முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 11 (Post 13,034)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,034

Date uploaded in London – –   24 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 11

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 100  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

XXXX

Nux vomica (Ettikkottai)

Part 11

101. கண் பிரிவிற்கு ,புழுவெட்டும், பூவிற்கு

ஊமத்தங் காயை விரை நீக்கி  பாலில் சுத்தி செய்த பூநாகத்தை உள்ளே  போட்டு மூடி சட்டியிலிட்டு எரித்து சாம்பலாக்கி அதற்கு சரியிடை துத்தம்-  மிக கூட்டி பசும் வெண்ணை போட்டு களிம்பு போல் அறைத்துக்கொண்டு கண்ணில் தீட்டி வரவும் நிவர்த்தியாகும் .

xxxxx

102.கண்குளிர்ச்சிக்கு

ஊசிப்பாலையை அறைத்து தயிரில் கலக்கியுண்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியுண்டாகும் .  ஆண் குறி  — துவார வெட்பம்–பிரமேகம் இவைகள் தீரும் .

xxxx

103.விஷம் நீங்க

ஊமத்ததன் வேரும்  அதன் வித்தும் வகைக்கு ஒரு விராகநிடையெடுத்து ஆவின்பால் விட்டறைத்துக்  கலக்கிக் கொடுக்க, எலிக்கடி — நாய்க்கடி- நரி கடி முதலிய விஷங்கள் போகும்.

xxxxx

104.காதில் சீழ் வருதலுக்கு 

எருக்கு – கள்ளி- இஞ்சி – – துளசி இதுகள்  சமனாயெடுத்து சிதைத்து நல்லெண்ணெய் விட்டு முறியக் காய்ச்சி வடித்து காதில் 2, 3 துளிவிட்டு பஞ்சடைத்து வைக்கவும். சீதள பதார்த்தம் கூடாது . இப்படி  2, 3 நாள் இருவேளையும் விடவும் .

xxxx

105.குழந்தைகளுக்கு சிறுநீர் கட்டினால்

எலிப் புழுக்கையும் வெள்ளரி விரையும் சமன் கொண்டரைத்து அடி வயிற்றில் பூசி வெண்காரத்தைப் பொறித்து  2 சிட்டிகையெடுத்து  முலைப்பாலில் கலக்கி உள்ளுக்கு புகட்டவும்; நீர் இறங்கும்.

xxxxx

106.ஒருதலைவலி மண்டையிடிக்குத் தைலம்

எருக்கன் பருப்புச் சாறு அரைக்கால்படி நல்லெண்ணெய் ஒரு படி சுக்கு …… அதிமதுரம் வசம்பு திப்பிலி திப்பிலிமூலம் வெள்ளுள்ளி வகைக்கு பலம் ஒன்று இடித்துபோட்டு காய்ச்சி வடித்து தலை முழுகி வந்தால் நிவர்த்தியாகும் .

இதுவுமது

எலுமிச்சம் பழச்சாறு வெற்றிலைச்சாறு பசும் நெய் நல்லெண்ணெய் வகைக்கு ஒருபடி- கருஞ்சீரகம் பலம் இரண்டரை பொடித்து போட்டுக்காய்ச்சி வடித்து . ஒன்றைவிட்டு ஒருநாள் முழுகி வரத்தீரும் .

XXXX

107.தேள் விஷத்திற்கு

எட்டிக்கொட்டையை பாலில்  அறைத்துக் கலக்கிக்கொள்ள தேள், நட்டுவாக்காலி  விஷமும், மற்ற விஷமும் நீங்கும்  

XXXX

108.நீர்க்கட்டி , புண்  முறைகளுக்கு

எட்டிக்கொட்டையை  அறைத்து சிலந்தி ரெத்தக் கட்டி  நீர்க்கட்டி , புண்,  படைகளுக்கு அறைத்துப் பூசினால் தீரும்

XXXX

Nux vomica

109. காயகல்பம்

எட்டிக்கொட்டையை முதல் தினத்தில்  மிளகளவு தின்று , இப்படித் தின்று வரும்போது நாளுக்கு நாள் பயறுப் பிரமாணம் அதிகரித்துக்கொண்டே வந்து, கடைசியில் காலையில் 1 மலையில் 1 ஆக வழக்கத்தில் கொண்டுவந்து மறுபடியும் தினம் குறைத்துக்கொண்டே வந்து நிறுத்திவிடவும்.  இப்படிச் செய்தவர்களுக்கு விஷ பயமே கிடையாது. தேள் நட்டுவாக்காலி  பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் கடித்தாலும் அதுகள் இறந்து போகுமே தவிர தனக்கு விஷமே வராது;  குஷ்ட வியாதி இருந்தாலும் நிவர்த்தியாகும். வாதரோகம் தீரும்; ஆனால் பித்தம் அதிகரிக்கும்.

XXXX

110.பாதம் எரிச்சலுக்கு

எட்டிப் பழ த்தில் 7, 8 கொண்டுவந்து புது சட்டியில் போட்டு அடுப்பேற்றி வெதுப்பி தரையில் கொட்டி சூடாயிருக்கும்போதே பித்தஎரிவு பாதம் ஊரல் நமை முதலிய அருவருப்பு உள்ள பாதங்களினால் மிதித்துத் தேய்க்க வேண்டும். இப்படி 5,6 வேளை செய்ய பாத எரிச்சல் நீங்கும்.

Nux vomica

XXXX

—subham—-

Tags- எட்டிக்கொட்டை, காயகல்பம், விஷம் நீங்க, முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள்- 11, மூலிகை மர்மம்

Leave a comment

Leave a comment