தைப்பூச நன்னாளில் வழிபாடு! – 2 (Post No12,972)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,972

Date uploaded in London –  –   31 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

25-1-2024 அன்று ஞானமயம் சார்பில் நடைபெற்ற தைப்பூச நன்னாள் விழாவில் ZOOM வாயிலாக இணையதளத்தில் நடந்த ஒளிபரப்பில் ச.நாகராஜன் ஆற்றிய உரையின் இறுதிப் பகுதி.

இதை www.facebook.com/gnanamayam என்ற தளத்தில் கேட்கலாம்.

தைப்பூச நன்னாளில் வழிபாடு! – 2

ச.நாகராஜன்

சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து

தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லராகில்
அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
ஆ உரித்துத் தின்னும் புலையரேனும்
கங்கைவார் சடைகரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

என்று பாடி அருளினார் அப்பர் பிரான்.

சங்க நிதி, பத்ம நிதி இரண்டும் தந்து புவியுடன் வானை அரசாளத் தந்தால் கூட அவற்றை மதிக்க மாட்டோம். அவர் சிவபிரானை வழிபடாவிடில்.

அந்த செல்வம் ஸ்டாக் மார்க்கெட்டில் 1641 புள்ளி குறைந்தாற் போல திடீரென்று குறையும். ஆனால் அங்கமெல்லாம் தொழுநோய் கொண்டு ஆ உரித்துத் தின்னும் புலையன் என்றாலும் அவன் சிவபிரானை வழிபடுவானாகில் அவனே நான் வணங்கும் கடவுள் என்றார் அவர்.

சிவபிரானையே இப்படி மதிக்கும் போது தகப்பனுக்கே பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறிய தகப்பன் சாமியான முருகனுக்கு எவ்வளவு மகிமை என்பதைச் சொல்லவே வேண்டாம்.

முருகனின் பெருமை அபாரமானது. சூரபன்மன் பல அண்டங்களில் தனது ரிஸர்வ் படையை வைத்திருந்தான். முருகபிரானோ முதலில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்து முதலில் ரிஸர்வ் படைகளை ஒழித்தார்.

சூரன் பயந்தான். பின்னர் அவனை வதம் செய்தார் முருகபிரான்.

முருகனை எப்படி வழிபடுவது?

தத் சிந்தனம்

முதலில் அவனையே நினைக்க வேண்டும்.

தத் வாக்யம்

அவனைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

தத் அவலோக்யம்.

அவன் புகழ் பேசும், பெருமை கூறும் நல்லோருடனேயே நெருங்கிப் பழக வேண்டும்.

தத் சிந்தனம், தத் வாக்யம் தத் அவலோக்யம் என்ற இந்த மூன்றையும் கடைப்பிடித்தால் வருவது

தத் பரம்.

அவனாகவே ஆகி விடலாம்.

இப்படி வழியை நாரத பக்தி சூத்திரத்தில் நாரதர் கூறுகிறார்.

இந்த பக்தி வழியால் பெறுவது என்ன?

அதையும் அவரே கூறுகிறார்.

புமான் அதாவது மனிதனானவன்,

த்ருப்த பவதி

திருப்தியை அடைகிறான். எளிதில் அடைய முடியாதது திருப்தி. அதை ஒருவன் அடைய  முடியும்.

பின்னர் அம்ருத பவதி. எப்போதும் இன்பநிலை அவனை ஆட்கொள்ளும்.

அந்த அம்ருத நிலையை அவன் அடைகிறான்.

பின்னர் சித்த பவதி.

சித்தர் என்றால் அனைவருக்கும் தெரியும். எண்வகை சித்திகளைப் பற்றி நாம் அறிவோம். அப்படி சித்தராக ஆகிறான்.

அருணகிரிநாதர் திருப்புகழில் அனைத்தையும் உரிய முறையில் வேண்டுகிறார்.

இக பர சௌபாக்யம் அருள்வாயே.

இக லோக சௌபாக்யம் மட்டுமல்ல, பர லோக சௌபாக்யம் அருள்வாயே என்கிறார்.

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி என்று கூறுகிறார்.

மதியால் வித்தகன் ஆனால் மட்டும் போதாது. அந்த வித்தக புத்தியைக் கொண்டு ஃப்ராடு வேலைகளில் ஈடுபடலாம். ஆகவே உடனேயே மனதால் உத்தமனாகி என்கிறார்.

இப்படி இரட்டை இரட்டையாக அவர் கூறும் மொழிகள் நாம் வேண்டுவனவற்றைத் தவறில்லாமல் வேண்டுவனவாக அமைகின்றன.

திருப்புகழைப் பாடாதே கோவிலுக்குச் செல்லாதே என்பவர் பக்கம் திரும்பிக் கூட பார்க்கக் கூடாது.

திருப்புகழைப் பழிப்பவர் என்ன ஆவர்?

இதையும் அருணகிரிநாதரே கூறுகிறார்:

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்

   செகுத்தவர் உயிர்க்கும் சினமாக

   சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

       திருப்புகழ் நெருப்பென் றறிவோம் யாம்

என்பது அவர் வாக்கு.

திருப்புகழை ஓதினால் என்ன கிடைக்கும்?

இதையும் அவரே விளக்குகிறார்:

நினைத்ததுமளிக்கும் மனத்தையுமுருக்கும்

   நிசிக்கருவறுக்கும் பிறவாமல்

   நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்

   நிறைப்புகழ் உரைக்குஞ் செயல்தாராய்.

நெருப்பையே எரிக்கும். அக்னிக்கு அக்னி என்கிறார் அவர்.

ஆகவே இதை ஓதுவோருடன் மட்டுமே இணைவோம், செல்வோம்!

If you come with You

If you don’t without you

If you appose inspite of you.

வந்தால் உன்னுடன். வராவிட்டால் நி இன்றி, எதிர்த்தால் உன்னையும் மீறி என்பதே இதன் பொருள்.

இந்த நன்னாள் முருகபிரான் வள்ளியை மணம் புரிந்த நாள். தெய்வானையுடன் ஏற்பட்ட ஊடல் தீர்ந்து முருகன் தெய்வானை வள்ளி ஆகிய மூவரும் ஒருங்கு கூடி பக்தருக்கு அருள் பாலிக்கும் நாள் இது.

பக்தன் ஒருவன் மலைப்பாதையில் செல்ல வேண்டி இருந்தது.

கடுமையான பாதை. முள் ஒரு பக்கம்; சகதி ஒரு பக்கம்.

‘கடவுளே எனக்கு உதவி புரிய மாட்டாயா’ என்று அவன் ஓலமிட்டான்.

பகவானின் குரல் கேட்டது  – உனக்கு என்ன பிரச்சனை என்று.

மலைப்பாதை கரடு முரடாக இருக்கிறதே; இந்த பாதை நல்ல பாதையாக மாறும் வரைக்கும் எனக்கு நீ உதவி செய்தால் போதும் என்றான் பக்தன். கடவுள் சரி என்றார்.

கடவுளுக்கும் பக்தனுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது – கடவுள் கூடவே வருவதாக. நான்கு பாதங்கள் பூமியில் தென்பட்டன. கடவுளின் பாதம் இரண்டு முன்னே செல்ல, பக்தனின் பாதம் பின்னே சென்றது.

நான்கு காலடிகளைக் கண்ட பக்தன் மனம் மிக மகிழ்ந்தான்.

பாதை இன்னும் கரடு முரடானது. திடீரென்று இரண்டு பாதங்கள் மட்டுமே தென்பட்டது.

பக்தன் அலறினான்:

‘கடவுளே கடவுளே என்னைக் கை விட்டு விட்டீரே, God has never broken a promise ever spoken என்பார்களே, எனக்கு கொடுத்த Promise ஐ நீங்கள் காப்பாற்றவில்லையே. இரண்டு பாதங்கள் தானே தெரிகிறது. உங்களது தடங்களைக் காணோமே’ என்றான் பக்தன்

‘அட முட்டாளே நீ பார்ப்பது எனது பாதங்களை. உன்னை என் தோள் மீது தூக்கிக் கொண்டு சுமக்கிறேன், உன்னால் இந்தப் பாதையில் நடக்க முடியாது என்பதால்’ என்றார் கடவுள்.

இப்படி கஷ்டமான காலங்களில் முருகன் நம்மைத் தோள் மீது சுமந்து செல்வார்.

இதற்காக நாம் முருகனுக்கு எதுவும் விசேஷமாகச் செய்ய வேண்டியதில்லை.

வெள்ளை நிற மல்லிகையோ

   வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்ந்த

   மலர் எதுவோ?

வெள்ளை நிறப் பூவுமல்ல

   வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி

     உத்தமனார் வேண்டுவது.

ஆம், உள்ள்ன்புடன் முருகனைத் துதித்தால் போதும். அவன் அருள் கிடைக்கும்.

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

சுமார் 267 இடங்களில் அவர் அருள்வாயே என்று கூறி முருகனின் அருளை வேண்டுகிறார்.

எல்லாவற்றையும் இங்கு கூற முடியாது என்றாலும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

திருப்பரங்குன்றம்  

    பஞ்சஇந் த்ரிய வாழ்வைக்

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்

   கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே

பாடல் எண் 15 –  தடக்கை பங்கயம் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : ஐம்பொறிகளால் ஆட்டுவிக்கப்படும் இந்த வாழ்வை, நொடியிலே வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்குத் தொண்டு செய்ய என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக!

 திருப்பரங்குன்றம்  

    துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்

     புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்

       துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் – றருள்வாயே

பாடல் எண் 16 –  பதித்த செஞ்சந்த எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்குத் தந்து அருள்வாயாக!


திருப்பரங்குன்றம்  

    இசைத்திடுஞ் சந்த பேதம்

      ஒலித்திடுந் தண்டை சூழும்

         இணைப்பதம் புண்ட ரீகம் – அருள்வாயே

பாடல் எண் 20 –  வரைத்தடங் கொங்கை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த நினது திருவடிகளாகிய தாமரைகளைத் தந்து அருள்வாயாக!

திருச்செந்தூர் 

     செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்

       திருவடியி லணுகவர – மருள்வாயே

பாடல் எண் 28 –  அறிவழிய மயல் பெருக எனத் தொடங்கும் பாடல்

பொருள் : என்னை நெருங்கியுள்ள நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும், என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக உனது உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் அருள்வாயாக!

திருச்செந்தூர்

மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு

   மலர்தாட் கமல  மருள்வாயே

பாடல் எண் 72 –  நிலையாப் பொருளை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வேதங்களாலும் போற்றுதற்கு அரியதான ஒளியாக விரிந்துள்ள நினது மலர்த் தாமரையைத் தந்தருள்வாயாக!

இப்படி முருகனின் அருளைப் பெறுவதே நமக்கு வேலையாக இருக்கட்டும்.

மிகச் சிறந்த முருகன் அடியார் ஒருவரைப் பார்த்து உங்கள் வேலை என்ன என்று கேட்டார் பக்தர் ஒருவர்.

தோகை மேல் உலவும் கந்தன் சுடர் கரத்திருக்கும் வெற்றி

வாகையே சுமக்கும் வேலை வணங்குவதே எமக்கு வேலை

என்றார் அவர்.

வேலை வணங்குவதே எமக்கு வேலை என்ற அவர் சொற்படி நாமும்

வெற்றி தரும் வேலை வணங்குவதை வேலையாகக் கொள்வோம்.

இந்த வாய்ப்பினைத் தந்த ஞானமயம் குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்து எனது உரையினை முடிக்கின்றேன்.

நன்றி வணக்கம்.

***

Leave a comment

Leave a comment