
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,950
Date uploaded in London – – 24 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழா நன்கு தெய்வீகமாக நடந்து முடிந்துள்ளது. ராம நாம மஹிமை பற்றிய சிறப்புக் கட்டுரைத் தொடரில் இது ஐந்தாவது கட்டுரை!
ராம நாம மஹிமை – 5
ச.நாகராஜன்
சில முக்கிய துதிகள்
ராம நாம மஹிமையை விளக்கும் ஏராளமான நூல்கள் உள்ளன; ஸ்தோத்திரங்கள் உள்ளன.
அவை அனைத்தையும் தொகுத்தால் ஒரு பெரும் கலைக்களஞ்சியமாகி விடும்.
ஏற்கனவே அனைத்து ராமாயணங்களின் பட்டியலையும் முன்பே வெளியிட்டுள்ளோம்.
ராமாயண வழிகாட்டி என்ற நூல் பற்றியும், இராமாயணத்தில் நதிகள், வாகனங்கள், ப்ரதிக்ஞைகள், ஜோதிடக் குறிப்புகள் என்ற நூல் பற்றியும் www.pustaka.co.in இணைய தளத்தில் பார்க்கலாம். இவற்றைப் பெற்றுப் படிக்கலாம். புத்தகமாகவும் Paper Back ஆகவும் வாங்கலாம்.
அத்துடன் திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் என்ற நூலில் தமிழ் திரைப்படங்களில் வந்த ராமர் பாடல்களைப் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது.
இங்கு சில முக்கிய துதிகள் கொண்ட நூல்களின் பட்டியலைக் காண்போம்.
1) ராமாஷ்டோத்தர ஷதாபிதான ஸ்தோத்ரம்
2) ராம ஹ்ருதயம்
3) ராம கீதா
4) ராமரக்ஷா ஸ்தோத்ரம்
5) ப்ரஹ்மதேவக்ருதா ராம ஸ்துதி
6) ஜடாயு க்ருத ராம ஸ்தோத்ரம்
7) ராமாஷ்டகம்
8) ஶ்ரீ ராமாஷ்டகம்
9) ஶ்ரீ மஹாதேவ க்ருதா ராம ஸ்துதி
10) அஹல்யா க்ருத ராம ஸ்தோத்ரம்
11) இந்த்ர க்ருத ராம ஸ்தோத்ரம்
12) ராமசந்த்ராஷ்டகம்
13) ஶ்ரீ சீதாராமாஷ்டகம்
14) ராமஷட்பதி
15) ரகுநாதாஷ்டகம்
16) ராம கவசம்
17) த்ரைலோக்ய மோஹன கவசம்
18) ஜானகீ த்ரைலோக்ய மோஹன கவசம்
19) ஶ்ரீ ராம ஸ்தோத்ரம்
20) ராமஸ்தவராஜம்
21) ராம மஹிம்ன ஸ்தோத்ரம்
25) ராமமுர்ஜகப்ரயாதஸ்தோத்ரம்
1925ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்தோத்ர ரத்னாகரத்தில் 406 ஸ்தோத்திரங்களை ஶ்ரீ வேங்கடேசாச்சாரியார் அவர்கள் தொகுத்துள்ளார். அதில் உள்ள ராம ஸ்தோத்திரங்கள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளன.
ராம ரஹஸ்யோபநிஷத்
ராம நாமத்தின் ரகசியத்தை உரைக்கும் உபநிஷதம் இது. ராம நாமத்தில் உள்ள சப்த மற்றும் எழுத்துச் சேர்க்கைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.
இணையதளத்திலிருந்து இதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அறிஞர்கள் கூற்று
ஏராளமான மஹான்களும், அறிஞர்களும் ராம நாம மஹிமையைப் பற்றி பல நூறாண்டுகளாக விளக்கி வந்துள்ளனர்.
ராம நாமம் பற்றி மஹாத்மா காந்திஜி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பல உரைகளில் குறிப்பிட்டுள்ளார்.
ரகுபதி ராகவ ராஜாராம் அவருக்கு இஷ்டமான பிரார்த்தனை.
குறிப்பிடத்தகுந்த ஒரு நூல் பற்றிய விவரத்தை இங்கு தருகிறேன்.
Ramanama – The Infaalible Remedy by Mahatma Gandhi என்ற 104 பக்கங்கள் கொண்ட நூலை Anand T. Hingorani, Karachi 1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி வெளியிட்டுள்ளார். 35 அத்தியாயங்கள் கொண்டுள்ளது இந்த நூல். ராம நாமத்தைப் பற்றிய 295 விஷயங்கள் அற்புதமாகத் தரப்பட்டுள்ளது.’
காந்திஜி அவர்களின் மூன்று முக்கிய குறிப்புகளை மட்டும் கீழே காணலாம் – இந்த நூலிலிருந்து தரப்படுகிறது.
1) What, however, left a deep impression on me was the reading of the Ramayana before my father. … . That laid the foundation of. My deep devotion to the Ramayana. Today I regard the Ramayana of Tulsidas as the greatest book in all devotional literature.
From – My Experiments with Truth – Part I – Chapter 10
2) “Tell us, they plaintively ask, “how to get rid of the devil, how to get rid of the impurity that has seized us.” When I ask them to take Ramanama and kneel before God and seek His help, they come to me and say, “We do not know where God is. We do not know what is to pray.:
A Tamil saying has always remained in my memory and it means: “God is he Help of the helpless” (திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதை மஹாத்மா இங்கு குறிப்பிடுகிறார்)
If you would ask Him to help you, you would go to Him in all your nakedness, approach Him without reservations, also without fear or doubts as to how He can help a fallen being like you.”
From – Young India – April 4, 1929
3) Shri Ganesh Shastri Joshi, Vaidya, tells me after reading my article on Nature Cure in Harijan of 3rd March, 1946, that in Ayurveda, too, there is ample testimory to the efficacy of Ramanama as a cure for all disease.
From – Harijan, March 24, 1946
இன்னும் ஏராளமான முக்கிய ரகசியக் குறிப்புகளை மஹாத்மா காந்திஜி ராம நாமம் பற்றித் தந்துள்ளார்.
படிப்போம்; பகிர்வோம்.
***