முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 12 (Post No.13,044)

 கத்தாழை

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,044

Date uploaded in London – –   27 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 110  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

PART 12

xxxxx

 கோரைக்கிழங்கு

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 12

111.மண்டை இடிக்கு

எருக்கன் வேர் , அதாவது அடிக்கட்டையைக் கொண்டுவந்து, கொளுத்திக் கரியாக்கிய ஒரு பலம் பொடிக்கு கால் பலம் லிங்கம் சேர்த்து  ஜான் அகலமுள்ள சீலையை எருக்கம்பாலில் நனைத்து உலர்த்தி பிறகு முலைப்பாலில்  மூன்று விசை நனைத்து உலர்த்தி அதில் மேற்படி தூளை பரப்பி திரிபோல் திரித்து ஒரு முனையைக் கொளுத்தி அந்தப் புகையை மூக்கில் பிடிக்கவும்.  இப்படி மூன்று நாளைக்கும் இரவில் படுக்கும்போது ஐந்து நிமிஷம் பிடித்து வந்தால் மண்டை இடி, மண்டைக் குடைச்சல்  எப்போதும் விடாத தலை பாரம் இதுகள் நீங்கும்.

xxxxx

112. பேதிக்கு

எருக்கம் பாலில் இரண்டு துளி , கொட்டைப்பாக்கு அளவு மஸ்டு இல்லாத புளி எடுத்து, அதன் நடுவில் எருக்கம்பாலை இரண்டு துளி விட்டு மூடி தின்றுவிட்டால் நன்றாய் பேதியாகும்; இது முறட்டு உடம்புக்குத் தகும்.

xxxx

113. அரையாப்புக்கட்டிக்கு

எருக்கன் செடியின் வடக்கே போகிற வேரும் களிமண்ணும் சரி பங்கு வைத்து அறைத்து அரையாப்புக்கட்டியின் மேல் பூசி வைக்க  கரைந்து போகும்; இப்படி மூன்று நாள் செய்யவும்.

xxxxx

114. வாந்தி பேதிக்கு

எட்டி மரத்தின்  வடவேரின் மேற்றோலை எலுமிச்சம் பழச்சாறு வீட்டறைத்து காய வைத்து சூரணம் செய்து  சிவன் வேம்பு தும்பைச் செடி சமூலம்  இரண்டும் ஒன்றாய்க் கிஷாயம் வைத்து  மேற்படி சூரணத்தில் மூன்று சிட்டிகை போட்டு கொடுக்கவும்; பேதி நிற்காவிட்டால் மறுபடியும் கொடுக்கவும்; இப்படி 3, 4 விசை கொடுக்கவும்; அரிசிக்கஞ்சி காய்ச்சிக் கொடுக்கவும்; பேதி வாந்தி காதடைப்பு யாவும் நீங்கும்.

xxxx

115. மேகப் புண்ணுக்கு

எட்டிப் பழம் இரண்டு கொண்டுவந்து நல்லெண்ணெயில் வறுத்து அல்லது நன்றாய் வேகவைத்து அறைத்து பஞ்சில் துவட்டி மேகப்புண்ணின் மேல் போடப் போகும்

xxxxx

116. நரம்பு சிலந்திக்கு

எருக்கன் மொக்கு 60  கொண்டுவந்து பெருங்காயம் சமநிடை சேர்த்து அறைத்து 5 வேளை அல்லது 7 வேளைக்கு கொடுக்க நரம்பு சிலந்தி நிவர்த்தியாகும் .

xxxxx

117. காது இரைச்சலுக்கு

எருக்கன் இலைச்சாறு இரண்டரைப் பலம்  நல்லெண்ணெய் இரண்டரைப் பலம் வசம்பு  கோஷ்ட …க்கு திப்பிலி இந்துப்பு கோரைக்கிழங்கு வகைக்கு  அரிக்காப் பலம் இடித்துபோட்டுக் காய்ச்சி  காதில் இரண்டு மூன்று துளிகளாக 2,3 வேளை விட்டு வந்தால் தீரும்.

xxxx

118. அரையாப்புக்கு

எலுமிச்சம் வேர் சத்திச் சாரணை  இரண்டும் சமன் கொண்டறைத்து நல்லெண்ணெயில் குழைத்து கொச்சக்  காய் பிரமாணம் சாப்பிட்டுவந்தால் தீரும்; இப்படி 2, 3 நாள் சாப்பிடவும்.

xxxxx

119. மூல கணத்திற்கு

எலுமிச்சம்பழச்சாறு கத்தாழை சோறு  வெந்தியம் சமன் கொண்டறைத்து காய்ச்சிக் கொடுத்து வர மூல கணம் தீரும்.

xxxx

120. வைசூரியின் பேரில் சுரங்கண்டால்

எலுமிச்சம் வேரின் பட்டை ஏலம் சீந்திற்கொடி விளாமிச்சம் வேர் பற்பா…. சந்தனத்தூள் கோரைக்கிழங்கு வகைக்கு விராகநிடை 5 நசுக்கிப்போட்டு ஒன்றாய் கிஷாயமிட்டு மூன்று வேளை கொடுக்க தீரும்.

—subham—

Tags- எலுமிச்சம்பழச்சாறு, கத்தாழை, எட்டிப் பழம், முனிசாமி முதலியார்,மூலிகை அதிசயங்கள் 12, கோரைக்கிழங்கு

Leave a comment

Leave a comment