
Date uploaded in London – – 27 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

லண்டனில் தெற்கு புறநகர்ப்பகுதியில் கியூ தாவரவியல் பூங்கா Royal Kew Botanical Gardens இருப்பதை பலரும் அறிவார்கள் (இந்தக் கட்டுரையாளர் 1987ல்L லண்டனில் வந்து இறங்கிய சில மாதங்களில் சென்றது இந்தப் பூங்காவுக்குத்தான் ; ஏனெனில் மதுரையில் படித்தது பி. எஸ்சி பாட்டனி ; B.Sc. Botany பின்னர்தான் எம்.ஏ படிப்பு. அதற்குப்பின்னர் வருவோர் போவோர் எல்லோரையும் அழைத்துப் போவேன் அல்லது கியூ ஆற்றுப்படை சொல்லி வழி அனுப்புவேன் )
இங்கு என்ன அதிசயம் இருக்கிறது ?
உலகத்திலுள்ள முக்கியமான , அழிந்துவரும் தாவரங்ககளின் விதைகளை எல்லாம் சேகரித்து வைத்துள்ளனர் .
எங்கே தெரியுமா?
நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்ட பாதாள குளிர் அறையில் !
இந்த விதைகள் பாங்கு கியூ பூங்காவில் இல்லை . அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் கார் பயணம். வேக் ஹர்ஸ்ட் பிளேஸ் (Wakehurst, previously known as Wakehurst Place, West Sussex) , என்னுமிடத்தில் இருக்கிறது .. இதை கியூ தாவரவியல் பூங்கா நிர்வகிக்கிறது.
மேலும் கியூ பூங்காவில் உலக மூலிகைகள், தாவரங்கள் பற்றி எழுதப்பட்ட புத்தககங்கள், அதி பயங்கரக் காடுகளில் உள்ள தாவரங்கனின் படங்கள், ஓவியங்கள் அனைத்தையும் சேகரித்து ஆராய்ச்சியாளர்களை அழைத்து ஆய்வும் செய்து வருகிறார்கள் .
மில்லென்னியம் The Millennium Seed Bank (MSB) விதைகள் வங்கியில் 240 கோடி விதைகள் இருக்கின்றன. இவை 39 ,௦௦௦ தாவரங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை.
is home to over 2.4 billion seeds, representing over 39,000 different species of the world’s storable seeds.
பூமியில் வேறெங்கும் இந்த அளவுக்கு விதைகள் சேகரிக்கப்பட்டது இல்லை. இந்த விஷயத்தில் கியூ கார்டனுக்கு உதவ உலகெங்கிலும் பார்ட்னர்கள் உள்ளனர்.


இந்த ஆராய்ச்சி நிலையம் நிலத்துக்கு அடியில் இருக்கிறது. லண்டன் மீது அணுகுண்டு விழுந்தாலும் விதைகளைக் கதிரியக்கம் தாக்காதபடி பாதுகாப்பு செத்துள்ளனர். வெள்ளம் வந்தாலும் பாதிக்காது (-20°C) மைனஸ் -20°சி டிகிரில் குளிர் நிலையில் விதைகளை வைத்துள்ளனர்.
மில்லன்னியம் என்னும் 2000 ஆவது ஆண்டில் இது துவக்கப்பட்டது . லண்டனிலுள்ள வெல்கம் ட்ரஸ்ட், ஆய்வுப்பணி விஷயங்களில், இதற்கு உதவி வருகிறது.
–subham—
Tags- விதைகள் வங்கி , பாங்கு , கியூ கார்டன்ஸ், தாவரவியல் பூங்கா, Millennium Seed Bank