
Date uploaded in London – – 22 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

.jpg)
cambodia
Quiz Serial Number- 114
1.கருடனின் சிறப்பு என்ன ? வேதத்தில் கருடன் பற்றி ரிஷிகள் என்ன சொல்கிறார்கள் ?
XXXX
2.சங்க இலக்கியத்தில் தமிழ்ப்புலவர்கள் கருடன் பற்றி என்ன பாடினார்கள் ?
xxxx
3.இந்தியாவுக்கு வெளியே அதிகம் புகழ்பெற்ற புனிதப் பறவை கருடன் தானா ?
xxxx
4.கருடனின் வரலாறு என்ன?
xxxx
5. கல் கருட வாகனத்தின் சிறப்பு என்ன ?
xxxx
6.கருட புராணத்தின் சிறப்பு என்ன ?
xxxx
7.கிரேக்க தூதர் நிறுவிய கருட ஸ்தம்பம் எங்கே உள்ளது ?
xxxx
8.ஆகாயத்தில் கருடனைக் கண்டால் இந்துக்கள் வணங்குவது ஏன்?
xxxxxx
9.கருடன் மீதுள்ள ஸ்லோகங்கள் என்ன ? கருட பஞ்சசமியை எப்போது ஏன் கொண்டாடுகிறார்கள் ?
xxxx
10.கருடன் பற்றிய 4 பழமொழிகள் – கண்டுபிடியுங்கள்
1.கருடனைக் கண்ட ……….
2.கருடன் …………. , எவன் கையில் பொருளும் தன் கையிற் சேரும் (COMPARE- காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும் )
3……….. சதங்கை (கெச்சை) கட்டியது போல
4.ஏண்டா கருடா சுகமா? ……………. இருந்தால் சுகம்தான்
(COMPARE – கண்ணதாசன் பாடல்-பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா செளக்கியமா ?)
xxxx

indonesian coin
விடைகள்
1.கருடன் பறவைகளின் அரசன்.
விஷ்ணுவின் கொடியில் உறைவோன். விஷ்ணுவுக்கு வாகனமும் ஆகும் . தமிழ் இலக்கியத்திலும், விஷ்னு சஹஸ்ரநாமத்திலும் கருடன் கொடி போற்றப்படுகிறது. பறவைகளுக்குள் நான் கருடன் என்று கிருஷ்ணன் பகவத் கீதையில் பகிர்கிறார்.
प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् 10-30
ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||
அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.
ரிக் வேதத்தில் கருத்மான் என்ற பெயரில் போற்றப்படுகிறார்; யஜுர் வேதத்தைச் சேர்ந்த சதபத பிராமணத்தில் துணிவின் ஆற்றலாக கருடன் சித்தரிக்கப்படுகிறார் . மகாபாரதத்திலும் இவர் புகழ் உள்ளது அமரகோச நிகண்டில் கருத்மான் ,கருட, தார்க்ஷ்ய, வைநதேய, ககே ஸ்வரஹ, நாகாந்தக, விஷ்ணுரதஹ, சுபர்ணஹ, பன்னக நாசனஹ , கருடத்வஜ என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது .
Garuda: Krishna’s vehicle
(1.1.70) garutmāngaruḍastārkṣyo vainateyaḥ khageśvaraḥ
(1.1.71) nāgāntako viṣṇurathaḥ suparṇaḥ pannagāśanaḥ- AMARAKOSA
வேதாந்த தேசிகர் கருட தண்டகம் என்ற நூலை கருட பகவான் மீது பாடியுள்ளார் ; இதை படிப்போருக்கு பயணத்தில் கஷ்டம் வராது
கருடன் காயத்ரீ மந்திரமும் உளது
மஹாபாரதத்தில் கருடன் வடிவில் படைகளை அணிவகுத்து நிறுத்தும் உத்தி பற்றி வருகிறது
யாகம் செய்வோர் கருடன் வடிவத்தில் செங்கல்களை அடுக்கி யாக குண்டம் அமைப்பர்; இதைக் கரிகால் சோழன் செய்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது,
xxxx

2.சங்க இலக்கியத்தில் கருடனின் கொடியை புள் கொடி என்று புலவர்கள் போற்றுகின்றனர் . விஷ்ணுவைக் குறிப்பிடும்போதெல்லாம் கருடக்கொடி ஏந்தியவன் என்றே பாடுகின்றனர்
புறநானூற்றில் நக்கீரர் பாடுகிறார் :
புறநானூறு 56 Purananuru 56
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, 5
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்,— பாடல் 56
XX
பரி பாடல் 8-2
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும், — நல்லந்துவனார் XX
திருமுருகாற்றுப்படை வரி 151
கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று – – – – – – 148
அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் – – – – – – 150
புள்அணி நீள்கொடிச் செல்வனும் …நக்கீரர் பாடியது
சங்கம் மருவிய நூல்களான சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் எண்ணற்ற இடங்களில் கருடன் கொடி வருகிறது.
XX
கருடத்வஜ என்பது விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் வருகிறது
Xxxx

3.தாய்லாந்து நாட்டின் (சயாம்) தேசீய சின்னம் கருடன்.
இந்தோனேஷியா நாட்டின் அதிகாரபூர்வ விமான சேவையின் பெயர் கருடா ஏர்வேஸ் .
அமெரிக்காவின் தேசீய சின்னமும் கருடன்தான். இது வெள்ளை நிற கழுத்து உடைய கருடன் இனப்பறவை
தென் கிழக்கு நாடுகள் அனைத்தும் நாணயங்களிலும், தபால்தலைகளிலும், கரன்சி நோட்டுகளிலும் சிற்பங்களிலும் கருடனையே பயன்படுத்திவருகிறது . .தென் கிழக்கு ஆசிய நாடுகள் கருடன் சின்னதாய் பல இடங்களில் பயன்படுத்துகின்றன
வேறு பல நாடுகள் கருடர்- நாகர் மோதலை சித்தரிக்கும் வகையில் பாம்புடன் கருடன் படத்தைக் கொடியில் வரைந்துள்ளன.
XXXX

national emblem of thailand
4.காஸ்யப ரிஷிக்கும் வினதாவுக்கும் மகனாக கருடன் பிறந்தார். அவருடைய அண்ணன் பெயர் அருணன் ;இந்திரன் செய்த ஒரு வேள்விக்கு கட்டைவிரல் அளவேயுள்ள வாலகில்ய ரிஷிகள் வந்தனர் அவர்கள் மிகவும் குள்ளமானதால் பக்கத்திலுள்ள தண்ணீர் குட்டையில் விழுந்து தவித்தனர். இதைக் கண்டு இந்திரன் சிரிக்கவே, அவனை வெல்லும் ஒருவன் வருவான் என்று வாலகில்ய ரிஷிகள் சாபமிட்டனர்.அதன்படி பலமுள்ள கருடன் பிறந்தான். காஷ்யப மஹரிஷியின் இன்னுமொரு மனைவி கத்ரு ; அவளுக்கும் வினதாவுக்கும் நடந்த போட்டியில் வினதா தோற்றுப்போகவே அடிமையானாள்; அவளை விடுவிக்க அவளுடைய மகன் கருடன் அமிர்தத்தின் ஒரு பகுதியை சிறிய தாய்க்கு கொண்டுவந்து கொடுத்தான் ; அவள் விடுதலை ஆனாள்.
xxxx
5.கோவில்களில் கருட வாகன தரிசனமே முக்கிய நாள்; வைஷ்ணவர்கள் அதைக் காண ஆர்வத்தோடு செல்வர்.
நாச்சியார் கோவில் (திருநறையூர்) பெருமாள் கோவிலின் பெருமை கல் கருடனால் அதிகரித்துவிட்டது. மரத்தினால், சுதையினால், உலோகத்தினால் அல்லது இவைகளின் கூட்டினால் ஆன கருட வாகனங்களை அறிவோம். முழு கல்லினால் ஆன கருடனை சுமந்து கொண்டுபோவது அதிசயம்தானே . மேலும் இதன் எடை கோவிலின் வெளியே போவதற்குள் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கையால் மேலும் மேலும் தூக்கும் சிப்பந்திகள் அதிகரிப்பது இன்னொரு விசேஷம்.

xxxx
6.கருட புராணம் : பதினெட்டு புராணங்களில் ஒன்று. சுமார் 16000 ஸ்லோகங்கள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன. நீண்ட புராணத்தில் சில அத்தியாயங்கள் மட்டும் இறந்த பின்னர் ஆவிக்கு என்னாகும் என்று விளக்குகிறது ; கருட புராணத்தை இறந்தோர் வீட்டில் 13 நாள் துக்க அனுஷ்டிப்பு காலத்திற்குள் ஒருநாள் படிப்பது சம்பிரதாயம் ஆகும்; இறந்த பின்னர் மனிதனின் வாழ்க்கை பற்றிய பகுதிகள் இதில் இருப்பதே காரணம். இதை பொருளுடன் வாசிக்க ஒரு புரோகிதரை அழைப்பது உண்டு.
சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் அனைத்தும், ஆங்கில மொழிபெயர்ப்புடன் இலவசமாக WISDOM LIBRARY வெப்சைட்டில் கிடைக்கின்றன
xxxx
7.தன்னை பரம பாகவதன் (கிருஷ்ணபக்தன்) என்று அழைத்துக்கொண்ட கிரேக்க தூதன் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பிரதேச விதிஷா நகரிலுல் ஒரு ஸ்தம்பத்தை நிறுவியுள்ளான். அதில் பிராமி எழுத்தில் கல்வெட்டு உளது அவன் பெயர் ஹீலியோடோரஸ்
The Heliodorus pillar is a stone column that was erected around 113 BCE in central India in Besnagar/VIDHISA in Madhya Pradesh.
xxxx
8.வானத்தில் கருடனைக் கண்டால் உடனே அதை ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்குவார்கள் ; இது சுப சகுனம் ஆகும்.
வைநதேய மஹாஸத்வ சர்வ பக்ஷி பத்தே விபோ
பிரகிஹ்ருத்யதாம் பலிர் தேவ மந்த்ரபூதோ மயோதியதாக ஹா
वैनतेय महासत्व सर्वपक्षिपते विभो ।
प्रगृह्यतां बलिर्देव मन्त्रपूतो मयोद्यतः ॥
vainateya mahāsatva sarvapakṣipate vibho |
pragṛhyatāṃ balirdeva mantrapūto mayodyataḥ ||
வினதாவின் மகனே; உயர்ந்த உள்ளம் படைத்தோனே , பித்ராபுவே, பறவைகளையும்களின் அரசனே
Meaning – O the son of Vinatā, the high-souled one, the lord, the king of all the birds, accept this my best offering.. என்னுடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்வாயாக
xxxx
cambodia

gupta sculpture

9.நாக பஞ்சமியில் பாம்புகளைப் போற்றுவது போல கருட பஞ்சமியில் கருடனைப் போற்றி வழிபடுகிறார்கள். ஆவணி மாத சுக்ல பக்ஷ பஞ்சமியில் சுமங்கலிகள் அனுஷ்டிக்கும் விரதம் இது. ஒரு அரசனின் 7 குமாரர்களும் பாம்பு கடித்து இறக்கவே அவர்களுடைய தங்கை பாம்புப்புற்றைப் பூஜித்து அரச குமாரர்களை உயிர்ப்பித்தாள் என்பது கதை ; அதைப் பின்பற்றி இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது .
கருட காயத்ரீ மந்திரம் உளது; வேதாந்த தேசிகர் தாண்டக மீட்டரில் எழுதிய –கருட தண்டகம் இருக்கிறது; இடைப் படித்தா ல் பயணம் செல்லும் வழியிலுள்ள தடைகள் அகலும்
xxxx
10.கருடன் பற்றிய 4 பழமொழிகள்
1.கருடனைக் கண்ட பாம்பு போல
2.கருடன் இடமானால் , எவன் கையில் பொருளும் தன் கையிற் சேரும் (COMPARE- காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும் )
3.கருடன் காலில் சதங்கை (கெச்சை) கட்டியது போல
4.ஏண்டா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம்தான்
(COMPARE – கண்ணதாசன் பாடல்-பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா செளக்கியமா ?)

—-subham—
Tags-கருடன், கருட பஞ்சமி , வாகனம், புள் கொடி, விஷ்ணு, தேசீய சின்னம் , காசு, நோட்டு, Thailand (Siam)