முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்! – 3 (Post No.12,968)

 ஆடுதின்னாப்பாளை

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,968

Date uploaded in London – –   29 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 3

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

XXXXX

21 .ஆதண்டம் காய் வற்றலிட்டு உண்டியுடன் உபயோகித்துவந்தால் பித்த ரோகங்களைக் கண்டிக்கும்; சகல பத்தியத்திற்கு உபயோகிக்கலாம்.

XXXX

22 . கபால வலிக்கு : ஆடுதின்னாப்பாளை சாறு– வ படி எடுத்து நல்லெண்ணெய் அரைப்படி  கலந்து மென் குப்தமாய்க் காய்ச்சி வாரத்திற்கிருமுறை தலை முழுகி வந்தால் மண்டைக்குள் பீனிசம், சிறை பாரம் தீரும் .

xxxx

23 . ஆவாரை வேரின் பட்டை, விஷ்ணுகாந்தி, வகைக்கு எலுமிச்சங்காய்ப் பிரமாணம் அறைத்து பசும்பாலில் கலக்கி மூன்றுநாள் கொடுக்க இரத்த பிரிமியம் தீரும்.

xxxx

24 . மூக்கில் ரத்தம் வருவதை நிறுத்த :-ஆடாதோடையிலைச்சாறும் தேனும் சமனிடை கலந்து ஒரு பலம் கொடுக்கவும் ; இப்படி மூன்று நாள் கொடுக்கவும். மூக்கினால் ரத்தம் வருவது நிவர்த்தியாகும்.

xxxx

25.அறையாப்புக்கட்டிக்கு :-ஆடுதின்னாப்பாளைசமூலம்  வசம்பு  இரண்டும் சமனிடை எடுத்து நன்றாய் இடித்துக் கட்டியின் மேல் பில்லை யாக வைத்து  அந்த அளவுக்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதின்மேல் வைத்து கட்டிவைக்கவும். இப்படி மூனு கட்டுக் கட்ட அறையாப்புக்கட்டி கரையும்.

xxxx

26.பதினெட்டு எலிக் கடிக்கும் சாந்தி : ஆதளை சமூலத்தை பால்விட்டரைத்து பாலில் கலக்கிக் கொடுத்து வந்தால் 18 எலி விஷமும் நிவர்த்தியாகும் . பார்வதி பரணீயம் என்னும் விஷ வைத்திய சிந்தாமணியில் சகலவித சர்ப்பங்களுக்கும், தேள், நட்டுவாக்காலி ,வண்டு நாய், பூனை, எலி முதலிய எல்லா விஷத்துக்கும் அந்தந்த விஷக்கடியின் அடையாளத்துடன் மருந்துகளும் மந்திரங்களும் சொல்லியிருக்கின்றது.; யாவரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.  

xxxx

27.  ஆவாரங்கொழுந்தை சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் தெளித்து வறுத்து சீலையில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் முளை மூலத்தின் முனை கருகும். அதனுடைய கடுப்பும் ஊரலும் தணியும்.

xxxxx

28.ஆனை திப்பிலியை இடித்து வஸ்திரகாயம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட ஈளை, இருமல், கபம் வாய்வுகள் இதுகள் தீரும் . ஜீரண சக்தியுண்டாகும்.

xxxx

29.ஆகாசத் தாமரை இலையை இடித்து உலத்தி, வடிகட்டின தூளும் கருங் குருவை அரிசி மாவும் ஒன்றாய்க்கலந்து, பிட்டவயல் செய்தெடுத்து  நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து  உள்ளுக்குள் கொடுத்துவிட்டு மாதுளங்கொழுந்தை  காடியில் அவித்து  மூலத்தில் வைத்துக் கட்டினால் முளை விழுந்துவிடும்.

xxxx

30.ஆடாதோடை ,தூதுவளை ,பற்பாடகம், பங்கம் பாளை, சிறுவழுத்தலை சுக்கு, சந்தனம், நன்னாரி வகைக்கு கால் பலம் எடுத்து  இடித்து 2 படி தண்ணீர் விட்டு   கால் படியாக  வற்றக்  காய்ச்சி  இருத்துக்கொடுக்க குளிர்  சுரம்  நிவர்த்தியாகும் .பார்வதீ பரணீயமென்னும் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் சர்வ சுர மாத்திரையைக் கொடுத்து இந்த கிஷாயமும் கொடுத்தால் 64  சுரத்தில்  எந்த சுரமானாலும் உடனே தீரும்.

—subham—-

Tags- முனிசாமி முதலியார்,   மூலிகை அதிசயங்கள் 3, ஆடாதோடை,  மூக்கில் ரத்தம், எலிக்கடி, விஷக்கடி, வைத்தியம்

Leave a comment

Leave a comment