QUIZ பத்ரிநாத் பத்து QUIZ(Post No.12,970)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,970

Date uploaded in London – –   30 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

QUIZ SERIAL No.102

1.சார் தாம் (Char Dham) எனப்படும் இமய மலையின் நான்கு புனிதத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத் (Badrinathஎங்கே இருக்கிறதுஎப்படிப் போகலாம் ?

XXXX

2.பத்ரிநாத் தலத்தில் யாரை தரிசனம் செய்யலாம்?

xxxx

3.பத்ரிநாத் அருகிலுள்ள வெந்நீர் ஊற்றின் பெயர் என்ன ? பத்ரீ என்றால் என்ன ?

xxxx

4.இங்குள்ள பிரம்ம கபாலத்தின் சிறப்பு என்ன ?

XXXX

5.பத்ரியில் எந்தெந்த அடியார்களுக்கு கோவில்கள் அல்லது சந்நிதிகள் உள்ளன ?

xxxx

6.பத்ரீ நாராயணனை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் யார் ?

XXXX

7.பத்ரிநாத்தில் வசுதாரா என்பது என்ன ?

XXXX

8.கோவில் எப்போது திறந்து எப்போது மூடப்படும் ?

XXXX

9.பத்ரிநாத்தில் நடக்கும் முக்கிய திருவிழா  எது ?

XXXX

10.ரிஷிகேஷ் – பத்ரிநாத் வழியில் தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள் எவை ?

xxxxx

விடைகள்

1.இமய மலையில் உத்தரகண்ட்  மாநிலத்தில் ரிஷிகேஷ் நகரிலிருந்து 300  கி.மீ  பயணம் செய்து பத்ரிநாத்தை அடையலாம். ஹரித்வாரிலிருந்து 323  கிமீ. இது 108  வைணவன புனிதத் தலங்களில் ஒன்று  ;

மலையில் 10,400 அடி உயரத்தில் இருக்கிறது ; கடும் குளிர் இருக்கும் . எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்களில் ஒன்று (தானாக உதித்த). அலக்நந்தா ஆற்றின் கரையில் இருக்கிறது. ஆதி சங்கரர் ஸ்தாபித்த கோவில் இது.

XXXX

2.அங்கே விஷ்ணுவைத் தரிசிக்கலாம் . கோவிலில் பத்ரி நாராயணன் , அரவிந்த வள்ளித் தாயார், கருடன், நாரதர், நர நாராயணர்களைத் தரிசனம் செய்யலாம் . பத்ரிநாராயணன் மட்டும் சாளக்கிராம கல்லினால் ஆன மூர்த்தி; மற்றவை உற்சவ மூர்த்திகள் .

பத்ரீ நாராயணன் நான்கு கைகளுடன் கூடிய சதுர்புஜதாரியாய் சக்கரம் சங்கம் ஏந்தி காட்சி அளிக்கிறார். மற்ற இரண்டு கைகள் யோக முத்திரையில் உள்ளன; பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறார் . தபஸ்வியாக உள்ள பெருமாளின் வலப்புறத்தில் குபேரன், கருடன்; இடப்புறத்தில் நாரதர், உத்தவர், நரர், நாராயணர் .

XXXX

3.தப்தகுண்டம் என்பது வெந்நீர் ஊற்றின் பெயர்; பத்ரீ என்றால் இலந்தைப்பழ மரம் . அது இந்த க்ஷேத்திரத்தில் தல மரம் ; இறைவன் பத்ரீ நாராயணன்  அதன் கீழ் உடகார்ந்து அருள்பாலிப்பதாக ஐதீகம் .

XXXX

4.கங்கையின் கரையிலுள்ள பெரிய பாறை ஒன்றை பிரம்ம கபாலம் என்பார்கள் ; அங்கு முன்னோர்களுக்கு சிராத்தம் செய்தால் ஈரேழு தலைமுறைகள் மோக்ஷத்தை அடைவார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.

XXXX

5.ஆதி சங்கரருக்கு தனிக்கோவில் இருக்கிறது . கோவிலுக்குப் பின்னாலுள்ள நரசிம்மர் கோவிலில் சுவாமி தேசிகன், ராமானுஜர் சந்நிதிகள் உள்ளன .

XXXX

6.பெரியாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் 22  பாசுரங்கள் பாடிப் போற்றியுள்ளனர்.

XXXX

7.வசுதாரா என்பது ஒரு நீர்வீழ்ச்சி; அதன் நீர்த்திவலைகள் உடலில் பட்டால் நல்லது என்று பல பக்தர்களும் அருகில் சென்று நிற்பார்கள் . பத்ரிநாத் கோவிலைச்சுற்றி நாற்புறமும் பனிபடர்ந்த அல்லது நீல மலைகளைக் காணலாம் ; கோவிலுக்கு எதிரே நர நாராயண பர்வதமும் வலப்புறத்தில் நீலகண்ட பர்வதமும் இந்த இடத்திற்கு அழகூட்டுகின்றன.

XXXX

8.பனிக் காலத்தில் ஆறு மாத காலத்திற்கு கோவிலை மூடிவிடுவார்கள் தீபாவளி சமயத்தில் கோவில் மூடப்படும்; மீண்டும் சித்திரா பெளர்ணமி சமயத்தில் திறக்கப்படும் . கோவில் மூடிய ஆறு மாதமும் பாண்டுகேஸ்வர் என்னும் ஊரில் வாசுதேவர் கோவிலில் மூர்த்திகளை வைத்து பூஜிக்கிறார்கள் .

XXXXX

9.மாதா மூர்த்தி கா  மேளா  Mata Murti Ka Mela என்பது பத்ரிநாத்தில் நடக்கும் முக்கிய திருவிழா ஆகும் . ஆகாசத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கை ஆற்றைக் கொண்டாடும் விழா இது;  பத்ரிநாத் அன்னை அந்த நதியை 12 பிரிவுகளாகப் பிரித்தாள்.

xxxx

10.ஹரித்வார் – பிரம்மகுண்டம் ஸ்நானம் –

24 கி.மீ. யில் ரிஷிகேஷ்–

தேவப்  பிரயாகை —

ருத்ரப் பிரயாகை–

நந்தப் பிரயாகை–

ஜோஷிமட் —

விஷ்ணுப் பிரயாகை–

அலக்நந்தா – தோலிகங்கா சங்கமம் – விஷ்ணு கோவில்–

ஹனுமான் சட்டி– கந்தமானத பர்வதம் —

பத்ரீகாஸ்ரமம் எனும் பத்ரிநாத்

—subham—

Tags- பத்ரிநாத், quiz, Char Dham, Badrinath

Leave a comment

1 Comment

  1. Athmanathan Seetharaman's avatar

    There’s river Saraswati flowing nearby and merging with Alaknanda where Bhim Pul, a wooden bridge stretching across the river is seen. Chinese border is visible from a distance. The road to Badrinath will be permanently closed according to an old prediction. I expect that to happen in a few years ‘ time.

Leave a comment