முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 10 (13,026)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,026

Date uploaded in London – –   21 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 90  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

XXXX

Part 10

91.வாத சுரத்திற்கு

உத்தாமணி – பாவட்டம் புல்- கொன்றை -சித்தாமுட்டி வேர் – ஒமம்-  மிளகு வகைக்கு  பலம்- கால் இடித்து இரண்டு படி தண்ணீர் விட்டு கால் படியாகக் கிஷாயமிட்டு ஆறு வேளை கொடுக்கத் தீரும் .

xxxx

92.திரிதோஷம் நீங்க

உருத்திராட்சத்தைப் பாலில் அறைத்து உபயோகித்து வந்தால் திரிதோஷம் விக்கல் பித்தம் தாகம் இவைகள் தீரும்

xxxxx

93 . நா வறட்சிக்கு கிஷாயம்

உருத்திரசடையை பிட்டவியல் செய்து  அந்த சாற்றில் லவங்கம் மிளகு தூளாக்கிப் போட்டுக் கொடுத்துவந்தால் சுரம் தீரும்; நாவறட்சி நீங்கும் .

xxxxx

94 .வெட்பத்திற்கு

உழலத்திப்பட்டை அல்லது சமூலத்தை பாலில் அறைத்துக் கொடுத்தாலும் அல்லது எட்டொன்றாய்க் கியாழம் வைத்து சக்கரை கூட்டிக் கொடுத்தாலும் வெட்பம் சூடு தணியும் .

xxxxx

95.அக்கிரிணத்திற்கு 

ஊமத்ததன் இலையை அறைத்து வெண்ணெயில் குழைத்து அக்கிரிணத்தின் மேல்  பூசி வர ஆறிப்போகும்.

xxxxx

96.நீர் அடைப்புக்கு

ஊமத்ததன் இலையை வெதுப்பி அதற்கு சமன் ஏலரிசி கூட்டி தண்ணீர் வீட்டறைத்து அடிவயிற்றில் பத்துப் போட்டால் மூலவாய்வினால் நீரடைப்பு கண்டால் உடனே நீர் உடையும்  .

xxxxx

97.சுவாசகாசத்திற்கு

ஊமத்தன் இலையை நிழலில் உலர்த்தி சிறுசாய் கத்தரித்து புகலையில் வைத்து சுவாசம் வரும்போது புகைபிடித்தால் உடனே சாந்தியாகும். அதிகமாய் உபயோகிக்கக் கூடாது

xxxxx

98.கட்டிகளுக்கு

ஊமத்தன் இலையை விளக்கெண்ணெய் தடவி வதக்கி கட்டிகளின் மீது வைத்துக் காட்டினாள் பழுத்து உடைவதுண்டு ; இரண்டு மூன்று கட்டு கட்டவும் .

கட்டிகள் உடைய

ஊமத்தன் இலையை அறைத்து அரிசி மாவுங்கலந்து காடி விட்டுப் போட்டுக் கிளறி கட்டியில் வைத்து 1 அல்லது 2 கட்டு கட்ட உடைந்து போகும்.

xxxxx

99.வாத நோய்க்கு

ஊமத்தன் இலையை சாராயத்தில் சற்று நேரம் ஊறவைத்து  எடுத்து வாய்வினால் நோய் கொண்டிருக்கிற இடத்தில் வைத்துக் கட்ட வலி நீங்கும் .

xxxx

100.பிளவைகட்கு

ஊமத்தன் காயை சாணியில் போட்டு அடுப்பேற்றி நன்றாய் வெதுப்பி நசுக்கி பில்லை தட்டி துளி விளக்கெண்ணெய் தடவி , பிளவை- விப்புருத்தி கண்டமாலை முதலிய கரடு வீக்கங்களில் வைத்துக்கட்ட சவுக்கியமாகும்.

தொடரும் ……………………..

xxxx

Tags- ஊமத்த இலை, முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள்10, பிளவை, கட்டி, நா வறட்சி,

Leave a comment

Leave a comment