ்சம்  எச்சரிக்கையாக இருங்கள். ஆனால் எங்களைக் கூட்டிச் சென்ற உறவினர் எங்களுக்கு ஸ்பெஷல் சந்தன பிரசாதம் முதலியவற்றை வாங்கித் தந்ததையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்  1971–ம் ஆண்டில் என் பெரிய அண்ணன் கல்யாணம் குருவாயூரில் நடந்த பொழுது  கோவிலுக்குள் ஓடிப்பிடித்து விளையாடினோம்;. கூட்டம் இல்லாத உண்மை பக்தர்கள் காலம் அது.)

xxxxx

8.குருவாயூருக்கு ஏன் அந்தப் பெயர் ?

குரு பகவானும் (ஜூப்பிட்டர் jupiter/ வியாழன்/ பிருஹஸ்பதி), வாயு பகவானும் வணங்கிய தலம்  உலகில் ஏற்பட்ட முதல் சுனாமி TSUNAMI தாக்குதலை இந்துக்கள் பாகவத புராணத்தில் பதிவு செய்தனர் உலகிலேயே முதல் முதலில் சுனாமி பற்றி ரிப்போர்ட் செய்தவர்கள் இந்துக்களே; அவ்வளவு மஹா மேதாவிகள். துவாரகா (குஜராத்தில் உள்ள இடம்) மூழ்குவதை அறிந்த கண்ணன் தனது சிலையை மூழ்காமல் பாதுகாக்கும் பொறுப்பை உத்தவரிடம் கொடுத்தார். அவர் குருவையும் வாயுவையும் வேண்டிக்கொள்ள அவர்கள் அந்த சிலையை மீட்டெடுத்து குருவாயூரில் பிரதிஷ்டை செய்தனர் .

9.இதை பூலோக வைகுந்தம் என்றும் தென்னக துவாரகை என்றும் அழைப்பர்.; கேரள மக்கள் எப்போதும் முனங்கும் வேண்டுகோள் , குருவாயூரப்பாகாப்பாத்தப்பா என்பதுதான். ஏனெனில் இங்கு நடந்த அற்புதங்கள்  ஆயிரம் ஆயிரம் ! பாமர மக்களுக்கு ஏற்பட்ட அற்புதங்களின் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது .

10.காண்டவ வனத்தை அர்ஜுனனும் கண்ணனும் அழிக்கப் போவதாக அறிவித்தனர். அந்த இடத்தில் வாழ்ந்த நாகர் என பொதுமக்கள் காடு திருத்தி நாடக்குவது மன்னர் கடமைதான். இருந்தாலும் காண்டவ கவனத்தை விட்டுவிடுங்களேன் என்று மன்றாடினார்கள் காண்டவ இனத்தவரை கோண்ட் GONDS என்றும் அந்த நிலத்தை கோண்ட்+ வன GOND+ VANA/FOREST என்றும் எழுதுவார்கள்வெள்ளைக்கார முட்டாள் களும்  நம்ம ஊர் முட்டாள்களும் அர்த்தம் புரியாமலே கோண்ட்வானா லாண்ட் GONDWANA LAND என்று மேப் MAP புகளில் எழுதி வருகின்றனர் நாகர் இனத்ததுக்கும் பாண்டவ இனத்துக்கும் இடையே பகைமை வளர்ந்தது. இந்த நேரத்தில் அந்த வம்சத்தில் வந்த பரீட்சித் ஒரு நாக சந்நியாசியை அவமானப்படுத்தவே ஏழே நாட்களில் உன்னை ஒரு நாகன் கொல்லுவான் ; பிடி சாபம் என்கிறார். பரீட்சித் பிரம்மாண்ட பாதுகாப்பு அரணை ஏற்படுத்தி ஒளிந்து கொண்டார்; அரண்மனைக்குள் பழங்கள் கொண்டுவரும் கூடையில் ஒரு நாகர் ஒளிந்து வந்து பரீட்சீத்தைத் தீர்த்துக்கட்டினார் ; உடனே அவர் மகன் ஜனமேஜயன் , கிடைத்த நாகர்களை பிடித்து படுகொலை செய்யவே ஆஸ்தீகர் என்பவர் தலையிட்டு சமாதான உடன்படிக்கை செய்வித்தார் ( இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்படிக்கையை பிராமணர்கள் தினமும் நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் ).

இப்படி நாகா இன  மக்களை பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் படுகொலை செய்ததால் அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. அவனை குருவாயூருக்குப் போய் தவமிருந்தால் குஷ்ட நோய் நீங்கும் என்று தத்தாத்ரேயர் அறிவுரை வழங்கினார். அவரும் அவ்வாறே செய்து நோய் நீங்கியதால் குருவாயூரப்பன் மஹிமை எல்லோருக்கும் புரிந்தது .

தொடரும் ……………………………………..

–SUBHAM—

TAGS– கேரள கோவில்கள்,  PART 27, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் , நிர்மால்ய தரிசனம், துலாபாரம் , யானைகள் முகாம்

சுந்தரருக்கு விருந்து கொடுத்த வரலாறு (Post N0.12,810)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,810

Date uploaded in London –  –  8 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

கொங்குமண்டல சதகம் பாடல் 21

சுந்தரருக்கு விருந்து கொடுத்த வரலாறு 

நாகராஜன்

சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்வில் நிகழ்ந்த அற்புத  வரலாறை 16ஆம் பாடலில் விரிவாகப் பார்த்தோம்.

முதலை வாயில் அகப்பட்ட சிறுவனை மூன்று ஆண்டுக்குரிய வளர்ச்சியுடன் திரும்பி வரச் செய்து அக்குழந்தையின் தாயின் துயர் போக்கினார் சுந்தரர்.

இது நடந்த இடம் அவிநாசி. அங்கிருந்து கிளம்பிய சுந்தரர் அடர்ந்த காட்டினூடே சென்று வழி தெரியாது திகைத்தார்.

உலகத்தையே ஈன்ற கன்னி வேடச்சியாகவும், எல்லாம் வல்ல இறைவன் வேடனாகவும் தோன்றி வழி காட்டுவதற்காகத் துடியலூருக்குள் புகுந்தனர்.

அம்மையும் அப்பனும் திடீரென்று மறையவே சுந்தரர் அங்குள்ள ஆலயத்திற்குள் சென்று அகத்தீஸ்வரரையும் அருந்தவச் செல்வியம்மையையும் முறையாக வணங்கிப் பாடிப் பணிந்தார்.

“உணவருந்திச் செல்க” என ஆகாயத்திலிருந்து அசரீரி ஒலி ஒன்று ஒலித்தது.

கணநாயகர் பல்வகையான உணவுடன் காட்டு முருங்கையிலை, காய்கறியும் ஆக்கிப் படைத்தனர்.

தனது பரிஜனங்களோடு விருந்தை உண்ட சுந்தரர் கடவுளைப் பாடி வணங்கி விடை பெற்றுச் சென்றார்.

கொங்குமண்டலத்தில் துடியலூர் இருப்பது ஆறைநாடு.

இதை துடிசை புராணம் விரிவாக விளக்குகிறது.

சொல்லரும் கிராத வேடந் துணைவியுந் தானுங் கொண்டு

மெல்லவே நடந்து வந்து மேதினி புகழ வன்று

ஒல்லுநர் தம்மை நோக்கி யுயங்குத லொழித்தி யென்று

வல்லுரந் தன்னி னல்ல வழிதனைக் காட்டி யாங்கே

கடிய தானமுட் கான முருங்கையி

னெடிய காயட காதிய நெய்சுவைப்

பொடி விராய பொறித்த புளிக்கின

முடிவி லாத முதிர்கறி பாகரோ (துடிசைப் புராணம்)

திரு அவிநாசிப் புராணம் இது பற்றி இப்படிக் கூறுகிறது:

நெட்டிசையின் றமிழ்முனிபூ சனையுகந்த துடிசையில்வாழ் நிமலர்ப் போற்றி

அட்டில் வினைப் புனமுருங்கை வடகலிநல் லமுதுவிரு ந்தளிக்க வுண்டார்.             – (திருவவிநாசிப் புராணம்)

சுந்தரரது தேவாரத்தில் வாள்கொளி புத்தூர் பாடலில் உள்ள பாடல் இது:

திருவின் நாயகன் ஆகிய மாலுக்

     கருள்கள் செய்திடும் தேவர் பிரானை

உருவி னானைஒன் றாவறி வொண்ணா

     மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்

செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று

    செங்கண் வேடனாய் என்னொடும் வந்து

மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்

     மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

இந்த அற்புத வரலாற்றை கொங்கு மண்டல சதகம் பாடல் 21இல் பதிவு செய்கிறது இப்படி:-

வேட்டுவ வேட மெடுத்து வழித்துணை மேவியிளங்

காட்டு முருங்கை யிலைகாய்நெய் பெய்து கறிசமைத்துப்

பாட்டு  முழக்குவன் றொண்டர்க் கன்னம் படைத்துநரை

மாட்டுதிப் போன்றுடி சைப்பதி யுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் ; வழி தெரியாது மயங்கும் சுந்தரருக்கு (வன்றொண்டருக்கு)  வேட வடிவம் பூண்டு வழி காட்டுவித்து, காட்டு முருங்கையிலை காய் கறியுமாக்கி விருந்து செய்த விருந்தீசுரர் விளங்கும் துடியலூரும் கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம்.

துடியலூர் தற்போதைய கோவை மாவட்டத்தில் உள்ள தலமாகும்.

***

கொங்குமண்டல சதகம் தொடரில் விடுபட்டுப் போன பாடல் இது.

விளக்கத்துடன் இங்கு தரப்படுகிறது.

QUIZ இமயமலை பத்து QUIZ (Post No.12,809)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,809

Date uploaded in London – –  –  7 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial Number 83

1.காஞ்சன ச்ருங்கம் என்ற இமயமலை சிகரத்தை சங்கத் தமிழ் நூல்கள் எப்படி மொழிபெயர்த்தன ?

xxxxx

2.இமய மலையைப் புகழ்ந்து காளிதாசன் எழுதிய முக்கியப் பாடல்கள் எந்த நூலில் உள்ளன ?

xxxxx

3.சேரன் செங்குட்டுவன் இமய மலைக்குப் போனது ஏன் ?

xxxx

4.இமயமலைக்கு சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ள பெயர்கள் என்ன?

xxxx

5.ஹிமாலயத்தில் உருவாகும் மூன்று பெரிய நதிகளின் பெயர்கள் என்ன?

xxxxx

6.சிவ பெருமான் உறையும் கயிலாய மலை எந்த நாட்டில் உள்ளது?

xxxxx

7.இமய மலையில் உள்ள சிகரங்களில் இந்திய எல்லைக்குள் உள்ள பெரிய சிகரம் எது?

xxxxx

8.இமய மலையில் உள்ள இந்துக்களின் முக்கிய புனிதத் தலங்கள் எவை?

xxxxxx

9.இந்த மலையின் நீளம் என்ன ?

xxxx

10.இந்த மலையில் உள்ள கணவாய்களின் பெயர்கள் என்ன ?

xxxxxx

விடைகள்

1.இப்பொழுது கஞ்ஜன் ஜங்கா என்று அழைக்கப்படும் இமயமலைச் சிகரம் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலேயே முரஞ்சியூர் முடிநாகராயரால் பாடப்பட்டிருக்கிறது. காஞ்சன ஸ்ருங்கம் என்ற அருமையான சம்ஸ்கிருதச் சொல்லை இப்படிக் கஞ்சன் ஜங்கா ஆக்கிவிட்டனர். ஆனால் புறநானூற்றில் அழகாக பொற்கோடு என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இமயமலை பற்றி முடிநாகராயர் பாடியது அப்படியே காளிதாசனின் குமார சம்பவத்தில் இருக்கிறது. இதுதவிர பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனை காரிகிழார் பாடிய ஆறாவது பாடலிலும் இமயமலை வருணனை வருகிறது. இவையெல்லாவற்றையும் காளிதாசன், சங்க காலத்துக்கும் முந்தைய புலவன் என்ற எனது  ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி விட்டேன்.

XXXX

2.காளிதாசன் குமார சம்பவ  காவியத்தில் முதல் பத்து பாடல்களில்  இமயமலையை வருணிக்கிறார் ; இதை சங்கப்புலவர்கள் பல இடங்களில் மொழிபெயர்த்துப் யன்படுத்தினர் ; இதன் மூலம் காளிதாசன், சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவர் என்பது சந்தேகமறத் தெரிகிறது 

xxxx

3. கண்ணகி என்பவள் பத்தினித் தெய்வம் என்று இளங்கோ நிலை நாட்டியதால், புனித இமய மலையில் கல் எடுத்து, சிலை வடித்து, அதைப் புனித கங்கையில் கழுவி கொட்டுவரவுவதற்காக இமயம் சென்றான் செங்குட்டுவன்; அவன் ஏற்கனவே தனது தாயார் புனித ஸ்னானம் செய்வதற்கு கங்கை சென்று வந்தவன் என்பதும் குறிப்பிட்டது தக்கது.

xxxx

4.பொற்கோட்டு இமயம், வட பெருங்கல் , பேரிசை இமயம், பனி படு  நெடுவரை என்பன சங்கத் தமிழ் நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் , ஹிமாத்ரி , ஹிமாலய , ஹிமவத் , ஹிமவான், பர்வதேஸ்வர , என்பன வேதம் முதல் காளிதாசன் வரை சம்ஸ்க்ருதத்தில் உள்ளன

ஹிமம் என்றால் பனி; அது உறையும் இடம் ஹிம+ ஆலயம்

xxxx

5.இமய மலையில் மானஸ சரோவர் என்னும் மாபெரும் புனித ஏரியுள்ள வட்டாரத்தில் சிந்து பிரம்மபுத்ரா , கங்கை ஆகிய மூன்று பெரிய நதிகள் உற்பத்தியாகின்றன

xxxx

6.மவுண்ட் கைலாஷ் எனப்படும் கயிலாய மலை திபெத் நாட்டில் உள்ளது; தற்பொழுது திபெத் நாட்டினை சீனா ஆக்கிரமித்துள்ளது .

xxxxx

7.பொற்கோட்டு இமயம் என்னும் காஞ்சன ஸ்ருங்கம் , இந்திய எல்லைக்குள் உள்ள மிக வயர்ந்த இமய சிகரம் ஆகும் Kangchenjunga 8586 metres; எவரெஸ்ட் என்னும் உலகிலேயே உயர்ந்த சிகரம் திபெத்- நேபாள எல்லையில் உள்ளது ; இந்தியாவில் இல்லை.

xxxx

8.இமயமலையில் இந்துக்கள் வணங்கும் சார் தாம் என்னும் நான்கு புனிதத் தலங்கள் — கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத்

XXXXX

9.இமய மலையின் நீளம் சுமார் 1550 மைல் ;1,550 miles (2,500 km)

xxxxx

இந்திய எல்லைக்குள் வாரும் முக்கிய கணவாய்கள் – காரகோரம், பீர்பஞ்சால், பனிஹல் , பர்சைல் , பென்சி கணவாய்கள்

Karakoram Pass. Pir Panjal Pass. Banihal Pass. Burzail Pass. Pensi La.

xxxxx

Tags – இமயமலை பத்து, quiz, quiz No.83

Rare Dravidian Pictures from 1904 book (Post No.12,808)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,808

Date uploaded in London – –  –  7 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Rare Dravidian Pictures from 1904 book (Post No.12,808)

Following are rare pictures from the book

Winter India

Eliza Ruamah Scidmore

New York, The Century Co.

1904

If you need copyright free pictures from London, please contact me.

WOMEN WITH JEWELLERY AND DRESS

VILLAGE STREET

TAMIL CHILDREN 

Snake Charmers

Madurai Temple, East tower

Hindu saint/fakir in Haridwar

Hindu Girl

Hindu Devotees carring Ganga Jal; Ganges water

Ganesh Ratha in Mahabalipura

Dravidian cultivators’ 

Dancing Girls

—subham—

Tags- Copyright free, pictures, Dravidians, dancers, Hindu fakirs, saints, Hindu woman, Tamil children, 100 year old book., Winter India Book

ஆதி சங்கரர் அவதரித்த காலடி – PART 26 (Post No.12,807)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,807

Date uploaded in London – –  –  7 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 26

கோவில் எண்–28 காலடி க்ஷேத்ரா , ஆதி சங்கரர் அவதரித்த புனித ஸ்தலம்

ஆதி சங்கரர் அவதரித்த காலடி – 26

இந்திய தத்துவ ஞானிகளில் முன்னனியில் நிற்பவர் ஆதி  சங்கரர். உலகம் வியக்கும் அற்புதங்களைச்  செய்தவர். அவர் பிறந்த இடம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கிறது. காலடி என்பது ஊரின் பெயர் .கொச்சி நகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் இருக்கிறது.

அவர் அவதரித்த ஊர் பூர்ணா நதிக்கரையில் இருக்கிறது.; அவரது காலம் கி.பி 732 என்று சிலரும், காஞ்சி மஹா சுவாமிகள் போன்றோர் சங்கரர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் என்றும் வாதிடுவர். ஆதி சங்கரர் போலவே “மீணடும் ஒரு புதிய சங்கரர் = அபி நவ சங்கர”  என்ற பெயரில் மீண்டும் ஒருவர் தோன்றி சங்கரர் போலவே செயற்கரிய செயல்களை செய்ததால் இந்தக் குழப்பம் .

ஆதி சங்கரர் என்ன அத்புதங்களைச் செய்தார் ?

1. இந்தியாமுழுதும் — கன்யா குமாரி முதல் காஷ்மீரில் ஸ்ரீ நகர் வரை சென்று கோவில்களையும் மடங்களையும் ஸ்தாபித்தார். வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தினான் என்று பேசும் அரைவேக்காடுகளுக்கு அவர் இந்தியாவின் நான்கு மூலைகளில் ஸ்தாபித்த 4 மடங்கள் தக்க பதில் பகரும் .

2. முக்கிய உபநிஷதங்களுக்கு, விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு , பகவத் கீதைக்கு பிரம்ம சூத்தரத்துக்கு உரை எழுதி உலக சாதனை ஏற்படுத்தினார். உரைச் சக்கரவர்த்தி என்று சொல்லலாம். அவருக்கு அடுத்தபடியாக உரை எழுதிய ஒரே ஆள், மதுரை பாரத்வாஜ கோத்ர பிராமணன் நச்சினாக்ர்க் கினியர் ; அந்தப் பார்ப்பான் உரை எழுதாவிடில் தமிழ் மொழியே அழிந்து போயிருக்கும்; ஒரு பயலுக்கும் புறநானூற்றுக்கும் அக நானூற்றுக்கும் அர்த்தம் தெரியாமல் கருணாநிதி, நெடுஞ்செழியன் விஷ (ம) உரை எழுதி இருப்பார்கள்

3. ஏராளமான ஸ்லோகங்களை எளிய சம்ஸ்க்ருத மொழியில் எழுதி இன்றுவரை அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன ; இதில் ஆதி சங்கரர் எழுதியது எவை? அவரைப்போலவே 100க்கு 100 அச்சுபோல போல வந்த அபிநவ சங்கரர் எழுதியது எவை? என்ற சர்ச்சையில் இறங்க எந்த மடத்து சங்கராச்சார்யாரும் தயாராக இல்லை. மொழியியல் அறிஞர்கள் முடிவு சொல்ல வேண்டிய விஷயம் அது  ( ஆதி சங்கரர் காலம் பற்றி நான் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை இதே பிளாக்கில் உள்ளது.)

4.ஆதி சங்கரர் போல வாதம் செய்தவரும் இல்லை; வாதத்தில் வென்றவரும் இல்லை; இந்தக்கால அயோக்கியர் நடத்தும் டெலிவிஷன் விவாதம் போல அல்லாமல், நியாயமான விவாதம்; அதில் தோற்றவர் மனம் உவந்து குருவின் கட்டளைக்குப் பணிந்தனர்; இதன் மூலம் மாபெரும் அத்வைத தத்துவத்தை ஆதி சங்கரர் உலகெங்கும் பரப்பினார்; அதை ஆங்கிலத்தில் பரப்பியவர் சுவாமி விவேகானந்தர்.

5. சாலைகள் பாலங்கள், கூகுள், இன்டெர்னட், விமானங்கள் , வாட்ஸப் , மொபைல்  போன்களுடன் ,25 பேர் துப்பாக்கிகளுடன் பின் தொடரும் போலி பிபிசி அட்டன்பரோக்களைப் புகழும் அரை வேக்காடுகளுக்கு சங்கரர் அத்புதங்கள் புரியாது . இவை எதுவுமே இல்லாத காலத்தில் அவர் நாட்டை வல ம் வந்து மடங்களை நிறுவினார்.

6. இவை தவிர அவர் ஒரு ஏழைக்கு இறங்கி கனகதாரா ஸ்தோத்திரம் பாடியவுடன் தங்க நெல்லிக்காய் மழை பெய்தது போல ஏராளமான அற்புதங்கள் !

இவ்வளவு சேவைகளைச் செய்த சங்கரரை நினைத்தாலே புண்ணியம்; அந்த தலத்தை , அவரது மடத்தை , பிறந்த இடத்தை மிதித்தால் எவ்வளவு புண்ணியம்!!

(நான் காலடி தலத்தை காரில் அடையும் போது நள்ளிரவு; இருந்த போதிலும் மடத்துக்கு வெளியே காரில் இருந்தவாறே கும்பிடு போட்டுவிட்டு அதிகாலை பிளைட்டில் Flight  கொச்சியில் ஏறி லண்டன் வந்தேன்; அப்போது நான் இந்தியாவில் இருந்தது 24 மணி நேரமே; அதற்குள் ஒரு கல்யாணம், ராமர் கோவில், பரதன் கோயில், சிவன் கோவில் எல்லாவற்றையும் முடித்தேன்; மறக்க முடியாத 24 மணி நேர இந்திய விஜயம்).

7. நாஸ்தீக நேருஜி கூடப் புகழ்ந்த  ஒரு தீர்க்கதரிசி சங்கரர்; 90க்கும் மேற்பட்ட துர் மதங்களை அழித்துத் துடைத்து ஆறு சமயங்களை ஸ்தாபித்தார்.

சங்கரர் – முதலை  கதை

எல்லோருக்கும் தெரிந்த கதை; ஆதலால் மிகச் சுருக்கமாக — திருச்சூரைச் சேர்ந்த ஆர்யாம்பா- சிவகுருவுக்கு நீண்ட காலமாக குழந்தை பிறக்கவில்லை; த்ரிசூர் வடக்கு நாத சிவனை வேண்டவே சங்கரர் அவதரித்தார். அம்மாவுடன் பூர்ணா நதியில் குளிக்கச் சென்றார். முதலை , சங்கரன் காலைப்  பிடித்தது; அம்மா! இந்தப் பிறவி எனக்கு இத்தோடு முடிந்தது; என்னை சந்நியாசி ஆக அனுமதித்ததால் அது என்னை உயிர் தப்பவிடும் என்றார் ; அம்மாவின் மனம்  உலகம் முழுதும் ஒன்று போல் இருக்கும்; நீ பிழைத்தால் போதும் மகனேஎங்கிருந்தாலும் நீ வாழ்க என்றாள் . முதலை மறைந்தது. 16 வயதுக்குள் சாஸ்திரம் என்னும் சமுத்திரத்தின் கரை கண்டார்; 32 வயது வரை வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார். அவருடைய குரு, நர்மதை நதிக்கரையில் வசித்த கோவிந்த பகவத்பாதர்; அவர் வாதத்தில் வென்ற புகழ்மிகு அறிஞர் மண்டன மிஸ்ரர்; சங்கருக்கு 4 முக்கிய சிஷ்யர்கள்  — ஹஸ்தாமலகர் சுரேஷ்வரர் , பத்மபாத ஆச்சார்யா, தோடகாச்சார்யா.

காலடியில் சங்கரர் கோவில் தவிர, கீர்த்தி ஸ்தம்பம் (வெற்றித் தூண்) ஒன்றும் உள்ளது. நாடு முழுதும் பல இடங்களில் சங்கரர் சிலைகளும் உள்ளன. நாட்டின் வடகோடியில் இமயமலையில் அவர் ஸ்தாபித்த சாரதாம்பாள கோவிலும் காஷ்மீரின் தலைநகரில் அவர் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்து ஸ்ரீ நகர் என்று பெயரிட்டதும்  இவர் புகழை இமயத்தின் உச்சிக்கு ஏற்றிவிட்டது

ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !!

—SUBHAM—

TAGS- கேரள மாநில,  புகழ்பெற்ற 108 கோவில்கள்,

 PART 26, கோவில் எண் 28 , காலடி க்ஷேத்ரா , ஆதி சங்கரர் , புனித ஸ்தலம்,

நடாஷா  டெம்கினா! அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! – 2 (Post No.12,806)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,806

Date uploaded in London –  –  7 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! – 2 

நடாஷா  டெம்கினா

 ச.நாகராஜன்

நடாஷா நிகோலயிவ்னா டெம்கினா (Natala Nilolayevna Demkina) என்ற பெண்மணி 1987ஆம் ஆண்டு ரஷியாவில் சரன்ஸ்க் என்ற நகரில் பிறந்தவர். ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்த இவர் அலெக்ஸாண்டர் புஷ்கின் எழுதியவற்றை ஒரு வயதிலேயே படிக்க ஆரம்பித்தார். மூன்று வயதில் நன்றாகப் படிக்க வந்து விட்டது.

பத்தாம் வயதில் இவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதிலிருந்து மனித உடலின் உள்ளே உள்ள ஒவ்வொரு பாகத்தையும் தெளிவாகத் தன்னால் பார்க்க முடிகிறது என்றார் அவர்.

அவரது 17ஆம் வயதில், 2004ஆம் ஆண்டு, டிஸ்கவரி சேனல் அவரைப் பற்றிய ஒரு டாகுமெண்டரி படத்தைத் தயாரித்தது.

அதில் அவர் தன்னைப் பற்றி விளக்கமாகக் கூறினார் :

“எனக்கு இரண்டு விதமாகப் பார்க்க முடிகிறது. முதல் பார்வை மற்ற எல்லோரையும் போலச் சாதாரணமாக அனைத்தையும் பார்க்கும் பார்வை. அடுத்த பார்வை மருத்துவ பார்வை.  ஒரு உடலை மருத்துவ ரீதியில் பார்க்க முடியக்கூடிய அனாடமிகல் பார்வை. ஒருவரின் உடலில் உள்ள இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் என்னால் பார்க்க முடிகிறது. அவற்றின் இயக்கத்தையும் என்னால் பார்க்க முடிகிறது”.

ஆனால் அவரால் தனது உடலைப் பார்க்க முடியவில்லை. ஒருவர் தன் முதுகிற்குப் பின்னால் மறைத்திருக்கும் எந்தப் பொருளையும் அவரால் பார்க்க முடிவதில்லை. இரவிலும் அவருக்கு இந்தப் பார்வை போய் விடுகிறது.

முதலில் விளையாட்டாக தன் குடும்ப உறுப்பினர்களிடம் இந்த பார்வையைச் சொல்லப் போக, நாளடைவில் ஏராளமான நோயாளிகள் அவரிடம் வர ஆரம்பித்தனர். அவர் நோய் பற்றிய அறிகுறிகளை சரியாகக் கண்டறியவே பலரது உயிர் காப்பாற்றப்பட்டது.

இக்னார் மோனிசெவ் (Ignor Monichev) என்ற ஒரு பத்திரிகையாளர் அவரிடம் வந்தார். தனது எந்தக் கை உடைந்த கை என்று அவர் கேட்டார்.  90 விநாடிகளில் அவரது இடது கையைச் சுட்டிக் காட்டிய டெம்கினா அதுவே உடைந்த கை என்றார்.

வியாதியால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்மணியைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஒரு வியாதியும் இல்லை என்றனர். ஆனால் டெம்கினா அவருக்கு இடது பக்க நுரையீரலில் மேல் பகுதியில் கான்ஸர் செல்கள் உள்ளதைக் கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறினார்.

இன்னொரு நோயாளியை ஒரு வருடமாக ஒரு மருத்துவமனையில் வைத்து நுரையீரல் காச நோய்க்கான சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆனால் ஒருவிதமான முன்னேற்றமும் இல்லை. டெம்கினா அவரை ஒரு பார்வை பார்த்தார். அவருக்கு காசநோய் இல்லை என்றும் வேறொரு நோய் இருப்பதாகவும் அதன் பெயர் தனக்குத் தெரியவில்லை என்றும் தான் பார்ப்பதை வரைந்து காட்டுவதாகவும் கூறினார். படமும் வரையப்பட்டது. அந்தப் படத்தைப் பார்த்த டாக்டர்கள் அந்த நோயை சர்காய்டோஸிஸ் (Sarcoidosis) என்று கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையைத் தர ஆரம்பித்தனர். அவரும் நோயிலிருந்து மீண்டார்.

ஆரம்பத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 20 நோயாளிகள் வீதம் பார்த்து வந்த டெம்கினா அவர்களிடம் நன்கொடை மட்டும் கேட்டு வந்தார். பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து அதை ஒரு மருத்துவ பள்ளிக்கு நிதியாக அளித்து வந்தார்.

ரஷிய பத்திரிகையான பிராவ்தா மற்றும் இஸ்வெஸ்தியா அவரைப் பற்றிய செய்திகள் வெளியிட அவர் உலக அளவில் பிரபலமானார். இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான  ‘தி சன்’ அவரை இங்கிலாந்திற்கு அழைத்தது. பிரபல ரிபோர்ட்டர் பெண்மணியான  பிரினாய் வார்டன் (Brinoy Warden) ஒரு கார் விபத்தில் அப்போது சிக்கி வீல் சேரில் அமர்ந்திருந்தார். அவர் பிரினாயைப் பார்த்தவுடன் எங்கெல்லாம் அவர் காயப்பட்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறினார். மெடல் பின்கள் உடலில் செருகப்பட்டிருந்ததைக் கூட அவர் கூறி விட்டார்.

டிஸ்கவரி சேனல் நியூயார்க்கில் அவரை ஒரு சோதனைக்கு உட்படுத்தியது. இதில் ஏழு சோதனைகளில் நான்கில் அவர் தேறினார்.

2005இல் ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகம் அவர் மீது சோதனை நடத்த அவரை அழைத்தது. ஏழு நோயாளிகளின் வியாதிகளைப் பற்றிய சோதனை இது. ஏழு பேரின் நோய்களையும் அப்படியே துல்லியமாக டெம்கினா கூறி விட்டார்.

மாஸ்கோ பல்கலக்கழகத்தில் மருத்துவப் பிரிவில் சேரத் துடித்தார் டெம்கினா. அவரைப் பற்றிய அதிகச் செய்திகள் கிடைக்கவில்லை.

அவரது இணையதளம் இப்போது முடங்கிக் கிடப்பதால் அவர் என்ன செய்கிறார் என்பதை உலகம் அறிய முடியவில்லை.

அதிசயமான அதீத உளவியல் ஆற்றலைக் கொண்டவர் நடாஷா டெம்கினா என்பதில் ஐயமில்லை.

**

பெண்களும் கோவில்களும்: காந்திஜி பாராட்டு! (Post No. 12,805)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,805

Date uploaded in London – –  –  6 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மஹாத்மா காந்தி வைக்கம் போராட்டம் வெற்றி விழாவினைக் கொண்டாட 1937ம் ஆண்டு கேரளத்துக்கு வந்து 24 கோவில்களுக்குச் சென்றார்; வைக்கம் புரட்சி வீரர்களான திருவாங்க்கூர் மஹாராஜா, மஹாராணி , கேளப்பன் நாயர், மாதவன் பிள்ளை, கிருஷ்ண சுவாமி ஐயர் , மகா மேதையான சர் சி பி ராமசுவாமி அய்யர் ஆகியோரை கூட்டம் தோறும் பாரட்டினார் . தன் வாழ் நாளில் இவ்வளவு கோவில் களுக்கு ஒரு போதும் சென்றதில்லை என்றும் கேரளத்திலுள்ள அற்புதமான கோவில்களைப் பார்த்த பின்னர் தனக்கு கோவில் பற்றிய ஒரு புதிய பரிமாணம் தெரிய வந்தது என்றும் பேட்டிகளில் சொன்னார்.

xxxx

கோட்டயம் மகளிர் கூட்டம் 19-1-1937

ஹிந்தி மொழியில் காந்திஜி பேசினார்

” இந்த கேரள யாத்திரையில் முதல் தடவையாக பெண்கள் கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பினை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இங்கே குழுமியுள்ள உங்களுக்கு நான் கூடுதல் நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும். முதல் தடவையாக ஒரு சகோதரி ஹிந்தி மொழியில் வரவேற்புரை வழங்கியதை செவிமடுத்தேன் ; உங்கள் வரவேற்புக்கும் இந்தி மொழி வரவேற்பு உரைக்கும் நன்றி .

வைக்கம் பிரகடனம் பற்றி சில வார்த்தைகள் சொல்கிறேன்.பின்னர் ராஜகுமாரி கவுர் விரிவாகப் பேசுவார்.

இந்து மதத்தின் கறுப்புப் புள்ளி (சாபக்கேடு) தீண்டாமை என்றும், அது இந்து மதத்துக்கு பேராபத்தை விளைவிக்கும் என்றும் கூட்டம் தோறும்விளக்கிவந்தேன். அந்த சாபக்கேட்டினை விலக்க , மகாராஜாவின் பிரகடனம் தக்க தருணத்தில் வந்துள்ளது.

(எல்லா ஜாதி இந்துக்களும் திருவாங்க்கூர் சமஸ்தானத்தில் உள்ள 2200 கோவில்களிலும் நுழையலாம் என்ற பிரகடனத்தை 1936 நவம்பரில் மஹாராஜா வெளியிட்டார்)

பெண்கள்தான் மதத்தின் காவலர்கள் ; பெண்கள் தான் சமுதாயத்தின் தூய்மையின் காவலர்கள் என்பதையும் நான் அடிக்கடி சுட்டிக்காட்டடி வந்தேன். ஆகையால் இதுவும் (பிரகடனத்தை செயல்படுத்தல்) பெண்களின் பணியே. மதத்தை தூய்மையாக்குதல் என்பது இதயத்தை தூய்மை ஆக்கும் பணி . பிரகடனத்தின் உண்மைப்பொருளை பெண்கள் உணர்ந்தால் , ஆண்களைவிட பிரகடனத்தை திறம்பட செயல்படுத்த முடியும் “.

xxxxx

ஈசாவாஸ்யம் இதம் சர்வம்

காந்திஜிக்கு மிகவும் பிடித்த வாசகம் ஈஸா வாஸ்ய உபநிஷத்தில் உள்ள முதல் மந்திரம் ஆகும். கேரள பயணத்தின் கடைசி ஐந்து நாட்களில் ஒவ்வொரு கூட்டத்திலும் அந்த மந்திரத்தை விளக்கி எல்லோருக்கும் இதைப் பரப்புங்கள் என்றார்

” கடந்த நாலைந்து நாட்களாக நான் ஒரு மந்திரத்தை கூட்டங்களில் சொல்லிவருகிறேன் அதன் பொருள் என்ன ?

இந்தப் பிரபஞ்சம் முழுவதும், அணு அணு தோறும் இறைவன் இருக்கிறான் அப்படியானால் உங்கள் இதயத்தில் மட்டும் இன்றி எல்லோரிடத்தும் உளான். அவ்வளவு அருகில் இருக்கும் இறைவனுக்கே  எல்லாவற்றையும் அர்ப்பணியுங்கள்; நீங்கள் அவற்றை துறப்பதோடு பிறர் பொருளை என்றும் நயவதீர்கள். இதை இந்துக்கள் உணர்ந்தால் வேற்றுமைக்கு இடமே இராது

Xxxx

13-1-1937 திருவனந்தபுரம் சொற்பொழிவு

அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்றேன். அர்ச்சகர் ஒவ்வொரு தெய்வம் பற்றியும்  இந்தியில் சொன்னார்.;அவர் இது ஒவ்வொன்றும் தெய்வம் என்று சொல்லவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத, வருணிக்க இயலாத கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள பாலங்கள்தான் இந்தக் கோவில்கள் என்பதை நான் உணர்ந்தேன். நாமோ ஆழம் தெரியாத பரந்து விரிந்த கடற்பரப்பில் உள்ள ஒரு நீர்த்திவளைத்தான்; நாம் எல்லோரும் தத்துவ ஞானிகள் அல்ல. பாமரனுக்கும் பாமரன் நாம். ஆகையால் காண முடியாத கடவுளை அறிய தொட்டுப்பார்க்க ஏதும் தேவைப்படுகிறது; காணுவதற்கும் மண்டியிட்டு நமஸ்காரம் செய்யவும் ஒரு பொருள் கண்ணுக்கு முன்னால் தேவைப்படுகிறது; அது புஸ்தகமாக இருக்கலாம், கல் கட்டிடமாக இருக்கலாம்; அல்லது அதற்குள் உள்ள சிலைகளாக இருக்கலாம்.சிலருக்கு புஸ்தகங்கள் திருப்தி தரலாம்; இன்னும் சிலருக்கு கல் கட்டிடங்கள்  திருப்தி அளிக்கலாம். இன்னும் பலருக்கு அங்கே காணக்கூடிய சக்தியைக் கண்டால்தான் திருப்தி  ஆனால் உங்களை மூட நம் பிக்கைகளுடன் கோவிலுக்குள் செல்லுங்கள் என்று சொல்லவில்லை. நம்பிக்கையுடன்  கோவிலுக்குள் செல்லுங்கள் ; அப்படிச் சென்றால் தூய்மை அடைவீர்கள் இறைவன் மீது மேலும் மேலும் நம் பிக்கை ஏற்படும்.

Xxxx

வைக்கம் 18-1-1937

“கோவிலுக்கு போனால் மட்டும் போதாது; பலரும் நம்பிக்கையினால் மட்டுமின்றி கோவிலுக்ச் செல்வதை ஒரு வழக்கமாக / சம்பிரதாயமாகக் கொண்டுள்ளனர் ஏன் கோவிலுக்குப் போக வேண்டும் என்று அவர்கள் சிந்த்திப்பதில்லை. இந்தியா முழுதும் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் கோவிலுக்குப் போகிறார்கள்; அவர்கள் அங்கே  உறையும் இறைவனிடம் ஏதேனும் வரம் கேட்க போகிறார்கள். இப்பொழுது மஹாராஜா பிரகடனத்தை வெளியிட்ட பின்னர் நீங்கள் கோவிலுக்குப் போகையில் நான் கூடுதலாக ஒன்றை எதிர்பார்க்கிறேன் ; இவ்வளவு காலமும் ஒரு பிரிவினருக்கு கோவிலில் நுழைய உரிமை இல்லை ; ஏனெனில் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்களிடையே இருந்தது. இப்பொழுது அவர்களும் நமக்கு சமமானவர்கள் என்ற எண்ணத்துடன் நீங்கள் வர வேண்டும். கோவிலுக்குள் அவர்களை அ னுமதித்ததோடு சம பாவனை யும் இருக்க வேண்டும்

–subham—

Tags– கோவில் ஏன், வைக்கம், பெண்கள், ஈசாவாஸ்யம், காந்தி,

மூன்று ராமர் கோவில்கள் தொடர்ச்சி ……………. PART 25 (Post No.12,804)

Copper plated roof, Tiruvangad Ramaswami Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,804

Date uploaded in London – –  –  6 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 25

கோவில் எண்–27 திரு வண் காடு TIRUVANGAD RAMASWAMI TEMPLE

கேரளத்தில் 3 ராமர் கோவில்கள் தொடர்ச்சி……………

கேரளத்தில் உள்ள மூன்று ராமர் கோவில்களில் திருப்ரியார் / திரு ப்பரையார் என்பதை முன்னர் கண்டோம். நேற்று திரு வண் காடு பற்றி கேட்டீர்கள். இதோ மேலும் சில சுவையான விஷயங்கள் .

தலைச்சேரி/  திருவண்காடு பெருமாள் கோவில்

பெருமாளின் விக்கிரகம் அழகான தோற்றத்துடன் இருக்கிறது ; கருவறைக்கு வெளியே இடது புறம் ஹனுமான், வலது புறம் சுப்பிரமணியர் , கணபதி சந்நிதிகள்; முக மண்டபம், நமஸ்கார மண்டபங்களும் இருக்கின்றன. அங்கு போர்க்களி பகவதி சிலை இருக்கிறது; கதகளி ஆட்டத்தின் நிபுணரான கோட்டயம் ராஜா வித்வான் தம்புரான் ,அவளை வாகீஸ்வரி என்று வணங்கியதால் அவள் புகழ் மேலும் பரவியது .

கூண்டுக்குள் பகவதி, வேகாத அரிசி நைவேத்தியம் !!

போர்க்களி பகவதி பற்றி சுவையான கதை யுமுண்டு ; இப்போது அவள் சிலை ஒரு மரக் கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது ; ஒரு சமயம் கோவிலில் முரசு அடிக்கும் மாரருக்கும் அர்ச்சகருக்கும் இடையே சுவையான வாக்குவாதம் எழுந்தது . மாரர் சொன்னார் – நான் என்  ஜண்டை வாத்தியத்தை பாணி யின் படி வாசித்தால் பகவதியே இங்கு நேரில் வந்துவிடுவாள்.

உடனே அர்ச்சக்கர் சொன்னார் – அப்படி வந்தால் உடனே நைவேத்தியம் படைக்கிறேன் .

முறைப்படி பாணி வாசித்தவுடன் பகவதி நேரில் வந்தாள் ; அர்ச்சகருக்கு நைவேத்தியம் செய்ய நேரமில்லை; களைந்த அரிசியை அப்படியே நைவேத்தியம் செய்தார்; தேவியோ அங்கும் இங்கும் அலையத் தொடங்கினாள். உடனே மந்திர தந்திரங்கள் மூலம் அவளது ஆட்டத்தை ஒடுக்கி கூண்டுக்குள் வைத்தனர். இன்றும் தண்ணீரில் களைந்த வேகாத அரிசியே அவளுக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் உப்பிலியப்பன்/ ஒப்பிலா அப்பன் பிரசாதம் போல இது ஒரு கதை!!!

கலைக்கூடம்

திரு  வண் காடு கோவில்  ஒரு கலைக் கூடம் என்றால் மிகையாகாது; அற்புதமான மரச் சிற்பங்களில் ராமாயணக் காட்சிகளைக் காணலாம். புராண சிற்பங்களும் , இராமாயண ஓவியங்களும் இருக்கின்றன. கர்ப்பக்கிரக சுவர்களும் கூரையும்  தாமிர/ செப்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது . அதன் உச்சியில் மூன்று தங்க ஸ்தூபிகள் .

கோட்டையா கோவிலா ?

இந்தக் கோவில், வரலாற்றில் பங்கு வகித்த, கோவில்; ஏனெனில் இங்குதான்- அதாவது கோவிலுக்குள்தான் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் முக்கியக் கூட்டங்களை நடத்தி , மன்னர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். அதற்கு முன்னர் திப்பு சுல்தானின் படைகள் தாக்கி கோவிலின் சில பகுதிகளை அழித்தன .

திப்பு சுல்தானின் அட்டூழியம்

கிழக்குப் பகுதியிலிருந்து கோவிலைப் பார்த்தால் கோட்டை போலவே தோன்றும் .திப்பு சுல்தானின் துலுக்கப்படைகள் கோவிலின் 7 நிலைக் கோபுரத்தையும் கோவில் மதில் சுவர்களையும் இடித்துத் தள் ளின. இன்றும் அவற்றின் வடுக்களை, தடயங்களைக் காணலாம்.

திப்பு சுல்தான் கோவிலுக்கு அருகிலுள்ள குன்று பகுதியில் நின்று கொண்டு பீரங்கிக் குண்டுகளை கிழக்கு கோபுரத்தின் மீது வீசினான்; அதில் ஒரு குண்டு திரும்பி வந்து திப்புவின் பீரங்கியின் மீது விழுந்து அதைச் செயலற்றதாக ஆக்கியது. திப்பு, சகுனம் சரியில்லை என்று கருதி  பின்வாங்கினான். அவன் படைகள் தங்கிய இடம் இன்றும் தூய தமிழ்ச் சொற்களால் பெரும் போர்க்களம்/ பெருங் களம்  என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இறைவனின் பலி வேட்டை உற்சவம் இங்குதான் நடைபெறுகிறது .

திப்பு சுல்தானை வென்ற பிரிட்டிஷாரில் சிலர், கோவிலின் பக்தர்கள் ஆயினர் .

Two Shiva Temples in Rama temple

தாமஸ் ஹார்வி பாபர் THOMAS HARVEY BABER, 1815

தாமஸ் ஹார்வி பாபர் THOMAS HARVEY BABER , பெருமாளின் பக்தர் ஆனதோடு கோவிலுக்கு வந்து வணங்குவதை வழக்கம் ஆக்கிக்கொண்டார். இது ஏன் என்றால் அவர் ஒரு அதிசயத்தைக் கண்டார். முதலில் கோவிலை அவமதித்து, குதிரை மீதேறி, கோவில் வளாகத்திலும் பவனி வந்தார்; எல்லோரும் இப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்லிப்பார்த்தனர். அவரோ கேட்பதாக இல்லை. ஒரு முறை இப்படி கோவில் வளாகத்துக்குள் குதிரை சவாரி வந்தபோது, அது முன்னேயும் போகாமல் பின்னேயும் நகராமல் தெனாலி ராமன் குதிரை போல முரண்டு பிடித்தது. எல்லோரும் இதன் காரணத்தை விளக்கியவுடன் அவர் இறங்கி ராமபிரானுக்கு சல்யூட்  அடித்தார் பின்னர் எல்லாம் சரியானது. அப்போது முதல் பெருமாளை சேவிக்கத்  துவங்கிய அவர், கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர்களையும் கட்டிக்கொடுத்தார். அவர் இப்படி சுவர் எழுப்பியதை இன்றும் அங்கு பொறிக்கப்பட்ட கல்வெட்டு பறை சாற்றிக்கொண்டு இருக்கிறது.

The wall around this Pagoda was constructed under the supervision and patronage of T H Baber Esq in 1815

xxxx

கோவில் உற்சவம்

வருடாந்திர உற்சவம்  மேடம்/மேஷம் மாதத்தில் விஷு அன்று துவங்கி 7 நாட் களுக்கு நடைபெறும் .

இந்தக் கோவிலில் ஒரு குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக சாக்கியர் கூத்து நடத்தி வருகின்றது .

தளி கோவிலைப் போலவே அறிஞர்களுக்கு பட்ட தானம் வழங்கப்படுகிறது; கோவில் மூலவர் பிரதிஷ்டை நடந்த மகர மாத திருவோண நட்சத்திரத்தன்று இந்தப் பட்டங்களை வழங்குவார்கள் .

இங்குள்ள மற்றும் ஒரு சிறப்பு ராமருக்கு களபம் சாத்துதல்  ஆகும். அதாவது சந்தனத்தை ராமபிரானுக்கு சார்த்துவார்கள் ; ஹனுமனுக்கு அவல் பிரசாதம் .

இவ்வாறு கலைகள் , பூஜைகள் ஆகிய அனைத்திலும் எதாவது ஒரு புதிய அம்சம் இருப்பதை இந்தக் கோவிலில் காணலாம்.

—subham—

Tags- மூன்று ராமர் கோவில்கள்,  , PART 25, தலைச்சேரி,  திருவண்காடு,  பெருமாள் கோவில், TIRUVANGAD RAMASWAMI TEMPLE

வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்! (Post No.12,803)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,803

Date uploaded in London –  –  6 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு வரி சுபாஷிதங்கள்

வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்!

ச.நாகராஜன்

1. சிஷ்யஸ்யோபகர்த்தா சத்பதஸ்ய ச தர்ஷக: |

ஒரு குரு சிஷயனுக்கு உதவுகிறார்; தகுந்த வழியைக் காண்பிக்கிறார்.

2. சித்தே வாசி க்ரியாயாச்ச சாதூநாமேகசித்ததா |

மனம், வாக்கு, செயல் ஆகியவற்றை ஒரு சாது ஒரே மாதிரியாகக் கொண்டிருப்பார்.

3. சின்னே மூலே நைவ பத்ரம் ந ஷாகா |

வேரை அறுத்து விட்டால் இலையும் இல்லை, கிளையும் இல்லை.

4. ஜடரம் கோ ந விபர்த்தீ கேவலம்!

யாருக்குத் தான் வயிறு இல்லை?

5. ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி |

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே (பாரதியார்)

6. ஜாமாதா தசமோ க்ரஹ: |

மருமகன் பத்தாவது கிரகம் தான்!

7. ஜிதக்ரோதேன சர்வம் ஹி ஜகதேதத்திஜீயதே |

யார் ஒருவன் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் உலகையே ஜெயித்து விடுவான்.

8. ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம் |

வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்.

9. ததா சதுர்பி: புருஷ: பரீக்ஷயதே ச் ருதேன, ஷீலேன, குலேன, கர்மணா |

ஒரு மனிதன் நான்கு விதங்களால் பரிக்ஷிக்கப்படுகிறான். அறிவு, ஒழுக்க நடத்தை, குலம், செயல் ஆகிய நான்கே அவை.

10. தப: சீமா முக்தி: |

தவத்தின் முடிவு முக்தியே.

11. தஸ்கரஸ்ய குதோ தர்ம: |

திருடனுக்கு ஏது தர்மம்?

12. தே புத்ரா யே பிதுர்பக்தா: |

தந்தையிடம் பக்தி செய்பவர்கள் (மரியாதையோடு நடப்பவர்கள்) மட்டுமே புத்திரர்கள்.

13. துராசாரோ ஹி புருஷோ லோகே பவதி நிந்தித: |

உலகில் துராசாரமான நடத்தைகளைக் கொண்டவன் நிந்திக்கப்படுவான்.

14. துர்லபம் பாரதே ஜன்ம மானுஷ்யம் தத்ர துர்லபம் |

பாரதத்தில் ஜன்மம் எடுப்பது அரிது; அதிலும் மானுடனாக ஜன்மம் எடுப்பது இன்னும் அரிது.

15.துஷ்டஜனம் தூரத: ப்ரண்மேத் |

துஷ்டர்களுக்கு தூரத்திலிருந்து வணக்கம் சொல்ல வேண்டும்.

16. தைவமேவ ஹி சாஹாய்யம் குருதே சத்வஷாலினாம் |

சத்வசாலிகளுக்கு விதியே துணை செய்கிறது.

17. தைவ துர்பலதாம் கதே த்ருணமபி ப்ராயேண வஞ்சாயதே |

விதி எதிர்த்து நிற்கும் போது புல் கூட இடியாகத் தோன்றும். (அல்லது புல் கூட வைரம் போலக் கடினமாகத் தோன்றும்)

18. தைவி விசித்ரா கதி: |

விதியின் வழிகள் விசித்திரமானவை.

19. த்ரவ்யேண சர்வே வஷா: |

செல்வத்தால் அனைத்தும் வசமாகும்.

20. தனமூலமிதம் ஜகத் |

இந்த உலகமே செல்வத்தை அடிப்படையாகக் கொண்டது.

21. தீர: சமயம் ப்ரதிக்ஷேத் |

தைரியசாலிகள் தகுந்த சமயத்தை எதிர்நோக்கி இருத்தல் வேண்டும்.

22. தைர்ய சர்வார்த்தசாதகம் |

தைரியமே அனைத்தும் அடைவதற்கான வழி.

23. ந ச க்ரோதசமோ ரிபு: |

கோபத்திற்குச் சமமான எதிரியே இல்லை.

24. ந ஞானேன வினா மோக்ஷம் |

ஞானமின்றி முக்தி அடைய முடியாது.

25. ந புத்ராத்பரமோ லாப: |

புத்திரனை விட அதிகமான செல்வம் ஒன்று இல்லை.

***