
Date uploaded in London – – 11 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

இந்தியாவை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண்மணி நூர் ஜஹான் (Nur Jahan) . மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிரின் மனைவி. முக அழகு, வசீகரம், ஆளும் திறமை, புதுமை விரும்பி, கண்டுபிடிப்பாளர் , அதிர்ஷ்டம் ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாக உருவம் எடுத்து வந்தவர்; புதுவகை உணவு, . பலவகை பாஷன் ஆடைகள், ரோஜா மலர் அத்தர் ஆகியவற்றைக் கண்டுபிடித்த பெருமை உடையவள். ஏராளமான ஆங்கில புத்தகங்களின் கதாநாயகி. இவ்வளவுக்கும் இந்தியர் அல்ல. அவள் ஒரு பாரசீக ரோஜா.
ரோஜா மலரில் இருந்து அத்தர் எடுப்பதை நூர்ஜஹான் கண்டுபிடித்தார். துப்பாக்கி ஏந்தி ஒரே நேரத்தில் 4 புலிகளைச் சுட்டார் . இப்படி அவளுடைய வீர தீர செயல்கள் பற்றி பெரிய பட்டியலே இருக்கிறது . ஒரு முறை அரண்மனையிலிருந்து இவர் விட்ட அம்பு, ஆற்றங்கரை வண்ணானைக் கொல்லவே , வண்ணாத்தி ஓவென்று கதறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தாள் . நூர்ஜஹான், சாதாரணக் குற்றவாளி போல ராஜ சபைக்கு இழுத்து வரப்பட்டாள் . பின்னர் என்ன? மஹாராணி ஆயிற்றே , மன்னிப்பு, நஷ்ட ஈடு என்று கதை முடிந்தது. முஸ்லீம் மன்னர்கள், மனு நீதிச் சோழர்கள் அல்லவே.
அத்தர் என்ற அராபிய சொல்லுக்கு மணக்கும் எண்ணெய் என்றே பொருள். ரோஜா மற்றும் அது போல வாசனை உடைய பெலார்கோனியம் Pelargonium ‘Attar of Roses’ தாவர பூக்களிலிருந்து இது செய்யப்படுகிறது ஆயினும் ரோஜாவும், பெலார்கோனியமும் வெவ்வேறு குடும்ப தாவரங்கள். ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் அத்தர் என்பர்.
வெளிர் மஞ்சள் நிறம் உடைய அத்தர் ரோஸா டமசேன , ரோஸா கல்லிகா முதலிய ரோஸெசி குடும்ப மலர்களிலிருந்து எடுக்கப்படுகிறது Rosa damascena and R. gallica and other species of the rose family Rosaceae
இதை பெர்ப்யூம் perfume என்னும் வாசனைப் பூச்சுகளிலும், நறுமணம் தேவைப்படும் வெவ்வேறு பொருள்களிலும் பயன்படுத்துகிறார்கள் .
xxxxx

ரோஜா குல்கந்து உடலுக்கு நல்லது
ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சம நிலையை உண்டாக்கும் . இது செரிமானம் நடக்க மிகவும் உதவுகிறது . ரோஜா குல்கந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் வெகுவாக குறைகிறது., இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
குல்கந்து என்பது ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகுந்த ஆயுர்வேத மருந்து .
இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்து . அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கும், ஆண்மை பெருகவும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
ரோஜா குல்கந்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
சிவந்த நிறத்தில் உள்ள ரோஜா இதழ்களை நன்கு கழுவி சுத்தம் செய்து ஈரம் போன பிறகு நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.
சேகரித்த இதழின் எடையை போல மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக்கொண்டு, இரண்டையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கவும்.
இடித்ததும் ஜாம் போன்ற தன்மையைப் பெரும். இந்த ஜாம் அளவிற்கு 3 மடங்கு சுத்தமான தேனைச் சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரிவிதை, கசகசா சேர்க்கலாம்.
கடைகளிலும் ரோஜா குல்கந்தை விலைக்கு வாங்கலாம்.
xxxx

பன்னீர் உற்பத்தி Rose water
ரோஸ் வாட்டர் என்னும் பன்னீரை உணவுப் பண்டங்களிலும் சேர்த்து வாசனை சேர்க்கிறார்கள் .
ரோஸ் ஆயில் செய்யும் பொழுது பன்னீரும் கிடைத்துவிடும். ரோஜா மலர் இதழ்களைக் கொதிக்கவைத்தது அதன் ஆவியைப் பிடித்து குளிரவைத்து பன்னீர் எடுக்கிறார்கள் . பன்னீருக்குப் பெயர்பெற்ற நாடு ஈரான். உலகின் பெரும்பகுதி பன்னீர் அங்குதான் உற்பத்தி ஆகிறது . இதற்காக ரோஜா மலர் அறுவடையின்போது பெரிய விழா நடக்கிறது.

–SUBHAM—
TAGS- பன்னீர், ரோஸ் ஆயில், குல்கந்து, நூர் ஜஹான், gulkand, rose water, Iran