தயையின் மஹிமை!(Post No.13,007)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.007

Date uploaded in London – — 14 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தயையின் மஹிமை!

ச. நாகராஜன்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய உத்தமமான ஒரு குணம் தயை!

இதன் மஹிமையை முழுவதுமாக யாராலும் சொல்ல முடியாது.

என்றாலும் கூட பத்ம புராணம், ஶ்ரீமத் பாகவதம்,, ஜாபால உபநிடதம், மஹாபாரதம் உள்ளிட்ட நூல்களில் இடம் பெறும் சில ஸ்லோகங்கள் இதன்  மஹிமையை விளக்குவனவாக அமைகின்றன.

அவற்றில் ஒரு சில:

ஆயு: புத்ராம்ஸததா தாரான் யஷ:  சம்பத ஏவம் ச |

ப்ராணிஹிம்சாப்ரவ்ருத்தானாம் விதீருஷ்டோ ஹரேத் ஸ்வயம் ||

                           பத்ம புராணம் (க்ரியா யோகம்)

பிராணிகளை வதம் செய்யும் மனிதர்களைக் கண்டு கோபம் அடையும் இறைவனே அவர்களது ஆயுளையும், அவர்களது புத்ரர்கள், மனைவி ஆகியோரது ஆயுளையும் இழக்கச் செய்கிறான். அவர்கள் புகழையும் செல்வத்தையும் இழக்கச் செய்கிறான்.

கிம் ஜபை: கிம் தபோபிர்வா கிம் தானௌர்வா கிமத்வரை: |

அந்தரே அடிங்கதம் யஸ்ய ஹிம்ஸாவர்ணத்வயம் முதா ||

                                பத்ம புராணம் (க்ரியா யோகம்)

‘ஹிம்’ மற்றும் ‘ச’ என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்ட மனத்தை உடைய ஒருவனுக்கு ஜபம் தான் என்ன தரும்? தவமும் தானமும்  தான் என்ன தரும்/

புமான் யோஷிதுத க்லீப ஆத்மசம்பாவனோதம: |

பூதேஷு நிரநுக்ரோஷோ ந்ருபாணாம் தத்வதோவத||

–    ஶ்ரீமத் பாகவதம் 4/17/26

முகத்திரை கொண்டவனும் தற்பெருமை கொண்டவனும், மற்ற உயிர்களிடம் இரக்கமற்றும் இருக்கும்  யாராக இருக்கட்டும், ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலும் சரி, அவரைக் கொல்வது ஒரு அரசனுக்கு பாவத்தைத் தராது.

புண்யோபதேஷீ சதய: ய: கைதவவிவர்ஜித: |

பாபாயநவிரோதி ச சத்வார: கேசவோபமா: ||

                        பத்ம புராணம் (க்ரியா யோகம்)

நான்கு விதமான மனிதர்கள் – எப்போதும் சேவை செய்பவன், அன்புள்ளம் கொண்டவன், சூதாட்டம், ஏமாற்றுதல் போன்றவை இல்லாதவன், பாவச் செயல்களை எதிர்ப்பவன் ஆகிய இந்த நால்வரும் கேசவனுக்குச் சமமானவர்கள்.

ராகாத்யபேதம் ஹ்ருதயம் வாகதுஷ்டாந்ருதாதினா |

ஹிம்சாதிரஹிதம் கர்ம யத்ததீஷ்வரபூஜனம் ||

–    ஜாபாலோபநிஷத்

ராகங்கள் இல்லாமையும் (கோபம் உள்ளிட்டவை இல்லாமை). பொய், வன்மை ஆகியவற்றால் கறைபடாத பேச்சுடைமையுமே ஈஸ்வரனுக்குரிய பூஜையாகும்.

அஹிம்ஸா பரமோ தர்ம: அஹிம்ஸா பரமம் ஸ்ருதம் |

அஹிம்ஸா பரமம் சத்யம் அஹிம்சா ச பரம் சுகம் ||

                           மஹாபாரதம் (அநுசாஸன பர்வம்)

அஹிம்சையே உயர்ந்த தர்மம். அஹிம்சையே  உயர்ந்த கல்வி. அஹிம்சையே உயர் சத்யம். அஹிம்சையே உயர்ந்த சுகமாகும்.

அஹிம்சா பரமம் ஞானம் அஹிம்சா ச பரம் பலம் |

அஹிம்சா பரமம் தீர்த்தம் அஹிம்சா ச பரம் தப: ||

                           மஹாபாரதம் (அநுசாஸன பர்வம்)

அஹிம்சையே உயர்ந்த அறிவு. அஹிம்சையே உயர்ந்த பலம், அஹிம்சையே உயர்ந்த தீர்த்தம் அஹிம்சையே உயர்ந்த தவமாகும்.

அஹிம்சா பரமோ யக்ஞ: அஹிம்சா பரமோதப: |

அஹிம்சா பரமம் தானம் அஹிம்சா ச பரம் சுஹ்ருதம் ||

                           மஹாபாரதம் (அநுசாஸன பர்வம்)

அஹிம்சையே உயர்ந்த யக்ஞம். அஹிம்சையே உயர்ந்த தவம்.

அஹிம்சையே உயர்ந்த தானம். அஹிம்சையே நண்பர்களுக்குள் சிறந்த நண்பன்.

***

Leave a comment

Leave a comment