QUIZ அதிசய காமாக்யா கோவில் பத்து QUIZ(Post No.12,984)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,984

Date uploaded in London – –   4 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 QUIZ SERIAL No.107

1.காமாக்யா கோவில் எங்கே இருக்கிறது ?

XXXX

2.காமாக்யா கோவிலில் என்ன அதிசயம் ?

XXXX

3.காமாக்யா என்றால் என்ன ?

XXXX

4.காமாக்யா கோவில்லுக்குள் ஆண்கள் வரலாமா ?

xxxx

5.மாத விலக்கை எப்படி கடைப்பிடிக்கிறார்கள் ?

xxxx

6.தேவிக்கு மிருக பலி கொடுக்கப்படுகிறதா ?

xxxx

7.முஸ்லீம்கள் இந்தக் கோவிலை எப்போது தாக்கி அழித்தார்கள்?

xxxx

8.கோவிலின் மிகப்பெரிய விழா எது ?

XXXX

9.கோவிலின் சிறப்பு பிரசாதம் என்ன ?

xxxx.

10.தேவியின் மாத விலக்கை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் ?

XXXX

விடைகள்

1.அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரமான  குவஹாத்தி நகரில்  நிலாசால பர்வதத்தின் மேல் காமாக்யா கோவில் உள்ளது . இது 51 சக்தி பீடங்களில் ஒன்று .

XXXX

2.தக்ஷ யக்ஞத்தில் கணவனை அவமானப்படுத்திய தந்தையைக் கண்டித்து பார்வதி தேவி /தாட்சாயினி தீக்குளித்தாள் . தாட்சாயினி சடலத்தைத் ஏந்தியவாறு சிவ பெருமான் கோர தாண்டவம் ஆடினார். அப்போது உமை/ தாட்சாயினி அம்மனின் உறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கும் மாபெரும் சக்திக் கேந்திரங்களாக மாறின. அதில் அம்மனின் பெண் உறுப்பு/ யோனி விழுந்த இடம் குவாஹாத்தி காமாக்யா பீடம் ஆகும் ; ஆகையால் இங்கு பெண் உறுப்பை சக்தியின் அம்சமாக வழிபடுகிறார்கள்.

XXXX

3.மற்றை நம் காமங்கள் என்று திருப்பாவையில் ஆண்டாளும் பாடுகிறாள்; தற்காலத்தில் இதை செக்ஸ் விஷயங்களில் மட்டும் பயன் படுத்துகிறார்கள் ஆனால் பொதுவான சம்ஸ்கிருத அர்த்தம் ஒருவரின்  ஆசைகள். காமேஸ்வரி என்பது தேவியின் இன்னும் ஒரு பெயர்; பக்தர்களின் இச்சைகளை/ விருப்பங்களை பூர்த்தி செய்ப்பவள் என்பது இதன் பொருள்.

XXXX

4.வட இந்தியாவில், முருகன் சந்நிதிக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்ற தடை இருக்கிறது ; அது போல ஆண்கள் நுழையக்கூடாது  என்ற தடையும் சில கோவில்களில் உள்ளது ; இது அம்மனின் மாத விலக்கு ஏற்படும் 3 நாட்களில் மட்டும்தான் ; அவ்வாறே  காமாக்யா கோவிலுக்குள் ஆண்களும் அம்மனின் மாதவிலக்கு காலத்தில் வர முடியாது. கேரளத்தில் சில கோவில்களிலும் அம்மனின் மாதவிலக்கு கடைப்பிடிக்கப்படுகிறது .

Xxxx

5.கருவறையை சிவப்பு நிற வஸ்திரத்தால் மூடி மறைத்துவிடுகின்றனர். அந்த மூன்று நாட்களில் ஆண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் . ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் மாதவிலக்கு நாட்களில்  கருவறையை மூடிவிடுகிறார்கள்.

Xxxx

6.ஆம்; உண்டு. தமிழ் நாட்டில் ஆடு, கிடா வெட்டி அம்மனைக் கும்பிடுவது போல இங்கு எருமையை வெட்டி சாமி கும்பிடுவது வழக்கம் . முன்னர் நூற்றுக்கணக்கில் எருமைகள் பலி / நேர்த்திக்கடன் என்ற பெயரில் நடந்தது. இப்போது அடையாள பூர்வமாக சம்பிரதாயப்படி எருமைகள் பலி கொடுக்கப்படுகின்றன.

நாள்தோறும் உலகில் நூறு நூறு ஆயிரம் கோடி நாய், பன்றி, பசு பல்லி, பாம்பு, ஒட்டகங்கள்,  குதிரைகளும் பல்லாயிரம் கோடி மீன்களும் திமிங்கிலங்ககளும் கசாப்புக் கடைகளில் விற்கப்படுகின்றன. அவைகளைத் தடுக்க முடியாதவர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்க அருகதை அற்றவர்களே ! பில்லியன் கணக்கில் ஆடுகளும் கோழிகளும் நாள்தோறும் கொல்லப்படுகின்றன.

XXXX

7.சுலைமான் கர்ரானி Sulaiman Karrani (1566–1572) என்ற மதவெறியனின் படைத்தளபதியும் ,ஹுசைன் ஷா (1500 CE) என்ற மதவெறிபிடித்தவனின் படைகளும் கோவிலை தாக்கி அழித்தன. பின்னர் வந்த இந்து மன்னர்கள் கோவிலை புனர் நிர்மாணம் செய்தார்கள் .

XXXX

8.இந்த விழாவுக்கு அம்புபாச்சி விழா  (Ambubachi Mela) என்று பெயர் . ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தேவிக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது ஜூன் மாதத்தை ஒட்டி இந்த விழா வரும். மூன்று நாட்களுக்கு கோவில் மூடப்படும். மூன்று நாட்களில் பக்தர்கள் சமைக்கக்கூடாது. பூஜை செய்யக்கூடாது. புனித நூல்களைப் படிக்கக்கூடாது. விவசாயம் செய்யக்கூடாது போன்ற சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. நாலாவது நாளன்று கோவில் திறக்கப்படும் . மேற்கு வாங்க , அஸ்ஸாம் திரிபுரா முதலிய மாநில சாக்தர்கள் / சக்தியை வழிபடுவோர் வெவ்வேறு கலர் உடைகளை வந்து தேவியை வணங்குவார்கள்;

XXXX

9.தேவி சிலைக்கு அணிவிக்கப்பட்ட ஆடைகளை பிரசாதமாக வினியோகிக்கிறார்கள் . இதில் அங்கடோக், அங்க வஸ்திரம் என இரண்டு வகை உண்டு . அங்கடோக் என்பது தேவியின் யோனியை மூடுவதற்கு பயன்படுத்திய சிவப்பு நிறத் துணியின் பகுதியாகும் . பக்தர்களும் தேங்காய், பழம், பூ ஆகியவற்றோடு சிவப்புத்துணியையும் அம்மனுக்கு கொடுக்கிறார்கள்

xxxx

10.ஆஷாட அல்லது ஆடி மாதத்தில் ஏழாவது நாள் முதல் பத்தாவது நாள் வரை மாதவிடாய்க் காலமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது .

ஏனைய காலங்களில் மாதவிடாய் கணிப்பது அர்ச்சகரின் கைகளில் உள்ளது ; கேரளத்தில் செங்கன்னூர் பகவதி அம்மன் துணியில் சிவப்புக்கறையைக் கண்டால் உடனே தாழமன் மடத்திலுள்ள பெண்களிடம் அனுப்புவார்கள் ; அவர்கள் மாதவிலக்கு பற்றி முடிவு சொல்லுவார்கள் .

XXXX Subham XXXX

TAGS – ,காமாக்யா கோவில் பத்து , மாதவிடாய், அம்புபாச்சி விழா  , தேவி, மிருக பலி

Leave a comment

Leave a comment