QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12,940)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,940

Date uploaded in London – –   21 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பொதுவாக நான் 10 கேள்விகளை மட்டும் கேட்பேன் ; ஆனால் 

முன்னர் QUIZ காஞ்சி பத்து QUIZ என்ற பெயரில் பத்து கேள்விகளை வெளியிட்டேன்; இப்போது காஞ்சிபுரம் பற்றி மட்டும் நாற்பது  கேள்விகளைக் கேட்பதற்குக் காரணம் காஞ்சி பரமாசார்யார் , உலகப் புகழ்பெற்ற வரலாற்று, தொல்பொருள் அறிஞர் டாக்டர் இரா நாகசாமி போன்றோர்  இந்த நகரம் பற்றி நிறைய சொல்லியுள்ளனர் ; இந்த நகரம் சிவ காஞ்சிவிஷ்ணு காஞ்சிஜைன காஞ்சி என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது என்று காஞ்சி பரமாசார்யார் (1894-1994) குறிப்பிட்டுள்ளார்  பொதுவாகத் தமிழ் மன்னர்கள் சேர, சோழ, பாண்டிய  மன்னர்கள் படையெடுத்தால் எதிரி மன்னனின் ஊரையே  அழித்து, கழுதை பூட்டி ஏர் உழுது, கொள்ளும் எள்ளும் விதைப்பர் என்று சங்க இலக்கியம் விளம்பும் . ஆனால் ஒரு  மன்னன் காஞ்சியின் அழகைக்கண்டு இதைக் கொஞ்சமும் தொடக்கூடாது என்று உத்தரவிட்டான் என்பார் அறிஞர் நாகசாமி . ஆகையால் 40 கேள்விகளில் இந்த நகரத்தைக் காண்போம்.

1 .காஞ்சியில் எந்தக் கோவிலில் ஆழ்வார் பாடல் பெற்ற நான்கு வைணவ தலங்கள் உள்ளன ?

XXXX

2.காஞ்சிபுரத்திலும் அதைச் சுற்றியும் எத்தனை பாடல்பெற்ற திவ்ய தேச தலங்கள் இருக்கின்றன ?

XXXX

3.காஞ்சி உலகலந்தப் பெருமாள் கோவில் அர்ச்சகராக இருந்தவர் திருக்குறளுக்கு எழுதிய உரையே பத்துப் பேர் எழுதிய உரைகளில் சிறந்தது என்று உலகமே போற்றுகிறது ;அவர் பெயர் என்ன ?

xxxx

4.சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்ததுபுருஷர்களில் பெரியவர் விஷ்ணுபெண்களில் சிறந்தவர் ரம்பாநகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம். இதை காளிதாசர் செய்ததாகச் சொல்லுவர். அது என்ன ஸ்லோகம்?

xxxx

5.சேர,சோழ,பாண்டிய நாடுகள் வாரிசையில் காஞ்சி எந்த நாட்டைச் சேர்ந்தது அதன் சிறப்பு என்ன?

xxxxx

6. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை அறியாதோர் இல்லை அங்கு அன்னைக்கு எத்தனை கரங்கள்அவற்றில் என்னென்ன இருக்கின்றன ?

Xxxx

7. காமாட்சி சந்நிதியில் உள்ள லெட்சுமி யார் ?

xxxx

8.அப்பர்சுந்தரர்திருநாவுக்கரசர்ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவன் கோவிலின் பெயர் என்ன ஏன் அந்தப் பெயர் வந்தது?

xxxxx

9.பஞ்ச பூத ஸ்தலங்களில் இங்குள்ள லிங்கம் எந்த வகை லிங்கம் ?

XXXX

10.முக்தி தரும் ஏழு  ஸ்தலங்களில் காஞ்சியும் ஒன்று அதன் பழைய  தமிழ்ப் பெயர் என்ன அதற்குக்  காரணம் என்ன?

xxxx

விடைகள்

1.பெரிய காஞ்சிபுரம், பகுதியில் உலகலந்த பெருமாள் கோவில் உள்ளது. அதில் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் என்ற 4 பாடல் பெற்ற தலங்கள் அடக்கம்.

XXXX

2.ஒரு கோவிலுக்குள் நுழைந்தால் 4 திவ்ய தேச தலங்களைத் தரிசிக்கலாம். காஞ்சிபுரத்தை வலம் வந்தாலோ 14 திவ்ய தேசங்களைத் தரிசித்துவிடலாம்.

XXXX

3.அவர் பெயர் – பரிமேல் அழகர் ; உரை எழுதிய பத்துப் பேர் :-

தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்

பரிலேழகர் பருதி – திருமலையர

மல்லர் கவிப் பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்

கெல்லையுரை செய்தா ரிவர்

1)தருமர் 2) மணக்குடவர் 3) தாமத்தர் 4) நச்சர் 5) பரிமேலழகர் 6) பருதி 7) திருமலையர் 8) மல்லர் 9) கலிப்பெருமாள் 10) காளிங்கர் ஆகிய பத்துப் பேரே திருக்குறளுக்கு உரை எழுதினார்கள் ..

XXXX

4.पुष्पेषु जाती पुरुषेषु विष्णुर्नारीषु रम्भा नगरीषु काञ्ची ।

नदीषु गंगा नरपेषु रामः काव्येषु माघः कवि कालिदासः ॥

“ புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு

நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி “

“Pushpeshu jati, purusheshu Vishnu

Naarishu Rambha, Nagareshu Kanchi.”

சிலர் இன்னும் ஒரு வரியையும் சேர்ப்பர் ;

नदीषु गंगा नरपेषु रामः काव्येषु माघः कवि कालिदासः ॥

நதீஷு கங்கா, நரசேஷு ராமஹ காவ்யேஷு மாகஹ கவி காளிதாஸஹ ; அதாவது அவர் ஒருவர் மட்டுமே புலவர் ; ஏனையோர் புலம்பர்  .

XXXX

5.தொண்டை நாடு;

வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து—என்றார் ஒளவையார்

XXXX

6.காமாக்ஷி தேவி   வடிவத்திலும், ஸ்ரீ சக்ர வடிவத்திலும் சதுர் (4) புஜங்களோடு  காயத்ரி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கிறாள்.காமாக்ஷியின் நான்கு கரங்களில் ஒன்றில் கரும்பினால் ஆன வில்லும் இன்னொன்றில் புஷ்பங்களால ஆன அம்புகளும் உண்டு. மீதி இரு கரங்களில் பாசமும் அங்குசமும் உண்டு. காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர்.

XXXX

7.காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி இருக்கிறாள்.

கருவறையின் வலது புறத்தில் கள்வர் என்ற பெயரில் திருமால்/விஷ்ணு  இருக்கிறார்.  அதேபோல காயத்ரீ மண்டபத்தின் இடது புறத்தில் அரூப லெட்சுமி சந்நிதி இருக்கிறது. இங்கு வினோதமான ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது.அங்கு அம்பாள் பிரசாதமான குங்குமம் இருக்கும். அதைக் கீழேயிருந்து எடுத்து மேலிருந்து கீழாகத் தடவ வேண்டும் . ஏனென்றால் ,

மஹா விஷ்ணுவின் சாபத்தால் உருவமிழந்த லெட்சுமி தேவி , காமாட்சியைப் பிரார்த்தித்து , உருவம் பெற்றாளாம் . அதாவது காமாட்சியின் குங்குமத்தை லெட்சுமியின் மீது தடவும்போது அவள் உருவம் பெறுவாள் என்று காமாட்சி அனுக்கிரஹித்தாள் . அதை இன்றும் எல்லோரும் பின்பற்றுகிறார்கள்

XXXX

8. ஏகாம்பரேஸ்வரர்  கோவில் அல்லது ஏகாம்பர நாதர் கோவில் . இதன் தமிழ் அர்த்தம் ஒற்றை மாமரக் கடவுள் . கயிலாயத்தில் சிவன் கண்களை பார்வதி விளையாட்டாக மூடினாள் ; ஊக்கமே இருண்டுபோனது ; இதனால் கோபம் அடைந்த சிவன், அவளை பூமியில் தவம் செய்து  திரும்பி வா என்று அனுப்பினார் ; அவர் காஞ்சியில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் (ஒற்றை மாமரக் கடவுள்) மணலால் லிங்கம் செய்து வழிபட்டார். வெள்ளம் வந்த போதும் அதை அழியாமல் பாதுகாத்தார் . இப்போதும் மா மரமே தல விருட்சம்.

XXXX

9. மண்ணால் ஆனதால் இது பிருத்வீ லிங்கம் என்று அழைக்கப்படுகிறது . ஆகையால் இதற்கு அபிஷேகம் கிடையாது

XXXX

10.கச்சி என்பதே பழைய பெயர்; இது தில்லை , மருதம் போன்ற மரங்களால் ஏற்பட்ட தலப்பெயர்கள் போல காஞ்சி மரத்தால் வந்த பெயர். காஞ்சி என்ற சொல் மருவி கச்சி ஆனது .

XXXX

Tags- QUIZ காஞ்சிபுரம் 40,  PART 1 , பரிமேலழகர் , கச்சி, காமாட்சி , அரூப லெட்சுமி , ஏகாம்பரேஸ்வரர் , மாமரம் , பிருத்வீ லிங்கம்

Leave a comment

Leave a comment