அருணகிரிநாதர் /திருப்புகழ் பொன்மொழிகள்; பிப்ரவரி 2024 காலண்டர் (Post No.12,963)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,963

Date uploaded in London – –   28 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

30 திருப்புகழ் மணிகள் / மேற்கோள்கள் ஏப்ரல் 2020  காலண்டரில் l  வெளியானது; இதோ மேலும் 29 அருணகிரிநாதர் /திருப்புகழ் பொன்மொழிகள்

பண்டிகை நாட்கள் – 9 தை அமாவாசை; 16 ரதசப்தமி ; 24- மாசிமகம்.

சுபமுகூர்த்த தினங்கள் – 1, 2, 8, 11, 19, 22, 26

அமாவாசை -9;  பெளர்ணமி -24; ஏகாதசி விரத நாட்கள்—5, 19

பிப்ரவரி 1 வியாழக்கிழமை 

நினைத்தது எத்தனையில் தவறாமல்

நிலைத்த புத்திதனைப் பிரியாமல்

கனத்த தத்துவம் உற்றழியாமல்

கதித்த நித்தியசித்தருள்வாயே

xxxx

பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

கொடிதான துன்ப மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

குறைதீர வந்துகுறுகாயோ

xxxxx

பிப்ரவரி 3 சனிக்கிழமை

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய

     சகலசெல்வ யோக மிக்க …… பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து

     தவிபுரிய வேணு நெய்த்த …… வடிவேலா

xxxx

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை

கால னெனையணு காம லுனதிரு

     காலில் வழிபட …… அருள்வாயே

பிப்ரவரி 5 திங்கட்கிழமை

XXXX

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி …… வரவேணும்

XXXX

பிப்ரவரி 6 செவ்வாய்க்கிழமை 

யமன் வரும் போதும் முருகன் வந்து ‘அஞ்சாதே’ என்று சொல்லிக் காப்பாற்றுவானாம்: “ படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினால்பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் ”

XXXX

பிப்ரவரி 7 புதன் கிழமை

எமக் கயிற்றின் சிக்கி நி(ல்)லா முன் உன் மலர்ப் பதத்தின்

பத்தி விடா மனது இருக்கு(ம்) நல்

தொண்டர்க்கு இணையாக உன் அருள் தாராய்

xxxx

பிப்ரவரி 8 வியாழக்கிழமை 

குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகில் உடல்

போடாக் கொடுமை இடுமுன்

அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே

xxxx

பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை

புகலி வனப்பு ஏறப் புகல் மதுரை மன் வெப்பு ஆறத் திகழ்

பொடி கொ(ண்)டு புல் பாய் சுற்றிகள் கழு

பொருத சமர்த்தா குத்திர துரக முகக் கோதைக்கு இடை

புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே ..

XXXX

பிப்ரவரி 10 சனிக்கிழமை

லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத

அருள்வாயே ( நளின, அணிகள் கூடியமார்பில் அணையும் செந்நிறச் செல்வனே, உன்னை வணங்குகிறேன் என்று உன்னைப் போற்ற அருள் புரிக)

XXXX

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை

செம் பொன் பீலி உலா மயில் மாமிசை பக்கத்தே குற

மாதொடு சீர் பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய

பெருமாளே.( மயில் மீது,குறப் பெண்ணாகிய வள்ளியோடு சிறப்புற்று சிதம்பரத்தின் தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமாளே)..

XXXX

பிப்ரவரி 12 திங்கட்கிழமை

வெம் குண்டர் தம் குலகாலா …

பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு

நண்பும் பெறும் பெருமாளே. … (கொடிய சமணர் கூட்டத்துக்கு நமனாய்த் திகழ்ந்தவனே,கலை வல்லவன், கந்த பிரான் என்று உலகமே

தொழுது, பண்பும் உனது நட்பும் பெற்றுக் களிக்கும் பெருமாளே.)

XXXX

பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை 

நினைத்தது அளிக்கும் மனத்தையும் உருக்கும்

நிசிக்கரு அறுக்கும்       –பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்

நிறைப் புகழ் உரைக்கும்   –செயல் தாராய்

XXXX

பிப்ரவரி 14 புதன் கிழமை

“சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்

செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

xxxxx

பிப்ரவரி 15 வியாழக்கிழமை 

“ துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்

நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்

எனக்கோர் துணையாகும்

xxxxx

பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை

குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்

கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் …

(யானைமுகத்தைக் கொண்ட விக்ன விநாயகன்,  அங்குசம், பாசம் கையில் கொண்டவன், ஒற்றைக் கொம்பன்,பெரு வயிறன், முக்கண்ணன்,

வலிமை வாய்ந்தவன், கணபதி,)

xxxxx

பிப்ரவரி 17 சனிக்கிழமை

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்

நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை

இளையோனே ( துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும்

தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, சிவபெருமான் பெற்ற, மலை போன்ற உருவத்தன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே)

xxxxx

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை

துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட

நிக்ரக ( அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின்

பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே,

துஷ்டர்களை அழிப்பவனே)

பிப்ரவரி 19 திங்கட்கிழமை

தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா …

(மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட)

கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல்இசைநாடகம் என்ற)

முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே*,

xxxx

பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை 

தடக்கைத் தண்டு எடுத்துச் சூரரை வீரரை நொறுக்கிப்

பொன்றவிட்டுத் தூள் எழ நீறு எழ தகர்த்துப் பந்து அடித்துச்

சூடிய தோரண கலை வீரா (பெரிய கையில் தண்டாயுதத்தை

எடுத்து சூரர்கள் ஆன வீரர்களை பொடிபடுத்தி அழித்து, சின்னா

பின்னமாக்கி, புழுதி எழவும், சாம்பலாகும்படியும் உடைத்து, பந்தடிப்பதுபோல் அடித்து, வெற்றி மாலையைச் சூடியவனே, சகலகலைகளிலும் வல்ல வீரனே,)

xxxx

பிப்ரவரி 21 புதன் கிழமை

திருப் பொன் பங்கயத்துக் கேசவர் மாயவர் அறியாமல்

திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய சமர்த்தர்ப் பொன்

புவிக்குள் தேவர்கள் நாயகதிருச் சிற்றம்பலத்துள் கோபுர(ம்) மேவிய பெருமாளே. ( தாமரை மலரில் வீற்றிருக்கும் கேசவர், மாயவர் என்ற திருமால் அறிய முடியாதபடி, தாளத்துடன்,சாமர்த்தியமாக சிவபெருமான் நடனம் செய்த பொன்னம்பலத்தில் வந்து,குழுமிய தேவர்களின் நாயகனாக,சிதம்பரத்தின் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.)

xxxx

பிப்ரவரி 22 வியாழக்கிழமை

 எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர …

எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே … ((உலக மயக்கம் தீரவும், மமகாரம் நீங்கவும், உனது திருவடியைப் பெறவும், மவுன உபதேசத்தை அருள்க )

.xxxx

பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை

களிகூர என்றனுக்கு மயிலேறி வந்து …

முத்தி கதியேற அன்பு வைத்து உன் அருள்தாராய் …( (மகிழ்ச்சி மிகுந்து ஏற்பட,

நீ எனக்காக மயில் மீது ஏறி வந்து, முக்தி வீட்டை அடைய, என்மீது அன்பு வைத்தருள்க.)

xxxx

பிப்ரவரி 24 சனிக்கிழமை

நொதியா முன் எடுமின் யாக்கையை என இடு காட்டு எரி

இடை கொ(ண்)டு போய்த் தமர் சுடுநாளில்

எயினர் குல உத்தமை உடன் மயில் மேல் கடிது எனது உயிர்

காத்திட வரவேணும் … (தூக்கடா பிணத்தை என்று உறவினர் விரைகையில் நீ

வள்ளியோடு மயில் ஏறி என் உயிரைக் காப்பதற்கு வரவேண்டும்.)

xxxx

பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை

வளமொடு செந்தமிழுரைசெய … சொல் வளம், பொருள் வளத்துடன்

செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் புகழ,

அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே … அப்பாடல்களைக்

கேட்டு அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக.

xxxxx

பிப்ரவரி 26 திங்கட்கிழமை

பத்தியால் யானுனைப் …… பலகாலும்     பற்றியே மாதிருப் …… புகழ்பாடி

முத்தனா மாறெனைப் …… பெருவாழ்வின்     முத்தியே சேர்வதற் கருள்வாயே

xxxxxx

பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை 

திருப்புகழ் படித்தால் இடர்கள் பறந்தோடும் :இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் எனவோதும்”

பிப்ரவரி 28 புதன் கிழமை

“ துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்

நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்

எனக்கோர் துணையாகும்

சொலர்க்கறிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்த பகை அறுத்து எறிய உறுக்கி எழு

மறத்தை நிலை காணும்”

xxxx

பிப்ரவரி 29 வியாழக்கிழமை 

ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம்

வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் ஓத

கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக

ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு

மார்பன் அரி கேசன் மருகா எனவே ஓத மறை

ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே

*********

30 திருப்புகழ் மணிகள் / மேற்கோள்கள் (Post No. …

Tamil and Vedas

https://tamilandvedas.com › 30-தி…

·Translate this page

28 Mar 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. ஏப்ரல் 13 … TAGS – ஏப்ரல் 2020 காலண்டர், திருப்புகழ்பொன்மொழிகள்.

–subham—

TAGS- திருப்புகழ், அருணகிரிநாதர், பொன்மொழிகள் , பிப்ரவரி 2024 , காலண்டர்

Leave a comment

Leave a comment