
Date uploaded in London – – 11 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் 10-1-2024 ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதன் சுருக்கம் பின்வருமாறு
வெந்தயத்தில் (Fenugreek seeds) நிறைய புரதச் சத்தும் (ப்ரோட்டீன்), வைட்டமின் பி-3 சத்தும் B3 (nicotinic acid) இருப்பதால் தலை முடி உதிர்வதைத் தவிர்க்க அவை உதவுகின்றன என்று மும்பை பாட்டியா மருத்துவ மனை டாக்டர் செளரப் ஷா ( Dr Saurabh Shah) கூறுகிறார். அவர் தோல் நோய் சிகிச்சை நிபுணர். மேலும் அவர் அழகுக்கலை , முடி மாற்று சிகிச்சையிலும் (dermatologist, cosmetologist, dermatosurgeon and hair transplant surgeon) வல்லவர்.
பெண்களின், குறிப்பாக இளம் பெண்களின், பெரிய கவலை, முடி உதிர்ந்து கொண்டே இருக்கிறதே , இப்படித் தலை மயிர் கொட்டினால், கல்யாணம் ஆவதற்குள் டோப்பா (wig) முடி வைக்க நேரிடுமோ என்பதுதான் .
(முதலில் இப்படி எண்ணுவதே முடியை உதிர வைக்கும். ஆட்டோ சஜ்ஜஷன் Auto Suggestion) என்னும் முறைப்படி ஒவ்வொரு முறை தலையைத் தொடும்போதும் எனக்கு நல்ல முடி வளரவேண்டும், வளரும் என்று சொல்ல வேண்டும்; எண்ண வேண்டும் )
அது ஒரு புறம் இருக்க புதிய கூந்தல் வளர் தைலத்தைக் காண்போம் .
தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே நல்ல வளமான தலை முடியை வளரச் செய்யலாம். கருவேப்பிலை , கடுகு எண்ணெய், வெந்தயம் (மேதி ) ஆகியவற்றைக் கொண்டு நல்ல தைலத்தைத் தயாரிக்கலாம். சத்துணவு நிபுணர் லீமா மஹாஜன் ( nutritionist Leema Mahajan) இதை விளக்குகிறார்.
மேலே சொன்ன பொருட்களுடன் ரோஸ்மேரி செடி இலையையும் கலந்தால், ஆறு மாத காலத்தில் நல்ல தலை முடி வருவதைக் காணலாம் என்று சத்துணவு நிபுணர் லீமா மஹாஜன் சொல்கிறார்.
அவர் சொல்லும் கூந்தல் வளர் தைலத்தில்
கடுகு எண்ணெய் , கருவேப்பிலை, ரோஸ்மேரி செடி இலைகள் வெந்தயம், வாதாம் பருப்பு எண்ணெய் , விளக்கெண்ணெய் ஆகியன இருக்கும் (Mustard oil, Curry leaves, Rosemary leaves, Fenugreek seeds, Almond oil, Castor oil)

எவ்வாறு செய்வது?
ஒரு இரும்புச் சட்டி அல்லது வாணலியில் கடுகு எண்ணெயை சூடாக்கவும் ; அதில் வெந்தயம், கருவேப்பிலை , ரோஸ்மேரி இலைகளைப் போடவும். அவற்றின் நிறம் சிறிது மாறியவுடன் அடுப்பை அணைத்துவிடவும். அது ஆறிய பின்னர் ஒரு பாட்டிலில் விட்டு, வாதாம் பருப்பு எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை சம அளவில் சேர்க்கவும் .
Method
*In a pan, heat mustard oil.
*Add rosemary, curry leaves, and fenugreek seeds. Once the colour changes, switch off the flame.
*Let it cool down.
*Transfer to a glass bottle.
*Add almond, and castor oil in equal parts.
இந்தப் பொருட்களில் உள்ள ஒவ்வொரு சத்தத்தையும் டாக்டர் ஷா விளக்கியிருக்கிறார். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அவை முடிகள் தோன்றும் மயிர்க்கால் வரை சென்று ஆரோக்கியமான, அடர்ந்த, கருமையான, பள பளப்பான முடி வளர உதவுகின்றன. அதற்கான வைட்டமின்களும், ஒமேகா , கொழுப்பு அமிலங்களும் அவைகளில் உள்ளன.
–SUBHAM—
Tags- புதிய , கூந்தல், வளர் தைலம், தலைமுடி வளர ,