முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!- 4 (Post No.12,977)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,977

Date uploaded in London – –   1  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 4

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

XXXXX

சில்லரை விஷத்திற்கு

31. ஆடுதீண்டாப்பாளை வேர், கவுத்தும்பை வேர்,  வெள்ளெருக்கு வேர் , மருக்காறை வேர், இவைகளை சமநிடை எடுத்து அறைத்து , உடம்பில் பூசி முருக்கித் துவட்டினால் , கருவழலை- தண்ணிப்பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் தீரும்  

xxxx

32 . ஆனை  நெருஞ்சியிலையை  சிறுநீர் விட்டறைத்து இடித்து சாறு பிழிந்து சுமார் அரைக்கால்படி உள்ளுக்கு  கொடுத்தால் மேற்படி விஷங்கள் நிவர்த்தியாகும் ; பார்வதி பரணீயம் என்னும் சாஸ்திரத்தில் சகலவித சர்ப்பத்திற்கும் ஜாதி, நிறம், குறி, அடையாளமும் அதற்கு அனுபோகமான மருந்துகளும் வெகு விபரமாய்ச் சொல்லியிருக்கிறது .

xxxx

முள்ளு வெளிப்பட

33 . ஆத்து நண்டைப்பிடித்துஇடித்து முத்தையாக்கி காலில் முள்ளு  தைத்த இடத்தில் வைத்துக்கட்டி மறுதினம் அவிழ்க்க முள்ளு வெளியில் வந்துவிடும் .

xxxxx

குதிக்கால் வெடிப்புக்கு

34 . ஆத்து நண்டைப்பிடித்துஇடித்து பில்லைதட்டிக்  காயவைத்துச் சுட்டு அந்த சாம்பலை தேன்விட்டிழைத்து, குதிக்கால் வெடிப்பு, ஆசன வெடிப்பு இதுகளுக்கு இரண்டு வேலை தடவ வெடிப்புகள் மாறிவிடும் .

xxxx

வயிற்றுக்கடுப்புக்கு

35.ஆலம் விழுதை எருமைத்தயிர் விட்டரைத்து ஒரு பலம் எடுத்து எலுமிச்சம்பழ ரசம் ஒரு பலம் விட்டுக் கலந்து கொடுக்கவும். இப்படி இரண்டு மூன்று வேளை கொடுக்க வயிற்றுக்கடுப்பு தீரும் .

xxxxx

36 . ஆசனக்கடுப்புக்கு புகை

ஆமையோட்டையிடித்து  பொடிசெய்து நெருப்பில் தூவி அந்தப்புகையை அபானத் துவாரத்திற் பிடிக்க . ஆசனக்கடுப்பு உடனே தீரும் .

Xxxx

37 . ஆண்குறி புண் வீக்கத்திற்கு

ஆதளைப் பாலை ஆண்குறி  தோலின் மீது உண்டாகும் புண், ரிணம்  இதுகளுக்குத் தடவி , அலரிப்பூவைக் கசக்கி அதன்மேல் வைத்துக்கட்டி னால் வீக்கம் வாடிப்போகும்; புண் ஆறிவிடும் .

xxxxx

38 .புழுவெட்டுக்கு

ஆனைத்தந்தத்தை சுட்டுப் பொடியாக்கி தேனில்குழைத்து புழுவெட்டினாலாவது  மற்ற எவ்விதத்தாலாவது மயிர் உதிர்ந்துபோன இடத்தில் எட்டுநாள் தடவி வந்தால் மயிர் முளைக்கும் .

xxxxx

39 .மயிர் கருப்பாகத் தைலம்

னைத்தந்தத்தின் பொடி பலம் ஐந்து —  எட்டு படி தண்ணீரில் போட்டு ஒருபடியாய்க் காய்ச்சி அதில் ஒரு படி நல்லெண்ணெய் விட்டு சவுரிக்கொடி அவுரித் தழை , கரணங்  கண்ணி சிவந்த ஆலம் விழுது இவைகளின் சாறு  வகைக்குப்படி கால் –  ஒன்றாய்க்கலந்து பதமாய்க் காய்ச்சி,  வடித்து சிரசில் பதமிட்டுவந்தால் மூன்று மாதத்தில் எப்பேர்க்  கொற்ற நகையும் மாறிவிடும் .

தைலபதம், எண்ணெய் பதம், மெழுகுபதம் இவைகளை பார்வதி பரணீயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது .

xxxxx

40 .ஒக்காளத்திற்கு

ஆளிவிரை ஒரு பலம் எடுத்து 4 பலம் ஜலத்தில் ஒரு ராத்திரி  ஊறவைத்து  காலையில் எடுத்து மல் துணியில் கொட்டிப்பிழிந்து ஒரு பலம் வெள்ளை சக்கரைபோட்டுக் கலக்கி சாப்பிடவும். பத்து நாலா சாப்பிட அழலை, ஒக்காளம், நரம்புக்குத்து, வலி,வாந்தி,  வீக்கம்,  விரைவாதம் தீரும்.

–subham—

Tags-  முனிசாமி முதலியார்,   மூலிகை அதிசயங்கள், Part 4, ஒக்காளம் மயிர் கருப்பாகத் தைலம் , ஆண்குறி புண்,  வீக்கத்திற்கு, புழுவெட்டுக்கு

Leave a comment

Leave a comment