
Date uploaded in London – – 16 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
மயில் தோகைக்கு மதிப்பும் புனிதமும் அதிகம் ; க்ருஷ்ண பரமாத்மாவின் தலையை அலங்கரிப்பது மயில் இறகு ; சரஸ்வதி தேவியின் அருகில் நிற்பது தோகை மயில். முருகப் பெருமானுக்கோ கொடியிலும் வாகனத்திலும் இருப்பது மயில்தான் ; முருகனைப்பாடும் அருணகிரி ஆடு மயிலை ஒவ்வொரு பாடலிலும் வருணிக்கிறார் .
மயில் தோகையை திகம்பர பிரிவு சமண முனிவர்கள் பயன்படுத்துகின்றனர் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கையுள்ளோர் வீட்டில் அதிர்ஷ்டம் பொங்க மயில் தோகையை பயன்படுத்துகின்றனர். சீனர்களோ கல்யாணங்களிலும் சமய விழாக்களிலும் இதை பயன்படுத்துகின்றனர் கோவிலில் மயில் விசிறி கொண்டு வீசுவோரையும் காணலாம். (நான் மதுரையில் வசித்த மாணவப் பருவ காலத்தில் மதுரை மீனாட்சி கோவிலில் ஒருவர், பக்தர்கள் மீது பெரிய மயில் விசிறி கொண்டு வீசுவதைக் கண்டு ரசித்தேன் )

பல்லாயிரம் மயில்கள் படுகொலை
நேற்று 15 -2-2024 ஆம் தேதி செய்திப் பத்திரிக்கைகளில் வந்த செய்தியைப் படித்தோருக்கு இதன் மதிப்பு விளங்கும் .
மயில் தோகையை வைத்திருப்பது மங்களத்தைக் கொண்டுவரும், அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பது சீனர்களின் நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றும் சீனர்கள் இதை இந்தியாவிலிருந்தே கற்றிருக்கவேண்டும்.
ரெவின்யூ புலனாய்வுத்துறை டைரக்டர் அலுவலக அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 28 லட்சம் மயில் தோகைகள் சிக்கின. இதன் மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய்கள். நவி மும்பையிலுள்ள நவஸேவா துறைமுகத்தில் பிப்ரவரி February 14, 2024 இந்த சோதனை நடந்தது .இது சீனாவுக்குச் செல்லவிருந்த சரக்கு.
மயில் மற்றும் அதன் தோகைக்கு இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ஏற்றுமதித் தடை விதித்துள்ளது; ஆகையால் இதை ஏற்றுமதி செய்த குற்றவாளிகள், சரக்குப் பெட்டிக்குள் கயிற்றினால் நெய்யப்பட்ட வாசல் மிதியடிகள், பாய்கள் Door Mats இருப்பதாக பொய் சொல்லி இருந்தனர் ; அதி காரிகளுக்குத் துப்புக்கிடைக்கவே சோதனையில் இறங்கினர். .குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட்டனர்.
மயில் இறகு நிற்கும் தோகையின் அடிப்பாகம் 1,6000 அந்தப்பெட்டிக்குள் இருந்தன. பல்லாயிரக்கணக்கான மயில்களை படு கொலை செய்த்து இதில் கண்டுபிடிக்கப்பட்டது
The Directorate of Revenue Intelligence (DRI) of Mumbai zonal unit seized a stock of 28 lakh peacock tail feathers at Nhava Sheva Port on Wednesday, which were allegedly being smuggled to China via export cargo as mis-declared coir doormats.
The seized stock is estimated to be worth ₹2.01 crore in the illicit market, DRI sources said. The export of peacock tail feathers is prohibited as per Schedule 2 of the Export Policy of ITC (HS), 2018 notified by the Directorate General of Foreign Trade read with the Wildlife (Protection) Act, 1972.
A detailed examination of the export cargo had allegedly revealed, apart from the peacock tail feathers, 16,000 peacock feather stems, all of which were seized under provisions of the Customs Act, 1962.

சமண மதத்தில் ஒரு சர்ச்சை
சமணர்களில் இரு பிரிவினர் உண்டு ; ஸ்வேதாம்பரர்கள் வெள்ளை ஆடை உடுப்பார்கள் ; திகம்பர பிரிவு முனிவர்கள் ஆடைகளை அணிய மாட்டார்கள்; ஆனால் மயில் விசிறி அல்லது விளக்குமாறு (பிச்சி) , தண்ணீர் ஏந்திய கமண்டலம் ஆகிய இரண்டு மட்டும் கொண்டு செல்லுவார்கள் . அவர்கள் உட்காருமிடத்தை சுத்தப்படுத்த இந்த மயில் விசிறியைப் பயன்படுத்துவார்கள்; அவர்கள் மிகவும் கடுமையான அஹிம்சா தர்மத்தைக் கடைப்பிடிப்பதால், ஈ எறும்பு கூட இறந்துவிடக்கூடாதே என்ற காருண்ய உணர்வில் விசிறியை வைத்து விசிறிவிட்டு அமர்வார்கள். முன்காலத்தில் மாதம் தோறும் மயில்கள் இயற்கையாக உதிர்க்கும் இறகுகளை வைத்து இது செய்யப்பட்டது . தற்காலத்தில், கொல்லப்பட்ட மயில்களின் இறகுகளிலிருந்து இது செய்யப்படுகிறது. ஏனெனில் முனிவர்கள் தொகையும் அதிகமாகியது. மேலும் ஆண்டு தோறும் அவர்களுக்குப் புதிய மயில் தோகை அளிக்கும் ஒரு வினோத விழாவும் நடைமுறைக்கு வந்துவிட்டது . சில சமண பக்தர்கள் தங்களுடைய குருமார்களுக்கு இப்படி புதிய விளக்குமாறு/ விசிறி அளிப்பதை ஒரு புனித கைங்கர்யமாக நினைக்கின்றனார்.. இப்படிச் செய்வது அஹிம்சைக்கு எதிரானது ஆகுமே என்ற சர்ச்சை சமண மத வட்டாரங்களில் எழுந்துள்ளது . திருமதி இந்திராகாந்தி குடும்பத்தின் மருமகள் மேனகா காந்தியும் இது போன்ற விசிறிகளை பயன்படுத்துவது அஹிம்சைக்கு எதிரானது என்று நீண்ட கட்டுரை எழுதியுள்ளார் ; சர்ச்சை நீடிக்கிறது.
—subham—
Tags- peacock tail feathers, seized, மயில் தோகை, மர்மம், மகத்துவம், திகம்பர முனிவர், மயில் விசிறி சமணர் சர்ச்சை, மேனகா காந்தி






















