

Date uploaded in London – – 31 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
தூக்க மாத்திரை சாப்பிடலாமா? உறக்கத்தைப் பாதிக்கும் இரண்டு நோய்கள் !
நம்முடைய நல்ல தூக்கத்தைக் கெடுக்கும் இரண்டு நோய்களை பற்றி அறிவது நன்மை பயக்கும் . உடலில் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனுக்கு மெலடோனின் / மெலடானின் Melatonin என்று பெயர் . 55 வயதைத் தாண்டியவர்களுக்கு மாதக்கணக்கில் தூங்குவது கஷ்டமாக இருந்தால் டாக்டர்கள் இதை எழுதிக்கொடுப்பார்கள் . பிரிட்டனில் டாக்டர்கள் சீட்டு எழுதிக் கொடுத்தால் (On Prescription) மட்டுமே மருந்துக் கடைக்காரர் கொடுப்பார்கள் . பல நாடுகளில் நீங்களே வாங்கலாம் ; ஆனால் அது வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். ஆகையால் டாக்டர்களிடம் போனால் சரியான டோஸ் / அளவு தருவார்கள் . Melatonin is a hormone that occurs naturally in your body. Brand names in Britain: Circadin, Adaflex, Ceyesto, Slenyto, Syncrodin.
xxxx
உறக்கத்தைப் பாதிக்கும் இரண்டு நோய்கள்
தூக்கமின்மை – இன்சோம்னியா – INSOMNIA
மூச்சுத்திணறல் – ஸ்லீப் அப்னியா – SLEEP APNEA
மெலடானின் குறைவினால் ஏற்படும் நோய்களுக்கு மருந்து, மாத்திரை உதவும் .
உடலில் இயற்கையாகச் சுரக்கும் மெலடானினை செயற்கையாக தயாரித்துக் கடைகளில் விற்கிறார்கள் ;. 55 வயதைக் கடந்தவர்களுக்கே டாக்டர்கள் இதைக் கொடுப்பார்கள் . ஜெட் லாக் JET LAG எனப்படும் விமானப் பயணக் களைப்பு , உளைச்சல், உடலில், காலில் வலி முதலிய பல கார ணங்களை இது சமாளிக்கும் . உடனே தூக்கம் வர உதவும். ஆயினும் தூங்கும் நேரத்துக்கு ஒரு சில மணி நேரம் முன், மாத்திரையை எடுக்கலாம். ஏனெனில் இது வேலை செய்ய இரண்டு மணி நேரம் ஆகும்.
பொதுவாக மூன்று மாதங்களுக்கு மட்டுமே இதை உபயோகிக்கலாம்.. சிலருக்கு இது தலைவலி, வாந்தி களைப்பு ஆகியவற்றைத் தரலாம். மதுபானம் சாப்பிடுவதும் புகை பிடிப்பதும் இதன் செயல்பாட்டினைத் தடுத்துவிடும்; மூலிகை மருந்துகளை உபயோகிப்பது நல்லதல்ல அப்படி எடுத்தால் எப்போதும் தூக்கக் கலக்கம் (DROWSINESS) இருக்கும்
Melatonin takes around 1 to 2 hours to work.
You’ll usually take melatonin for up to 13 weeks but some people may need it for longer.
Some people may get a headache, or feel tired, sick or irritable the day after taking melatonin.
Drinking alcohol or smoking while taking melatonin can stop it working as well as it should.
If you’re taking melatonin to help you sleep, do not take any herbal remedies which may affect sleep at the same time. This may make you very drowsy.
XXXX


ஸ்லீப் அப்னியா SLEEP APNEA
மூச்சுத்திணறி பெரிய குறட்டை விட்டு, பக்கத்தில் தூங்குவோரையும் எழுப்பிவிட்டு கஷ்டப்படுவோருக்கு , கஷ்டப்படுத்துவோருக்கு மூச்சு விட உதவும் கருவி உதவும் . ஸ்லீப் அப்னியா SLEEP APNEA என்று அழைக்கப்படும் இந்த நோய் ஏன் ஏற்படுகிறது என்றால் நாக்கு நழுவி மூச்சுக் குழாயின் / சுவாசக் குழாயின் மேல் விழுகிறது. உடனே பெருமூச்சுவிட்டு மீண்டும் சுவாசிக்கும் சக்தியைப் பெறுவோம் ; அதாவது மூச்சு நின்று மீண்டும் துவங்கும். மூச்சு விடும் கருவியைப் பொருத்திக்கொண்டு தூங்கினால் அது எப்போதும் சுவாச வழியைத் திறந்து வைக்கும் .
Sleep Apnea: Sleep apnea occurs when individuals breathing starts and stops periodically throughout the duration of sleeping causing excessive snoring or gasping for air.
மூச்சுத் திணறி மீண்டும் மூச்சுவிடும் நோயைப்பற்றி 18 ஆண்டுகளுக்கு ஆராய்ந்தார்கள் . 48 வயதில் ஆய்வு துவங்கியது அவர்களில் 58 சதவிகித்தனர் மட்டுமே 66 வயது வரை வாழ்ந்தார்கள்; அதாவது குறைவான ஆயுளில் இறந்தது தெரிந்தது. இதே ஆராய்ச்சியில் பங்கு கொண்டவர்கள் 94 சதவிகிதம் கூடுதல் ஆண்டுகள் வசித்தனர் . அவர்களுக்கு இந்த நோய் கிடையாது ; இறந்தவர்களில் பலருக்கு மாரடைப்பு , ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறந்தனர் . ஆகையால் நோயைக் குணப்படுத்த CPAP மெஷினை / கருவியைப் பயன்படுத்த வேண்டும் ; முதலில் அது ஒரு தொல்லையாக இருக்கும் ; பின்னர் பழகிப்போய்விடும்
CPAP (continuous positive airway pressure)
XXXX
One study followed people with and without sleep apnea for 18 years, starting at age 48. In the group that had sleep apnea, only 58% were still alive at age 66, compared to 94% of those without sleep apnea. That’s a 6- or 7-fold increased risk of death, mainly due to heart attack and stroke, “so it’s really important to get it treated,”
The standard therapy, called CPAP (continuous positive airway pressure), which uses a machine to keep airways open, can be cumbersome and hard to stick with, but most patients can adjust over time, experts said.
xxx
கண்ட இடத்தில் கண்ட நேரத்தில் தூங்குவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. அவர்களுக்குச்ச் சரியான தூக்கம் கிடைக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது . ஏழு மணி எரம் முதல் ஒன்பது மணி நேரம் வரை தூங்குவது நீண்ட கால ஆரோக்கியத்தை அளிக்கிறது ;எனக்கு 5 அல்லது 7 மணி தூக்கம் போதும் என்று பெருமை அடித்துக்கொள்ளுவோர் பிற்காலப் பிரச்சனைகளுக்கு வித்திடுகிறார்கள் என்றே அர்த்தம்
Falling asleep anywhere anytime isn’t the sign of a good sleeper. It’s the sign of someone who is sleep-deprived.
Evidence suggests seven to nine hours of sleep provides the most optimal health and well-being. People who think they can get away with sleeping less are likely setting themselves up for health problems later on.
Lying in bed does not count as time sleeping.
படுக்கையில் படுக்கும் நேரம் எல்லாம் தூங்கும் நேரம் அல்ல; அதைக் கணக்கில் சேர்க்கக்கூடாது .
மன உளைச்சல் தராத சில செயல்களைச் செய்யலாம். நல்ல கதைகளைப் படிக்கலாம் ; படங்களைப் பார்க்கலாம்
முக்கியமாக அறிய வேண்டிய விஷயம் ; நாம் தூங்கினாலும் மூளை தூங்காது ; அப்போதுதான் அது வேகமாக வேலை செய்து அசுத்தங்களை அகற்றுகிறது ; நினைவில் வைக்க வேண்டிய முக்கிய விஷயங்களை சேகரித்து வைக்கிறது ; அடுத்த நாள் வேலைக்கு ஆயுத்தத்தமாகிறது
Finally, experts say, sleep is not a time when the brain is “turned off.” The brain is not passive during sleep, but instead is actively firing, clearing waste, storing memories and preparing for the day.
வாழ்க தூக்கம்! வளர்க தூக்கம்!!
–subham –
Tags- உறக்கம் தூக்கம் , இரண்டு நோய்கள் , மெலடானின் , தூங்க உதவும் கருவி , மெஷின்