
Date uploaded in London – – 24 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

ஒருகாலத்தில் சோவியத் ரஷ்யாவின் பகுதியாக இருந்து இப்பொழுது தனி முஸ்லீம் நாடாக விளங்கும் அசர்பைஜானில் வேத கால அக்கினி( Vedic Fire Temple in Azerbaijan ) எரிந்து கொண்டு இருக்கிறது . ஜார்ஜியா, ஆர்மீனியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அசர்பைஜான் உள்ளது.
இங்கே ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் , பார்சி மற்றும் பஞ்சாபி குருமுகி லிபி கல்வெட்டுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது . ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு கணபதியையும் சிவபெருமானையும் ஜ்வாலாஜி என்னும் அக்கினிதேவனையும் போற்றுகிறது.
அசர்பைஜானில் இரண்டு வேதகால அக்கினி கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் நாடு முழுதும் வேதகால கோவில்கள் இருந்தன. முஸ்லீம ஆக்ரமிப்புக்குப் பின்னர் அவை அழிக்கப்பட்டன. ஈரான் நாட்டிலிருந்து வைத்த ஜொராஷ்ட்ரிய மதத்தினர் வேத கால மக்களின் வழக்கப்படி அக்கினியை வழிபடுவார்கள்; பூணூல் அணிவார்கள் ஆனால் இறந்தோரை மட்டும் கழுகுகள் சாப்பிடுவதற்காக உயர்ந்த கோபுரத்தின் மீது வைத்துவிடுவார்கள் . அசர்பைஜான் மக்களில் பெரும்பாலோர் முஸ்லீம்களாக மாற்றப்பட்டபோதிலும் வேத கால வழக்கங்களை அவர்கள் வீட முடியவில்லை; வசந்த காலத்தில் பாரசீகர்கள் கொண்டாடும் நவ்ரோஜி என்னும் புத்தாண்டு தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் .
இரண்டு அக்கினி கோவில்களில் ஒன்று சுரக்கனி Aateshgah at Surakhani, என்னும் இடத்தில் உள்ளது இங்கு மனித உதவியின்றி எப்போதும் எரியும் அக்கினி ஒரு இயற்கை அதிசயம் ஆகும். பூமிக்கு அடியில் ஏராளமான எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் உடையது இந்த நாடு. பூமிக்கு அடியில் தேங்கிக் கிடக்கும் METHANE மீத்தேன் வாயு தப்பி வெளியே வரும் இடத்தில் இந்த அக்கினி கொழுந்து விட்டு எரிகிறது .ஆயினும் இதை பாரசீக ஜொராஷ்ட்ரிய மதத்தினரும் இந்துக்களும் சீக்கியர்களும் வழிபடுகிறார்கள்.
பாரசீகர்கள் இதை ஆதேஷ்க்கா என்று அழைக்கிறார்கள் .
சிந்து சமவெளி அழியும் காலத்தில் ஈரானுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் குடியேறிய மக்களே பார்சி மதக்காரர்கள் என்று இப்பொழுது வெளியான புதிய புஸ்தகம் ஒன்று கூறுகிறது .

அசர்பைஜான் நாட்டின் தலை நகர் பாகு (Baku is the capital city of Azerbaijan
. It is located on the Caspian Sea shore in the west) அதிலிருந்து 40 கி.மீ. தொலைவில் , யானர் டாக் மற்றும் சுரக்கனி உள்ளன (Yanerdag and Surakhani ); இதில் யானர் டாக்/Yanerdag, கோவில் மலை உச்சியில் இருக்கிறது; வரலாறு அறியாத காலத்திலிருந்து அங்கு அக்கினி எரிந்து கொண்டு இருக்கிறது . இந்த எரிவாயுக் கோவிலைச் சுற்றி நடந்த அகழ்வாய்வுகளில் பார்சி மத தடயங்கள் கிடைத்துள்ளன.
குன்றின் கீழேயே 15 மீட்டர் நெடுக தீ எரிந்துகொண்டே இருக்கும். பார்ஸிக்கள் தங்கள் கடவுளை அசுர மஸ்தா என்று அழைப்பர்; பாரசீகர் இதை வணங்கி வந்ததை பாரசீக கல்வெட்டு காட்டுகிறது. இங்குள்ள கோட்டைச் சின்னங்களில் இந்துமதத்தின் தாக்கம் தெரிகிறது . 19ஆம் நூற்றாண்டு வரை இந்து புரோகிதர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். பார்சிக்கள் அவர்களின் கடவுளுக்குப் பிரியமான மாதுளம்பழத்தைப் படைத்துள்ளனர் . இப்பொழுது சுற்றுலாப்பயணிகளுக்கும் சமய வழிபாட்டுக்கரர்களுக்கும் இது புனித இடமாகத் திகழ்கிறது .

-சுபம்–
அசர்பைஜான், அக்கினி கோவில், வேத காலா அக்கினி, எரிவாயு, மீத்தேன் , ஜ்வாலா