
Date uploaded in London – – 26 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

பண்டிகைகள் மார்ச் 8-சிவராத்திரி; 14- காரடையான் நோன்பு; 24- ஹோலி;, 25- பங்குனி உத்திரம்; 29-புனித வெள்ளி; 31-ஈஸ்டர் திங்கள்
அமாவாசை-10;, பெளர்ணமி-24; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்– 6, 20;
சுப முகூர்த்த தினங்கள் Auspicious Days – 1,7,8,20, 24,28.
XXXXXX
மார்ச் 1 வெள்ளிக் கிழமை
வெற்றியையும் சாதனைகளையும் நாடும் ஒருவன் எப்பொழுதும் நல்லவர்களுடனே நட்புறவு கொள்ளவேண்டும் ; தீயோர் சேர்க்கை கூடவே கூடாது.அது இவ்வுலகத்துக்கோ பரலோகத்துக்கோ உதவாது. 1.108.2.
XXXX
மார்ச் 2 சனிக்கிழமை
நல்ல பிரம்மச்சாரிகள் பிரம்மா லோகத்தை அடைகிறார்கள்; கிரஹஸ்தர்கள் பிரஜாபதி லோகத்தையும் வானப்ரஸ்தர்கள் சப்தரிஷி லோகத்தையும் சந்யாசிகள் என்றும் சாசுவதமான பிரம்மன் இருப்பிடத்தையும் அடைகிறார்கள்1.4.37-8
XXXX
மார்ச் 3 ஞாயிற்றுக் கிழமை
உயிர்வாழும் ஜீவன்களுக்கு படைக்கும் பலி பூத யக்ஞம் எனப்படும். நாய்கள் , புலையர் , பறவைகள் ஆகியவற்றுக்கு வீட்டுக்கு வெளியே உணவு படைக்க வேண்டும் 1.50.72
XXXX
மார்ச் 4 திங்கட் கிழமை
பித்ரு யக்ஞம் செய்வது முக்திக்கு வழிதிறக்கும். இறந்த உறவினர் அத்தனைபேரையும் நினைத்துக்கொண்டு தினமும் சிரத்தையோடு ஒரு பிராமணனுக்காவது உணவு அளிக்க வேண்டும் 1.50.73
XXXX
மார்ச் 5 செவ்வாய்க் கிழமை
சோதிடம்- கணவன் பெயரிலும் மனைவி பெயரிலும் இருக்கும் எழுத்துக்கள் எல்லாவற்றையும் கூட்டி, அதை மூன்றால் வகுங்கள் இ ரண்டு வந்தால் மனைவிக்கு ஆகாது; ஒன்று அல்லது பூஜ்யம் வந்தால் கணவனுக்கு கெடுதி நேரிடும் . 1.59.40
XXXX
மார்ச் 6 புதன் கிழமை
சோதிடம்- கிழக்கிலிருந்து விக்கல் ஒலி கேட்டால் நல்ல முடிவுகள்; தென் கிழக்கு- துக்கம், கவலை; தெற்கு- இழப்பு, நஷ்டம்; தென் மேற்கு- துக்கம், கவலை;மேற்கு – நல்ல விருந்து; வட மேற்கு- பணம் வரும்; வடக்கு- சண்டை சச்சரவு 1.60.15-17
xxxx
மார்ச் 7 வியாழக் கிழமை
சாமுத்ரிகா லட்சணம்- மயிர் துவாரத்தில் ஒரு முடி இருந்தால்- அரச போகம் அல்லது முக்கியப்புள்ளி யோகம்; இரண்டு முடி இருந்தால்- பேரறிஞர் ; மூன்று முடி இருந்தால் ஏழை ,தரித்திரம் 1.63.5-6
xxxx
மார்ச் 8 வெள்ளிக் கிழமை
நல்ல மனைவி என்பவள் கணவனுக்கு அமைச்சர் போல ஆலோசனை தருவாள் ;அவரது பணிகளை நிறைவேற்றுவதில் நண்பன் போல உதவுவாள்; தாய் போல ன்பு செலுத்துவாள்; படுக்கை அறையில் வேசி போல இன்பம் தருவாள். இப்படி மனைவி கிடைத்தால் அதிர்ஷ்டமே 1.64.6
XXXXX
மார்ச் 9 சனிக்கிழமை
குறையுள்ள வைரங்களை அணிந்தால் துரதிருஷ்டம் வரும்; மரணம் கூட சம்பவிக்கும் 1.68.27-29
xxxx

மார்ச் 10 ஞாயிற்றுக் கிழமை
ஞான அலை வீசும், தியானம் என்னும் தூய நீருடைய, மனம் என்னும் ஏரியில் குளித்தால் விருப்பு வெறுப்பு என்னும் அழுக்கு அகலும். 1.81.24
xxxx
மார்ச் 11 திங்கட் கிழமை
இலையில் படைக்கப்பட்ட உணவு மீது எப்போதும் குறை காணக்கூடாது .1.94.17
xxxx
மார்ச் 12 செவ்வாய்க் கிழமை
பெண்களின் பெரிய பணி, கணவனுக்கு பணிவிடை செய்வதே
1.95.24-26
xxxx
மார்ச் 13 புதன் கிழமை
பூண்டு , வெங்காயம் சாப்பிடுவது பாபகரமானது ; அதற்குப் பரிகாரம் சந்திராயணம் செய்வதே ( நிலவின் பிறை , தேய்வது–வளர்வது போல உணவை சிறிது சிறிதாகக் குறைத்து, பின்னர் சிறிது சிறிதாக ௩௦ நாள் அதிகரிப்பதே சந்திராயண விரதம்) 1.96.72
xxxx
மார்ச் 14 வியாழக் கிழமை
அறிவும் எளிமையும் இல்லாதவர்கள், பரிசு கிடைத்தாலும் அதை ஏற்கக்கூடாது அப்படி ஈரரால் தன்னையும் பரிசு கொடுத்தவரையும் இகழ்வதாகும் 1.98.3
xxxx
மார்ச் 15 வெள்ளிக் கிழமை
உலகத்தை வேதத்தின் அடிப்படையில் இறைவன் படைத்திருப்பதால் வேதங்களையும் பாஷ்யங்களையும் (உரைகள்) காப்பதற்கு முயலவேண்டும் 1.98.15
xxxx
மார்ச் 16 சனிக்கிழமை
வேண்டுமென்றே கருவைக் கலைப்பதும், கணவனைக் காரணமின்றி வெறுப்பதும் பரிகாரமே இல்லாத பாவச் செயல் ஆகும் 1.105.48
xxxx
மார்ச் 17 ஞாயிற்றுக் கிழமை
கலியுகத்தில் தான, தர்மம் செய்வதே புண்ணியச் செயல்; ஏனையன செய்தாலும் பலன் கிடைக்காது; சின்ன பாவம் செய்தாலும் அது ஆண்டு முழுதும் தாக்கும் 1.107.௩
XXXX
மார்ச் 18 திங்கட் கிழமை
கணவனைக் கண்டுபிடிக்க முடியாதபோதும், இழந்த போதும், கணவனுக்கு ஆண்மை இல்லாதபோதும், கணவன் துறவறம் ஏற்றபோதும் ஒரு பெண் மறுமணம் செய்துகொள்ளலாம். 1.107.28
xxxx
மார்ச் 19 செவ்வாய்க் கிழமை
கீழ்மக்களுடன் வாதம் செய்யக்கூடாது ; தீயோரைக் காண்பதும் தீதே ; நண் பர்களுடன் விரோதம் கூடாது; விரோதிகளுடன் தொடர்புடையோரை அணுகாதே 1.108.3.
xxxx
மார்ச் 20 புதன் கிழமை
முட்டாள் சீடனுக்கு உபதேசம் செய்யும் அறிஞரும் கூட அவமானம் அடைகிறான்; கெட்ட மனைவியுடையவனும் , தீயோர் நட்பு கொண்டவனும் அவமானம் அடைகிறான்–1.108.4.
Xxxx
மார்ச் 21 வியாழக் கிழமை
விரோதியுடன் நட்பு கொள்வதையும் நண்பனு டன் பகைமை கொள்வதையும் நேரம் பார்த்து செய்யவேண்டும். உண்மையான அறிஞன் விளைவுகளை ஆராய்ந்த பின்னரே செயலில் இறங்குவான் 1.108.6.
xxxx

EINSTEIN GOT IT FROM GARUDAPURANA
மார்ச் 22 வெள்ளிக் கிழமை
எல்லோரும் முதிர்ச்சசி அடைய பக்குவம் பெற காலம் உதவுகிறது . எல்லோரும் கடைத்தேற காலம் வழி செய்கிறது; நம் தூங்கும்போதும் காலம் விழித்துக்கொண்டே இருக்கிறது ; யாரும் காலத்தை வெல்ல முடியாது 1.108.7.
xxxxx
EINSTEIN GOT IT FROM GARUDAPURANA
மார்ச் 23 சனிக்கிழமை
காலம் என்னும் கடிகாரத்தைப் புரிந்து கொள்வது கடினம்; அதற்கு இரண்டு ஓட்டங்கள் உண்டு ; ஓரிடத்தில் கண்ணுக்குத் தெரியும் ஓட்டம்; இன்னுமொரு இடத்தில் கண்ணுக்குப் புலப்படாத நுணுக்கமான செயல்பாடு 1.108.9.
xxxx
மார்ச் 24 ஞாயிற்றுக் கிழமை
பேராசை இல்லாதவர்களுடனும் , நல்லவர்களுடனும் நட்பு கொண்டவனுக்கு துன்பமே வராது; அறிஞர்களுடன் கலந்து ஆலோசிப்பவனுக்கும் துன்பமே வராது1.108.12.
XXXX
மார்ச் 25 திங்கட் கிழமை
நல்ல எண்ணங்களைக் கொண்ட விரோதி உண்மையில் நமக்கு நண்பன் ; நமக்கு விரோதமாகச் செயல்படும் உறவினன் கூட நமக்கு எதிரி; உடலில் உள்ள நோய் நமக்கு எதிரி; தொலைதூரத்தில் காட்டில் வளரும் மூலிகை நமக்கு நண்பன். 1.108.14.
XXXX
மார்ச் 26 செவ்வாய்க் கிழமை
விசுவாசத்துடனும் பணிவுடனும் உள்ளவனே நல்ல வேலைக்காரன்; நல்ல விதைகளே முளைக்கும்; இனிமையாகப் பேசுபவள் தான் நல்ல மனைவி; குடும்பப் பாரம்பர்யத்தைக் காப்பவனே நல்ல மகன். 1.108.16.
XXXX
மார்ச் 27 புதன் கிழமை
புத்திசாலி என்பவன் ஒரு காலை முன்னே வைத்து நன்றாக ஊன்றியவுடன் அடுத்த காலை முன்வைத்து முன்னேறுகிறான்; புதிய இடத்தை சோதனை செய்தபின்னர் தான் பழைய இடத்தைக் கைவிடவேண்டும் (அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே)1.109.4. T
xxxx
மார்ச் 28 வியாழக் கிழமை
உ ண்மையான மனைவி யாரென்றால் கணவனிடத்திலுள்ள நல்ல குணங்களை பாராட்டி, கணவனிடத்தில் விசுவாசம் வைத்து, குறைவுள்ள இடத்திலும் நிறைவான மனதுடன் வாழ்பவளே .1.108.24.
XXXX

மார்ச் 29 வெள்ளிக் கிழமை
மகனிடத்தில் அதீத பக்தி, நன்றிகெட்ட மனிதன் செய்யும் நன்மை , தீயில் குளிர்ச்சி கூட கடவுள் அருள் இருந்தால் கிட்டிவிடும்; ஆனால் விபசாரியிடம் அன்பு என்பது கிடைக்கவே கிடைக்காது 1.108.28.
xxxx
மார்ச் 30 சனிக்கிழமை
அவசரகாலத்துக்காக பணத்தைச் சேமிக்க வேண்டும்; சேர்த்து வைத்த பணத்தைச் செலவழித்தாவது மனைவியைக் காப்பாற்ற வேண்டும்; தன்னைக் காப்பாற்றிக்கொள்ள சொத்து சுகம், மனைவியையும் கைவிடலாம்.1.109.1.
xxxx
மார்ச் 31 ஞாயிற்றுக் கிழமை
குடும்பத்தைக் காப்பாற்ற ஒருவன் தன்னையே தியாகம் செய்யலாம்;
கிராமத்தைக் காப்பாற்ற ஒருவன்குடும்பத்தையே தியாகம் செய்யலாம்;
நாட்டையே காப்பாற்ற ஒருவன் ஒரு கிராமத்தை தியாகம் செய்யலாம்;
ஒருவன் தன ஆன்மாவைக் காப்பாற்றநாட்டையே துறக்கலாம் 1.109.2.
—subham—
Tags- மார்ச் 2024 , காலண்டர், கருட புராணம், மேற்கோள்கள், பொன்மொழிகள் , காலம், ஐன்ஸ்டைன், தியாகம்