QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 2 (Post No.12,944)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,944

Date uploaded in London – –   22 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

11 . காஞ்சிபுரம் நகரில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா எடுக்கும் கோவில் எது ?

XXXX

12 .அந்தக் கோவிலில் இரண்டு பல்லிகள் சிற்பங்களை எல்லோரும் தரிசிப்பது ஏன் ?

XXXX

13 . இந்தக்கோவிலுக்கு ராபர்ட் கிளைவ் என்ன கொடுத்தான் ?

XXXx

14.கண் நோய்கள் நீங்க இந்தக்கோவிலில் ஏன் பிரார்த்தனை செய்கின்றனர் ?

XXXX

15.எட்டு கைகளுடைய அரிய பெருமாளை காஞ்சியில்  எங்கே தரிசனம் செய்யலாம்?

XXXX

16 . தீபப் பிரகாசர் அல்லது விளக்கொளிப் பெருமாள் கோவிலின் சிறப்பு என்ன?

XXXX

17.காஞ்சி நகரத்தை சமய ஆர்வலர்கள் எத்தனை பிரிவுகளாகப் பிரிப்பார்கள் ?

XXXX

18.விஷ்ணு காஞ்சியில் உள்ள மற்றோர் தலமான திருவேளுக்கைக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது ?

XXXX

19.திரு ஊரகம் உலகளந்த  பெருமாள் கோவிலில் எத்தனை பெருமாள்கள் உள்ளனர் ?

XXXX

20. காஞ்சிபுரத்தில் பாண்டவர்களுடன் தொடர்புடைய கோவில் எங்கே இருக்கிறது ?

XXXX

விடைகள்

11.வரத ராஜப்பெருமாள் கோவில் . அங்குள்ள குளத்தில் மூழ்கிக் கிடக்கும் அத்தி மரத்திலான சிற்பம் 40  ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு பத்து நாட்களுக்கு மேல்  தரிசனத்துக்கு வைக்கப்படுகிறது ; 2019 ஆம்  ஆண்டில் இந்த வைபவம் நடந்தது. அடுத்த முறை 2059 ல்  தரிசனம் செய்யலாம். பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர்.

XXXX

12.அயோத்தி மன்னன் சகரனுடைய பிள்ளை அசமஞ்சனும் அவன் மனைவியும் சாப வசத்தால் பல்லிகளாக மாறினர். உபமன்யு முனிவர் வரதராஜப் பெருமாளை தரிசனம்  செய்துவைத்தவுடன் அவர்கள் மனித உருப்பெற்று ஸ்வர்கத்துக்குச் சென்றார்கள். இந்தப் பல்லிகளை வணங்குவோர் அனைவரும் நோய் நொடியில்லாமல் வாழ அருள வேண்டும் என்று அவர்கள் பிரார்த்திதை பெருமாளும் ஏற்றார். தங்கத் தலைகளுடன் உள்ள  பல்லிகளை (only sculptures)  இப்போதும் தரிசிக்கலாம் .

XXXX

13.மகர கண்டி (கழுத்தில் அணியும் மாலை) கொடுத்தான் .

ராபர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனியின் குமாஸ்தாவாக வேலை செய்த காலத்தில் , வரதராஜர் மீது கொண்ட பக்தியால், மகர கண்டி கொடுத்தான். இதேபோல், வெள்ளைக்கார கலெக்டர் Lord Place பிளேஸ் துரை, சுவாமிக்கு பல ஆபரணங்களைக் கொடுத்துள்ளார். விழாக்காலங்களில் சுவாமி இந்த ஆபரணங்களை அணிந்து உலா செல்வார்.

XXXX

14.ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.

XXXX

15.வரத ராஜப் பெருமாள் கோவிலிலிருந்து இரண்டு கி.மீ .தொலைவில் அஷ்டபுயகரப் பெருமாள் கோவில் இருக்கிறது . அங்குள்ள பெருமாள் சிலைக்கு எட்டு புஜங்கள் இருக்கின்றன. அவற்றில்  சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு, சங்கம்,  வில்,  கேடயம், கதை ஆகிய எட்டு ஆயுதங்களை வைத்துள்ளார்.

XXXX

16.இந்தக் கோவிலில் வேதாந்த தேசிகரின் சிலை உள்ளது; அதை அவருடைய மகன் நயின வரதாச்சாரியாரே பிரதிஷ்டை செய்தார். ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார். பிரகாரத்தில் வேதாந்த தேசிகரின் வரலாறு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. இது அவருடைய அவதார ஸ்தலம்.

XXXX

17.சிவ காஞ்சி , விஷ்ணு  காஞ்சி ,ஜைன  காஞ்சி என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பார்கள் . விஷ்ணு காஞ்சியில் எல்லா பெருமாள் கோவில்களும் சில பர்லாங் தூரத்திலேயே உள்ளன.

XXXX

18.வேள் என்றால் ஆசை ; வேட்கை, வேள்வி முதலிய சொற்களுக்கு மூலச் சொல்.

திருவேளுக்கை ஸ்தலத்தில் உள்ள பெருமாள் காமாசிகா நரசிம்மர் ஆவார். நரசிம்மன் ஆசையுடன் வசித்த இடம் என்பது அதன் பொருள். 

XXXX

19.திரி விக்ரமனை உலகளந்த பெருமாள் என்று அழகாக மொழி பெயர்த்துள்ளனர் ; ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்று ஆண்டாளும் அடி அளந்தான் என்று திருவள்ளுவரும் போற்றிய பெருமாள்.

இங்கு ஊரகம் (பேரகம் ) , நீரகம் , காரகம், கார்வானம் ஆகிய பெருமாள்கள் எழுந்தருளியுள்ளனர் . இந்தக் கோவிலை ஒரே திவ்ய தேசமாகவே கருதுவர் .

XXXX

20.பெரிய காஞ்சிபுரத்தில் ஒன்பது திவ்ய தேசங்கள் , அதாவது ஆழ்வார்கள் பாடிப்போற்றி மங்களா சாசனம் செய்த புனிதக் கோவில்கள், இருக்கின்றன. இதில் ஒன்றான திருப்பாடகம் தலம் பாண்டவர் தூதர் கோவில் எனப்படும்.

ஜனமேஜயன் , கிருஷ்ணன் கதைகளைக் கேட்டுவிட்டு, காஞ்சி நகருக்கு வந்து அஸ்வமேத யாகம் செய்து பூர்ணாகுதி செய்த பின்னர் க்ருஷ்ண பரமாத்மா பாண்டவ தூதனாக காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது. குலோத்துங்க சோழன் கல்வெட்டும் இருக்கிறது.

—subham—

TAGS- ராபர்ட் கிளைவ் , மகர கண்டி , வேதாந்த தேசிகர், QUIZ காஞ்சிபுரம் 40 , QUIZ- PART 2,

Leave a comment

Leave a comment