
Date uploaded in London – – 13 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

சம்பந்திப் பூ வெள்ளை நிறத்தில் இருக்கும்; இதன் தாவரவியல் பெயர் பாலியான்தஸ் ட்யூபெரோசா Polianthes tuberosa. இதன் வேர் கிழங்கு போல பருத்து இருப்பதால் டியூபர் Tuber என்ற சொல் ஒட்டிக்கொண்டது .நல்ல நறுமணம் வீசும்; பூஜைக்கும், நறுமணப் பூச்சுகளுக்கும் பயன்படும் இந்தப் பூ, தென் அமெரிக்காவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள மெக்சிகோவில் தோன்றி உலகெங்கிலும் பயணம் செய்துவிட்டது; வங்க தேசத்தில் இதை ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்துகின்றனர் ; ஸ்பெயின் நாட்டு கிறிஸ்தவ பாதிரிகள், அஸ்டெக் the Aztecs , மாயா Mayan நாகரீகங்களை சூறையாடி அழிப்பதற்கு முன்னர், 500 ஆண்டுகளுக்கு முன் வரை, இதை மாயா , அஸ்டெக் நாகரீக மக்கள் பயன்படுத்தி வந்தனர். சம்பங்கி மலரின் மருத்துவ குணங்கள் பற்றி மருத்துவ பத்திரிகைகளில் ஆதாரபூர்வ செய்திகள் கிடைக்கின்றன .
இந்த மலரை நாட்டு வைத்தியத்தில் கட்டிகளைக் குணப்படுத்தகவும் , அழகு ஊட்டவும், மலம் இளக்கியாகவும் , தேகத்தில் சூட்டைத் தணிக்கவும், பாலியல் நோய்களைக் குணப்படுத்தவும் , முடி வளர் தைலமாகவும், வாந்தி உண்டாகக்கூடிய பொருளாகவும், உடலில் நீரைக் குறைக்கவும் பயன்படுத்துகின்றனர்.(used for treating tumour, cosmetic, laxative, cooling, placebo, sexual disorder, hair colour, emetic, diuretic, and gonorrhoea.)
வட இந்தியாவில் இதை ராஜ கந்தம் (மணங்களின் அரசன் Rajanigandha or Nishigandha), என்பர்; இரவில் பூப்பதால் நிசி கந்தம் என்றும் அழைப்பார்கள் . கந்தம் என்றால் நறுமணம்; நாம் சுகந்தா, சுகந்தி என்ற பெயர்களை பெண்களுக்கு சூட்டுகிறோம் அல்லவா?
அனைத்து வகை மண்ணிலும் சம்பங்கி வளரும். சரளை, செம்மண்ணில் நன்றாக வளரும். எல்லாக் காலத்திலும் சாகுபடி செய்யலாம்.
இதைத் தோட்டங்களில் அழகிற்காகவும் வளர்க்கின்றனர். மஞ்சள் நிற , இளம் சிவப்பு நிற சம்பங்கிகளும் உண்டு.
விலை அதிகம்
உலகின் புகழ் பெற்ற, எல்லோரும் விரும்பும், நறுமண உடற் பூச்சுகளில் (perfumes பெர்ப்யூம் ) இது கொஞ்சமாவது இருக்கும்; கரணம் என்னவெனில் விலை மிக அதிகம் . 3600 கிலோ பூக்களில் இருந்தது அரை கிலோ நறுமண எண்ணெய்தான் கிடைக்கும் என்றால் இதன் விலையை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம் (Voluptuous, intoxicating and expensive, so expensive! It takes over 3600 kilos of flowers to produce just half a kilo of tuberose oil), இதனால் இதை சிறிதளவே கலந்து ஏனைய ஆயில் (oils) களை அத்தோடு சேர்க்கின்றனர்.
அறைகளில் கொஞ்சம் மலர்கள் இருந்தாலும் நல்ல மணம் வீசும். மல்லிகை போல வாடிவிடாது. சில நாட்களுக்கு புதுமை மாறாது இருக்கும்.
தமிழ் நாட்டில் சம்பங்கி சாகுபடி பற்றியும் அதன் மூலம் ஏராளமான வரும்படி கிடைப்பது பற்றியும் வெப் சைட்டுகளிலும் விவசாயப் பத்திரிகைகளிலும் நிறைய தகவல்கள் உள்ளன. ஆயினும் ஏற்றுமதி விவரங்களைத் தரும் இணைய தளங்களில் எந்தச் செய்தியும் இல்லாததால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகிறதா என்று தெரியவில்லை. பெர்ப்யூம் தொழிலில் முதலிடம் வகிக்கும் பிரான்ஸ் இதை அதிகம் வாங்குகிறது . பிரான்ஸ் நாடுதான் உலக பெர்ப்யூம் தலைநகர் ஆகும்.
கீழ்கண்ட பெர்ப்யூம்களில் சம்பங்கி மலரின் மணம் இருப்பதை நல்ல மூக்கு இருப்போர் எளிதில் அறிவர்.

Smell tuberose in:
Goutal Tubéreuse
Chanel Gardénia
Clive Christian C for Women
Dior Poison
Dior J’Adore Dior
Diptyque Do Son
Floris Tuberose
Frederic Malle Carnal Flower
Givenchy Amarige
Givenchy Organza
Guerlain Jardins de Bagatelle
L’Artisan Parfumeur Tubéreuse
சம்பங்கிப் பூவை தேங்காய் எண்ணெய் , ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் கலந்து அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர் .

இந்திய மொழிகளில் இதன் பெயர் :
சம்ஸ்க்ருதம் ரஜினி கந்த Rajnigandha, ரஜோனி கந்த Bengali i- Rajoni-Gandha,) உருது மொழியில் குல் ஷாபி in Urdu Gul Shabbi) மராத்தியில் நிசி கந்த , (in Marathi, NishiGandha) கன்னடத்தில் சுகந்த ராஜ , (in Kannada Sugandharaja), தமிழில் சம்பங்கி (in Tamil Sambangi) தெலுங்கு மொழியில் , நில சம்பங்கி ( in Telugu NelaSampenga) .
இந்து திருமணங்களில் (Wedding Garlands) மாலைகளில் உதிராத பூவாக நிலைத்து நிற்பதும் சம்பங்கி ஒன்றுதான். ஏனைய மலர்கள் நாள் முடிவதற்குள் வாடி உதிர்ந்து விடும்.
இந்தி , வங்காளி மொழிக் கதைகளில் ரஜினிகந்த பெயரைக் காணலாம். 17ம் நூற்றாண்டில் இப்ராஹிம் அட்டையில் ஷா எழுதிய Ibrahim Adil Shah II (1571- 1627), எழுதிய குறிப்பில் இதை திருமண அறையில் பயன்படுத்துவதைப் பற்றி எழுதிவைத்துள்ளார்.
—subham—
Tags- சம்பங்கிப் பூ, சம்பங்கி