பாரதத்தை ஹிந்து ராஷ்ட்ரம் என்று அழைப்பதில் என்ன தவறு? (Post No.13,004)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.004

Date uploaded in London – — 13 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாரதத்தை ஹிந்து ராஷ்ட்ரம் என்று அழைப்பதில் என்ன தவறு?

ச.நாகராஜன்

பாகிஸ்தானைச் சேர்ந்த காலித் ஒமர் என்னும் இஸ்லாமியர் எழுதிய ஒரு கட்டுரையை அனைவரும் படிக்க வேண்டும்.

அவர் கேட்கும் கேள்வி : பாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் ஆவதில் என்ன தவறு இருக்கிறது?

காலித் ஒமர்  இங்கிலாந்தில் பாரிஸ்டராகப் பணி புரிந்தவர். அவரது ஃபேஸ் புக் பக்கத்தில் இருந்து எடுக்கப்படுவது கீழே தரப்பட்டுள்ள இந்தப் பகுதி.

*

5000 வருடம் பழைமையான நாகரிகம் ஹிந்து நாகரிகம்.  சனாதன ஹிந்து தர்மத்தின் பிறப்பிடம். 95% ஹிந்துக்கள் வசிக்கும் இடம்.  தனது ஹிந்துத்வம் என்ற அடையாளத்தை அங்கீகரிப்பதில் அது தயக்கம் காட்டக் கூடாது, வெட்கப்படக் கூடாது!

கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரு மதங்களுக்குப் பிறகு உலகில் மூன்றாவது பெரிய மதமாக இலங்குவது ஹிந்து மதம். ஆனால் முதல் இரு மதங்களைப் போல் உலக வரைபடத்தில் பரவலாக அது பரவவில்லை. உலகில் உள்ள 97% ஹிந்துக்கள் இந்தியா, மரிஷியஸ் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளிலேயே வசிக்கின்றனர்.

இடதுசாரி லிபரல்கள் 53 முஸ்லீம் அதிகம் உள்ள நாடுகளைப் பற்றி எந்த பிரச்சனையையும் கொள்வதில்லை. இவற்றில் 27 நாடுகளில் இஸ்லாமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதம். 100+ நாடுகள் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள நாடுகள்.  இவற்றில் 15 நாடுகளில் அரசே அங்கீகரித்துள்ள அதிகாரபூர்வமான மதம் கிறிஸ்தவம்.

இந்தியாவில் பார்சி, ஜைனம், சீக்கியம், இஸ்லாம், ஜொராஸ்ட் ரியானிஸம் ஆகிய அனைத்துமே செழித்து வளர்ந்துள்ளன, காரணம் ஹிந்துக்கள் எந்த மதத்தையும் வெறுப்பவர்கள் அல்லர் என்பதால் தான்!

ஹிந்து மதத்தில் மதமாற்றம் என்பதே கிடையாது.

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆகியோரை கொடுமைப் படுத்துகிறார்கள் என்று மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டும் பல கிறிஸ்தவ, இஸ்லாமிய நாடுகள் உலகில் உள்ளன. மயன்மார், பாலஸ்தீனம், யேமன் ஆகிய இடங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை உலகம்  அறியும். ஆனால் பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் என்ன நடந்தது என்பதை உலகம் அறியாது.

பாகிஸ்தானிய ராணுவத்தால் 1971இல் பங்களாதேஷில்  நடந்த மாபெரும் படுகொலையில் ஹிந்துக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை யாராவது அறிவார்களா? காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதையாவது அறிவார்களா? அல்லது ஜம்மு காஷ்மீரில் 1998ல் வந்த்மா படுகொலை, பாகிஸ்தானில் படிப்படியாக ஹிந்துக்களை அழிப்பது, அராபிய உலகில் , மஸ்கட்டில் ஹிந்து மத கோவில்களை ஒழிப்பது ஆகியவற்றையேனும் அறிவார்களா?

ஹஜ்  மானியம்  என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 2000ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பதினைந்து லட்சம் முஸ்லீம்கள் இந்த மானியத்தைப் பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில் தான் சுப்ரீம் கோர்ட் இந்த மானியத்தைப் படிப்படியாக 10 ஆண்டுகளில் குறைத்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஒரு மதத்தைக் கடைப்பிடிப்பவருக்கு எந்த ஒரு நாடு தான் மதத்தின் பேரில் யாத்திரை நடத்த மானியம் கொடுக்கும்? 2008லிருந்து ஒவ்வொரு முஸ்லீமுக்கும் சராசரியாக விமானக் கட்டணமாக ஆயிரம் டாலர்கள் இந்தியாவில் வழங்கப்படுகிறது.

ஹிந்துக்கள் எப்போதுமே மைனாரிட்டிகளை வரவேற்றுப் பாதுகாத்து வந்துள்ளனர். மதசகிப்புத்தன்மை வரலாற்று ரீதியில் நாம் பார்ப்போமானா]ல் ஹிந்துக்களே பார்சிக்களை அவர்கள் ஒடுக்கப்படும் போது வரவேற்றுள்ளனர். அவர்கள் இங்கு ஆயிரம் வருடங்களாக வளமையாக வாழ்ந்துள்ளனர். யூதர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இங்கு அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வருகின்றனர். இதே போல 1800 ஆண்டுகளுக்கு முன் சிரியன் கிறிஸ்தவர்கள் இங்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.  ஜைன, புத்தம் ஆகியவை ஹிந்து மதத்திலிருந்து உருவாகி 2500 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளன.

இன்றும் இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்கிறது, ஏனெனில் இங்கு பெரும்பான்மையினர் ஹிந்துக்களாக இருப்பதனால் தான்!

ஹிந்து தேசம் என்று பிரகடனப்படுத்துவது மெஜாரிட்டியாக இருப்பவர்களை மதம் மாற்றுவதிலிருந்தும் மைனாரிட்டியாக இருப்போரை தாஜா செய்வதிலிருந்தும் பாதுகாக்கும்.

மதச்சார்பின்மையும் ஹிந்துமதமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். நாணயத்தைச் சுண்டி விட்டு எந்தப் பக்கம் விழுந்தாலும் நீங்கள் ஜெயிப்பீர்கள்!

இந்திய தீபகற்பத்தில் முகலாயர் படையெடுப்புகள் கி.பி 1000இல் ஆரம்பித்து 1739 முடியத் தொடர்ந்தது. பத்து கோடி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலக சரித்திரத்திலேயே இது தான் மிக கோரமான படுகொலை சம்பவமாகும். இந்த ஆக்கிரமிப்பாளர்களின் வம்சாவளியினர் மீது ஹிந்துக்கள் பழிவாங்கும் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

மதச்சார்பின்மையை இயல்பாகவே கடைப்பிடிக்கும் ஹிந்து ராஷ்ட்ரம் எந்த வித முன்னுரையும் இல்லாமலேயே உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும்!

*

அருமையான பல உண்மைகளை இந்தப் பதிவில் எடுத்துக் கூறும் காலித் ஒமர் பாராட்டப்பட வேண்டியவர் தானே!

***

நன்றி  : ட்ரூத் தொகுதி 90 நம்பர்1 15-4-2022

Rare Facts about Peacocks in Asokan Inscription and Tamil Literature—2 (Post No.13,003)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,003

Date uploaded in London – –   12 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 1 was posted yesterday

Peacock in Sangam Tamil Literature

In Tamil anthology Kuruntokai (poem 24), there is a poem on peacock:

“Just now I had a look at the mountain of his where the rain poured in such heavy showers that the peacocks screeched in flocks and the grey faced monkeys with their young ones trembled in cold. Is my forehead is still of the same old state? Let me know it, my companion – 24

This is heroine’s lines about Him(hero)

xxxx

Tamil poets compared peacocks with dancing girls which we can see in Tamil anthology Akananuru poem 82. Poet describes the natural scenery.

The peacocks on the Venkai tree with all blossoms and no buds, look like ladies plucking flowers.

The Nocci leaves are in threes and are compared to the feat of the peacock—Kuru 138. We see the same in Narrinai poem 305 as well.

Monkeys form the audience wondering at the dance of the peacock appearing with the gait of a dancing girl- Akam.82

There are many pictures of playful monkeys in Kuruntokai. All of them are true to nature and artistic. A young monkey is pictured to play with and roll the eggs laid by a peacock in a rocky place.- Kuru 38

Ainkurunuru poems 294, 295, 29, 300 show peacocks in different settings and appropriate artistic comparisons are given.

Akam. 242 has another description of dancing peacock,

The peacock dancing there seems as if decorated with the gold like pollen shed  by the blossoms of the Venkai trees- Akam 242

Mutaththama kanniyar gives a beautiful description of dancing peacock in long poem Porunaratruppadai (lines 211-213)

“A peacock spreads its tail and dances on the moonlight like sand dune to the tune of the humming bees which resemble the music of the flute”.

Tamil poem Cirupanatruppadai lines 14-15 describes woman’s tressesare like peacocks tails.

“Approaching his beloved wife, he bursts out to her

Oh dear! on my way the peacocks dance like you; the Mullai blossoms and spreads fragrance like your forehead and the deer looked bewildered like you; all these I saw . I thought of you and you alone , and have come fast, faster than the season itself” -Ainkurunuru 492.

The cry of the peacocks in early winter is interpreted by the heroine as a call to the lovers in separation to hasten without delay to unite themselves – Paripatal -14

The dancing peacock reminds the heroine of the beginning of the rainy season  in which her lover has promised to return . in Tamil the bird is linked to the mountain region called குறிஞ்சி.

 It is same in Sanskrit literature as well. The hero who goes out on business , on military campaigns or for studies should return by the rainy season. In the monsoon season , nothing happens in India for four months. Even ascetics won’t move out for Four Months Period known as Chaturmasya Vrata period.

Peacock appears in almost all famous Sanskrit woks from Vedic period. Kalidasa refers to it all his works.

Its association with Lord Skanda/ Kartikeya, rainy clouds, dancing etc is used by him.

xxxx

Indus- Sarasvati Valley

Historically speaking, it is seen on the potsherds collected in the Cemetery H at Harappa, there are designs of the peacock.

The peacock is found on both Harappan and Late Harappan (Cemetery H) pottery, the latter presumably being the burial urns being referred to. Interpretation as a representation of immortality cannot be confirmed.

Peacock parts used in medicines etc are available from Wisdom Library website given below.

Full details are available in Wisdom Library article by

Our National Bird: The Peacock its Myths and Legends

Wisdom Library

https://www.wisdomlib.org › … › October 1966

17 Mar 2022 — Kalidasa depicts Bhavani as making use of the tapestry of the peacock’s plumes, decorating her ears with them along with lilies. The …

Peacock: 4 definitions

Wisdom Library

https://www.wisdomlib.org › definition › peacock

19 Oct 2023 — The Peacock is denoted by the Sanskrit term Śikhin and is mentioned as one of the sworn enemies of Snakes (Sarpas), as taught in the Kāśyapa …

In Hinduism · ‎In Buddhism

Missing: library ‎| Show results with: library

Mayura, Mayūra, Māyūra: 36 definitions

Wisdom Library

https://www.wisdomlib.org › definition › mayura

24 Jan 2024 — Mayūra (मयूर) refers to the “peacock” as described in the 17th century Bhojanakutūhala (dravyaguṇāguṇa-kathana), and is commonly found in …

In Hinduism · ‎In Buddhism · ‎India history · ‎Biology

—subham—-

Tags- Peacock, Indus Valley, Harappan, Sangam Tamil, Literature, Kalidasa

மயில் பற்றி கவிஞர்கள் சொல்லும் அதிசயச் செய்திகள் ! (Post No.13,002)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,002

Date uploaded in London – –   12 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 மயில் பற்றி  அவ்வையார் , கம்பன், அருணகிரிநாதர் , பாரதி, பாரதிதாசன், காளிதாசன் முதலிய பல புலவர்கள் பாடியுள்ளனர் . அவர்களில் குறிப்பாக கம்பனும் விவேக சிந்தாமணி இயற்றிய பெயர் தெரியாத புலவரும் அதிகம் அறியாத விஷயங்களைப் பேசுகின்றனர். ஏனையோர் முருகனின் வாகனம் என்ற முறையில் குறிப்பிடுகின்றனர். பாரதிதாசன் மயிலின் அழகினை வியந்து பாடுகிறார் ; உலகப் புகழ்பெற்ற காளிதாசன்தான் முருகனையும் மயிலையும் தொடர்பு படுத்திப் பாடிய முதல் கவிஞன் ; அவனுடைய காலம் கி.மு முதல் நூற்றாண்டு ; சங்கப் புலவர்கள் பலர்  அவன் சொன்ன விஷயங்களை அப்படியே தமிழ்ப்படுத்தியுள்ளனர்.

XXXX

இதோ விவேகசிந்தாமணி நூலின், பெயர் தெரியாத புலவர், சொல்லும் கருத்து :

மயில் பற்றிய விவேகசிந்தாமணி  பாடல்

நற்குணங்கள் பதின்மூன்று

மயில் குயில் செங்காலன்னம் வண்டு கண்ணாடி பன்றி, அயிலெயிற்றரவு, திங்கள் ஆதவன் ஆழி கொக்கோடு, உயரும்விண் கமலம் பன்மூன்றுருகுண முடையோர் தம்மை, இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே.

மயில் (பொல்லாததை ஒதுக்கும் குணம்; அழகிய தோற்றம்), குயில் (இனிய பேச்சு), சிவந்த கால்களையுடைய அன்னம் (விவேகம்; பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும்  பாலைமட்டும் அருந்தும்)), வண்டு (தேன் போன்ற நல்லதை மட்டும் எடுத்தல்), கண்ணாடி (உள்ளதை உள்ளவாறு காட்டுதல் – உண்மை), பன்றி (உறவுகளோடு கூடி வாழ்தல்), கூர்மையான பற்கள் உள்ள பாம்பு (எதிரிகளுக்கு பயத்தைக் கொடுத்தல்), சந்திரன் (குளிர்ந்த பார்வை – கண்ணோட்டம்), சூரியன் (ஞானம்), கடல் (ஆழ்ந்த அறிவு), கொக்கு (ஒரு முகப்பட்ட மனம்),உயர்ந்த வானம் (பரந்த மனம், அகன்ற சிந்தனை), தாமரை (ஒட்டியும்  ஒட்டாத பற்றற்ற வாழ்க்கை) ஆகிய இப்பதின்மூன்று குணங்களும் ஒருங்கே உடையவரை உலகத்தார் அனைவரும் போற்றும் ஈசன் என்று கருதலாம்.- விவேகசிந்தாமணி

xxxx

கம்பன் சொன்ன அதிசயச் செய்தி

1470.  ‘வெயில் முறைக் குலக் கதிரவன்

     முதலிய மேலோர்,

உயிர் முதல் பொருள் திறம்பினும்,

     உரை திறம்பாதோர்;

மயில் முறைக் குலத்து உரிமையை,

     மனு முதல் மரபை;

செயிர் உற, புலைச் சிந்தையால்,

     என் சொனாய்? – தீயோய்! (Kamba Ramayana, Ayodhya Kanda)

பாடலின் பொருள்

கொடியவளே! சூரியன்; முதலாகிய  உயர்ந்தோர்கள், உயிரே

போவதாயினும்  சத்தியத்தினின்றும்  மாறுபடார்; மயிலினது முறைமையைக் கொண்ட அரசகுலத்து உரிமையை உடைய,

மனுவின் வழித் தோன்றல்களாக உள்ள, அயோத்தியின்  அரச பரம்பரையை கீழ்மைப் புத்தியால் யாது பேசினாய்?’

(தீய எண்ணம் கொண்ட மந்தரை என்னும் கூனியை நோக்கி கைகேயி சொன்ன சொற்கள் இவை.)

XXXXX

பாடலின் விளக்கம்

மயிலின் குஞ்சுகளுள், முதற் பார்ப்புக்கே (குஞ்சுக்கே) , தோகையின் பீலி பொன்னிறம் பெறும். ஏனைய குஞ்சுகளுக்கு அவ்வாறாகாது. அதுபோல் மூத்த மகன்  அரசுரிமை பெறுதலும், ஏனையோர் பெறாதொழிதலும் நடக்கிறது . அவ்வுரிமையை உடைய மரபு ‘மனுமுதல் மரபு’ என்றார். எனவே, மூத்த மகனாகிய இராமன் அரசுரிமை பெறுதலும்,  பரதன்,  இலக்குவன்,  சத்துருக்கனன் முதலியோர் பெறாதொழிதலும் அம்மரபின் வழிப்படியே  என்றாளாம். இனி, கேகயம் என்பது மயிலைக் குறிக்கும்சொல் ‘யான் பிறந்த கேகய குலத்துக்கும் அதுவே விதி , மனு மரபுக்கு  குற்றம் தரக்கூடிய  என்ன வார்த்தை சொன்னாய்?’ என்று கூனியைக் கடிந்தாள் கைகேயி எனலாம்.

XXXX

பிற்காலத்தில் எழுதப்பட்ட தணிகைப் புராணமும் கம்பன் சொன்ன கருத்தையே மொழிகிறது.

ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும்,  கலாவம் புனைந்த களிமயில் மூத்தது எனக் கருத” என்ற   பாடல் (தணிகைப்.  களவு. 244) பொருந்துவதாகும்.

xxxxx

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி என்ற அவ்வையாரின்  பாடல் பெரும்பாலோருக்குத் தெரியும்; இலக்கணம் கல்லாத ஒருவன் கவி இயற்றி, அரசனுக்கு முன்னர் பாடுவது, அழகிய மயிலின் ஆட்டத்தைக் கண்ட வான்கோழி, மயில் போல ஆடுவதற்கு இணையானது என்று அவ்வைக்கிழவி கிண்டல் செய்கிறாள் . இதில் புதிய செய்தி என்னவென்றால் இதை ஈசாப் என்னும் கிரேக்க எழுத்தாளன் காப்பி copy  அடித்திருக்கிறான். ஈசாப் காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என்று கதைப்போர் உண்டு. நாம் சொல்லும் அவ்வையாரோ ஆறு அவ்வையார்களில் மத்திய கால அவ்வையார். அப்படி இருக்கையில் அவருக்கு மிகவும் முன் வாழ்ந்த ஈசாப் எப்படி காப்பி copy  அடித்தார் என்று சொல்ல முடியும்? என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள்; ஈசாப் கிரேக்க நாட்டவர் ஆனாலும் எகிப்தில் அடிமை வேலை செய்தவன் என்பது பலர் கருத்து . ஈசாப் தனது கதையில் மயிலை இதே சூழ்நிலையில் காட்டிக் கதை எழுதியுள்ளான் ; ஒரு மயில், ஒவ்வொரு பறவையின் சிறப்பையும் பார்த்த பின்னர் அது போலவே நடிக்க ஆசைப்படுகிறது ; அது முடியாது என்று விளக்குவதே கதை; அவன் வாழ்ந்த எகிப்திலோ கிரேக்க நாட்டிலோ மயில் கிடையாது ; அப்படியே ஒன்றிரண்டு அரசவைத் தோட்டங்களில் இருந்திருந்தாலும் மயில் என்னும் பறவை பற்றி மக்களுக்குத் தெரிந்திருந்தால்தான் கதை புரியும்; விளங்கும். உண்மையில் ஈசாப் கதைகளை ஆராய்ந்தோமானால் அவன் பல நாட்டுக் கதைகளைத் தொகுத்தவனேயன்றி எழுதியவன் அல்ல என்பது விளங்கும்.  மயில் பற்றிய கதை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இந்தக் கருத்தும் கதையும் இந்தியா முழுதும் இருந்திருப்பதால்தான் அவ்வவையாரும் பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

My previous post

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ (Post No.4742)

Turkey imitating Peacock (Aesop copied this Hindu folk tale)

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி –

மூதுரைப் பாடல்/வாக்குண்டாம்

(மூதுரை என்பதும் வாக்குண்டாம் என்பதும் ஒரே நூல்தான்)

xxxxx

வம்புதும்பு பேசும் பெண்களைச்  சாடுகிறார் பாரதிதாசன்!

பாரதிதாசன். பாட்டில் மயில்

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

அழகிய மயிலே! அழகிய மயிலே!

அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்

கருங்குயி லிருந்து விருந்து செய்யக்

கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்

தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்

அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்

தாடுகின்றாய் அழகிய மயிலே!

உனது தோகை புனையாச் சித்திரம்

ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை

உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!

ஆடு கின்றாய்; அலகின் நுனியில்

வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!

சாயல்உன் தனிச்சொத்து! ஸபாஷ்! கரகோஷம்!

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்

ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்

மரகத உருக்கின் வண்ணத் தடாகம்

ஆனஉன் மெல்லுடல், ஆடல், உள்உயிர்,

இவைகள் என்னை எடுத்துப் போயின!

இப்போது, “என்நினைவு” என்னும் உலகில்

மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்:

நீயும் பெண்களும் “நிகர்” என்கின்றார்!

நிசம்அது! நிசம்!நிசம்! நிசமே யாயினும்

பிறர்பழி தூற்றும் பெண்கள்இப் பெண்கள்!

அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!

அயலான் வீட்டில் அறையில் நடப்பதை

எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே

இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம்

குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ

கறையொன் றில்லாக் கலாப மயிலே,

நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!

இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்

மனதிற் போட்டுவைமகளிற் கூட்டம்

என்னை ஏசும் என்பதற் காக!

புவிக்கொன் றுரைப்பேன்: புருஷர் கூட்டம்,

பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி

திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள்

சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!

xxxx

These are later Yaudheya coins. Their punch marked coins have six dots with god figure.

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய மேக தூதத்தில் 46, 47-ஆவது பாடல்களில் மேகம் உறுமினால் மயில்கள் ஆடும் என்ற கருத்தையும் அது முருகனின் வாகனம் என்ற கருத்தையும் விளக்கியுள்ளார். அவர் வாழ்ந்தது  2100  ஆண்டுகளுக்கு முன்னர்; அதே காலத்தில்  யாதேயா வம்ச மன்னர் YAUDHEYA COINS காசுகளில் ஆறுமுகம் காணப்படுகிறது ; முருகன் பிறப்பு பற்றி குமார சம்பவம் காவியம் இயற்றிய காளிதாசனின் செல்வாக்கு அந்தக் காசுகளில் தெரிகிறது .

Ref. Oriental Coins & Their Values : The Ancient and Classical World 600 B.C. – A.D. 650 Hardcover – January 1, 1978

by Michael Mitchiner (Author)

xxxx

மயிலுக்குப் போர்வை கொடுத்த வையாவிக்கோ பேகனை அறியாத தமிழர் இல்லை; கடையெழு வள்ளல்களில் ஒருவனான அவனை சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். ரிக்வேத கால மயூர முதல் பாரதிதாசன் காலம் வரை, மயிலின் புகழ் பரவியதற்குப் புலவர்களே காரணம் .

—-SUBHAM —-

Tags- மயில், மயூர, அவ்வையார், பேகன், விவேக சிந்தாமணி, காளிதாசன், மேகதூதம் பாரதிதாசன் , கான மயிலாட , வான்கோழி, ஈசாப்

17 வருடங்களில் 17 அறிவுரைகள்! (Post No.13,001)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.001

Date uploaded in London – — 12 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர் பிப்ரவரி 2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

17 வருடங்களில் 17 அறிவுரைகள்!

ச.நாகராஜன்

மரியா பொபோவா (Maria Popova) என்ற பெண்மணியால் 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி The Marginalian என்ற இணையதள இதழ் ஆரம்பிக்கப்பட்டது.

பத்திரிகைகள் வெளியிடும் சாதாரணமான கட்டுரைகளை விட வித்தியாசமான தெர்தெடுக்கப்பட்ட நல்ல கட்டுரைகளை மரியா வெளியிடுகிறார்.

17 ஆண்டுகளை வெற்றிகரமாக இந்த இதழ் கடந்து விட்டது. தனது 17 ஆண்டு பத்திரிகை அனுபவத்தில் தான் கற்ற சிறந்த 17 அறிவுரைகளைத் தொகுத்து 2024 ஆரம்பிக்கவிருக்கும் தருணத்தில் அவர் வழங்கியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையின் சுருக்கம் தான் இது: 

1. மற்றவர்களிடம் கடன் வாங்கிய கருத்துக்களை வைத்து வாழ்க்கையை நடத்த வேண்டாம். பொதுவாக, அவற்றை நமது வழிகாட்டும் நெறிகளாக வைத்துக் கொண்டு அதையொட்டியே நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம். அதை விட்டு விடுங்கள். சிறிது சங்கடமாக இருந்தாலும் கூட உங்களது மனதை மாற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கையை சீராக்கும் உண்மையான எண்ணங்களில் உங்கள் கருத்தைச் செலுத்துங்கள்.

2. பெரும் புகழுக்காகவோ அல்லது பணத்திற்காகவோ அல்லது அந்தஸ்திற்காகவோ எதையும் செய்ய வேண்டாம்.
“அந்தஸ்து என்பது ஒரு சக்தி வாய்ந்த காந்தம். அது நீங்கள் அனுபவிக்கும் உங்கள் நம்பிக்கைகளை கூட வளைத்து விடும்” என்கிறார் பால் க்ரஹாம் (Paul Graham).

அந்தஸ்து நீங்கள் விரும்புவதைச் செய்ய விடாது. நீங்கள் எதை விரும்பவேண்டுமோ அதை விரும்பச் செய்து விடும். ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்

3.  பெருந்தன்மையுடன் தாராளமாக இருங்கள். உங்கள் நேரம், உங்களின் ஆதார வளம் ஆகியவற்றை நன்கு பெருந்தன்மையுடன் மற்றவருக்குக் கொடுங்கள். முக்கியமாக வார்த்தைகளில் கஞ்சத்தனம் வேண்டாம். எதையும் விமரிசிப்பது சுபலம். ஆனால் வாழ்த்துவது கஷ்டம். அனைத்தையும் புரிந்துகொள்ளுங்கள். அனைவரையும் உங்களைப் புரிந்துகொள்ளச் செய்யுங்கள்.

4. உங்கள் வாழ்க்கையில் சில அமைதி நேர பாக்கெட்டுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி செய்யுங்கள். சைக்கிளில் சிறிது தூரம் செல்லுங்கள். மிகச் சிறந்த கருத்துக்கள் இந்த நேரத்தில் தான் உருவாகின்றன. ஆழ்நிலை மனத்திலிருந்து வரும் சிறந்த கருத்துக்களைப் பெறுங்கள். தூக்கத்தைப் பொருத்த மட்டில் ஒரு ஒழுக்க நியதியைக் கடைப்பிடியுங்கள். வேலையிலும் அதே போல ஒரு நியதியைக் கடைப்பிடியுங்கள். உங்கள் உயிரையும் ஆரோக்கியத்தையும் விட எது தான் சிறந்ததாக இருக்க முடியும்?

5. “மற்றவர்கள் தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லும் போது அதை நம்புங்கள். ஆனால் அவர்கள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சொல்லும் போது அதை நம்பாதீர்கள்” என்கிறார் மாயா ஆஞ்சலோ (Maya Angelou). உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள் ஒருவரே தான். உங்களின் நேர்மைத் திறம் பற்றி உங்கள் மனச்சாட்சி மட்டுமே அறியும்.

6. நமது சமுதாயம் நம்மை நமது திறனாலும், சம்பாதிக்கும் பணத்தாலும், இதையோ அதையோ செய்வதாலும் தான் மதிக்கிறது. உற்பத்தித்திறன் என்பது இந்தக் காலத்திய நடைமுறையாகி விட்டது. ஆனால் அதுவே தான் எல்லாம் என்பது நம்மை சந்தோஷம் அடைவதிலிருந்தும்  வாழ்க்கையை என்ன என்று புரிந்துகொள்வதிலிருந்தும் தடுக்கிறது. நாம் வாழ்நாளை எப்படிக் கழிக்கிறோம் என்பதே நமது வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைச் சொல்கிறது.

7. நல்லதை அடைய எத்தனை நாள் ஆனாலும் சரி தான், அதற்காகப் பொறுத்திருங்கள். ஒரே நாளில் வெற்றி என்பது ஒரு போலியான கட்டுக்கதை. டக்கென்று மலரானது மலர்ந்து விடுவதில்லை. அதற்குரிய காலத்தை அது எடுத்துக் கொள்கிறதல்லவா?

8. எது உங்களை உற்சாகப்படுத்தி உங்களை உயரத்தூக்கி விடுகிறது என்பதை கவனியுங்கள். எவர்களது சிந்தனை, நூல்கள், பேச்சு, உரையாடல் உங்களை ஊக்குவிக்கிறது? அதை அடிக்கடி நாடுங்கள்.

9. இலட்சியவாதியாக இருக்க பயப்படாதீர்கள். நமது வாழ்க்கையில் நமது குறிக்கோள் அனைவரையும் மேலேற்றுவது தான். அவர்களைக் கீழே இறக்கி விடுவதல்ல. நல்ல இலட்சியத்தைக் கடைப்பிடியுங்கள். பண்பாட்டை உயர்த்துங்கள்.

10. சிடுசிடுப்பான எரிந்து விழும் தன்மையை எதிர்த்து நில்லுங்கள். கெட்ட விமரிசனங்கள் ஆக்க பூர்வமான திறமையை அழிக்கிறது. உற்சாகத்துடனும் தர்க்கரீதியான நம்பிக்கையுடனும் வாழ்பவர்களை ஆதரியுங்கள்.

11. ‘Pi’  பற்றிய அபூர்வமான கவிதையை நிச்சயம் படியுங்கள். நமது வாழ்க்கை வரைபடங்கள், நமது பிரபஞ்சம் பற்றிய கருத்துக்கள் உள்ளாகவும் வெளியாகவும் எப்படி இருக்கிறது என்பதை கேள்வி கேட்டு அறியுங்கள்.

12. அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தோர் ஏராளமான உள்ளனர். அவர்களைப் பற்றி அறியலாம்; அப்படியே வாழ முயலலாம்.

13. மன்னித்து விடுங்கள். மன்னித்துக் கொண்டே இருங்கள். மீண்டும் மன்னித்து விடுங்கள். உற்சாகமான உறவுகள் கடலின் மேலே மிதக்கும் படகு போல. ஆனால் ஆழ்கடலின் அடியில் இருளில் செல்லும் சப்மரீன்களும் உள்ளன. மன்னிப்பு என்பது ஒரு இரசவாதம். அது ஆழ்கடலில் மூழ்கி இருக்கும் சப்மரீனை மேலே எழ வைக்கிறது.

14. வாழ்க்கையை அனுபவியுங்கள். சின்னக் குழந்தை ஷூவை எடுத்து சரியான காலில் போடுவது போல, வானத்தை ஒரு சிறிய கலர் க்ரேயானால் குழந்தை காகிதத்தில் வரைய முயல்வது போலச் செயல்படுங்கள்.

வாழ்க்கையில் சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவியுங்கள். அன்றாட நிகழ்ச்சிகளில் உங்களை மகிழ்ச்சிப் படுத்தும் ஏராளமான சிறுசிறு விஷயங்கள் உள்ளன. அவற்றை இனம் காணுங்கள்.

15. இன்றைய நிலையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அதைவிடப் பன்மடங்கு பெரிதாக வளர்ந்து விடுங்கள்.

16. தன்னைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு விடுங்கள். உங்களிடமிருந்து வெளியே வாருங்கள்.

17. நீங்கள் கற்பனை செய்தபடியோ அல்லது நம்பிக்கொண்டிருக்கும் படியோ ஒவ்வொரு விஷயமும் நடக்காது. வாழ்க்கையில் ஏமாற்றங்கள் உண்டு. ஏமாற்றங்களே திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும். வால்ட் விட்மனின் இந்தக் கவிதை வரிகளைப்

படியுங்கள். உடைந்துபோன அவரது மனமே உலகம் போற்றும் இந்தக் Leaves of Grass என்ற கவிதையை உருவாக்கி விட்டது.

Sometimes with one I love I fill myself with rage for fear I effuse
unreturn’d love,
But now I think there is no unreturn’d love, the pay is certain one
way or another,

(I loved a certain person ardently and my love was not return’d,
Yet out of that I have written these songs.)

(நான் ஒருவரை வெகுவாக நேசித்தேன். ஆனால் எனது அன்பு அவரால் திருப்பிச் செலுத்தப்படவில்லை. என்றாலும் கூட அதனால் தான் நான் இந்த பாடல்களை எழுதினேன்)

***

Rare Facts about Peacocks in  Asokan Inscription and Tamil Literature (Post No.13,000)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,000

Date uploaded in London – –   11 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is my fifth research paper on peacock, the National Bird of India. In this article, I refer to three Tamil poets who give some rare information about the bird.

My previous for articles are available in my blog and they are,

Hindu Vestiges in Iraq!(Post No.1228)

Bernier’s Description of Peacock Throne (Post No.2808)

PEACOCK MYSTERY: HINDU BIRD IN TURKEY/SYRIA AROUND 1400 BCE- Part 1 (Post No.10,767)

PEACOCK MYSTERY HINDU BIRD IN TURKEY SYRIA-PART 2 (Post No.10,769)

XXXX

Kamban in his Ramayana in Tamil refers to PEACOCK and compares its rare quality  to allow the first born to rule the roost, with Dasaratha’s decision to crown Rama.  He used this as a simile to justify Dasaratha’s selection of Rama, the first-born son as his ward.

Here is the context:

Manthara, the evil hunch backed woman in the palace, poisoned the mind of Kaikeyi , and asked her to make her son Bharata as next king. As soon as Kaikeyi heard this, she became angry and chided Manthara  pointing out that it is against the Law of Manu. It is also against the nature where the peacock always gives its first- born baby the status of head of the family.

Tamils who are keen observers of nature noted that the first born birdling has golden coloured feathers and the later born birds are not that shiny. It always become the head of the family. Kaikeyi justified Dasaratha’s selection of Rama as the next king. Kamban’s great work on Ramayana in Tamil is considered the masterpiece 1000 years ago. One later work called Thanikachala Purana also used this simile.

xxxx

Second Poet

A work called Viveka Chintamani belongs to modern Tamil period. It is by an anonymous poet. It is full of didactic poems in simple Tamil. One poem refers to 13 things in nature that teach good virtues to people. Peacock is also chosen one among the thirteen . The commentator says that the lesson a man should learn from the peacocks is that it throws out the unruly one from its group. That is ‘never align with bad people’.

xxxxx

Third Poet

In Aesop’s Fable we find peacock. He stole the story from Hindu scriptures. We know that neither Greece nor Egypt ha peacocks 2600 years ago. Several stories in the fable book show that Greek Aesop, a slave in Egypt,  only compiled what existed before his times. Stories such as Peacock and Juno are all from Hindu sources. A peacock wants to be a different bird so that it can get their best virtues. But it fails and Juno warned it not to try that way. This is in Tamil as well.

Avvaiyar, the most famous woman poet, lived 1000 years ago. Earlier poet with the same name lived in Sangam age. There were at least three Avvaiyars in Tamil.

This Middle Age period poet Avvaiyar says in a poem that a turkey bird saw the beautiful peacock dancing and tried to imitate it with its ugly short wings. She compared it to an unlearned man composing poems and trying to show off in the court of a king.

Xxxx

Sanskrit poets

Kalidasa, the greatest of the Indian poets, lived around first century BCE, according to famous Sanskrit scholars . He used peacock in his Meghaduta (Stanza 46, 47) poem in Sanskrit:

46. Your form changed into a cloud of flowers, you should

bathe Skanda, who has taken his permanent abode there, with

showers of flowers wet with the water of the heavenly Gang*^s:

For he is ( none other than ) his own energy, surpassing the

sun in brightness, that was placed by the bearer of the young

moon (Siva) in the mouth of Agni (God of fire) for the

protection of the armies of Indra.

47. Thereafter, with your thunderings prolonged l)y their

being echoed ( lit, caught up ) by the mountain, do you make

that Skanda‘ peacock dance, the outer corners of whose ej’es

are brightened by the lustre of Siva’s moon, and whose moulted

feather, bearing circles of streaks of lustre, Bhavaiil, out of

aifection for her son^ places on her ear, usually the seat of a

blue-lotusJpetal (or, so as to make it come in contact with the

lotus-petal resting there).—Meghaduta, Kalidasa

Skanda’s (Murugan in Tamil) vahana/vehicle is peacock. The bird is shown in His flag as well. All famous Skanda shrines in Tamil Nadu have lots of peacocks in their natural surroundings.

xxxxx                

Emperor Asoka’s favourite food

The mighty Peacock /Maurya Empire was founded by Chandra Gupta Maurya, under the guidance of clever Brahmin Chanakya. He was insulted by Non Brahmin, Non Kshatria Nanda dynasty king. So the angry Brahmin vowed to destroy the Anti Brahmin Nanda dynasty. He called an able- bodied youth from the Peacock Farm (Maurya) and made him the emperor. Even Alexander the Great was scared to enter his powerful Empire. Being the owners of Peacock farms (Mayura in Sanskrit is peacock. It is in the Rig Veda; Maurya is the Peacock farms owners), Mauryas were fond of peacock curry.

Mauryan king Asoka , a great eater of peacocks, declared in one of his inscriptions that only two peacocks must be killed every day. The inscription says that thousands of peacocks and deer were killed every day for the palace people.  But later he ordered only two peacocks should be cut in the palace everyday. His previous inscription did not even include peacock in the Non Sacrificial Birds. Buddhagosha also says that Mauryas were great peacock eaters. Here is what Asoka said,

Illustration courtesy of Yashwant K. Malaiya,
Professor, Computer Science Department,
Colorado State University

Ashoka’s First Rock Edict at Girnar

Beloved-of-the-Gods, King Piyadasi,
has caused this Dhamma edict to be written.
Here no living beings are to be slaughtered or offered in sacrifice.
Nor should festivals be held, for Beloved-of-the-Gods,
King Piyadasi, sees much to object to in such festivals,
although there are some festivals that
Beloved-of-the-Gods, King Piyadasi, does approve of.

Formerly, in the kitchen of Beloved-of-the-Gods, King Piyadasi,
hundreds of thousands of animals
were killed every day to make curry.
But now with the writing of this Dhamma edict
only three creatures, two peacocks and a deer,
are killed, and the deer not always.
And in time, not even these three creatures will be killed

xxxx

More Interesting Facts about Peacocks

Mayura Bhatta composed the famous SURYA SATAKAM 1000 years ago. The Rig Vedic word Mayura is used in masculine and feminine names by the Hindus.

xxxx

There are areas named after peacock in Chennai and Delhi; Mylapore is one of the ancient parts of Chenai  Mayurbhanj in Odisha and Mayiladuthurai in Tamil Nadu are two well-known districts in India.

xxxx

Being Lord Skanda’s vehicle, Tamil poet Arunagirinathar used peacock in most of his songs/hymns. He composed over 1300 Thiruppugaz songs praising the glory of Skanda. One of his compositions is Mayil Vrttam (Mayil came from Mayura for peacock)

xxxx

Peacock in Sangam Tamil Literature

2000 year old Sangam Tamil literature lists Seven Last Philanthropists of Tamil speaking old. That means two sets of Seven Philanthropists existed before them.

Tamils are very sentimental and sensitive to suffering of others. Modern devotional poet Ramalinga Swamigal, also known as Vallalar says that he withers away whenever he sees a withered plant.

In the Sangam period a chieftain by name Pari saw a climber  without a supporting pole, the movements of the climber in the gusty wind made him sad. Immediately he stepped out of his precious chariot and made it the supporting pole for the plant. He is one of the Seven. Another chieftain was Bekan (also spelt Vaiyāvik Kōpperum Pēgan) ; when he was riding through the jungle he saw a peacock shrugging its body so that the feathers will come out and form a fan. Bekan thought it was shivering and shaking because of the cold weather and immediately gave his costly gold laced silk shawl to it. All such incidents show their kindness towards nature.

xxxx

Peacock in Linguistics

Hebrew TUKI= Sanskrit SIKI

One of the Sanskrit names for peacock is SIKI. Lord Muruga/Skanda is known as Siki Dwaja. This Siki becomes TUKI in Hebrew. And Tuki is found in the list of exports from India to Babylonia. Other exports also have one Sanskrit names. But some half baked scholars took it for TOKAI in Tamil (Thokai refers to feather only and not peacock). The S=T interchange is used by all of us in hundreds of English words where TION is pronounced as SION. (E.g. Frution, Condition etc)

xxxx

Tamil MAYIL and Sanskrit MAYURA

There has been a debate over the words Mayur and Mayil ; is it a Tamil word? or Sanskrit word? Chronologically it is found in Sanskrit  1500 years before it is used in Tamil . But the similarity of the words justify the theory that both languages were created by Lord Shiva . From poets Paranjothi Munivar, Sivanjana Munivar  to modern poet Bharati confirmed it in their poems.

In the second part , I will write about

Mayil and women’s hair in Literature

Mayil and Murugan

Mayura sanctuaries

Mayura in Ayurveda

Mayura in siddha vaidhya

Mayura in vahanas flags stamps coins currency notes

Rome Vatican Peacock

Peacock as symbolism

Other names of peacock

Peacock feather fan

Jains and Peacock

Dancing bird in Babylonia

Rangoli , curtains,  Mayil dance (folk dance)

Wisdom library

Symbolism Meaning 

Tamil  Sanskrit synonyms for Peacock

Proverbs on Peacock

xxxxx

Tamil References quoted above:

1470.  ‘வெயில் முறைக் குலக் கதிரவன்

     முதலிய மேலோர்,

உயிர் முதல் பொருள் திறம்பினும்,

     உரை திறம்பாதோர்;

மயில் முறைக் குலத்து உரிமையை,

     மனு முதல் மரபை;

செயிர் உற, புலைச் சிந்தையால்,

     என் சொனாய்? – தீயோய்! (Kamba Ramayana, Ayodhya Kanda)

xxxxx

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ (Post No.4742)

Turky imitating Peacock (Aesop copied this Hindu folk tale)

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி –

மூதுரைப் பாடல்/வாக்குண்டாம்

(மூதுரை என்பதும் வாக்குண்டாம் என்பதும் ஒரே நூல்தான்)

xxxxx

73. நற்குணங்கள் பதின்மூன்று

மயில் குயில் செங்காலன்னம் வண்டு கண்ணாடி பன்றி, அயிலெயிற்றரவு, திங்கள் ஆதவன் ஆழி கொக்கோடு, உயரும்விண் கமலம் பன்மூன்றுருகுண முடையோர் தம்மை, இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே.

மயில் (பொல்லாததை ஒதுக்கும் குணம்; அழகிய தோற்றம்), குயில் (இனிய பேச்சு), சிவந்த கால்களையுடைய அன்னம் (விவேகம்; பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும்  பாலைமட்டும் அருந்தும்)), வண்டு (தேன் போன்ற நல்லதை மட்டும் எடுத்தல்), கண்ணாடி (உள்ளதை உள்ளவாறு காட்டுதல் – உண்மை), பன்றி (உறவுகளோடு கூடி வாழ்தல்), கூர்மையான பற்கள் உள்ள பாம்பு (எதிரிகளுக்கு பயத்தைக் கொடுத்தல்), சந்திரன் (குளிர்ந்த பார்வை – கண்ணோட்டம்), சூரியன் (ஞானம்), கடல் (ஆழ்ந்த அறிவு), கொக்கு (ஒரு முகப்பட்ட மனம்),உயர்ந்த வானம் (பரந்த மனம், அகன்ற சிந்தனை), தாமரை (ஒட்டியும்  ஒட்டாத பற்றற்ற வாழ்க்கை) ஆகிய இப்பதின்மூன்று குணங்களும் ஒருங்கே உடையவரை உலகத்தார் அனைவரும் போற்றும் ஈசன் என்று கருதலாம்.- விவேகசிந்தாமணி

To be continued……………………………………

—subham— 

Tags Peacock, Tamil poets,Kamban, Kalidasa, Bekan,Hebrew, Siki, Mayura, Rig Veda, Tamil, Sanskrit, Literature,Asokan, Inscription

சிவ பக்தி! (Post No.12,999)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,997

Date uploaded in London – — 11 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சிவ பக்தி!

ச.நாகராஜன்

சிவபக்தி என்றால் என்ன?

சிவபக்தி பலவகைப்பட்டதாகும்.

சாலோகம் முதலிய பத முத்திகளை விரும்புவது சிவ பக்தி தான்.

வேதாந்தம் முதலியவற்றைக் கேட்பது,

சிவ ஞானத்தில் ஈடுபாடு,

விபூதி தரிப்பது,

பஞ்சாட்சர ஜபம்,

ருத்திராட்சம் தரித்தல்,

சிவலிங்க பூஜை,

சிவனை தரிசித்தல்,

சிவ பூஜைக்கு வேண்டிய உபகரணங்களைக் கொடுத்தல்,

சிவபூஜையின் அன்பு வைத்தல்,

 ஆகிய இவை எல்லாமே கூட சிவபக்தி தான்.

சிவன் திருவிழாவை தரிசிக்க விரும்புதல்,

திருவிழாவை தரிசிக்க வந்திருப்போருக்கு உணவு, தண்ணீர் தருதல்,

சிவ நாமங்களில் விருப்பமுண்டாதல்,

நந்தவனம் வைத்தல்,

சிவாலயத்துக்குரிய தடாகம் முதலியவற்றை அமைத்தல்,

சிவாலய பணி விடை செய்தல்,

ஜீரணமானவற்றைப் பழுது பார்த்தல்,

கோபுரம், மதில், மண்டபம் முதலியனவற்றைக் கட்டுதல்

ஆகிய இவை அனைத்துமே சிவ பக்தி தான்!

வேத முதலானவற்றை ஓதுதல், ஓதுவித்தல்,

புராணம் முதலியவற்றை எழுதுதல்,

அவற்றைக் காப்பாற்றல்,

சிவபக்தர்களுக்கு அந்த புத்தகங்களை தானமாக வழங்குதல்,

சிவஞானியர்க்கு பக்தி செய்தல்,

அவர்களுக்கு உணவு படைத்தல்,

மடம் கட்டுவித்தல்,

ஆகிய இவை அனைத்தும் சிவ பக்தியே.

சிவமந்திர தியானம் செய்வோருக்குப் பணிவிடை செய்தல்,

சிவதலங்கள் தோறும் சென்று தரிசனம் செய்தல்,

திருநீற்றை தூஷித்தவர்களை தண்டித்தல்,

சிவ அபராதங்கள் செய்தவர், சிவ ஞானியையும் சிவஞானத்தையும் நிந்திப்பவர்கள், சிவாலய திரவியங்களை திருடியவர்கள் ஆகியோரை தண்டித்தல்,

விஷ்ணு முதலான தேவர்களை நிந்திப்பவர்களை தண்டிப்பது ஆகியவையும் சிவ பக்தியே தான்.

ஏழைகளை ஆதரித்தல்,

பயந்தவர்களுக்கு அபயம் அளித்தல்,

இனியவை கூறல்,

எல்லா பிராணிகளிடத்தும் அன்புடன் இருத்தல்,

நன்மையைச் செய்ய விரும்புதல்,

ஒருவர் மேலும் குற்றம் கூறாமல் இருப்பது,

பிறருடைய நல்ல குணங்களையே சொல்வது,

குருமொழியை மீறாது நடப்பது,

குருவிற்கு பணிவிடை செய்வது

ஆகிய இவையும் சிவபக்தியைச் சேர்ந்ததேயாம்.

பக்தியைப் பெறுவதற்கும், பந்தம் நீங்குவதற்கும், முக்தி அடைவதற்கும்  சிவ பக்தியே காரணமாகும்.

பக்தி உள்ளவர்களது இதய பங்கய பீடத்தில் சிவபெருமான் உமாதேவியாரோடு வீற்றிருப்பார்.

இப்படிக் கூறுகிறது ஸ்காந்த புராணத்தில் உள்ள சூத சம்ஹிதையில் உள்ள 25வது அத்தியாயம்.

புராணங்களிலேயே பெரிய புராணமான ஸ்காந்த புராணம் 81000 ஸ்லோகங்களைக் கொண்டது.

“எந்தப் பொருளும் கந்த புராணத்தில்” என்பது தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு தமிழ்ப் பழமொழியாகும்.

***

QUIZ  மயில் பத்து QUIZ (Post No.12,998)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,998

Date uploaded in London – –   10 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Quiz Serial No.110

1.மயில் வளர்க்கும் சாதாரணக் குடிமகனை,  கோபக்கார குடுமிப் பார்ப்பான் சாணக்கியன் அழைத்து , பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். அலெக்சாண்டரை நடுங்க வைத்த அந்த சாம்ராஜ்யத்தின் பெயர் என்ன ?

xxxx

2.மயில் வளர்க்கும் அதே குலத்தில் பிறந்த அசோகன் , எத்தனை மயில்களை தினமும் வெட்ட உத்தரவிட்டான் ?

xxxx

3.மயில் கொடி, மயில் வாகனம் உடைய இந்துக் கடவுள் யார் ?

xxxx

4.மயில் பற்றி குறிப்பிடும் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத நூல் எது ?

xxxx

5.மயில் பறவை மூலம் இந்துக்கள், பாபிலோனியர்களை வியப்படைய வைத்தது எப்படி ?

xxxx

6.மயிலுடன் தொடர்புடைய சங்க கால மன்னன் யார் ?

xxxx

7.மயிலின் பெயர் உடைய இரண்டு மாவட்டங்கள் யாவை ?

xxxx

8. மயிலுக்கு சம்ஸ்க்ருதத்தில் பல சொற்கள் உள்ளன ; அதில் ஒன்று எபிரேய/ Hebrew மொழியில் உள்ளது. அது என்ன?

xxxx

9.மயில் பறவையின் பெயர் உடைய கவிஞர் இயற்றிய புகழ்பெற்ற சம்ஸ்க்ருத சதக நூல் எது?

xxxx

10.மயில் குறித்து கம்பன் சொல்லும் அதிசயச் செய்தி என்ன ?

XXXX

விடைகள்

1.மெளரிய சாம்ராஜ்யம். மயூர என்றால் சம்ஸ்க்ருதத்தில் மயில் என்று பொருள். இது ரிக் வேதத்தில் உள்ளது .மயூர என்ற சொல்லிலிருந்து வந்தது மெளரிய.

xxxx

2.அசோகன், சந்திர குப்தன் ஆகியோர் எல்லாம் மயில் மாமிசப் பிரியர்கள் அசோக மாமன்னன், புத்த மதத்தில் சேருவதற்கு முன்னர் அரண்மனையில் நூற்றுக் கணக்கான மான்களையும் மயில்களையும் வெட்டி கறி சமைத்து உண்டனர் . ஆனால் புத்த மதத்தில் சேர்ந்த பின்னர், அரண்மனையில்  இரண்டே மயில்களை மட்டுமே வெட்டி கறி சமைக்கலாம் என்று உத்தரவிட்டதாக அசோகன் கல்வெட்டு கூறுகிறது .

மகத தேச மக்களுக்கு மயில் மாமிசம் ‘பிடித்த உணவு’ என்று புத்த கோஷரும் குறிப்பிடுகிறார் .

Formerly, in the kitchen of Beloved-of-the-Gods, King Piyadasi, hundreds of thousands of animals were killed every day to make curry. But now with the writing of the Dhamma edict, only three creatures, two peacocks and a deer, are killed, and the deer not always. And in time, not even these creatures will be killed.(Asokan Inscription)

xxxx

3.முருகப்பெருமான் 

xxxx

4.காளிதாசன் இயற்றிய மேகதூத காவியத்தில் (46) மயில் வாகன முருகன் பற்றிப் பாடியுள்ளான் அவனுடைய காலம் சம்ஸ்க்ருத அறிஞர்களின் கூற்றுப்படி கி.மு முதல் நூற்றாண்டு .

xxxx

5.இந்தியாவின் தேசீய பறவை மயில்; அதை வளர்த்து சாப்பிட்ட வம்சம் வட இந்திய மெளரிய வம்சம்.  அவர்களுடைய  முன்னோர்கள் பாபிலோனியா என்னும் மத்தியக் கிழக்கு பிரதேசத்துக்கு மயில் பறவையைக் கொண்டு சென்று அரசவையில் ஆட வைத்தனர். மேகம் கர்ஜித்தால் மயில்களாடும் என்பது இயற்கை விதி. மேளம், மத்தளம் கருவிகள் மூலம் மேகம் உறுமும் சப்தத்தை உண்டாக்கி மயிலை ஆட வைத்தவுடன் பாபிலோனிய மன்னர்கள் அசந்து போனார்கள் . இது பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன.

Xxxx

6.மயிலுக்குப் போர்வை ஈந்த பேகன் ; இவனை கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்று சங்க கால நூல்கள் செப்புகின்றன.

xxxx

7.தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் ; ஒடிஷாவில் மயூர்பஞ்ச் Mayurbhanj district in Odisah (Orissa).

மயிலை/ மயிலாப்பூர் என்பது சென்னையின் ஒரு சிறிய பகுதி; ஆனால் மாவட்டம் அல்ல .

xxxx

8.சிகித்வஜன் என்றால் மயில்கொடியோன் இது முருகனின் ஒரு பெயர்.  சிகி.என்பது ஹீப்ரு மொழியிலும் பிற மொழிகளிலும் ‘தகி’ என்று மாறும் ; இன்றும் கூட சம்ஸ்க்ருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கில மொழியில் Tion = Sion என்பதை நாம்,  Sion ஷன் என்றுதான் உச்சரிக்கிறோம். இதே  விதியைப் பின்பற்றி சிகி என்பது ஹீப்ரு Hebrew மொழியில் துகி Siki=Tuki  என்று ஆகியது ; பன்  மொழி அறிவற்ற அரை வேக்காடுகள் இதை தோகை,  என்று நினைத்துப் பிதற்றிவிட்டன.

xxxx

9.மயூர கவி இயற்றிய சூரிய சதகம் 

xxxx

10.கம்பராமாயண அயோத்தியா காண்டப் பாடலில் மயில் தனது குலமுறையை, மனு நீதி நூல் சொல்வதுபோல செய்கிறது என்கிறான் கம்பன்; அதாவது குலத்தில் மூத்தவனுக்கே அரசன் பட்டம் அல்லது குலத்து தலைமை !!

1470.  ‘வெயில் முறைக் குலக் கதிரவன்

     முதலிய மேலோர்,

உயிர் முதல் பொருள் திறம்பினும்,

     உரை திறம்பாதோர்;

மயில் முறைக் குலத்து உரிமையை,

     மனு முதல் மரபை;

செயிர் உற, புலைச் சிந்தையால்,

     என் சொனாய்? – தீயோய்!

XXXXX

பாடலின் பொருள்

கொடியவளே! சூரியன்; முதலாகிய  உயர்ந்தோர்கள், உயிரே

போவதாயினும்  சத்தியத்தினின்றும்  மாறுபடார்; மயிலினது முறைமையைக் கொண்ட அரசகுலத்து உரிமையை உடைய 

மனுவின் வழித் தோன்றல்களாக உள்ள அயோத்தியின்  அரச பரம்பரையை கீழ்மைப் புத்தியால்  யாது பேசினாய்?’

(தீய எண்ணம் கொண்ட மந்தரை என்னும் கூனியை நோக்கி கைகேயி சொன்ன சொற்கள் இவை.)

XXXXX

பாடலின் விளக்கம்

மயிலின் குஞ்சுகளுள், முதற் பார்ப்புக்கே (குஞ்சுக்கே) , தோகையின் பீலி பொன்னிறம் பெறும். ஏனைய குஞ்சுகளுக்கு அவ்வாறாகாது. அதுபோல் மூத்த மகன்  அரசுரிமை பெறுதலும், ஏனையோர் பெறாதொழிதலும் நடக்கிறது . அவ்வுரிமையை உடைய மரபு ‘மனுமுதல் மரபு’ என்றார். எனவே, மூத்த மகனாகிய இராமன் அரசுரிமை பெறுதலும்,  பரதன்,  இலக்குவன்,  சத்துருக்கனன் முதலியோர் பெறாதொழிதலும் அம்மரபின் வழிப்படியே  என்றாளாம். இனி, கேகயம் என்பது மயிலைக் குறிக்கும்சொல் ‘யான் பிறந்த கேகய குலத்துக்கும் அதுவே விதி , மனு மரபுக்கு  குற்றம் தரக்கூடிய  என்ன வார்த்தை சொன்னாய்?’ என்று கூனியைக் கடிந்தாள் கைகேயி எனலாம்.

XXXX

பிற்காலத்தில் எழுதப்பட்ட தணிகைப் புராணமும் கம்பன் சொன்ன கருத்தையே மொழிகிறது

ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும்,  கலாவம் புனைந்த களிமயில் மூத்தது எனக் கருத” என்ற   பாடல் (தணிகைப்.  களவு. 244) பொருந்துவதாகும்.

xxx SUBHAM xxx

Tags- மயில் தோகை, சிகி ,மெளரிய சாம்ராஜ்யம் அசோகன்  மயூர கவி, மயூரநாதர், மயில் கொடி , வாகனம், பாபிலோனியா , சங்க இலக்கியத்தில் மயில் , கம்ப ராமாயணம் , மயில் குல முறை

பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -2 (Post No.12,997)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,997

Date uploaded in London – — 10 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -2 

ச.நாகராஜன்

 ஃப்ராங்க்ளின் எபெக்ட்

அரசியல் வாழ்வில் அவர் தன் கொள்கைகளை எதிர்க்கும் பலரையும் அன்றாடம் சந்திக்க வேண்டியிருந்தது.

எதிராளிகளைத் தன் பக்கம் ஈர்ப்பதிலும் அவர்கள் தன்னைத் தாக்குவதைக் குறைப்பதிலும் அவர் ஒரு புதுவழியைக் கையாண்டார்.

ஒரு முறை தன்னை வெகுவாக எதிர்த்து வந்த சட்ட மன்ற உறுப்பினரை தானும் தீவிரமாக எதிர்க்காமல் அவரிடம் சென்று அவரது நூலகத்தில் உள்ள ஒரு நூலைப் படிக்கத் தர முடியுமா என்று வேண்டினார். இந்த வேண்டுகோளினால் புளகாங்கிதம் அடைந்த எதிராளி தனது நூலை அவரிடம் படிக்கக் கொடுத்தார். பிராங்க்ளின் அந்தப் புத்தகத்தைப் படித்த பின்னர் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்து ஒரு குறிப்புடன் புத்தகத்தைத் திருப்பித் தந்தார். அன்றிலிருந்து பிராங்க்ளினை ஆக்ரோஷமாக விமரிசிப்பதைக் அவர் குறைக்க ஆரம்பித்தார். இதிலிருந்து அவர் கற்ற பாடம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் போது அவரைப் பற்றிய நல்லபிப்ராயம் அதிகமாவதோடு அவரை விரும்பவும் ஆரம்பிக்கிறார் என்பது தான்.

இந்த உத்தியை அறிவியல் அறிஞர்கள் ‘பிராங்க்ளின் எபெக்ட்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

இது சரிதானா என்பதைக் கண்டுபிடிக்க பின்னால் அறிவியல் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. 1969, 2004, 2012, 2014ஆம் ஆண்டுகளில் நடந்த ஆய்வுகள் இது அதிசயிக்கத்தக்க விதத்தில் பலனைத் தருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

இது மட்டுமல்ல, பிறர் ஒரு விஷயத்தைக் கூறும் போது அதில் அவர் மாறுபட்ட அபிப்ராயத்தைக் கொண்டிருந்தால் அதை நேரடியாக எதிர்த்துப் பேசுவதை கை விட்டார். ‘சந்தேகமின்றி’, நிச்சயமாக’ என்ற வார்த்தைகளைத் தவிர்த்து, ‘நான் நினைப்பது என்னவென்றால்’, ‘எனக்கு இப்போது இப்படித் தோன்றுகிறது’ என்ற வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பித்தார். இது நல்ல பலனைக் கொடுத்தது. விவாதங்களை இதன் மூலமாக நிறுத்திய அவர் அனைவராலும் போற்றப்படும் உயரிய நிலையை அடைந்தார்.

குழந்தைகளிடம் அன்பு

அவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது குழந்தைகள் அவரது கையைப் பிடித்து முத்தமிடுவது வழக்கம். ஒருநாள் வழியிலே அவரைச் சந்தித்த குழந்தை ,”ஐயா! கடவுளை எங்கே காண முடியும்? நீங்கள் தான் பெரிய மேதை ஆயிற்றே! எனக்கு வழியைச் சொல்லுங்கள்” என்று கேட்டது. பிராங்க்ளின் புன்னகை புரிந்தார். ஒளிவெள்ளம் பாய்ச்சும் ஆகாயத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ பிரகாசிக்கிறதே, அந்த சூரியனைக் கொஞ்சம் பாரேன்” என்றார். அந்தக் குழந்தை பார்க்க முயன்றது. ஆனால் உடனே கையால் கண்களை மூடிக் கொண்டு, “சூரிய வெளிச்சத்தை என்னால் தாங்க முடியவில்லை’ என்று கூறியது. பிராங்க்ளின், “என் அருமைச் செல்வமே! இறைவனைக் கண்ணால் பார்க்க முடியாது. சூரியன் எப்படி வெப்பம். ஒளி இவற்றின் மூலமாக இருக்கிறதோ அது போல முடிவற்ற நல்லனவற்றின் தொகுப்பு தான் இறைவன். எல்லையற்ற பேரறிவே இறைவன். நன்றாக ஆராயத் துவங்கு. உனது ஒவ்வொரு நாளும் நல்ல தன்மையால் மெருகு பெறும். அப்போது இறைவனின் சாந்நியத்தை உணர்வதோடு உனது ஆத்மாவே இறைவனின் பிரதிபிம்பம் என்பதை உணர்வாய்” என்றார். 

இப்படி அவர் வாழ்க்கை முழுவதும் சிறியவர் முதல் பெரியவர் வரை அவரிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

விஞ்ஞானி ப்ராங்க்ளின்

இயல்பாகவே புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட ப்ராங்க்ளின் அச்சகத்தில் நிறைய மாற்றங்களைச் செய்தார். உலோகத்தினால் செய்யப்படும் நாணயங்களில் போலி நாணயங்கள் அதிகரிப்பதை எண்ணி, பேப்பரில் நோட்டுகளை அடிக்கும் புதிய வழியை அவர் ஆதரித்தார். இதற்காக புதிய பேப்பரையும் புதிய மையையும் தயாரித்தார். 1729ஆம் ஆண்டு பேப்பர் கரன்ஸியைத் தயாரித்தார்.

ஒரு பட்டத்தை இரும்புத்தடி ஒன்றுடன் பறக்க விட்டு மின்னலில் மின்சாரம் இருப்பதைக் கண்டறிந்தார். மின்சாரத்தில் பாஸிடிவ், நெகடிவ் என்ற வார்த்தைகளை முதலில் அறிமுகப்படுத்தியவர் அவரே.

. ஜனத்தொகை கணக்கெடுப்பை முதலில் ஆரம்பித்தவர் அவரே. அதே போல கடல் சம்பந்தமான பல ஆய்வுகளை ஆரம்பித்தவரும் அவரே.

C, J, Q,W,X, Y ஆகிய ஆறு எழுத்துக்கள் ஆங்கிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறி அதற்கு பதிலாக ஆறு புது எழுத்துக்களை அவர் அறிமுகப்படுத்த விழைந்தார். இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் அதை கை விட்டார்.

மறைவு

நடு வயதிலிருந்தே பிராங்க்ளினுக்கு உடல் பருமன் ஒரு பிரச்சனையாக இருந்தது. கீல் வாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் 1787இல் அமெரிக்க சட்டம் கையெழுத்திடப்படும் போது உடல் நிலைமை மோசமாக ஆகவே வெளியுலகில் வருவதைத் தவிர்த்தார்.

1790, ஏப்ரல் 17ஆம் நாளன்று நுரையீரல் உறை வீக்கத்தால் மரணமடைந்தார். இறக்கும்போது அவரது மகள் சற்று ஒருக்களித்துப் படுக்குமாறு கூறிய போது “இறக்கும் ஒரு மனிதனுக்கு எதுவும் சுலபமில்லை” என்று கூறியவாறே உயிர் துறந்தார். பிலடெல்பியாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது 20000 பேர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

நமக்கென ஒரு வெற்றித் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அதை வகுத்து, கடைப்பிடித்து வெற்றி கண்ட ப்ராங்க்ளின் வெற்றிக்கு ஒரு வழிகாட்டி என்பதில் ஐயமே இல்லை!

              ***                    மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

முற்றும்

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!- 6 (Post No.12,996)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,996

Date uploaded in London – –   9 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 6

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 51  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி

XXXX

குறிப்பு

என்னைப் பொருத்த வரையில்  இதிலுள்ள மொழியில்தான் , மொழிப் பிரயோகத்தில்தான் ஆர்வம் அதிகம் ; அந்தக் காலத்தில் நிலவிய கிராமீய வைத்திய பாஷை இதில் இருக்கிறது . ஏராள மான மருந்துச் சரக்குகள் , மருத்துவ மூலிகைகள் பற்றிய விஷயங்களும் உள. ஆனால் வரிக்கு வரி எழுத்துப் பிழைகள் ; இதைப் படித்தால் தமிழே மறந்து விடும்!!! எதிர்கால மருத்துவ மொழி ஆராய்ச்சியாளருக்கு இந்த நூல் உதவும். 100  ஆண்டுகளுக்கு முந்தைய பத்திரிகைகளில் வந்த மருத்துவ விளம்பரங்களைப் பார்த்தால் இதே மொழி பயன்பட்டதைக் காணலாம்; யுனானி மருத்துவ விளம்பரங்களை ஒரு டாக்டர் படிப்பு மாணவர்க்கு நான் லண்டன் வெல்கம் சென்டரில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன் ; இன்றுள்ள தமிழர்க்கு பல விஷயங்கள் புரியாது என்று அப்போது அவருக்கு சொல்லிக் கொடுத்தேன் .

XXXX

52 .பிள்ளையில்லாதவற்கு

இலவம் சருகையிடித்து எட்டுக்கொரு பாகமாய்க் கஷாயம் வைத்து  ஒரு வேளைக்கு இரண்டு பலம் கியாழத்திற்குக்குறையாமல் குடித்து வந்தால் பித்தம் பயித்தியம் இவைகளை போக்கிவிடும். கெற்பக்குழியை சுத்தம் செய்து கருத்தரிக்கச் செய்யும்.

XXXX

53 .அதிசார பேதிக்கு

இலவம் இலையை யிடித்து சாறு பிழிந்து அதிகாலையில் சாப்பிட்டுவந்தால் அநேக மருந்துகளால் தீராத அதிசாரபேதியை நிவர்த்தியாக்கும் .

XXXX

54 . இஞ்சி சர்பத்து

இஞ்சியை மேல் பரணி சீவிவிட்டு துண்டு துண்டாய் அறுத்து ஆரே க …..ல் ரூபா இடைநிறுத்து பொங்கப்பொங்க கொதி வரும்படி காச்சி இறக்கி அரைக்கால்படி ஜலத்தில் மேற்படி இஞ்சிகளைப் போட்டு நாலு மணி நேரம் ஊரவைத்து வடிகட்டி அந்த ஜலத்தையடுப்பிலேற்றி 75  ரூபாயிடை வெள்ளை சக்கரை போட்டு கலக்கி பாகுபதத்தில் எடுத்து சீசாவில் வைத்துக்கொண்டு வேளைக்கு அரை ரூபாயிடை சாப்பிட்டு வரவும்; பித்த சாந்தி, மனோ தைரியம் உண்டாகும் .

XXXX

55 . ஈளை இருமலுக்கு

இஞ்சிச் சாறும், மாதுளம் பூச்சாறும் தேனும் சமனாய்க் கலந்து ஒருவேளைக்கு  அரைக்கால் படி வீதம் சாப்பிட்டுவர மேற்படியிருமல் சாந்தியாகும்.

XXXXX

56. இண்டந்தண்டை ஊதின தண்ணீர் அரைக்கால்படி திப்பிலிப் பொகடி திருகடி பொரித்த வெங்காரப்பொடி மூன்று களஞ்சி இதுகளை ஒன்றாய்க்கூட்டி கொடுக்கவும்; ஈளை இருமல் சாந்தியாகும்.

XXXX

57 .இந்துப்பும் கற்கண்டும் பொடித்து திருகடிப் பிரமாணம் ஒருவேளைக்கு கொடுத்து கொஞ்சம் வெந்நீர் கொடுக்கவும். இப்படி 5-6-10  வேளை வரையில் கொடுக்கவும்; (இருமல்) சந்தியாகும்

XXXX

58 . பித்த சாந்தி

இஞ்சி- திரிகடுகு- ஏலம்- அதிமதுரம்- சீரகம்- சந்தனத்தூள்  வகைக்கு வராகநிடை 1 எடுத்து சிதைத்து ஒரு படி தண்ணியில் போட்டு அரைக்கால் படியாகக் கஷாயமிட்டு இறக்கி கொஞ்சம் சீனி கலந்து கொடுக்கவும். இப்படி5-6 வேளையில் கொடுக்க பித்த சிலுமிஷம் சாந்தியாகும்.

XXXX

59 . பித்தஎரிவுக்கு

இஞ்சிச் சாறும் கழுதைப்பாலும் ஒரேயளவாய்க்கலந்து வேளை ஒன்றுக்கு அரிக்கால்படி வீதம் உள்ளுக்குக் கொடுத்து ஆதளை யிலையும் முத்தெருக்க ..செவியும் ஓர் நிறையெடுத்து ஒரு வருஷத்துக் காடிவிட்டு மைபோலயிடித்து உச்சி முதல் பாதம் வரை யில் பூசிவைத்து மாலையில் நீராடிவரவும். இப்படி பத்து நாள் செய்ய அசாத்தியமான உடம்பெரிவு தீரும் .

XXXX

60 .எரிவாதத்திற்கு

இலந்தன் இலையை அறைத்து காடியில் கரைத்து மத்தால் கடைந்து அதில் வருகிற நுரையை உடம்பில் பூச எரிச்சல் மாறிவிடும்.

XXXX

தொடரும் ……………………………..

மூலிகை,  மர்மம் , அதிசயம் , பகுதி 6 

பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -1 (Post.12,995)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,995

Date uploaded in London – — 9 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -1

ச.நாகராஜன்

 நூறு டாலர் நோட்டு

அமெரிக்க நூறு டாலர் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் பிரதானமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் படத்தில் இருப்பவர் யார் என்று தெரியுமா? அவர் தான் அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின். அவரை கௌரவிக்கும் விதமாகவே அமெரிக்கா தனது நூறு டாலர் நோட்டில் அவர் படத்தைச் சித்தரித்துப் பெருமைப்படுகிறது; அவரைப் பெருமைப்படுத்துகிறது!

பன்முகப் பரிமாணம் கொண்ட அவரது வாழ்க்கை பிரமிக்க வைக்கும் ஒன்று. அவரது சுயசரிதை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.

பிறப்பும் இளமையும்

மிக சாதாரணமான எளிய குடும்பத்தில் 1706ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி  அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் பிறந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

அவரது தந்தை ஜோசையா பிராங்க்ளின் சோப், மெழுகுவர்த்தி தயாரிப்பவர். அவருக்கு இரு மனைவிகள் மூலம் 17 குழந்தைகள் உண்டு. பத்தாவதாகப் பிறந்தவர் பிராங்க்ளின்.

ஏழ்மையான குடும்பம். ஆகவே அவரை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. ஒராண்டு மட்டுமே அவரால் பள்ளிக்குப் போக முடிந்தது.

ஆனால் இயல்பாகவே எதையும் கூர்ந்து கவனிக்கும் அவர் ஏழாவது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி நான்கு மொழிகளைக் கற்றார். பதினேழாம் வயதில் பிலடெல்பியாவிற்குச் சென்றார்.

இளம் வயதில் செய்தித்தாள்களை விற்க ஆரம்பித்த அவர் தானாகவே ஒரு செய்தித்தாளை ஆரம்பித்து சிறப்பாக நடத்த ஆரம்பித்தார். ஒரு பிரிண்டிங் பிரஸை நிறுவிய அவர் அதில் ஏராளமான சோதனைகளைச் செய்து பார்க்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாக இன்று என்ன செய்யலாம் என்று யோசிப்பது அவரது வழக்கமாக ஆனது.

இதனால் தான் அவர் 23 வயதிலேயே ஒரு அச்சக முதலாளியாகவும், பத்திரிகை வெளியீட்டாளராகவும் எழுத்தாளராகவும் ஆக முடிந்தது. பின்னால் அரசியல் ஈடுபாடு காரணமாக ஒரு ராஜ தந்திரி ஆனார். விஞ்ஞானி ஆனார். பிலடெல்பியா போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக 1737 முதல் 1753 வரை பதவி வகித்தார்.

அரசியல் வாழ்வு

சமுதாய அக்கறை கொண்டு அதை மேம்படுத்தும் எல்லா விஷயங்களிலும் அவர் ஈடுபட ஆரம்பித்தார். பிரான்ஸுக்கான முதல் யு.எஸ். தூதுவராக அவர் நியமிக்கப்பட்டார். 1785 முதல் 1788 முடிய அவர் பென்சில்வேனியா தலைவராக ஆனார்.இங்கிலாந்துடன் நல்ல உறவை மேற்கொண்ட அவரது புகழ் பரவியது. முதலில் தனது பத்திரிகையில் ‘அடிமைகள் விற்பனைக்கு’ என்று விளம்பரத்தை பிரசுரித்து வந்த அவர், பின்னர் அது தவறு என்று உணர்ந்து மனம் மாறி அடிமைத்தனத்தை ஒழிக்க வெகுவாகப் பாடுபடலானார். அப்போது அமெரிக்க புரட்சி தோன்றவே அதில் தீவிரமாக ஈடுபட்டார். அமெரிக்க காலனிகள் 13ஐயும் ஒன்றிணைக்க முனைந்து உழைத்தார்.

அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களுள் ஒருவர்

அமெரிக்காவை நிறுவிய நிறுவனர்களுள் (Founding Fathers) ஒருவராக பெஞ்சமின் பிராங்க்ளின் அறியப்படுகிறார்.

அமெரிக்க புரட்சியை நடத்தி 13 காலனிகளை ஒருங்கிணைத்து யுனைடட் ஸ்டேட்ஸின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டு அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் இவர்களே.

13 அம்சத் திட்டம்

தனக்குத் தானே அவர் ஒரு திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். வெற்றி பெற வாழ்நாளில் தான் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய 13 அம்சங்களை ஒரு தாளில் அவர் குறித்து வைத்துக் கொண்டார்.

அது என்ன 13 அம்சம்?

1.நடுநிலைமையுடன் அணுகல் 2. மௌனம் 3. ஒழுங்கு 4. உறுதி எடுத்தல் 5. சிக்கனம் 6. உழைப்பு 7. நேர்மை 8. நியாயம் 9. சுத்தம் 10.மிதமான போக்கு 11.அமைதி 12. தூய்மை 13. எளிமை

இந்த 13 அம்சங்களையும் ஒரு தாளில் குறித்து வைத்துக் கொண்டு எதிரே வார நாட்களைக் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு அம்சத்தை மட்டும் மிகுந்த கவனத்துடன் மனமூன்றி அவர் கடைப்பிடிப்பார்.  அதை நாள்தோறும் அவர் சரி பார்ப்பார். அதைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் ஏராளமான X குறிகளை இடுவார். இப்படி தினமும் இவற்றைச் சரிபார்க்கப் பார்க்க நாளடைவில் அவரது தாளில் X குறிகளே குறைந்தது. இப்படி வருடத்தில் உள்ள 52 வாரங்களில் நான்கு முறை இந்த 13 அம்ச திட்டத்தை அவர் கடைப்பிடித்தார். இதன் பலன் அபாரமாக இருந்தது. அதை அவரது வாழ்க்கையின் வெற்றி காண்பித்தது;

நேர்மை, நியாயம் என்பதில்  தான் செய்த தவறுகளை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். முறை தவறி தனக்கு ஒரு மகன் பிறந்ததை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.  வில்லியம் என்ற அந்த மகனைத் தானே வளர்த்தார்.

இந்த 13 அம்சத் திட்டம் அனைவருக்குமானது. உலகின் ஆகப் பெரும் விற்பனையாளராகத் (Salesman) திகழ்ந்த பிராங்க் பெட்கர், பிராங்கிளினின் திட்டத்தினால் உத்வேகம் பெற்றார். தனது விற்பனைத்துறையில் தனக்கேற்றவாறு 13 குணாதிசயங்களை அவர் குறித்து வைத்துக் கொண்டு முன்னேறலானார்.

அவர் கொண்ட 13 அம்சத் திட்டம் 1. உற்சாகம் 2. ஒழுங்கு 3. மற்றவர் பார்வையில் எதையும் பார்த்தல் 4. கேள்விகளைக் கேட்டல் 5. மற்றவரின் முக்கிய தேவையை உணர்தல் 6. மௌனம் (எதிரில் இருப்பவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டல்) 7.நேர்மை 8.தனது வேலை பற்றிய அறிவு 9. மற்றவரைப் பாராட்டுதல், புகழ்தல் 10. புன்சிரிப்புடன் பழகுதல் 11. பெயர்களையும் முகங்களையும் நினைவிலிருத்தல் 12. வாடிக்கையாளர் சேவை 13. விற்பனையைத் திறம்பட முடித்தல்

தனக்கென ஏற்படுத்திக் கொண்ட இந்த கொள்கை திட்டத்தை அவர் கடைப்பிடித்ததால் உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக ஆனார்.

ஆகவே முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு 13 அம்சத் திட்டத்தை உருவாக்கி அதைத் தினமும் ஊன்றிக் கவனித்துக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம். இப்படி வெற்றிக்கு ஒரு புதுமுறை வழிகாட்டியாக ஆனார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

அவர் செஸ் விளையாட்டில் நிபுணர். நீச்சல் வீரர். வாழ்நாள் முழுவதும் சைவ உணவையே மேற்கொண்டார்.

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் என்று வள்ளுவரின் கோட்பாட்டை கடைப்பிடித்தவர் அவர்..

** தொடரும்