இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி (Post No.12,894)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,894

Date uploaded in London – –   7 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

உலகில் மூலிகைகள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது . முதலிடம் வகிக்கும் நாடு சீனா .

ஆறாயிரத்து 600க்கும் மேலான மூலிகைச் செடிகள் (6,600) இருக்கின்றன. இந்தியா ஏற்றுமதி செய்யும் மூலிகை அல்லது மருத்துவ குணமுள்ள முக்கிய தாவரங்கள் :

மஞ்சள், சீரகம், கருமிளகு , ஏலம் ,கொத்தமல்லி, கருவேப்பிலை , பட்டை சோம்பு, இஞ்சிகிராம்புகடுகுகுங்குமப்பூ ஜாதிக்காய்ஜாதிபத்திரிவெட்டிவேர் , கத்தாழை , அசுவகந்தி , வேப்பிலைவெந்தயம்கசகசா

மருந்துச் சரக்கு என்பதைவிட அறுசுவை உணவு தயாரிக்கவே இந்தப் பொருட்கள் அதிகம் பயன்படுகின்றன.

ஆயுஷ் என்னும் மத்திய அரசின் துறை ஏற்றுமதி விஷயங்களை கவனிக்கிறது; லைசென்ஸ் அனுமதி பெற்றே  உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்திய மருந்து அல்லது மருத்துவ குணமுள்ள உணவுச் சரக்குகளை அதிகம் இறக்குமதி செய்யும் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் வருகின்றன .

5000 கோடி ரூபாய் வியாபாரம் !

இந்தியாவும் சீனாவும் மூலிகை வியாபாரத்தில் 70 சதவிகிதத்தை வைத்துக் கொண்டுள்ளன.

இந்திய ஏற்றுமதிகளின் மதிப்பு 2017ஆம் ஆண்டில் 5000 கோடி ரூபாய். இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது .

2017ம் ஆண்டின் இறுதியில் ஆயூஷ் இலாகா சார்பில் 4 நாள் மகாநாடு நடந்தது ஆயுஷ் என்பது ஆயுர்வேதா, யோகா, நாட்டு மருந்து , யுனானி, சித்த , ஹோமியோபதி மருத்துவ முறை என்பதன் சுருக்கம் ஆகும்

Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (AYUSH).

சர்வதேச ஆரோக்கிய மகாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த 1500 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தியாவில் இந்தத் துறையில் வியாபாரம் செய்யும் 250 கம்பெனிகள் இருக்கின்றன .

ஹோமியோபதி மருந்துச் சரக்குகளின் உள்நாட்டு வியாபாரம் ரூ.500 கோடி ; ஏற்றுமதி அளவு ரூ.200 கோடி.

2020-21ல் சுமார் 61 கோடி டாலராக இருந்த மூலிகை ஏற்றுமதி 2021-22 நிதியாண்டில் 63 கோடி டாலராக அதிகரித்தது .

இது தவிர இந்தியாவுக்கு வந்து செல்லுவோர் வாங்கிச் செல்லும் சரக்குகள் இதில் வராது. (நான் ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் சித்தரத்தை, கண்டத்திப்பிலி , சுக்கு, சுண்டைக்காய், மணத்தக்காளி வத்தல், பனங்கற்கண்டு , இஞ்சி முரப்பா, அஷ்ட சூர்ண பொடி முதலியன வாங்கி வருகிறேன்).

ஆயுஷ் துறை பல நாடுகளுடன் ஏற்றுமதி ஒப்பந்தமும் செய்துவருகிறது.

மஞ்சள் ஏற்றுமதி

உலகிலேயே மஞ்சள் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் 3.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு, 11.61 லட்சம் டன் (உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 75% க்கும் அதிகமானது) உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட வகையான மஞ்சள் பயிரிடப்படுகிறது, மேலும் இது நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மஞ்சளை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

மஞ்சளின் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 62% ஆகும். 2022-23 ஆம் ஆண்டில், 207.45 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.534 லட்சம் டன் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொருட்கள் 380 க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

 தேசீய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு, 2023 அக்டோபரில்  வெளியிட்டது.

மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மற்றும் தமிழகத்தில் ஈரோடு என 3 இடங்களில் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தைகள் உள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஈரோடு மஞ்சள் அனுப்பப்படுகிறது. இதனால் மஞ்சள் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு பிறகு மஞ்சளின் தேவை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிகரித்து உள்ளது.

(லண்டனில் எங்கள் வீட்டுக்கு சமையல் செய்து தரும் குஜராத்தி பெண்மணி தினமும் காலையில் மஞ்சள் பொடி கலந்த வெந்நீரைக் குடிப்பாளாம் . எங்கள் வீட்டுக்கு வருகையிலும் அவள் கொண்டுவந்த பாட்டிலில் உள்ள  மஞ்சள் நீரைத்தான் குடிக்கிறாள். இன்னொரு இந்தி பேசும் நண்பரை முதல் தடவையாக வீட்டுக்கு அழைத்தேன். காப்பி , தேநீர் , சமோசா எதையும் சாப்பிட மறுத்து விட்டார் . கடையிலிருந்து வாங்கிய பேமஸ் பிராண்ட் தண்ணீர் பாட்டிலை வைத்தேன். அதையும் சாப்பிட மறுத்த அவர் என்னை வியப்பில் ஆழ்த்திய செய்தியைச் சொன்னார். தினமும் தாமிரச் சொம்பில் தண்ணீரை ஊற்றிவைத்து அதை மட்டுமே அருந்துவாராம். வெளியே செல்லும்போதும் அந்த தண்ணீரை மட்டுமே பாட்டிலில் எடுத்துச் செல்லுகிறார்.

என் அப்பா, அம்மாவுடன் சிறு வயதில் ரயில் பயணம் செய்தபோது வெண்கல கூஜாவில் தண்ணீர் கொண்டு சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். என் மகனிடம் இதைச் சொன்னால் கூட கூஜா என்றால் என்ன என்று கேட்பான். அதற்கான படத்தைத் தேடித்தான் கண்டு பிடிக்கவேண்டும்!).

கரு மிளகு ஏற்றுமதி

மிளகு ஏற்றுமதியில் , உலகில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. நாம் ஏற்றுமதி செய்யும் மிளகு அமெரிக்கா, பிரிட்டன், கனடாவுக்குச் செல்கிறது முதலிடம் வகிக்கும் நாடு வியட்நாம். மூன்றாம்  இடத்தில் இலங்கை உள்ளது.

—subham–

Tags-  மூலிகை, மஞ்சள் , ஏற்றுமதி, ஆயுஷ், மிளகு,

கோவிலில் மூலிகைத் தைலம்; அலை மோதும் பக்தர் கூட்டம்-50 (Post.12,893)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,893

Date uploaded in London – –   7 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 50

கோவில் எண்கள் –84,85,86,87

84.தகழி தர்ம சாஸ்தா கோவிலில் மூலிகை அதிசயம்

கடவுளே கனவில் சொன்ன மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கும் தைலம் மூட்டு வலிகளைப் போக்கும் அதிசயம் கேரளத்தில் நடக்கிறது. இந்த மூலிகை எண்ணெயை வழங்கும் ஐயப்பன் /கோவில் ஆலப்புழை வட்டாரத்தில் தகழி என்ற ஊரில் இருக்கிறது .ஆலப்புழா நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும், சம்பக்குளம் நகரில்இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது தகழி திருத்தலம்..

இங்கு வழங்கப்படும் ஆயுர்வேத எண்ணெய் , மூட்டு வலியோடு தோல் நோய்களையும் குணப்படுத்தும் .

இதுபற்றிய சுவையான கதையைக் கேட்போம்.

பரசுராமர் ஸ்தாபித்த கோவில் காலப்போக்கில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு புதை குழியில் சிக்கியது; பக்தர்களும் அதை மறந்தனர்; ஒரு காலத்தில் வில்வமங்கலத்து சுவாமிகள் அந்தப் பக்கம் வருகையில் தெய்வீக சக்தி வரும் இடத்தை நோக்கிச் சென்று பொதகுழி ஐயப்பனைக் கண்டார். அதை வழிபாட்டுக்கு நிறுவினார்.

சம்பகசேரி மன்னர் அந்தச் சிலை நிறுவப்பட்ட இடத்தில் ஒரு கோவிலைக் கட்டினார் .அது சிதிலம் அடைந்தது . திருவிதாங்கூர் மன்னர் இந்தப் பகுதியைக் கைப்பற்றியதால், சம்பகசேரி மன்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டார்.

அதை வணங்கி வந்த ஆசான் என்ற  ஒரு பக்தருக்கு, கையில் காசு இருந்தால் மீண்டும் கோவில் கட்டலாமே என்று எண்ணி எண்ணி வருத்தப்பட்டார். அப்போது இறைவனே கனவில் தோன்றி அருகிலுள்ள ஓதர்மலையில் உள்ள மூலிகைகளைக் காட்டி அதைக்கொண்டு தைலம் தயாரிக்க கட்டளையிட்டார். அதை பக்தர்களுக்கு கொடுத்தால், தீராத நோய்கள் எல்லாம் தீரும்; பக்தர்களே முன்வந்து கோவிலை எழுப்புவர் என்று ஐயப்பன் சொன்னார். கனவில் கண்டது நினைவில் நிஜாமாகியது .இப்போதும் கூட மூலிகைகளைப் பறித்து முதல் நாள் இரவில் கர்பக் கிரகத்தில் வைத்து விடுகின்றனர் ; அதிலிருந்து மூலிகை எண்ணெய் எடுக்கின்றனர்.

இக்கோவிலில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் கிழக்கு நோக்கிய நிலையில், வலது காலை மடித்தும், இடதுகாலைத் தரையில் ஊன்றிய நிலையிலும் அமர்ந்திருக்கிறார். அவரது வலது கையில் சிறிய எண்ணெய்க் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார். கும்பம் (மாசி) மாதத்தில் எட்டு நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. 5, 6 ஆம் நாள் திருவிழாக்களில் பிரபல கதகளி கலைஞர்கள் ஆடுவர் .ஏழாவது நாள் பள்ளிவேட்டை நடக்கும்.

மண்டல பூஜை நாட்களான 41 நாட்களும் இத் திருக்கோவிலில் ‘களமெழுத்துப் பாட்டு’ நடைபெறுகிறது. தனுர் (மார்கழி) மாதம் முதல் நாளில் தொடங்கி 11 நாட்களுக்குக் கலபாபிஷேகம் எனும் விழா நடக்கும்.

xxxxx

85.திருவிழா ஸ்ரீ மஹாதேவர் கோவில் , கனிச்சு குளங்கரா

திருவிழா மகாதேவர் கோயில் (Thiruvizha Sree Mahadeva Temple) என்பது, , ஆலப்புழை மாவட்டம் திருவிழா என்ற ஊரில் இருக்கிறது . சேர்தலையிலிருந்து  7 கி.மீ. . இது நீலகண்டப் பெருமானான சிவபெருமான் வாழும் தலமாகப் போற்றப்படுவதால்  இறைவனை, காலகண்டன் என்று மலையாளத்தில் அழைக்கின்றார்கள் .

எர்ணாகுளத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் கோவில் உள்ளது .

மூலிகைச் சாறு பிரசாதம்

இப்பகுதியைச் சுற்றி கிடைக்கும் அபூர்வ மூலிகைச்சாற்றை, பசும்பாலில் கலந்து பந்தீரடி பூசையில் இறைவனுக்கு வைத்து வழிபடுகிறார்கள். இது நோயுற்றவர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. நாள்தோறும் நண்பகலில் பால் பாயசத்தை இறைவனுக்குப் படைக்கிறார்கள். அப்போது அருகேயுள்ள கோயிலில் சிவனின் மகளாகக் கருதப்படும் கனிச்சு குளங்கரா தேவியை இங்கு எழுந்தருளச் செய்து, அவருக்கும் பால் பாயசம் படைத்து, பூசை செய்து, அதனை நோயுற்றவர்களுக்கும் தருவார்கள்.

கை விஷம் 

மற்றவர்கள் எதிரிகளுக்கு வைக்கும் விஷத்தைக் கை விஷம்  என்பார்கள். ஒரு பெண், ஆண்களை வசப்படுத்த வெற்றிலை கொடுத்தால் கூட போதும் என்று மலையாளிகள் அஞ்சுவார்கள் . அத்தகைய கைவிஷங்களை அகற்ற இந்தக் கோவிலின் மூலிகைச் சாறு  பிரசாதமாக கொடுக்கப்படுகிறது இந்த தெய்வீக பிரசாதம் பெற, மாநிலம் முழுதுமுள்ள பக்தர்கள் இங்கு படை எடுக்கிறார்கள் .

மார்ச் மாதத்தில், ஆறாட்டு விழா நடக்கிறது. தனுர்  மாதத்தில் (மார்கழி-நவம்பர்-டிசம்பர்) பத்து நாட்கள் திருவிழா நடைபெறும் .யானைகள் பவனி, கேரள நடனங்கள் , கச்சேரிகள் எல்லா நாட்களிலும் உண்டு.

xxxxx

86.கண்டியூர் மஹாதேவ கோவில்

ஹரிப்பாட் சுப்ரமண்ய சுவாமி கோவிலிலிருந்து 12 கி.மீ தொலைவில் தட்டம்பலம் என்னுமிடத்தில் அழகான சிவன் கோவில் இருக்கிறது . கருவறைக்கு வெளியே சுட்டம்பலம் இருக்கிறது . கருவறைக்கு வெளியேயுள்ள சுவர்களில் மரச் சிற்பங்கள் ஓவியங்களைக் காணலாம்.

கண்டியூருக்கு அருகே ,அச்சன்கோவில் ஆற்றங்கரையில் உள்ள மாவேலிக்கரை என்னும் இடத்தில் கோவில் அமைந்துள்ளது. கண்டியூர் ஒரு காலத்தில் ஓடநாடு ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியது.

கோவிலின் வரலாற்றில் 3 கதைகள் சொல்லப்படுகின்றன

பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 பெரிய சிவன் கோவில்களில் ஒன்று என்றும்  மார்கண்டேய முனிவரின் தந்தையான மிருகண்டு முனிவர், கங்கையில் நீராடும் போது கிராதமூர்த்தி வடிவத்தில் சிவபெருமானின் சிலையைப் பெற்று  கண்டியூரில் கோயிலை நிறுவினார் என்றும் . சிவபெருமான் பிரம்மாவின் தலையை வெட்டிய இடத்தில் கோயில் அமைத்தனர் என்றும் சொல்லுவார்கள் .

திருக் கண்டியூர் என்ற பெயரில்  தமிழ்நாட்டிலும் இதே கதையுடன் கோவில் இருக்கிறது.

XXXXXX

87. ஆலப்புழை தேவி கோவில்கள்

செங்கன்னூர் பகவதி கோவிலை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

மேலும் சில தேவி/ பகவதி, காத்தியாயனி கோவில்ல்கள் ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கின்றன

சேர்தலை காத்தியாயனி , ஆரூர் காத்தியாயனி , புது வரநாடு தேவி , வடக்கு அரியாட் கள்ளங்கல் புவனேஸ்வரி, கனிச்சிகுளங்கரா தேவி கோவில்கள் முக்கியமானவை  அங்கு நடைபெறும் திருவிழாக்கள் ஏராளமான பக்தர்களை கவர்கின்றன.

கனிச்சிகுளங்கரா  தேவி கோவிலில் 21 நாட்கள் விழா நடைபெறும் முக்கிய அம்சம் இரவில் நடக்கும் கருடன் தூக்கம் ஆகும்

ஆலப்புழையி லிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள வளவநாடு புத்தன் காவு பத்ரகாளி கோவிலில் 12 நாள் உற்சவம் நடக்கும் ;பத்தாம் நாள் விழாவில் 10 அல்லது 15 அடி உயரமுள்ள தலைக்கு கவசத்துடன் சூட்டு ப் பாதயணி  நடனம் நடைபெறும் .

ஆலப்புழை கிதங்கம்பரம்பு புவனேஸ்வரி கோவிலில் ராஜ கோபுரம் பல வன்னச் சிற்பங்களுடன் எல்லோரையும் வரவேற்கும்

எர்ணாகுளத்திலிருந்து 21 கி.மீ தொலைவிலுள்ள எற மல்லூர் காஞ்சிரத்துங்கள் பகவதி கோவிலில்  நட்டு தாளப் போலி ஊர்வலம் நடக்கும் தட்டி வரவு விழாவில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் மரத்தடிகளை கோவிலுக்கு கொண்டு வருவார்கள்

இவ்வாறு ஒவ்வொரு தேவி கோவிலிலும் ஏதாவது ஒரு சிறப்பு அம் சம் இடம்பெறுகிறது .

–சுபம்—

Tags- கனிச்சிகுளங்கரா, சேர்தலை,  காத்தியாயனி, கண்டியூர் மஹாதேவ கோவில், கை விஷம்  , மூலிகைச் சாறு ,பிரசாதம் , திருவிழா ஸ்ரீ மஹாதேவர், தகழி தர்ம சாஸ்தா, மூலிகை அதிசயம்

சிக்கலான கேள்விகளுக்கு விடை தருவது இந்து மதம் ஒன்றே! (Post.12,892)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,892

Date uploaded in London –  –  –   7  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சிக்கலான கேள்விகளுக்கு விடை தருவது இந்து மதம் ஒன்றே! 

ச.நாகராஜன்

சிக்கலான கேள்விகளுக்கு விடை தருவது இந்து மதம் ஒன்றே தான்.

இதை, மாதமிருமுறை வெளிவரும் இதழான சனாதன் ப்ரபாத் (Snanathan Prabhat) இதழில் பரம பூஜனீய டாக்டர் ஜயந்த் பாலாஜி அதாவலே ( Dr Jayant Balaji athavale) சமீபத்திய இதழில் இப்படிக் கூறி இருக்கிறார்:

மனித குலத்தைக் காக்கும் மதம் இந்து மதம் ஒன்றே தான்!

மேலைநாட்டோருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் விடை தெரியாத பல கேள்விகள் உண்டு. மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள், பிறப்பதற்கு முன்னர் அவர்கள் எங்கே இருந்தார்கள், இறந்த பின் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்களுக்கு விடைகள் தெரியாது. அவர்களால் மனித குலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எப்படித் தீர்க்க முடியும்?

ஹிந்து தர்மம் ஒன்றே தான் இப்படிப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையைத் தரும். அது மட்டுமின்றி அப்படிப்பட்ட நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கான வழியை அது ஒன்றே தருகிறது. ஆகவே மனித குலத்தை ஹிந்து மதம் ஒன்றே தான் காப்பாற்ற முடியும்.

கடவுளுடன் ஒன்றாகக் கலப்பது சுலபம் தான்!

கடவுள் உலக விஷயங்களை நடத்துவதற்காகத் தனக்கான தனி விதிகளைக் கொண்டிருக்கிறார். இந்த விதிகள் மாயை என்று சொல்லப்படுகிறது.

இவை மனித அறிவிற்கு அப்பாற்பட்டவையாகும். மாயையைப் புரிந்து கொள்ள முயல்வதை விட கடவுளுடன் ஒன்றாகக் கலப்பது சுலபம் தான்!

ஹிந்து சமூகத்தில் மட்டும் ஏன் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு?

இந்த தேசத்தில் எத்தனை சன்னிகள், ஷியாக்கள், போஹ்ராக்கள், அஹம்மதியாக்கள், குரேஷிக்கள், ஷேக்குகள், நவாபுகள், மாப்ளாக்கள் உள்ளனர் என்பதை அறிய இந்த தேசத்திற்கு உரிமை உள்ளது.

இதே போன்ற கணக்கெடுப்பு கத்தோலிக்கர்கள், ப்ராடெஸ்டெண்டுகள், ஜாகோபைட்ஸ்கள், மார்தோமைட்ஸ், சிரியன் கிறிஸ்துவர்கள், பெந்தகோஸ்துகள், செவந்த் டே அட்வெண்டிஸ்டுகள், லத்தீன் கிறிஸ்துவர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள், இன்னும் இது போன்றவர்களுக்கும் வேண்டும். 

இதே போலவே சீக்கியர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், ஜைனர்கள் மற்றும் நாத்திகர்களுக்குமான கணக்கெடுப்பு வேண்டும்.

ஒரு விரிவான கணக்கெடுப்பை தேசம் கொள்ளட்டுமே? ஏன் ஹிந்துக்களுக்கு மட்டுமான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு?

இஸ்லாமில் 72 ஜாதிகள் உள்ளன.

215 ஜாதிகள் கிறிஸ்தவ மதத்தில் உள்ளன.

இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும்.

ஏன் ஹிந்துக்களை மட்டும் பிரிக்கிறீர்கள்? 

*

நல்ல கேள்வி தான்! பதிலை எதிர்பார்க்கிறோம்!! 

***

நன்றி : கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் :TRUTH Vol 91 No 34 Dated 22-12-2023

tags-Hinduism

அயோடின் கலந்த உப்பு அவசியமா ? (Post No.12,891)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,891

Date uploaded in London – –   6 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

(கட்டுரையில் அயோடின் என்னும் மூலகமும் அது உருவாக்கும் தைராக்சின் என்னும் ஹார்மோனும் மாறி மாறி வருவதால் அவைகளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்)

உலகில் பல  நாடுகளில்  உப்பில் அயோடின் சேர்ப்பதில்லை. ஆனால் இந்தியாவில் கடைகளில் விற்கும் உப்பில் அயோடின் (Iodised salt)சேர்ப்பது கட்டாயம் ஆகும் .

ஏன் சில நாடுகளில் சேர்ப்பது இல்லை?

உதாரணமாக பிரிட்டனில் கடைகளில்  வாங்கும் உப்பில் அயோடின் கிடையாது ; காரணம் என்னவெனில் மாடுகளுக்கான தீவனத்தில் அயோடின் கலக்கப்படுவதால் எல்லோரும் சாப்பிடும் பாலில் தேவையான அயோடின் கிடைத்துவிடுகிறது. ; மேலும் மேலை நாடுகளில் வெள்ளைக்காரர்கள் சாப்பிடும் மீன் வகைகளில் அயோடின் அதிகம் இருக்கிறது.

அயோடின் ஏன் தேவைப்படுகிறது ?

மனிதனின் உடலில் பல சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ஒன்று தைராக்சின் (Thyroxine) என்னும் ஹார்மோன் திரவத்தைச் சுரக்கிறது . இந்த தைராக்சின் சுரக்க உதவுவது அயோடின் என்னும் மூலகம் (element) ஆகும்.

Iodine is important for the production of the thyroid hormones triiodothyronine (T3) and thyroxine (T4).

அயோடின் எளிதில் கிடைக்கும்  உணவுப் பண்டங்கள் ?

கடல் மீன் வகைகள்

சிப்பி மீன் வகைகள்

பால், தயிர்

ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் குறைந்தது 140 மில்லிகிராம் அயோடின் தேவை.

Iodine Content of Selected Foods

Cod (3 ounces): 99 mcg காட் வகை மீன்

Plain low-fat yogurt (1 cup): 75 mcg கொழுப்பு சத்து நீக்கிய தயிர்

Reduced fat milk (1 cup): 56 mcg கொழுப்பு சத்து நீக்கிய பால்

White enriched bread (2 slices): 45 mcg ஊட்டச் சத்து ரொட்டி

Shrimp (3 ounces): 35 mcg இறால்

Enriched macaroni (1 cup): 27 mcg ஊட்டச் சத்து மகரோனி

Egg (1 large): 24 mcg முட்டை

Canned tuna in oil (3 ounces): 17 mcg டப்பியி லுள்ள ட்யூனா மீன் வகை

Dried prunes (5 prunes): 13 mcg உலர்ந்த ப்ரூன் பழம்

Cheddar cheese (1 ounce): 12 mcg செட்டர் சீஸ்

Raisin bran cereal, (1 cup): 11 mcg தவிடு , உலர்ந்த கிஸ்மிஸ் உடைய சீரியல் (தானிய உணவு)

Apple juice (1 cup): 7 mcg ஆப்பிள் ஜு ஸ்

Frozen green peas (1/2 cup): 3 mcg பட்டாணி

Banana (1 medium): 3 mcg வாழைப்பழம்

(எவ்வளவு மைக்ரோகிராம் என்ற எண் ஆங்கிலத்தில் mcg என்று குறிக்கப்பட்டுள்ளது .

சில வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும் தைராய்ட் சுரப்பி செயல்பாட்டினை பாதிக்கும். அவைகள் : முட்டைக்கு கோசு ,  காலிபிளவர் , டர்னிப், சோயா மொச்சை , பிராக்கோலி, தினை வகை தானியங்கள்

xxxxx

Iodine: Daily Recommended Dietary Allowance (Micrograms)

உணவில் இருக்கவேண்டிய அயோடின் (மைக்ரோ கிராமில் )

6 மாதம் வரையுள்ள குழந்தைக்கு ……..110

7 மாதம் முதல் ஒரு வயது வரை …………..130

1 முதல் 8 வயது வரை …………………………… 90

9 முதல்13 வயது வரை …………………………..120

14+ வயது ……………………………………………….. 150

கர்ப்பிணிப் பெண்களுக்கு ……………………220

தாய்ப்பால் கொடுக்கையில் ………………… 250

இதைவிடக் கூடப்போனாலும் பிரச்சினைகள் வந்துவிடும்!

அயோடின் குறைந்தவர்களுக்கு கழுத்து வீங்கி முன்கழலை நோய் (Goiter) உண்டாகும்..

xxxxxx

தைராக்சின் குறைந்தால் வரும் உடல் பிரச்சினைகள் அல்லது நோய்கள்

tiredness களைப்பு

being sensitive to cold குளிர்

weight gain எடை அதிகரிப்பு

constipation மலச்சிக்கல்

depression மனத்தொய்வு

slow movements and thoughts மந்த புத்தி

muscle aches and weakness உடலில் வலி, பலவீனம்

muscle cramps சதைப்பிடிப்பு

dry and scaly skin காய்ந்த சருமம்/தோல்

brittle hair and nails மயிரும், நகமும் எளிதில் உடைதல், பிரிதல்

loss of libido (sex drive) உடலுறவு கொள்வதில் விருப்பமின்மை

pain, numbness and a tingling sensation in the hand and fingers (carpal tunnel syndrome)

கை மற்றும் விரல்களில் கூச்சம் 

irregular periods or heavy periods பெண்களுக்கு காலம் தவறிய மாதவிடாய் அல்லது அதிக ரத்தப்போக்கு .

எப்படி அறிவது ?

பல நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரி இருக்கும். ஆகையால் டாக்டர்கள் ரத்த பரிசோதனை மூலம் தைராக்சின் குறைபாட்டினைக் கண்டுபிடிப்பார்கள் .

தேவையானால் தைராக்சின் குறைபாட்டினை ஈடுசெய்ய லெவோ தைராக்சின் (Levo thyroxine) என்ற மருந்தினை எழுதிக்கொடுப்பார்

எவ்வளவு காலம் மருந்து சாப்பிட வேண்டும்?

உடலில் கழுத்தின் கீழுள்ள தைராக்சின்/ தைராய்ட்  சுரப்பி சரியாக வேலை செய்யாவிடில் வாழ்நாள் முழுதும் மருந்து சாப்பிட வேண்டும் .

சாப்பிடாவிட்டால் இருதய நோய்கள் , மந்தமான செயல்பாடு வரும் .

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு தைராக்சின் போதுமான அளவு இல்லாவிடில் மூளை வளர்ச்சி (cretenism)  குறைந்த,  உடல் வளர்ச்சி குன்றிய (Stunted growth)  குழந்தைகள் பிறப்பதை ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன .

xxxxx subham xxxxxx

tags- அயொடின் , உப்பு, தைராக்சின், முன்கழலை , தேவையான அளவு

MY NEW BOOKS

ABOUT THE BOOK AND THE AUTHOR

Book Title – Tamil Hindu Encyclopaedia

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- English

Published  – October  2023

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8000 articles and 113 Tamil and English Books

Visited 15 Countries:

India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, Greece and Sri Lanka

XXXXXXX

Book title  — Tamil Hindu Encyclopaedia

Contents

(Please note the first 15 parts of Tamil Hindu Encyclopaedia were published under the title Hinduism in Sangam Tamil Literature; And up to parts 25 were published under the book title Tamil Hindus 2000 Years Ago!   In this third part titled Tamil Hindu Encyclopaedia , I cover up to topics number 48)

xxxx

1.Tamil Hindu Encyclopaedia -26: Vishnu/ Maal/ மால்

2.Mr Blue, Mr Tall/ Vishnu , நீல நிற வண்ணன், நெடியோன்

3. Garuda Flag, Lotus from Belly with Brahma, Source of Universe/Vishnu

4. Garuda Purana in Sangam Tamil Books

5. Lakshmi and 1000 headed Snake in Sangam Tamil Books

6. Brahma / பிரம்மா in Sangam Literature

7. Vishnu’s incarnations தசாவதாரம் in Sangam Corpus

8.Avatars in Sangam Tamil Books அவதாரங்கள்

9. Siva, ருத்ர Rudra,  Tryambaka In Sangam Tamil Corpus

10.Tamil Hindu Encyclopaedia 35: திரிபுரம் எரித்தவன்- Tripurantaka in Sangam Tamil Corpus

11.Uma/உமா /உமை in Tamil Books

12. Durga/ கொற்றவை, துர்கா in Sangam Tamil Corpus

13. Murugan /முருகன் Skanda in Sangam Tamil Corpus

14. Skanda ,Velan கந்தன், வேலன்  in Sangam Tamil Books

15.Tamil Hindu Encyclopaedia – 40; மயிலூர்தி Peacock Rider /Skanda in Sangam Tamil Books

16. Velan Dance by the Possessed man வேலன் வெறியாடல் Sangam Tamil Books

17. Nymphs, Ghosts, and Local Gods in Sangam Tamil Corpus

18. Tamil Ghost and Nymph and Spirits பேய், பிசாசு, அணங்கு

19. Nereids of Greeks நீர்த்துறைக்‌ கடவுள்‌ 

20.;Tamil Spirits and Ghosts  வருத்தும் தெய்வம் contd….

21. Dance by the Possessed woman சூரர மகளிர்‌ 

22. Tamil Phantoms , Spectres, Apparitions தமிழ் பூதம் , பிசாசு

23.Tamil Hindu Encyclopaedia- 48; More Tamil Phantoms , Spectres, Apparitions கழுது கூளி .

24.Hindu Gods in Tamil Bible!

25.Sangam Tamil Verse throws more Light on Rig Veda

26.Strange Link between Lord Shiva, Socrates and Thiruvalluvar

27.Why did a Tamil King Kill 1000 Goldsmiths?

28.Contents of first two books of Tamil Encyclopaedia

***************

FOREWORD

Sangam Tamil Literature is 2000 year old. It has got nearly 30,000 lines spreading over 18 books. They are called Pathu Paattu (10 books) and Ettuth Thokai (8 books). They are full of Hindu thoughts. Hindu Gods are referred to and no where Buddha or Mahavira are referred to. Many of the poets have Sanskrit names such as Damodaran, Kesavan, Valmiki, Brahmachari, Mahadevan (maathevan) Kamakshi (kaamak kanni). Gotra names of Brahmin poets are also shown. There are about 20 poets with Nagan suffix in ancient Tamil Nadu. They may not be Tamils. Rahjasuya Yajnam performed by Tamil king and Eagle shaped Yaga Kunda of Karikal Choza are mentioned. Dharma, Artha and Kama are mentioned in poems. Sanskrit words like Yupa are used without translation. We see Sanatan Dharma in glorious light. This is my third book dealing with the Hindu thoughts in Sangam corpus. I have given here all the topics covered in the previous two books titled Hinduism in Sangam Tamil Literature and Tamil Hindus 2000 Years Ago.

Here in this book,  I have dealt   with Tamil belief in tree nymphs, water nymphs and ghost and ghouls. We must understand that we are reading about a civilization that lived 2000 years before our time. But the amazing virtues of hospitality, helping the poor, equality in delivering justice and respect for truth and honesty are seen. Like every ancient society there were brutal wars; and Tamils were the only society in the world where we see internal fights between Chera, Choza and Pandyas for over 1500 years. But they united when Rajasuya Yajnam was performed by a Choza king. That shows their  respect for Hinduism. All the three parts written by me show the Hindu religion or Sanatan Dharma was practised at that time in the southernmost part of India.

London Swaminathan

October 2023

Swami_48@yahoo.com

XXXXX

FOLLOWING IS A TAMIL BOOK

தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

பொருளடக்கம்

1.QUIZ மதுரைப் பத்து QUIZ

2.QUIZ தேவியர் பத்து QUIZ

3.QUIZ சம்பந்தர் பத்து QUIZ

4.QUIZ சென்னைப் பத்து QUIZ

5.QUIZ அருணகிரிப் பத்து QUIZ

6.QUIZ அருவிப்பத்து QUIZ (Post No.12,116) 10/6

7..QUIZ தேவாரப் பத்து QUIZ

8..QUIZ கிருஷ்ணன்-அசுரர் மோதல் பத்து QUIZ

9.QUIZ சங்கீத (முத்து சுவாமி தீட்சிதர்) பத்து QUIZ

10.QUIZ கர்நாடகப் பத்து QUIZ

11.QUIZ இந்துமதப் பத்து QUIZ

12.QUIZ இன்பப் பத்து QUIZ

13.QUIZ தெய்வத் தமிழ் பத்து QUIZ 

14.QUIZ பதிற்றுப்பத்து QUIZ

15.QUIZ மருந்துப் பத்து QUIZ

16.QUIZ சிவப்பிரகாசர் பத்து QUIZ

17.QUIZ நெரூர் சதாசிவர் பத்து QUIZ

18.QUIZ தமிழ் சிற்றிலக்கியப் பத்து QUIZ 

19.QUIZ ஆழ்வார் பத்து QUIZ

20.QUIZ அண்ணாமலை பத்து QUIZ 

21.QUIZ டில்லிப் பத்து QUIZ

22.QUIZ சிலப்பதிகார பத்து QUIZ

23.QUIZ தென் கிழக்காசியப் பத்து QUIZ

24.QUIZ மனைவிப்பத்து QUIZ

25.QUIZ இதிஹாசப் பத்து QUIZ 

26.QUIZ தொல்காப்பியப் பத்து QUIZ

27.QUIZ கவிதைப் பத்து QUIZ

28.QUIZ தேதிப் பத்து QUIZ

29.QUIZ காஷ்மீர் அதிசயங்கள் பத்து QUIZ

30.QUIZ ஸம்ஸ்க்ருதப் பத்து QUIZ

31.QUIZ சித்தர் பத்து QUIZ

32.QUIZ அப்பர் பத்து QUIZ

33.QUIZ சுந்தரர் பத்து QUIZ

34.QUIZ மதுரை மீனாட்சி பத்து QUIZ

35. 36.QUIZ கல்கத்தா பத்து QUIZ

36.QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ

37.QUIZ மணிமேகலை பத்து QUIZ 

38.QUIZ தஞ்சைப் பத்து QUIZ

39.QUIZ காஞ்சீபுரம் பத்து QUIZ

40.QUIZ கண்ணப்பநாயனார் பத்து QUIZ 

41.QUIZ  பிள்ளையார் பத்து QUIZ

42.QUIZ கும்பகோணம் பத்து QUIZ

43.QUIZ திருப்பதி பத்து QUIZ

44.Quiz ராகப் பத்து Quiz

45.QUIZ மும்பை பத்து QUIZ

46.QUIZ  ரிஷிகள் பத்து QUIZ

47.QUIZ திருச்சிப் பத்து QUIZ

48.QUIZ உபநிஷத் பத்து QUIZ

49.QUIZ  நவக்கிரக பத்து QUIZ

50.QUIZ நவரத்தின பத்து QUIZ

51.QUIZ ஒளவையார் பத்து QUIZ

52.QUIZ தமிழ் ஓரெழுத்துகள் பத்து QUIZ

53.QUIZ  ரிஷி முனிவர்கள் QUIZ

54.QUIZ பகவத் கீதை பத்து QUIZ

55.QUIZ தமிழ் சங்கம் பத்து QUIZ

56.QUIZ விநாயகர் அகவல் பத்து QUIZ

57.QUIZ வள்ளலார் பத்து QUIZ

58. QUIZ புராணப் பத்து QUIZ

59.QUIZ காவிரி நதி பத்து QUIZ

60.QUIZ வள்ளல்கள் பத்து QUIZ

****************

 முன்னுரை

இது, நான் தொகுத்துள்ள இரண்டாவது கேள்வி-பதில் (க்விஸ்) தொகுப்பு. எல்லோரையும் போலல்லாமல் இந்து சமயம், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் இந்தியா தொடர்பான கேள்விகளை நூதன  முறையில் தொகுத்துள்ளேன். 60 தலைப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயம் பற்றியும் பத்து கேள்விகளை மட்டும் கேட்டு அதற்கு விடைகளையும் கொடுத்துள்ளேன் . மாணவர்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் க்விஸ் Quiz Competition போட்டி நடத்துவோருக்கும் இது பயன்படும் என்பது என் நம்பிக்கை .

ரயில், பஸ் பயணத்தின் போது, நல்ல முறையில் பொழுதினை செலவிட விரும்புவோருக்கும் இது துணையாக நிற்கும் ; இந்தக் கேள்வி- பதிலுக்கு வயது வரம்பு கிடையாது . எளிதான, மற்றும் கடினமான கேள்விகள் இருப்பதால் சிறுவர் முதல் பெரியோர் வரை எவரும் பயன்படுத்தலாம். பொருளடக்கத்தை ஒரு பார்வை பார்த்தாலே போதும்; இது விளங்கும்.

இது என்னுடைய  108 ஆவது நூல்.; வளமை போல உங்கள் ஆதரவினை நல்குங்கள்.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

செப்டம்பர் 2023

Swami_48@yahoo.com

HOW TO GET THESE BOOKS?

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

-SUBHAM-

TAGS- BOOKS, WRITTEN BY, LONDON SWAMINATHAN

ஆயிரம் திரி அதிசய விளக்கு! துறவூர் மஹாதேவர்,  நரசிம்ம மூர்த்தி கோவில்கள்-49 (Post.12,890)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,890

Date uploaded in London – –   6 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Pictures are from websites; thanks. hey are about Chettikulangara Bhagavathy Temple.

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 49

கோவில் எண்கள் –818283

81, 82. துறவூர் மஹாதேவர் , நரசிம்ம மூர்த்தி கோவில்கள்

எர்ணாகுளத்திலிருந்து ஆலப்புழை செல்லும் வழியில் 23-ஆவது கி.மீ ட்டரில் துறவூர் அமைந்துள்ளது . இங்குள்ள புரந்தரேஸ்வரர் / மஹாதேவர் கோவிலும், நரசிம்ம சுவாமி கோவிலும் மிகவும் சிறப்புடையன. ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையன. கடவுள் இல்லைஅவனைக் கற்பித்தவன் அயோக்கியன், காட்டுமிராண்டி என்று சொன்ன கயவனை இரு கூறாகக்கிழித்து ரத்தத்தைக் குடித்த சிங்க முக நரசிம்மரின் ஆக்ரோஷத்தைத் தணிக்க சிவ பெருமான் சரபேஸ்வரராக அவதரித்தார். அவரே மஹாதேவர் ,புரந்தரேஸ்வர் என்ற பெயரில் இங்கு ஒரு கோவிலில் குடிகொண்டுள்ளார் . இந்தக் கோவில், கேரள கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது; செப்புத் தகடுகளைக் கொண்டு கூரையை வேய்ந்துள்ளனர் .

மஹா சிவராத்திரி உற்சவ காலத்தில் ஆண்டுதோறும் 9 நாள் உற்சவம் நடக்கும். திரு உற்சவம் என்று அதை அழைக்கிறார்கள்; 4,5,6 ஆவது நாள் விழாக்களில் இரவு முழுதும் கதகளி நடனம் நடக்கும். எட்டாவது நாளன்று  வலியவிளக்கு உற்சவம் கண் கவரும் ஒன்பது யானைகள் பவனியுடன் நடக்கிறது. ஓட்டந்துள்ளல் , சங்கீத வித்வான்களின் கச்சேரிகள் சிறப்பு நிகழ்சசிகள் ஆகும். ஆராட்டு என்னும் இறைவன் குளியலுடன் விழா நிறைவு அடையும்.

அஷ்டமி ரோகிணி என்னும் கிருஷ்ணர்  பிறப்பு நாளை ஒரே நாள் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

டிசம்பரில் நடக்கும் திருவாதிரை உற்சவத்தில் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வர வேண்டி பிரார்த்திக்க வருகிறார்கள்.  மகரவிளக்கு உற்சவத்தில் சப்பரத்தில் சுவாமி வலம் வருவார். கருட வாகான புறப்பாடும் இருக்கும். எல்லா விழாக்களிலும் கேரளா வாத்யங்களைக் கொட்டி முழக்குவார்கள்.

ராமாயண பாராயணம்

கற்கிடக மாதத்தில் ராமாயண பாராயணம் நடப்பதோடு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்யும் சம்பூர்ண ராமாயண பாராயணமும் நடக்கும் .

நவராத்ரி காலத்தில் விஜய தசமியன்று வித்யாரம்பம் என்னும் கல்வி துவக்க விழாவுக்கு ஆயிரக்கணக்கான சிறுவர்களை பெற்றோர்கள் அழைத்து வருகிறார்கள்; துர்காஷ்டமி முதல், சிறுவர்கள் புஸ்தகக் கட்டுகளுடன்  சரஸ்வதி பூஜைக்கு வந்துவிடுவார்கள் .

நரசிம்மர்சுதர்சனர் கோவில்

லட்சுமி நரசிம்மரும், சுதர்சன மூர்த்தியும் எழுந்தருளிய இரட்டைக்கோவில் துறவூரில் இருக்கிறது

நாலம்பலத்தில் வடக்கில் நரசிம்மரும், தெற்கில் சுதர்சனரும் இருக்கின்றனர்.; இரண்டும் தனித்த தனி கோவில்கள்.; தனித்தனி தங்க முலாம் பூசிய கொடி மரங்கள்.

வட்ட வடிவக்  கருவறையில் 4 கரங்கள் உடைய விஷ்ணு ரூபத்தில் சுதர்சனர் அருள்பாலிக்கிறார்.

கோவில் வளாகத்தின் வடபகுதியில்  நரசிம்மர் சதுர வடிவ கருவறையில் காட்சி தருகிறார். இதுவும் விஷ்ணு உருவமே. அங்கமாலி என்னும் இடத்தில் ஒரு பக்தரின் கனவில் தோன்றிய விக்கிரகம் பூமிக்கடியி லிருந்து கிடைத்தது

தீபாவளி பண்டிகை

துறவூரின் சிறப்பு தீபாவளி பண்டிகை ஆகும். அன்று 4 இறைவன் திருவுருவங்கள் கூட்டாக எழுந்தருளி ஒரே இடத்தில் காட்சி தருகிறார்கள் .

கரபுரம் என்னும் துறவூர் முன்காலத்தில் பிராமண அக்கிரகாரமாகத் திகழ்ந்தது. திருவேங்கிட புரம் புரந்தரேச்வரம் , துறவூர் கோவில்கள் அவர்கள் வசம் இருந்தன. தீபாவளி நாளில் கூடி எழுநல்லது என்ற விழாவை அவர்கள் ஏற்பாடு செய்து ஹரியும் சிவனும் ஒன்று என்று காட்டினார்கள் . மகா தேவன் என்னும் சிவன், நரசிம்ம மூர்த்தி என்னும் விஷ்ணு (ஹரி) , சுதர்சன மூர்த்தி , திருவேங்கிடபுரம் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய 4 தெய்வங்களும் துறவூர் கோவிலில் சந்தித்து ஆயிரக் கணக்கான மக்களுக்கு தரிசனம் தருகிறார்கள்.

தீபாவளி நாளன்று கோவிலைச் சுற்றி விளக்கு ஏற்றுவதை வலிய விளக்கு என்பார்கள். அன்று கோவில் ஒளி மயமாகத் திகழும்

ஆதி சங்கரரின்  சீடர்களில் ஒருவரான பத்மபாதர் நரசிம்ம உபாசகர்; அவர் ஸ்தாபித்த நரசிம்மர் இது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மஹா கணபதி, அனுமன் சந்நிதிகளும் கோவிலுக்குள் உள்ளன. காசி மடத்தில் 11ஆவது சுவாமிகளாக (கிபி.1700) இருந்தவர் ராஜேந்திர தீர்த்த சுவாமிகள். அவருடைய சமாதி உள்ள பிருந்தாவனமும் இங்கு இருப்பது புனிதத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.

xxxx

83.செட்டிகுளங்கரா பகவதி கோவில்

ஆலப்புழா மாவட்டத்தில் காயம்குளத்திலிருந்து 5 கிமீ தொலைவில் புகப்பெற்ற பகவதி (பத்ர காளி ) கோவில் இருக்கிறது . அருகிலுள்ள ஊர் மாவேலிக்கரா .

சபரி மலைக்கு அடுத்தபடியாக வருவாய் உடைய கோவில் இது; சாந்தத்தம் என்னும் பிரசாதம் மூலம் மட்டுமே கோடிக் கணக்கான ரூபாய் கிடைக்கிறது . கோவிலின் வருவாயை திருவிதாங்க்கூர் வட்டாரக் கோவில்களின் பூஜைக்குப் பகிர்ந்தளிப்பது குறிப்பிடத்தக்கது; சபரி மலை அய்யப்பன் கோவில் பிரசாதம் தயாரிக்கவும் இந்தக் கோவிலின் நெல் பயன்படுகிறது

கோவிலில் பிரசாதங்களான குத்திராமூட்டில் கஞ்சி மற்றும் தெரம்மூட்டில் கஞ்சி ஆகியவை முக்கியமானவை . குத்தியோட்டம்கும்பபாரணி முதலிய பல சடங்குகள் வேறு எங்கும் இல்லாதவை. இதனால் பல தனிச் சிறப்புகளுடைய கோவில் இது

1000 திரிகளுடன் அதிசய விளக்கு

கல்லு விளக்கு என்னும் மிகப்பெரிய கருங்கல் விளக்கு இங்கு இருக்கிறது 1000 திரிகளுடன் தினமும் விளக்கு ஏற்றுகின்றனர் .

பரந்து விரிந்த நெல் வயல்களுக்கு இடையே கோவில் அழகாக நிற்கிறது.

இந்தக் கோவிலின் தனித்துவத்தை அறிந்த யுனேஸ்கோ  UNESCO நிறுவனம், தகவல்களைச்  சேகரித்து வருகிறது .

ஆண்டு தோறும் ஒரே நாள் விழா நடக்கும். அதில் தென் கேரளத்தின் அத்தனை வழக்கங்களும் சடங்குகளும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன !!!

குத்தியோட்டம் என்பது என்ன?

இந்த சடங்கு 1200 ஆண்டு வரலாறு உடையது . சடங்கை நிகழ்த்தும் ஒருவர் 8 முதல்  14 வயதுடைய சிறுவர்களுக்கு உடலில் வேலையும் கம்பியையும் குத்திக்கொள்ளும் சடங்கினை போதிக்கிறார். பரணி உற்சவ நாளில் அந்தச் சிறுவர்கள் வெள்ளிக் கம்பியை உடலில் குத்திக்கொள்ளுவர்; கழுத்தைச் சுற்றியுள்ள வெள்ளிக் கம்பி, தலை மீதுள்ள கத்தியில் நாட்டப்படும். அவர்கள் ஊர்வலமாகச் செல்லுகையில் மக்கள் இளநீரைத் தெளித்து ஆவேசத்தை அடங்குவர். அவர்கள் மீது சாமி  ஏற ஏற அவர்கள் இறைவி முன்னால் கட்டுகடங்கமால் ஆடுவார்கள்; கூடவே வரும் வாத்தியக்  கலைஞர்கள் சுருதியை ஏற்றி ஆவேசம் உண்டாக உதவுவர் ; வண்ண வண்ணக் குடைகளுடன் பக்தர்கள் பின்னே வருவார்கள்  .

பிப்ரவரி  மாதத்தில்  பரணி உற்சவம் நடக்கும் .

பரணி உற்சவத்தின் மற்றும் ஒரு சடங்கு கெட்டு கழிச்சா என்பதாகும் . வித விதமான பெரிய குதிரை உருவங்கள், புராண, இதிஹாச கதா பாத்திர உருவங்கள், அழகான சப்பரங்கள் முதலியன கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சேரும் . வேறு எங்கும் காணக் கிடைக்காத நாட்டுப்புற நிகழச்சிகளை நடத்திய வண்ணம் கலைஞர்களும் ஊர்வலத்தில் வருவார்கள்; இதைக் காணுவோர் வியப்பில் மிதப்பர்; வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத காட்சிகளாக அவை அமையும் .

—சுபம்–

TAGS –குத்தியோட்டம், பரணி உற்சவம், அதிசய விளக்கு, செட்டிகுளங்கரா பகவதி , கோவில் , துறவூர் மஹாதேவர் , நரசிம்ம மூர்த்தி ,

கே செரா செரா –  Whatever will be, will be! (Post No.12,889)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,889

Date uploaded in London –  –  –   6  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கே செரா செரா –  Whatever will be, will be!

ச.நாகராஜன்

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘The Man Who Knows Too Much” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் உலகப் புகழ் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை அதன் புகழ் மங்கவில்லை.

பாடலை எழுதியவர்கள் ரேமாண்ட் பி.ஈவான்ஸ் மற்றும் ஜே லிவிங்ஸ்டன் (Raymond B. Evans, Jay Livingston) ஆகிய இரு பாடலாசிரியர்கள்.

பாடல் இதோ:

When I was just a little girl
I asked my mother
What will I be?
Will I be pretty?
Will I be rich?
Here’s what she said to me

“Que sera, sera
Whatever will be, will be
The future’s not ours to see
Que sera, sera
What will be, will be”

When I grew up and fell in love
I asked my sweetheart
What lies ahead?
Will we have rainbows
Day after day?
Here’s what my sweetheart said

“Que sera, sera
Whatever will be, will be
The future’s not ours to see
Que sera, sera
What will be, will be”

Que sera, sera

திரைப்படத்தில் கடத்திச் செல்லப்பட்ட மகனைக் கண்டுபிடிக்க இந்தப் பாடல் உதவுகிறது. அம்மா இந்தப் பாடலைப் பாடக் கேட்டு பழக்கப்பட்ட பையன் அம்மா இதை மீண்டும் பாடும் போது, தான் இருக்குமிடத்தைச் சூசகமாகத் தெரிவிக்கிறான். அவன் காப்பாற்றப் படுகிறான்.

ஆனால் பாடலில் வரும் ‘கே செரா செரா’ என்பது பொருள் பொதிந்தது. என்ன நடக்குமோ அது நடக்கும் என்பதே இதன் பொருள். இது இத்தாலிய மொழியிலும் ஸ்பானிஷ் மொழியிலும் சிறு வேறுபாடுடன் பழங்காலந்தொட்டு இருந்து வந்திருக்கிறது.

ஒரு சிறு பெண் அம்மாவிடம் நான் அழகாக இருப்பேனோ, பணக்காரியாக இருப்பேனா என்று கேட்கிறாள். அம்மா சொல்கிறாள். எதிர்காலம் நம்மால் பார்க்கப்பட முடியாதது, நடக்க வேண்டியது நடக்கும் என்று.

வளர்ந்த பின்னர் காதல் வயப்பட்ட பின்னர் தனது ஸ்வீட்ஹார்ட்டிடம்

அந்தப் பெண் கேட்கிறாள் : என்ன நடக்கப் போகிறது; எல்லாம் இன்பமயம் தானா என்று. அதற்கு ஸ்வீட்ஹார்ட்டின் பதில்: கே செரா கே செரா!

இந்தப் பாடல் முதலில் 1955இல் பிரசுரிக்கப்பட்ட பாடல். இதை அமெரிக்காவின் சிறந்த நடிகையும் பாடகியுமான டோரிஸ் டே (Doris Day பிறப்பு 3-4-1922 மறைவு 13-5-2019) 1956இல் ஹிட்ச்காக்கின் ‘The Man Who Knows Too Much’ படத்தில் பாடினார்.

உடனே பாடல் உலகப் புகழ் பெற்று விட்டது. 1956 அகாடமி விருதையும் பெற்றது. தொடர்ந்து இன்று வரை உலகெங்கும் பல டி.வி. தொடர்களிலும் திரைப்படங்களிலும் கே செரா செரா இடம் பெற்றுக் கொண்டே இருக்கிறது.

டோரிஸ் டே இந்தப் பாடலைத் தனது அடையாளப் பாடலாகவே கொண்டு விட்டார்.

இந்த மெட்டு 1957இல் வெளியான தமிழ் திரைப்படமான ஆரவல்லியில் அப்படியே எடுத்தாளப்பட்டது.

பாடல் இது தான்:

பெண் : சின்னப் பெண்ணான போதிலே

அன்னையிடம் நான் ஒரு நாளிலே

எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா

அம்மா நீ சொல் என்றேன்

சின்னப் பெண்ணான போதிலே

அன்னையிடம் நான் ஒரு நாளிலே

எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா

அம்மா நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம்தான் என்றாள்

வெண்ணிலா நிலா


கன்னி என் ஆசைக்காதலே கண்டேன் மணாளன் மீதிலே

என் ஆசைக்காதல்

இன்பம் உண்டோ தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம்தான் என்றாள்

கண்ஜாடை பேசும் வெண்ணிலா கண்ணாளன் எங்கே சொல் நிலா

என் கண்கள் தேடும் உண்மை தானே சொல் நிலவே என்றேன்.

ஆண் :வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காணலாம்.

வெண்ணிலா நிலா

பாடல் சொல்லும் கே செரா கே செரா காலம் காலமாக ஹிந்து மதம் கூறி வரும் தத்துவம். ‘நடப்பது தான் நடக்கும்’. Whatever will be, will be!

இந்தத் தத்துவம் உலகப் புகழ் பெற்ற பாடலாக மாறி இன்று வரை எங்கும் ஒலிக்கிறது.

கேட்டுப் பாருங்களேன். (எப்போதும் யூ டியூபில் கேட்கலாம்)

***

London Swaminathan Article Index for December 2023 (Post No.12,888)

London Swaminathan in Chennai Rail  Museum, December 2023

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,888

Date uploaded in London – –   5 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

NOTE: 18-12-2023 to 24-12-2023 no posting; I was in Chennai, India.

Index No.132

Gandhiji on Temple Visits and Women (Post No.12,781)2/12

London swaminathan November 2023 Articles Index (Post No.12,798) 4/12

Rare Picture of Swami Vivkananda at Parliament of Religions (Post No.12,802)5/12

Rare Dravidian Pictures from 1904 book (Post No.12,808)7/12

Rare Dravidian Pictures from 1904 book – 2 (Post No.12,812) 8/12

Rare Pictures from 1907 Book: Saint, Potter, Weaver, Blacksmith ,Fakir, Barber Carpenter (Post No.12,824)11/12

Rare Pictures from India’s Past, 1927- Part One (Post 12,890)13/12

Rare Pictures from India’s Past, 1927- Part two (Post No.12,834) 14/12

Greatest Tamil Prophet/ Poet Bharati slams Dravidian Baddies (Post No.12,823) 11/12

Pandya ,Choza, Pallava Coins from Smith 1908 Book (Post No.12,835)14/12

Rare Pictures from 1928 German book on Hinduism-1 (Post No.12,839)15/12

Part 2 of Rare Pictures from 1928 German book on Hinduism- (Post No.12,842)16/12

Part 3 with Strange Hindu Saints ; Rare Pictures from 1928 German book on Hinduism- (Post No.12,851)26/12

Part 4 with Kasi Temples, Ganga River, Hindu Cremation  ; Rare Pictures from 1928 German book on Hinduism- (Post No.12,855)27/12

Part 5 with Amritsar, Gwalior, Varanasi Temples; Rare Pictures from 1928 German book – (Post No.12,859)28/12

Part 6 with Rajasthan Temples; Rare Pictures from 1928 German book – (Post No.12,863)29/12

Part 7 with Aihole Durga Temple; Rare Pictures from 1928 German book – (Post No.12,867)30/12

Part 8 with Madurai Meenakshi Temple; Rare Pictures from 1928 German book (Post No.12871) 31/12

Shirdi Sai Quotes : January 2024 ‘Good Thoughts’ Calendar  (Post.12,850)26/12

My Visit to Rail Museum in Perambur, Chennai- Part 1 (Post No.12,870) 31/12/2023

XXXXXX

London Swaminathan with poets and writers in London Library, November 2023

TAMIL ARTICLES

82.QUIZ எவரெஸ்ட் பத்து QUIZ (Post No.12,801)5/12

83.QUIZ இமயமலை பத்து QUIZ (Post No.12,809) 7/12

84. QUIZ கார்த்திகை பத்து QUIZ (Post No.12,813)8/12

85.QUIZ விந்திய மலை பத்து QUIZ (Post No.12,816) 9/12

QUIZ காஷ்மீர் பத்து QUIZ (Post No.12,829) 13/12

QUIZ புத்தர் பத்து QUIZ (Post No.12,833) 14/12

QUIZ மஹாவீரர் பத்து QUIZ (Post No.12,838) 15/12

QUIZ குரு நானக் பத்து QUIZ (Post No.12,845) 17/12

90.QUIZ  விநாயகர் பத்து QUIZ (Post No.12,858) 28/12

91.QUIZ யானைப் பத்து QUIZ (Post.12,862)29/12

92. QUIZ  முருகன், கந்தன் QUIZ (Post No.12,866)30/12

வைக்கம் போராட்டமும் திராவிட பித்தலாட்டமும்-Part 2 (Post.12,787) 1/12

வைணவ திருச்செங்குன்றூர், திருப்புலியூர் கோவில்கள் -21 (Post.12,790)2/12

டில்லி கோவில் அதிசயம்: பாதரசம் தங்கம் ஆனது!(Post No.12,788)1/12/23

மஹாத்மா காந்தியின் கிண்டல், நக்கல், பகடி ,ஜோக்ஸ் -1 (Post No.12,794) 3/12

மஹாத்மா காந்தியின் கிண்டல், நக்கல், பகடி ,ஜோக்ஸ் -2 (Post No.12,797) 4/12

பெண்களும் கோவில்களும்: காந்திஜி பாராட்டு! (Post No. 12,805) 6/12

வைக்கத்துப் புரட்சி வீரன் பாரதி;  திராவிட சாக்கடை வாயனுக்கு பதில் (Post No.12,819) 10/12

குமாரநல்லூர் பகவதி,  உதயணபுரம் முருகன் கோவில்கள்- 20 (Post.12,786)1/12/2023

பாடல் பெற்ற வைணவ தலங்கள் திருவல்லா, திருக்கடித்தானம் (Post.12,793) 3/12

திருநாவாய்,  திருவித்துவக்கோடு கோவில்கள் (Post No.12,796)4/12

கேரளத்தில் 3 ராமர் கோவில்கள்!- PART 24 (Post No.12,800)5/12

மூன்று ராமர் கோவில்கள் தொடர்ச்சி ……………. PART 25 (Post No.12,804) N6/12

ஆதி சங்கரர் அவதரித்த காலடி – PART 26 (Post No.12,807) 7/12

குருவாயூருக்கு வாருங்கள் குழந்தை  சிரிப்பதைப் பாருங்கள்- PART 27 (Post.12,811)8/12

குருவாயூருக்கு வாருங்கள்  தொடர்ச்சி – – PART 28 (Post No.12,815)9/12

உலகிலேயே ரகசிய,பணக்கார பெருமாள் கோவில்- Part 29  (Post No.12,818)10/12

உலகிலேயே பணக்கார பெருமாள் கோவில் தொடர்ச்சி – Part 30 (Post N.12,821)11/12

திருவில்வாமல ராம, லட்சுமண கோவில்-31 (Post No.12,826)12/12

புனர் ஜனனி குகை:திருவில்வாமல ராமர்  கோவில் மேல் விவரம்-Part 32 (Post No.12,828)13/12

கொடுங்கல்லூர் பகவதி கோவில் கண்ணகி கோவில் – 33 (Post No.12,832)14/12

சாமியே! சபரி மலை சாஸ்தாவே ! சரணம் ஐயப்பா!! -34 (Post No.12,837)15/12

மேலும் 3 ஐயப்பன் கோவில்கள் – 35 (Post No.12,841) 16/12

கேரளத்திலும் ஒரு மூகாம்பிகை கோவில் -36 (Post No.12,844)17/12

கல்பாத்தி, காடம்புழா  கோவில்கள் -37 (Post No.12,847)25/12

முல்லைக்கல் ,திருநக்கரா  கோவில்கள் – PART 38 (Post No.12,849)26/12

திப்பு சுல்தான் இடித்த தளிப்பறம்பா சிவன் கோவில் – 39 ( Post No.12,853)27/12

ஷீரடி சாய்பாபா பொன்மொழிகள்: ஜனவரி 2024 நற்சிந்தனை காலண்டர் (Post.12,854)27/12

திரிசம்பரம் கிருஷ்ணன் கோவில் -40 (Post No.12,857) N28/12

பெருவனம் சிவன், கூர்க்கான்சேரி மகேஸ்வரன் கோவில்கள்-41(Post.12,861)29/12

லவ குசனுக்கு கோவில்கள்: வயநாடு கோவில்கள் – 42 (Post No.12,865) 30/12

கோட்டக்கல் தன்வந்திரி,  மஞ்சேரி  சிவன் கோவில்கள்- 43 (Post.12,869)31/12

முஸ்லீம்கள் கோழைகள் ஆனது எப்படி?POSTED IN FB ON 26-12-23

லட்சம் பேரை ஊக்குவித்தவர்; ஆயிரக் கணக்கானோர் வாழ்வு வளம் பெற வழி வகுத்தவர்! (Post No.12,846) 25/12

—SUBHAM—

TAGS-

London Swaminathan, Article Index, December 2023 ,Index No.132

Part 13 with Jain and Buddhist Sculptures in Abu, Sanchi ,Shatrunjay Temples; Rare Pictures from 1928 book (Post No.12,887)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,887

Date uploaded in London – –   5 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

This is part 13 from the book. This is the Last Part.

In the last part numbered Thirteen, rare pictures of Jain and Buddhist sculptures in Abu, Shatrunjai, Ahmedabad, Sanchi , Gwalior and Buddha Gaya are given.

In Kolkata Hindus are cremating dead bodies.

xxxx

There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

–subham—

Tags- Jain centres, Buddhist sculptures, Abu, Sanchi, Gaya, Rajasthan, Gwalior

ஆற்று மணலில் லிங்கம்: பழுர் சிவன் கோவில்-48 (Post No.12,886)

Pazur Sivan Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,886

Date uploaded in London – –   5 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 48

கோவில் எண்கள் –7677787980

76. மூவாட்டுப்புழா பழுர் பெருந்த்ரிக் கோவில்

எர்ணாகுளம் வட்டாரத்தில் பிறவம் அருகில் மூவாட்டுப்புழா நதிக்கரையில் அமைந்த இந்த சிவன் கோவில் மிகவும் புகழ் பெற்றது  எர்ணாகுளத்திலிருந்து 35 கி.மீ..

சிறப்பு அம்சம்

இங்குள்ள சிவ லிங்கம் ஆற்று மணலால் செய்யப்பட்டது. நம்பூதிரி பிராமண சிறுவர்கள் விளையாட்டாக செய்த சிவலிங்கம் பெரிய கோவில் உருவாகக் காரணம் ஆகியது .அந்த சிவலிங்கம் மணல்    லிங்கம் போல உதிராமல் உறுதியாக நின்றதால் அதை பக்தர்கள் வழிபடத்துவங்கினர்.

இந்தக் கோவிலில் இன்னும் ஒரு அதிசயம் ஒரு சிறகு கொண்ட மரத்திலான கருடன் உருவம் ஆகும். இதை உருவாக்கிய சிற்பி, இரண்டாவது சிறகு செதுக்கப்பட்டவுடன் அது பறக்க எத்தனித்தது. உடனே அந்த சிற்பியே அதன் இரண்டாவது இறக்கையை வெட்டினான் என்பது இதன் பின்னாலுள்ள கதை

கோவில் விமானம் வட்ட வடிவமாக உள்ளது. மரத்தால் ஆன துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சிவன், கிழக்கு நோக்கி உள்ளார். சதுர அர்த்தமண்டபத்தின் கூரையில் அழகிய மர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன; பாகவத புராணம், ராமாயணம்,மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு உருவங்களை செதுக்கியுள்ளனர் இது  கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தத கோவில்.

ஆண்டுதோறும் சிவ ராத்திரி உற்சவ காலத்தில் 6 நாள் விழா நடக்கும். யானைகளுடன் அலங்கார  பவனி உண்டு.. மாலையில் பிறவம் நகரிலுள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு சுவாமி திரும்புவார். 50 காவடிகள், கரகம், மயிலாட்டம், மேள தாளம் புடை சூழ பவனி நடக்கும். 5 அடுக்குள்ள உயரமான காவடிகள் குறிப்பிடத்தக்கவை.

மறு நாளன்று ஆற்றில் முழங் கால் அளவு நீரில் நின்று முன்னோருக்கு நீர் பலி கொடுப்பார்கள்.

xxxx

77.நெட்டூர் மஹாதேவர் கோவில்

எர்ணாகுளத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள நெட்டூரில் அரியும் சிவனும் இணைந்த சங்கர நாராயணன் காட்சி தருகிறார்.. ஆண்டுதோறும் எட்டு நாள் உற்சவம் நடக்கையில் சிவனையும் விஷ்ணுவையும் கோவிலைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டுவருவார்கள்; இறைவனின் திருமேனி தாங்கிய உருவம் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது பவனி வரும்.  ஆராட்டு குளியலுடன் விழா நிறைவு பெறும் .

ஆண்டுதோறும் ஒரு நாள் மட்டும் த்தம் தாளப் பொலி நடைபெறும் ; பெண்கள் தாம்பாளங்களில் விளக்குகளை ஏந்தி ஊர்வலம் வருவார்கள் . இரவில் வாண வேடிக்கைகள் நடக்கும் .

xxxx

78.வடுதலா கணபதி கோவில்

எர்ணாகுளத்திலிருந்து 5 கிமீ. தொலைவில் வடுதலாவில்   கணபதி கோவில் இருக்கிறது ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி காலத்தில் எட்டு நாள் உச்சவத்தைக் கொண்டாடுகிறார்கள், ஆறாவது நாள் நடக்கும் பள்ளிவேட்டை உற்சவம் சிறப்பானது சப்பரத்தில் பிள்ளையாரை வைத்து கோவிலைச் சுற்றி கொண்டுவருவார்கள் . ஏழாவது நாளன்று யானைகள் மீது கணபதி பவனி வருவார். சிறப்பான இன்னிசைக் கச்சேரி ஒன்றுடன் விழா நிறைவு பெறும் .

xxxx

79.சேரை ஸ்ரீ கெளரீஸ்வர கோவில்

வைப்பீன் என்னுமிடத்திலுந்து 18 கி.மீ. தூரத்தில் சேரை சுப்ரமண்ய சுவாமி கோவில் இருக்கிறது.

ஆண்டுதோறும் 9 நாள் விழா நடக்கையில் கதகளி, ஓட்டந்துள்ளல் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஏழாவது நாளன்று பகதர்கள் 150 காவடிகளை சுமந்து ஆட்டிக்கொண்டு வருவார்கள். கடை சி நாள் விழாவில் 18 யானைகள் வண்ண வண்ண குடைகளுடன் வருவது கண்கொள்ளாக் காட்சியாக அமையும் .ஊர்வலத்தின் சுருதியை உச்ச ஸ்தாயிக்குக் கொண்டுபோக பஞ்ச வாத்யக்காரர்கள் கொட்டி முழக்குவார்கள் .

xxxx

80. அம்பலமேடு கோவில்

ஹரி மட்டம்  சிவன் கோவில் எனப்படும் கோவிலில் சிவனும் விஷ்ணுவும் கோவில் கொண்டுள்ளனர். எர்ணாகுளத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அம்பல மேடு இருக்கிறது.

ஆண்டு தோறும் எட்டு நாள் விழா நடைபெறும். ஏழாவது நாள் மாலை யில் யானைகளுடன் இறைவன் பவனி வருவார் . கதகளி, ஓட்டந்துள்ளல் முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கொச்சி வட்டாரத்தில் மட்டுமே நூற்றுக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அங்கு நடைபெறும் இறைவன் ஊர்வலங்கள் யானைகளை வளர்ப்போருக்கும் , கதகளி ஓட்டந்துள்ளல் , சங்கீத, நாட்டிய   கலைஞர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளையும் வரும்படியையும் உண்டாக்குகின்றன. ஆண்டு  முழுதும் கோவில் விழாக்கள் நடப்பதால் கலை ரசிகர்களுக்கும் நல்ல விருந்து கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் பெரிய கோவில்களில் மட்டுமே நடக்கும் கலை விஷயங்களும் யானைகள் ஊர்வலமும் கேரளத்தில் சர்வசாதாரணமாக நடக்கின்றன.என்றால் மிகையாகாது .

மேலேயுள்ள பல கோவில்களின் பெயர்கள் தமிழ் நாட்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது..

–subham–

 tags-  வடுதலா , அம்பலமேடு, பெருந்த்ரிக்கோவில் , பழூர் சிவன், கோவில் , கணபதி,