
Date uploaded in London – – 31 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

QUIZ SERIAL No.103
1.கேதார்நாத் எங்கே இருக்கிறது? எப்படிப் போகலாம் ?
xxxx
2.கேதார்நாத் என்றால் என்ன அர்த்தம் ?
Xxxx
3.கேதார்நாத் சிவனைப் பாடிய அடியார்கள் யார் ? இந்தக் கோவிலைக் காட்டியவர் யார் ?
xxxx
4.பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கேதார்நாத் செய்தியில் அடிபடக்காரணம் என்ன ?
Xxxx
5.கேதார்நாத் கோவில் ஆண்டு முழுதும் திறந்திருக்குமா ?
xxxx
6.இங்கே ஓடும் நதியின் பெயர் என்ன ? இது அமைந்த மலையின் பெயர் என்ன ?
xxxx
7.பீமன் – காட்டெருமை மோதல் கதை என்ன ?
xxxx
7.பாண்டவர் சிவ தரிசனத்துக்காக காத்திருந்தபோது ஒரு காட்டெருமை வந்தது. அதை பீமன் தாக்கினான் . அதன் முகம் இருந்த இடத்தில் முக்கோண சிவலிங்கம் தோன்றியது ; பாண்டவர் அடையாளங்களைக் காட்டும் பல சின்னங்கள் உள்ளன . பாண்டு மஹாராஜா இறந்த பாண்டு கோஷ் என்னும் இடம் அருகில் உள்ளது .
xxxx
8.கோவிலுக்குள் சிவலிங்கத்தோடு வேறு என்ன மூர்த்திகளை தரிசிக்கலாம் ?
xxxx
9. ஆதி சங்கரர் சமாதி எங்கே இருக்கிறது ?
xxxxx
10.அர்ச்சகர் பற்றிய புதுமை என்ன ?
xxx

விடைகள்
1. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில், இமய மலையின் உச்சியில் கேதார்நாத் இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது .தற்காலத்தில் ஹெலிகாப்டரில் சென்று இறங்கி சிவ லிங்கத்தைத் தரிசனம் செய்யலாம்.
கௌரிகுண்டில் இருந்து நடைபாதை வழியாக 18 கிமீ மலையேறிச் செல்லலாம் .பாதை குறுகலாக உள்ளதால் எந்த வாகனமும் செல்ல முடியாது. நடந்து தான் செல்ல வேண்டும். துவாதச ஜோதிர்லிங்க தலங்கள் எனப்படும் 12 சிவன் கோவில்களில் இதுதான் நாட்டின் வடகோடியில் உள்ளது.
xxxx
2.கேதார என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு நிலம் என்று பொருள்; முக்தி தரும் தாவரம் அங்கே வளருவதால் இந்தப் பெயர் ஏற்பட்டதாக காசி கேதார மஹாத்ம்யம் கூறும் ; ஆங்கிலத்தில் செடார் CEDAR என்று அழைக்கும் மரம் , கேதார் என்பதன் மருவு என்றும் சொல்லலாம். அந்த மரங்கள் இமயமலையில் அதிகம் . இதை தேவதாரு (தேவர்களின் தரு/ மரம்) Cedrus deodara அல்லது deodar செடார் என்று சொல்லுவார்கள் . எப்படி பத்ரீ/ இலந்தை மரம் பெயரில் பத்ரீனாத் அழைக்கப்படுகிறதோ அப்படியே கேதார் / செடார் மரத்தின் பெயரில் கேதார் நாத அழைக்கப்படுகிறது
xxxx

3.இது சம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் இருக்கிறது . இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், இக்கோவிலை அவர்களே கட்டியதாகவும் கருதப்படுகிறது
.xxxx
4. கேதார்நாத், 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் பாதிப்படைந்தது. கோவிலைச் சுற்றி இருக்கும் பகுதிகள் பெரும் சேதமடைந்தாலும், கோவில் வளாகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு பெரிய பாறை உருண்டு வந்து கோவிலுக்கு முன்னே நின்றது ; அது கோவிலை இடிக்கவில்லை என்பது அதிசயமே.
xxxx
5.கேதார்நாத் கோவில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலத்தில் விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்தில் பூஜையில் வைக்கப்படுகின்றன. இது , பஞ்ச கேதார தலங்கலு ள் ஒன்றாகும்.
xxxx
6.மந்தாகினி என்னும் நதிக்கரையில் கேதார்நாத் அமைந்துள்ளது .இது கங்கையில் கலக்கும் நதி; இமயமலையின் ஒரு பகுதியான கார்வால் குன்றில் கோவில் இருக்கிறது .
xxxx

8.கோவிலுக்குள் பாண்டவர்கள், கிருஷ்ணர், நந்தி தேவர், வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம். கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது. அருகில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோவிலும் உள்ளது.
கேதார்நாத்துக்கு தெற்கில் பைவரவர் கோவில் இருக்கிறது . மேலும் கோவிலிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் நேரு மலை ஏறும் பயிற்சி நிறுவனம் அமைத்த ருத்ர குகை இருக்கிறது Rudra Cave . இங்கு தியானம் செய்ய சகல நவீன வசதிகளும் உண்டு . பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்து தியானம் செய்தார்.
xxxx
9.ஆதி சங்கரர் உத்தரகண்டிலுள்ள பல கோவில்களை புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி கோவி லுக்கு பின்புறம் உள்ளது.
xxxx
10.பத்ரீநாத்தில் ராவல் என்னும் கேரள நம்பூதிரி பிராமணர்களை ஆதிசங்கரர் பணியில் அமர்த்தினார் ; கேதார் நாத்தில் வீர சைவ அர்ச்சகரை நியமித்தார் .
கர்நாடக மாநிலத்தின் வீரசைவ ஜங்கம என்ற சமூகத்தை சேர்ந்தவர்தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பூசைகளை தலைமை அர்ச்சகரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே செய்கின்றனர். குளிர்காலத்தில் விக்கிரகத்தோடு தலைமை அர்ச்சகரும் உகிமத்திற்கு செல்வார். ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார். பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது..

–subham—
Tags-கேதார்நாத், ஆதிசங்கரர் சமாதி, ருத்ர குகை, பாண்டவர் , முக்கோண சிவலிங்கம்