

Date uploaded in London – – 14 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

வின்கா ரோசியா Vinca rosea என்ற பூ ஆப்பிரிக்காவின் பக்கத்தில் உள்ள மடகாஸ்கர் (Madagascar, now called Malagasy) என்ற தீவிலிருந்து உலகம் முழுதும் பரவியதாக தாவர வியல் அறிஞர்கள் செப்புவர்; இன்று இதை வீடுகளிலும் தோட்டங்களிலும், குறிப்பாக இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், எங்கும் காண்கிறோம்.
இதற்கு தமிழ் நாட்டில் நித்ய கல்யாணி, நயன்தாரா, சுடுகாட்டுப்ப்பூ என்று பல பெயர்கள் உள்ளன. இதை சாகுபடி செய்தால் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் எந்த விதக் கவனிப்பும் இல்லாமல் எளிதில் வளரக்கூடிய தாவரம் / செடி இது. இதற்கு வாசனை என்ற சிறப்பு இல்லை. ஆயினும் நிறைய நோய்களைப் போக்கும் சக்தி இருப்பதால் இதற்கு மதிப்பு அதிகம் .
xxxxxxxxxxxxxxxx
எச்சரிக்கை
மருத்துவக் கட்டுரைகளைப் படித்துவிட்டு, நேரடியாக தனக்குத்தன் தானே வைத்தியம் செய்வது ஆபத்தில் முடிய வாய்ப்பு உண்டு. எதையும் பயன்படுத்துவதற்கு முன்னால் , பதிவு செய்த உண்மை மருத்துவர்களைக் கலந்து (REGISTERED MEDICAL PRACTITIONERS) ஆலோசியுங்கள் .
அவர்கள் சொன்னாலும் கூட, உங்கள் தேகம் அந்த மருந்தை ஏற்கிறதா , எதிரிடை விளைவை உண்டாக்குகிறதா (மலச்சிக்கல், வாந்தி, கிறுகிறுப்பு, அதிக தூக்கம்) என்பதை தேதிவாரியாக குறித்து வையுங்கள்; அதிகப்பாதிப்பு இருந்தால் மருந்தை எடுக்காதீர்கள்.
உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமாவது நீங்கள் எடுக்கும் புதிய மருந்து பற்றிச் சொல்லி விட்டு மருந்தினை எடுங்கள் .
பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் , பலன்கள் உண்மையானால் டாக்டர்களுக்கு வேலையே இராது. ஆகையால் பத்திரிகையில் படிப்பதை அப்படியே பின்பற்றாதீர்கள் . மருத்துவர்கள் சொல்லுவதைக் கேளுங்கள்
Xxxxxxxxxxxxxxxxxxxxxxx

நித்தியக் கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்றும் அழைக்கப்படும் செடி, மடகாஸ்கரில் (LARGE ISLAND COUNTRY NEAR AFRICA; MALAGASSY) இருந்து பரவியது ; தாவரவியலில் இதை அபோசயனேசி (Apocynaceae ) குடும்பத்தின் கீழ் வைத்துள்ளனர் . காதராந்தஸ் ரோசியஸ் Catharanthus roseus என்பது தாவரவியல் லத்தீன் மொழிப்பெயர்.
வெள்ளை நிறம் அல்லது இளம் சிவப்பு நிறத்தில் கவர்ச்சிகரமாகத் தோன்றும் ; கண் போல இருப்பதால் நயன(கண்) தாரா (நட்சத்திரம்) என்றும் எப்போதும் பூப்பதால் நித்ய கல்யாணி என்றும் ஸம்ஸ்க்ருத்தில் அழைக்கின்றனர். தமிழில் நல்ல பெயரைச் சூட்டவில்லை . ஆங்கில மொழியில் Periwinkle பெரிவின்க்கில் என்று சொல்லுவார்கள்
ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களை உடையது இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை.
இம் மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும்.. இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் மேற்பரப்பு பளபளப்பாகவும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும்.
இந்தி மொழியில் இதை சதாபஹார் सदाबहार Sadabahar என்று அழைப்பர் ;
ஏனைய மொழிகளில் Shavam Naari (Malayalam), सदाफूली Sadaphuli (Marathi), নযনতাৰা Nayantara (Bengali); బిళà±ళ à°—నà±నేరà± (Telugu).
நித்தியகல்யாணி மருத்துவப் பயன்கள்
நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.
இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தும் (In the acute leukemias and lymphoblastosarcomas, cytomorphologic and quantitative studies demonstrated that the oncolytic effects correlated well with the magnitude of metaphasic blockade)
ஹா ட்கின்ஸ் நோய் என்னும் புற்று நோயை யும் குணப்படுத்தும் Hodgkin’s disease, lymphosarcoma, and acute leukemia have been studied after treatment with the Vinca rosea alkaloids (vinblastine and vincristine),
நித்ய கல்யாணியிலிருந்து ஆல்கலாய்ட் என்னும் ரசாயனப் பொருட்கள் 70 கிடைக்கின்றன (The stem of Madagascar periwinkle produced a milky sap which is the source of over 70 different indole alkaloids. அவற்றில் நான்கினை மருத்துவ உலகம், புற்று நோய் சிகிச்சையில்( cancer fighters.)பயன்படுத்துகின்றன ; அவையாவன
: வின் ப்லாஸ்டின் Vinblastine (VBL),
வினோரெல்பை ன் vinorelbine (VRL),
வின்கிரிஸ்டின் vincristine (VCR) and
வின்டெசின் vindesine (VDS).
இவைகளில் VCR, VBL and VRL என்பன அமெரிக்காவிலும் வின் ப்லுனைன் Vinflunine என்பதை ஐரோப்பாவிலும் பயன்படுத்துகின்றனர் .புற்று நோயைத் தீர்க்கும் மருந்துகளில் இரண்டாவது இடத்தை வகிப்பது நித்ய கல்யாணி என்றால் இதன் மதிப்பை அறியலாம் .
மனநோய்களை குணமாக்கும்;
இரத்த அழுத்தம் , நீரிழிவுநோய் கட்டுப்படும்; been used for various treatments, e.g. diabetes mellitus, high blood pressure and infection
மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும்;
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும்.
பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.
xxxxxxxxx

இதில் கிடைக்கும் ஆல்கலாய்ட் என்னும் ரசாயனப் பொருட்கள்: அஜ்மாலின்,ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine)
இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.,
xxxxxx

வருமானம் தரும் நித்யகல்யாணி
ஏற்றுமதி தகவல்கள்
வோல்சா நிறுவனம் திரட்டிய (As per Volza’s Global Export data), தகவலின்படி (Vinca rosea export shipments) 283 கப்பல்களில் நித்ய கல்யாணி ஏற்றப்பட்டது . 58 ஏற்றுமதி நிறுவனங்கள் அதை அனுப்பின.( stood from World at 283, exported by 58 World Exporters to 61 Buyers.). அதை 61 வியாபார நிறுவனங்கள் வாங்கின
பெரும்பாலான வின்கா ரோசியா செடிகளை பிரான்ஸ், ஜப்பான், பெரு ஆகிய நாடுகள் வாங்கின.
(France, Peru and Japan)
இந்தியா முதலிடம்
இந்தியா 184 கப்பல்களிலும் காஸ்டாரிகா 23 கப்பல்களிலும் , வியட் நாம் 21 கப்பல்களிலும் நித்ய கல்யாணி சரக்குகளை அனுப்பின
The top 3 exporters of Vinca rosea are India with 184 shipments followed by Costa Rica with 23 and Vietnam at the 3rd spot with 21 shipments.
xxxx
தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
நித்தியகல்யாணியின் இலைகளும், வேரும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. . நித்ய கல்யாணியின் இலைகள் அமெரிக்கா ஹங்கேரிக்கு ஏற்றுமதியாகிறது. இதன் வேர்கள் மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது.
நித்ய கல்யாணி செடியினை நேரடியாக உட்கொள்வது ஆபத்தானது .

–subham—
Tags- நித்ய கல்யாணி, Vinca rosea, Periwinkle, சதாபஹார் सदाबहार Sadabahar, புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் , குணமாகும், மருந்து ஏற்றுமதி , நயனதாரா