QUIZ வாரணாசி / காசி பத்து காசி QUIZ (Post No.12,930)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,930

Date uploaded in London – –   18 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL No.95

1.காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் மிக உயர்ந்த புனிதத்தலம் எந்த நதியின் மீது அமைந்துள்ளது?

XXXX

2.காசி நகரை வாரணாசி என்று சொல்லுவது ஏன் ?

XXXX

3.உலகின் பழைய நகர் காசிதான் என்பதற்கு என்ன சான்று உள்ளது?

XXXX

4.காசியில் தீபாவளி அன்று நடக்கும் அதிசயம் என்ன ?

XXXX

5.வேதத்தில் காசி நகரம் உள்ளதா ?

XXXX

6.காசியில் உள்ள சிவபெருமானின் பெயர் என்ன? தேவியின் பெயர் என்ன?

XXXX

7.ஞான வாபி என்பது என்ன ? ஏன் பத்திரிகைகளில் அடிக்கடி அடிபடுகிறது?

XXXX

8.”பஞ்சாப் மெயில் தவறினாலும் நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை” என்ற பழமொழிக்கு காரணம் என்ன ?

XXXX

9.காசியில் எத்தனை படித்துறைகள் , எத்தனை கோவில்கள் இருக்கின்றன ?

XXXX

10.காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ; இதனால் பலரும் இறுதிக்காலத்தை இங்கே கழிக்கிறார்கள். அப்படி இறப்போரின்  உடல் எங்கே தகனம் செய்யப்படுகிறது?

XXXX

விடைகள்

1.உத்தர பிரதேச மாநிலத்தில் காசி நகரம் இருக்கிறது .

கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது

XXXX

2. வருண, அஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் BENARES என்று உருமாறிப்போனது.

XXXX

3.மஹாபாரத காலம் கி.மு 30102க்கு முன் என்பது இந்துக்கள் நம்பிக்கை. அதில் காசி ராஜாவின் புதல்விகள் அம்பா , அம்பிகா, அம்பாலிகா / பீஷ்மர் கதை வருகிறது . ௨௬௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புத்தரும் காசியில்தான் முதல் பிரசங்கத்தை நிகழ்த்தினார் . தொல்பொருட்துறை சான்றுகள் கி.மு. 900 முதல் கிடைக்கிறது.

சமணமதத்தைச் சேர்ந்த 24 தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரரான மாஹாவீரர், புத்தருக்கும் சிறிது முந்தையவர். அவர்களில் ஏழாவது தீர்த்தங்கரர் பிறந்தது காசியில்! 23ஆவது தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதர், கிருஷ்ணர் காலத்தில் வசித்தவர். இதையெல்லாம் கணக்கில் சேர்த்தால் ஏழாவது தீர்த்தங்கரர் மஹாவீரருக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வசித்திருக்க வேண்டும்!! காசியின் கதையும் அவருடன் பின்னால் போகும்!

XXXX

4.ரிசர்வ் பாங்கில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள விலை மதிக்க முடியாத அன்னபூரணி தேவியின் தங்க விக்ரகம் தீபாவளி முதல் மூன்று நாட்களுக்குத் தரிசனத்துக்கு வைக்கப்படும்.

XXXX

5. அதர்வண வேதத்தில் காசி குறிப்பிடப்படுகிறது . ஆகவே  ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான காசி வேதகாலம் முதல் இருக்கிறது

XXXX

6.சிவபெருமான் பெயர் விஸ்வநாதர் ; அம்மனின் பெயர் விசாலாக்ஷி .XXXX

7. மதவெறி பிடித்த மஹா பாவி மொகலாய மன்னன் அவுரங்க சீப் Aurangzeb , அயோத்தியில் ராமர் கோவிலையும், மதுராவில் கிருஷ்ணர் கோவிலையும் இடித்து மசூதி கட்டினான். அதே போல காசி விஸ்வநாதர் கோவிலையும் இடித்து மசூதி கட்டினான் . அந்த மசூதி வளாகத்தில் ஞான வாபி இருக்கிறது;  கோவிலை இடிக்கும் போது இருந்த, விஸ்வநாதர் லிங்கமும் அங்கே புதைக்கப்பட்டுள்ளது என்பது  வரலாற்றுச் செய்தி. அங்கு  அகழ் வாராய்ச்சி செய்து உண்மையை வெளிக் கொணரவேண்டும் என்று இந்துக்கள் வழக்கு தொடுத்துள்ளார்கள்.

XXXX

8. தமிழகத்தை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தாரால்  1813 ம் ஆண்டு முதல் இன்று வரை காசி விசுவநாதருக்கு நாள்தோறும் மூன்று வேளை பூசைகள் நடத்தப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் காசியில் உள்ள ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. தெருவில் “சம்போ சம்போ சங்கர மகாதேவா” என்று கூவி  கொண்டு பூசை பொருட்களை கொண்டு செல்வதால் இது சம்போ என்ற பெயரால் வழங்கப்படுகிறது. பெரிய கலக்கம் நடந்த்தபோதும்  இந்த பவனி தடைப்பட்டதில்லை .

XXXX

9. வாரணாசியில் 64 ஸ்நான கட்டங்களும், 1500 சிறிய, பெரிய கோவில்களும் இருக்கின்றன. சிலர் 88 படித்துறைகள் என்று கணக்குச் சொல்லுவார்கள்

அஸி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. இங்கு தான் அஸி நதி கங்கையுடன் கலக்கிறது. தச அசுவமேத கட்டம் என்பது பத்து அசுவமேத யாகங்களைச் செய்வதால் கிடைக்கும் பலனைத் தரும் கட்டம்.வருணாகட்டம் என்பது வருணா நதி சங்கமம் ஆகும் இடம் ஆகும். அடுத்து பஞ்ச கங்கார கட்டம் என்பது ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ள கட்டமாகும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கட்டம் மணிகர்ணிகா கட்டம். இதுவே பிரதான ஸ்நான கட்டமாகும். இந்த ஐந்து கட்டங்களில் நீராடியவர்கள் பித்ரு காரியங்களைச் செய்வது மரபு.

XXXX

10. மணிகர்ணிகா படித்துறையும், அரிச்சந்திரன் படித்துறையும் இறந்த உடல்களை தகனம் செய்யும் இடங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

சுபம்

Tags-  வாரணாசி , காசி பத்து , காசி QUIZ, மணிகர்ணிகா, படித்துறை

Leave a comment

Leave a comment