
Date uploaded in London – – 17 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
இந்துக்களின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று துளசி. இதை நாம் மூலிகைகளின் ராணி QUEEN OF HERBS என்று அழைப்போம் , வெளிநாட்டினர் இதை மூலிகைகளின் ராஜா KING OF HERBS என்பார்கள் .
துளசி- Holy Basil, Ocimum sanctum ; Family Lamiaceae
எந்தப் பெருமாள் கோவிலுக்கு எப்போது போனாலும் எரிய உத்தூரணியில் துளசி ஜலத்தைக் கொடுப்பார்கள் . அதை மரியாதையுடன் உறியாமல் குடித்துவிட்டு தலையிலும் தடவிக்கொள்ளும்போது கிடைக்கும் புத்துணர்ச்சியின் பின்னால் பெரிய ரகசியமே உள்ளது .
அதை ப்பார்ப்பதற்கு முன்னால் வேறு சில விஷயங்களையும் காண்போம். வானவப் பெரியார்கள் இறந்தாலோ சமாதி அடைந்தாலோ அவர்கள் அடக்கம் செய்யப்பட இடத்தில் பிருந்தாவனம் என்ற பெயரில் ஒரு மாதத்தை அமைப்பார்கள் . இந்தியா முழுதும் வீடுகளின் பின்புறத்தில் துளசி மாடங்களை அமைத்து அதை பய பக்தியுடன் பராமரித்து, தினமும் சில இதழ்களை பெருமாளுக்குப் படைத்துவிட்டு பிரசாதமாக உட்கொள்ளுவர். இதனால் இருமல் சளி , கபம் நோய்கள் வராது
இந்துக்கள் எளிதில் கிடைக்கும் , செலவில்லாமல் வளரும் அபூர்வ மூலிகைகளை இறைவனுக்குப் படைப்பது அவர்களின் மூலிகை அறிவினைக் காட்டுகிறது . விநாயகருக்குப் போடும் அருகம்புல்லும் , சிவனுக்குப் போடும் வில்வமும் அரிய மருத்துவ குணங்களை கொண்டது .
பசு மாடு (பால்), குதிரை , கணிதத்தில் பூஜ்யம் , எண்களில் 1,2,3 போன்ற எழுத்துமுறை , வானத்தில் விண்வெளிப்பயணம் , கலைகளில் 64 கலைகள் , மொழியியலில் பாணினியின் அற்புதமான கண்டுபிடிப்புகள் , உலகிலுள்ள ஜீவராசிகள் 84 லட்சம் , பிக் பேங் என்னும் பிரபஞ்ச வெடிப்பு, பரிணாமக் கொள்கை என்று எவ்வளவோ அடிப்படை விஷயங்களை நாம் உலகிற்கு கற்பித்ததால் மேலை நாடுகள் விஞ்ஞானத்தில் முன்னேறின.
xxxx

Picture of Vana Tulsi
துளசியின் மஹிமை
வீட்டிற்கு முன்போ அல்லது பின்புறத்திலோ ஏன் துளசி மாட த்தை அமைக்கச் சொன்னார்கள் ?
இந்துக்கள் துளசி விவாஹம் நடத்திக் கொண்டாடுகிறார்கள் . துளசி மாலையை அணிகிறார்கள் .
வட இந்தியாவில் துளசி டீ யைக் குடிக்கிறார்கள் ; இது ஒரு மூலிகை டானிக் போன்றது .
துளசியை உபயோகிக்க முக்கியக்காரணம் அது மன உளைச்சலையும் பதட்டத்தையும் நீக்கி ஒரு மனிதனை மனித நிலைக்கு கொண்டு வரும் . இதை ஆங்கிலத்தில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் Anti oxidants என்பார்கள் . அதாவது செல்கள் சேதம் அடைவதைத் தடுக்கும். Fresh leaves and stem of Ocimum sanctum extract yielded some phenolic compounds (antioxidants)
துளசிச் சாற்றை , திரிபலா பொருட்களுடன்சேர்த்து ஆயுர்வேத சொட்டு மருந்து செய்கிறார்கள்; இது கண்களில் வரும்நோய்களுக்கு நல்ல மருந்து.
அண்மைக்காலத்தில் இதிலுள்ள ரசாயனப் பொருட்களைப் பிரித்து எடுத்ததில் நீரிழிவு , புற்றுநோயை எதிர்க்கும் சத்தும் இதில் இருப்பது தெரிந்தது Tulsi leaves, which have high concentrations of eugenol, have been shown to have anticancer properties. In a various cancers, eugenol exerts its antitumour effects through a number of different mechanisms; Ocimum sanctum leaves have been traditionally used in treatment of diabetes mellitus. Dietary supplementation of fresh tulsi leaves in a dose of 2 gm/kg BW for 30 days led to significant lowering of blood glucose levels in test group.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வாயிலுள்ள தொற்றுக் கிருமிகளையும் வயிற்றில் உண்டாகும் புண்களையும் (Ulcers) ஆற்றும்.
The leaves are good for nerves and to sharpen memory. Chewing of
Tulsi leaves also cures ulcers and infections of mouth.
இதற்கு பூச்சிகளை விரட்டும் சக்தி உண்டு . ஆகையால் காய்ந்த இலைகளை துணியில் சுருட்டி வைக்கிறார்கள் .
ஆயுர்வேத ,சித்த மருத்துவத்தில் சகலரோக நிவாரணியாக , கைகண்ட மருந்தாக பயன்படுகிறது சாதரணமாக வரும் காய்ச்சல் , இருமல், வயிற்றுப் பொருமல் ,ஆஸ்த்மா, தலைவலி, பூச்சிக் கடிகள் முதலிய எல்லாவற்றுக்கும் இது மருந்து ( used in Ayurveda and Siddha systems of medicine for prevention and cure of many illnesses and everyday
ailments like common cold, headache, cough, influenza, earache,
fever, colic pain, sore throat, bronchitis, asthma, hepatic diseases,
malarial fever, as an antidote for snake bite and scorpion sting,
flatulence, migraine headaches, fatigue, skin diseases, wound,
insomnia, arthritis, digestive disorders, night blindness and diarrhoea.)
கேரளத்தில் இதைக் கருத்தடை (Anti Fertility) மூலிகையாகவும் பயன்படுத்துகின்றனர் . இனிமேல் குழந்தைகள் வேண்டாம் என்று நினைப்போர் துளசியை சாப்பிடலாம்
பாக்டீரியா என்னும் கிருமிகளைக் கொல்லும் (Antibacterial activity) சக்தியும் துளசி இலைகளுக்கு உண்டு ; குறிப்பாக புதிதாகப் பறித்த இலைகளுக்கும் சாற்றுக்கும் இந்த சக்தி அதிகம் .
கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பினையும் துளசி இலைகள் குறை ப்பது (Antilipidemic ) முயல்கள் மேல் நடத்திய ஆராய்ச்சியில் தெரிந்தது ..
xxxx

துளசியில் மூன்று முக்கிய வகைகள் உண்டு .
ராம் துளசி
ஷியாம் (கிருஷ்ண) துளசி
வன துளசி (Ocimum gratissimum).
xxxx
துளசியிலிருந்து எண்ணெயும் எடுக்கிறார்கள் ; அதில் 60 வகையான ( Aroma Compounds ) வாசனைப் பொருட்கள் உள்ளன.
தாய் லாந்து நாட்டில் உணவு வகைகளில் துளசியைச் சேர்க்கிறார்கள் .

ஏற்றுமதி
துளசி உள்ள ஆசிமம் Ocimum பிரிவில் சுமார் நூறு வகையான தாவரங்கள் உள்ளன . ஆசிமம் பசிலிக்கம் அதிகம் ஏற்றுமதியாகிறது .இஸ்ரேல் , எத்தியோப்பியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா நிற்கிறது . அமெரிக்கா , ஜெர்மனி , சிங்கப்பூர் இதை அதிகம் இறக்குமதி செய்கிறது . இதுவும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது Ocimum basilicum L. (Lamiaceae) commonly known as sweet basil, has been used as a traditional medicinal plant for the treatment of headaches, coughs, diarrhea, constipation, warts, worms, and kidney malfunctions.
· As per Volza’s India Export data, Ocimum basilicum export shipments from India stood at 1K, exported by 135 India Exporters to 291 Buyers.
· India exports most of it’s Ocimum basilicum to United States, Singapore and Germanyand is the 3rd largest exporter of Ocimum basilicum in the World.
· The top 3 exporters of Ocimum basilicum are Israel with 6,102 shipments followed by Ethiopia with 1,282 and India at the 3rd spot with 1,018 shipments.
–subham—
Tags – துளசி , மருத்துவ உபயோகம், குணங்கள், ஏற்றுமதி, QUEEN OF HERBS