நன்றாகத் தூங்குவதற்கு நல்ல அறிவுரை (Post No.12,971)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,971

Date uploaded in London – –   30 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

யு எஸ் ஏ டுடே U S A TODAY என்ற நாளேட்டில் 30 -1-2024  வந்த  கட்டுரையின் முக்கிய அம்சங்களைத் தருகிறேன் ; நல்ல தூக்கம் / உறக்கம் இருந்தால்தான் மூளை நன்றாக வேலை செய்யும்; எரிச்சலோ கோபமோ வராது .

நம்மில் பலரும் உறங்க முடியாமல் இரவில் படுக்கையில் புரளுகிறோம் ; டெலிவிஷனைப் போடுகிறோம் அணைக்கிறோம் ; மொபைல் போனில் மெஸேஜ் கொடுக்கிறோம் ; படிக்கிறோம்; பின்னர் அணைக்கிறோம் ; பாட்டுக்கேட்கிறோம் ; இப்படியெல்லாம் செய்தாலும் தூக்கம் வரவில்லை ; ஒரு முறை பாத்ரூம் போய்விட்டு வருகிறோம் ; அடக்கடவுளே ! இரவு ஒரு மணி ஆகிவிட்டதே ; நாளைக்கு வேலைக்குப் போகமுடியுமா ? அல்லது நாளைக்கு பரீட்சை எழுத முடியுமா? என்றெல்லாம் கவலைப்படுகிறோம் ; இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு தூக்க நிபுணர் சொல்லும் யோஜனைகளைக் கேட்போம் .

XXXX

தூக்கம் வரவில்லையே என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள் ; கஷ்டப்பட்டு தூங்க முயற்சிக்காதீர்கள்.

XXXX

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கப்போக வேண்டும் ; குறிப்பிட்ட நேரத்தில் எழுதிருக்கவேண்டும்; இதை மாற்றிக்கொண்டே இருந்தால் உடலிலுள்ள  கடிகாரம் குழம்பிப்போகும் . அது உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்.

XXXX

சிலருக்கு இரவில் ஏதேனும் நொறுக்குத் தீனி சாப்பிட் டால்தான் தூக்கம் வரும் ; ஆனால் பொதுவான விதி காலையில் ராஜா போல சாப்பிடு ; மதியத்தில் இளவரசன் போல சாப்பிடு; இரவில் பிச்சைக்காரன் போல சாப்பிடு ; அதாவது — காலையில் மிக அதிகம் ; மதியத்தில் அதைவிடக்குறைவு ; இரவிலோ மிக சொற்பம் என்று சாப்பிட்டுப் பழகுவது நல்லது “Breakfast of kings, lunch of princes, dinner of paupers,” works best.

XXXX

மதுபானம் குடித்துவிட்டு தூங்குவது நல்லதல்ல; ஆரம்பத்தில் இது உதவாலாம்; ஆயினும் இதையே பழக்கமாகக் கொண்டால், பின்னர் தூக்கத்துக்கு தடங்கல் ஏற்படும் .

XXXX

காபி, டீ, கொக்ககோலா போன்றவற்றில் caffeine கஃபைன் என்னும் பொருள் இருக்கிறது ; அதைச் சாப்பிவிட்டால் தூக்கம் கெட்டுப்போகும் ; மதியத்தில் கஃபைன் சாப்பிடுவதைக்கூட குறைத்துப் பார்க்கலாம்.

XXXX 

மன உளைச்சல் இருந்தால் அதிலிருந்து விடுபட, தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

XXXX

மதியம் தூங்கும் பழக்கத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

XXXX

காலையில் வெய்யிலில்  நில்லுங்கள்; இது உடலில் உள்ள இயற்கையான சுழற்சியை circadian rhythms ஒழுங்குபடுத்தும்.

xxxx

நீல நிற விளாக்குகள் அல்லது  கம்பியூட்டரிலிருந்து வரும் நீல தவிருங்கள்; நீல நிறத்தை,  மூளை காலைநேரம் என்று எண்ணி மயங்கிவிடுகிறது .

xxxx

தூங்கப்போகும் முன், விளக்குகளை அணையுங்கள்; போன்கள் , கம்பியூட்டர் முதலிய கருவிகளையும் அணையுங்கள்.

xxxx

ஏதேனும் சபதம் இருந்தால்தான் தூக்கம் வரும் என்றால் மின்சார விசிறி ஒலி  நல்லது.

xxxx

மொபைல் போன் முதலியவற்றை சார்ஜ் செய்தாலும் அதை நிமிர்த்தி வைக்காமல் குப்புற வையுங்கள். மார்பின் மேல்  வைத்துக்கொண்டு தூங்காதீர்கள்  .

xxxx

தூக்க மருந்து சாப்பிட்டு தூங்குவது கெட்டதல்ல; ஆனால் அலர்ஜி, இருமல் தலைவலி முதலிய சில வியாதிகளுக்கான மருந்தை தூக்கம் வருவதற்காக பயன்படுத்துவது நல்லதல்ல.

–subham— 

 tags- நல்ல தூக்கம் , நல்ல உறக்கம், வர வழிகள் 

Leave a comment

Leave a comment