‘பை’ – விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதை!(Post No.12,885)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,885

Date uploaded in London –  –  –   5  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பை – விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதை!

ச.நாகராஜன் 

விஸ்லாவா சிம்போர்ஸ்கா (Wisława Szymborska) என்ற பெண்மணி போலந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞர். (தோற்றம் 2-7-1923 மறைவு 1-2-2012)

தத்துவம், அறநெறி, ஒழுக்கம் பற்றிய இவரது கவிதைகள் பிரபலமானவை. இவர் 1996ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்காக நோபல் பரிசைப் பெற்றார்.

அவரது பை (PI) என்ற இந்தக் கவிதை உலக மக்களைக் கவர்ந்த ஒன்று:

The admirable number pi:


three point one four one.


All the following digits are also initial,


five nine two because it never ends.


It can’t be comprehended six five three five at a glance,


eight nine by calculation,


seven nine or imagination,


not even three two three eight by wit, that is, by comparison


four six to anything else


two six four three in the world.


The longest snake on earth calls it quits at about forty feet.


Likewise, snakes of myth and legend, though they may hold out a bit longer.


The pageant of digits comprising the number pi


doesn’t stop at the page’s edge.


It goes on across the table, through the air,


over a wall, a leaf, a bird’s nest, clouds, straight into the sky,


through all the bottomless, bloated heavens.


Oh how brief – a mouse tail, a pigtail – is the tail of a comet!


How feeble the star’s ray, bent by bumping up against space!


While here we have two three fifteen three hundred nineteen


my phone number your shirt size the year


nineteen hundred and seventy-three the sixth floor


the number of inhabitants sixty-five cents


hip measurement two fingers a charade, a code,


in which we find hail to thee, blithe spirit, bird thou never wert


alongside ladies and gentlemen, no cause for alarm,


as well as heaven and earth shall pass away,


but not the number pi, oh no, nothing doing,


it keeps right on with its rather remarkable five,


its uncommonly fine eight,


its far from final seven,


nudging, always nudging a sluggish eternity


to continue.

பை என்பது கணிதத்தில் சிக்கலான ஒரு நிலை எண். ஒரு வட்டத்தில் சுற்றளவிற்கும் அதன் குறுக்களவிற்கும் இடையே உள்ள தொடர்பை அது குறிக்கிறது

2πr என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உதவும் சூத்திரம். R என்பது ஆரம்.

 Π என்பது 3.142.

இந்தக் கவிதையில் அது எல்லையற்ற தன்மையையும் நமக்குத் தெரியாத ஒன்றையும் பற்றி உருவகமாகக் குறிப்பிட கவிஞரால் பயன்படுத்தப்படுகிறது.

மனித அறிவின் எல்லையை இந்தக் கவிதை மூலம் அளக்கிறார் கவிஞர். பிரபஞ்சத்தின் மர்மத்தையும் கூடவே விளக்குகிறார்.

இந்தக் கவிதை கணிதத்தின் அழகையும் நுட்பத்தையும் அதில் நிறைந்திருக்கும் சிக்கலான தத்துவத்தையும் குறிக்கிறது. இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டியது நிறைய இருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

பை என்ற கணித நிலை எண்ணை எடுத்துக் கொண்டு அதன் மூலம் பிரபஞ்ச மர்மத்தை உணர்த்த முற்படுகிறார் கவிஞர்.

பை என்பதில் உள்ள மர்மங்கள் ஏராளம். உலகெங்கும் மார்ச் 14 பை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மார்ச் – 3; 14 – 14 அதாவது 3.14 என்பதைக் குறிக்கிறது.

¾ என்பது 0.75. அவ்வளவு தான்.

1/3 என்பது 0.333333. அவ்வளவு தான்.

ஆனால் பை-யோ மாறிக் கொண்டே வரும் எண்களைக் கொண்டது.

பை 3.142 என்று ஆரம்பித்தாலும் அது எல்லையற்ற தன்மையில் நீண்டு சென்று கொண்டே இருக்கும்.

பை- யின் முதல் நூறு எண்களை இதோ பாருங்கள்:

3.1415926535897932384626433832795028841971693993751058209749445923078164062862089986280348253421170679

எண்கள் மாறிக் கொண்டே இருக்கிறது இல்லையா. Πயில் இதுவரை 100 டிரில்லியன் எண்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் நவீன கணினி உத்தியைக் கொண்டு. (ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பின் 12 பூஜ்யங்களைக் கொண்ட எண். அதாவது ஓராயிரம் பில்லியன். ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி. அதாவது ஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் நூறு கோடி.

பை- ஐ வைத்து ஏராளமான ஜோக்குகள் உண்டு. சிக்கலான கணிதங்கள் உண்டு.

ஆனால் அதை வைத்து பிரபஞ்ச மர்மத்தைச் சுட்டிக் காட்டும் கவிதை

விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதை தான்!

***

Leave a comment

Leave a comment