QUIZ  யமுனோத்ரி, கங்கோத்ரி பத்து QUIZ (Post No.12,967)

Gangotri Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,967

Date uploaded in London – –   29 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL NO 101

‘சார் தாம்’ எனப்படும் நான்கு இமய மலை புனிதத் தலங்களில் முதலில் நிற்பது  யமுனோத்ரி ; ஏனைய மூன்று கங்கோத்ரி, கேதார்நாத்,பத்ரிநாத் .

1.யமுனோத்ரி எங்கே இருக்கிறது ? 2.எப்படிப் போவது எளிதானது?

XXXX

2.அங்கே தரிசனம் செய்ய என்ன கோவில் இருக்கிறது ?

XXXX

3.யமுனை நதி உற்பத்தியாகும் இடத்துக்கு என்ன பெயர் ?

XXXX

4.யமுனோத்ரியில் வேறு என்ன கோவில்கள் உள்ளன ?

xxxx

5.யமுனோத்ரியில் உள்ள இயற்கை அதிசயம் என்ன ?

XXXX

6.கங்கோத்ரி எங்கே இருக்கிறது எப்படிப்போவது எளிதானது ?

xxxx

7.கங்கோத்ரியின் சிறப்பு என்ன ?

xxxx

8.தோன்றும் இடத்தில் கங்கை நதிக்கு என்ன பெயர் ?

xxxx

9..கங்கோத்ரி அருகில் வேறு என்ன கோவில்கள் உள்ளன ?

xxxx

10 . பைரவநாத் கோவில் எங்கே இருக்கிறது ?

xxxx

விடைகள்

1.உத்தராஞ்சல் அல்லது உத்தரகண்ட் எனப்படும் இமயமலை மாநிலத்தில் உள்ளது;  இங்குதான் யமுனை நதி உற்பத்தியாகிறது . கடல் மட்டத்துக்கு 3293 மீட்டர் உயரமான இடம்; .நன்றாகக் குளிரும்.

டேராடூன் அல்லது ஹரித்வாரிலிருந்து போகலாம். சம்பா, தேரி,பார்கோட் என்னும் இடங்கள்  அருகிலுள்ளன. 

xxxx

2.யமுனோத்ரி கோவில்( Yamunotri temple)  இருக்கிறது. யமுனை அன்னையை அங்கே தரிசிக்கலாம் . கோவிலில் நுழையும் முன்னர் திவ்ய சிலா என்னும் தெய்வீகப் பாறையை வணங்கவேண்டும்.

xxxxx

3.சப்தரிஷி குண்டம் (Saptarishi Kund) என்னும் இயற்கை வனப்புமிக்க ஏரியில்தான் யமுனை நதி தோன்றுகிறது . சங்க இலக்கியத்தில் அதைத் தொழுனை நதி என்று குறிப்பிடுகிறார்கள்.

XXXX

4.சோமேஷ்வர்  (Lord Someshwar) என்னும் சிவ பெருமான் வீற்றிருக்கும் கர்சாலி ( Kharsali) கோவில் முக்கியமானது இதை பாறைகளைக் குடைந்து உருவாக்கியுள்ளனர் .மூன்று அடுக்கு உயரமானது .

 XXXXX

5.கடுமையான இமயமலைக் குளிருக்கு இடையே கொதிக்கும் வெந்நீர் ஊற்றுகள் இருப்பது பெரிய இயற்கை அதிசயம்! இதில் சுகமாகக் குளித்துவிட்டு மக்கள் சார்தாம் யாத்திரையைத் துவங்குவது வழக்கம் . சூர்ய குண்டம் என்னும் (Surya Kund, the thermal spring) ஊற்றில் 190 டிகிரி (190°F), பாரன்ஹீட் வெப்பத்தில் தண்ணீர் பொங்கும். ஜானகி சட்டி என்னும் இன்னுமொரு வெந்நீர் (Janki Chatti is another well known thermal springs) ஊற்றும் அருகில் உள்ளது .

XXXX

6.இதுவும் உத்தராஞ்சலின் உத்தரகாசி மாவட்டத்தில்தான் இருக்கிறது. ஆயினும் யமுனோத்ரியிலிருந்து 227  கிலோமீட்டர் தொலைவு. ஏனெனில் நேராக இணைக்கும்  சாலை கிடையாது. பார்கோட் என்னும் இடத்திற்கு வந்து கங்கோத்ரிக்குச் செல்ல வேண்டும்

XXXX

7.இங்குதான் இந்துக்களின் மிகப்புனிதமான கங்கை நதி உற்பத்தியாகிறது . உலகிலேயே இந்துக்கள் மட்டுமே நதிகளை தாயாராக வணங்குகின்றனர். உலகிலேயே இந்துக்கள் மட்டுமே நதிகள் தோன்றும் இடங்களை புனிதமாகக்கருதி கோவில் கட்டியுள்ளனர். இந்துக்கள் இந்த நாட்டிலேயே தோன்றியதால் ரிக்வேத  காலம் முதல் கங்கையையும் சரஸ்வதியையும் வணங்கி வருகின்றனர் .

xxxx

Go mukhi 

8.பாகீரதி என்ற பெயரில் கங்கை பிறக்கிறாள் ; வானுலகத்திலிருந்து விழுந்த கங்கை நதியை சிவபெருமான் தனது தலையில் தாங்கி வேகத்தைக் குறைத்த இடம் கங்கோத்ரி.  கடல் மட்டத்திலிருந்து 4200  மீட்டர் உயரத்திலுள்ள கோ முகி பனி க்கட்டு  ஆற்றில்தான் நதி  உற்பத்தி ஆகிறது.

xxxx

9.ஜலமக்ன சிவலிங்கம் (Jalamagna Shivling, a natural rock Shivling) இங்கே இருக்கிறது.இது  இயற்கையான பாறை; குளிர்காலத்தில் மட்டுமே காண முடியும். நந்தவனம் என்னும் இடத்திலிருந்து ஆறு கி.மீ மலை ஏறிச் சென்றால் இந்த சிவலிங்கப் பாறையைக் கண்டுகொண்டே நடக்கலாம்.

xxxx

10.கங்கோத்ரியிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற பைரவநாத் சிவலிங்கக் கோவில் இருக்கிறது. ஜாட் கங்கா நதியும் பாகிரதி நதியும் சங்கமம் ஆகும் இடம் இது. 

இமய  மலையிலுள்ள எல்லா புனிதத்தலங்களும் இப்போது சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது.

Bhairava Temple

–subham—

Tags- QUIZ யமுனோத்ரி, QUIZ , கங்கோத்ரி ,பத்து, சார் தாம்

Leave a comment

Leave a comment