
Date uploaded in London – – 23 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
21. புகழ்பெற்ற சிவன் கோவிலுக்குள்ளும் காஞ்சி காமாட்சி கோவிலுக்குள்ளும் உள்ள திவ்ய தேசங்கள் எவை ?
XXXXX
22 .ஆதிசங்கரருக்கும் காஞ்சிபுரத்துக்கும் உள்ள தொடர்பு என்ன ?
XXXXX
23 . காஞ்சி நகரில் வசித்த ஆழ்வார்கள் யார் ?
XXXXX
24 .காஞ்சி நகரினை நிறுவிய தமிழ் மன்னன் யார்?
XXXXX
25 . சங்க இலக்கியத்தில் காஞ்சியை ஆண்ட மன்னன் பெயர் இருக்கிறது . அவர் பெயர் என்ன ?
XXXXX
26 சம்ஸ்க்ருதத்தில் காஞ்சி நகரினை என்ன பெயர்களில் குறிப்பிடுகிறார்கள் ?
XXXXX
27 . இந்த நகருக்கு வந்து அசோகன் கட்டிய புத்த ஸ்தூபி பற்றிக் குறிப்பிட்ட சீன யாத்ரீகர் யார் ?
XXXXX
28 .நாளந்தா, தட்சசீலத்துக்கு இணையான பல்கலைக் கழகம் காஞ்சியில் இருந்தது . அதன் பெயர் என்ன?
XXXXX
29.காஞ்சிபுரத்தில் எத்தனை கல்வெட்டுகள் கிடைத்தன?
XXXXX
30 .சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படையில் பிரமணப்புலவர் உருத்திரங்க கண்ணனார் இந்த நகரை எப்படி வருணிக்கிறார்?
XXXXX

விடைகள்
21. புகழ்பெற்ற சிவன் கோவிலான ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்திலுள்ள திருநிலாத் திங்கள் துண்டம் என்ற வைணவ
தலம், திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற பெருமாள் ஆவார்.
இதே போல காஞ்சி காமாட்சி கோவிலுக்குள், கர்ப்பக் கிரகத்தின் வலது பக்கத்தில் உள்ள பெருமாளை திருமங்கை ஆழ்வார் பாடி திருக்கள்வனூர் என்ற தலமாக அங்கீகரித்துள்ளார் .
XXXXX
22.பாரத நாடு முழுதும் நடந்து சென்று நான்கு மூலைகளில் நான்கு மடங்களைத் தாபித்த சங்கரர், இங்குள்ள மடத்தில் பீடாரோஹணம் ஏறி, மறைந்ததாக ஐதீகம் .
XXXXX
23.பொய்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார்.
XXXXX
24.கரிகாலன் என்று பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் செப்புகிறார் . கல்வெட்டுகளும் கரிகாலன் – காஞ்சி தொடர்பினை உறுதி செய்கின்றன .
XXXXX
25.பெரும்பாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூல் காஞ்சியை ஆண்ட இளந்திரையனைப் புகழ்கிறது இதை எழுதிய பிராமணப் புலவரின் பெயர் திரு.ருத்ராக்ஷம் ; தமிழில் உருத்திரங்கண்ணனார்.
XXXXX
26.காமகோட்டம், துண்டீர புரம், தண்டக புரம், பிரம்ம புரம் , சிவ புரம், காம பீடம், இந்து புரம், பிரளயசிந்து முதலிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது ; சம்ஸ்க்ருதத்தில் காஞ்சி என்றால் இடுப்பில் அணியும் ஒட்டியாணம்; தமிழில் காஞ்சி என்றால் ஒரு மரத்தின் பெயர்.
XXXXX
27.சீன யாத்ரீகர் யுவாங் சுவாங்; அவர் மாமன்னன் அசோகன் எழுப்பிய நூறு அடி உயர ஸ்தூபியைப் பார்த்ததாக எழுதியுள்ளார் ; இப்போது அது இல்லை .
XXXXX
28. பல்கலைக் கழகம் கடிகா , கடிகை
XXXXX
29.காஞ்சிபுரத்தில் 650 க்கும் மேலான கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்ககள், கிடைத்தன .
பல்லவர் 15 , சோழர்கள் 245 , தெலுங்கு-பல்லவர் 48 , பாண்டியர்கள் 12 , ஹொய்சாளர்கள் 3 ,தெலுங்கு-சோழர்கள் 3 , பிற்காலப் பல்லவர் 7, சம்புவராயர் 10 , விஜயநகர அரசர்கள் 160 , மற்றும் பாணர், காகதீயர், சேரர் , மொகலாயர் கல்வெட்டுகள்
XXXXX
30.விஷ்ணுவின் வயிற்றிலிருந்து தோன்றிய, பிரம்ம தேவனைச் சுமந்து வந்த, தாமரை மலரின் மொட்டினைப் போல காஞ்சி விளங்கியது .
பெரும்பாணாற்றுப்படையில் காஞ்சி
கச்சி மூதூரின் சிறப்பு
நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச்
சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின், 405
……………………
விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர்; (393-411)
பொருளுரை: நீல நிறத்தையும் வடிவினையுமுடைய திருமாலுடைய கொப்பூழ் ஆகிய நான்முகனைப் பெற்ற பல இதழ்களையுடைய தாமரையின் மொட்டைபோல் அழகுடன் தோன்றி, செங்கல்லால் செய்யப்பட்ட உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும், …….., பலர் தொழும்படி விழாக்களினால் சிறப்பையுடைய பழைய ஊர்,
XXXXX
—SUBHAM—
TAGS- பெரும்பாணாற்றுப்படை, கச்சி, கடிகா, கடிகை, யுவாங் சுவாங்