பதஞ்சலி முனிவர் கண்ட கழுகு அதிசயம் (Post No.13,063)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,063

Date uploaded in London – –   4 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

பதஞ்சலி முனிவர் பற்றிய ஒரு ஸ்லோகம் சொல்கிறது :

யோகேன சித்தஸ்ய பதேன வாசாம் மலம் சரீரஸ்ய  வைத்யகேன

யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம் பதஞ்சலீம் ப்ராஞ்ஜலிரானதோஷ்மி

“योगेन चित्तस्य पदेन वाचां मलं शरीरस्य च वैद्यकेन ।

योपाकरोत्तं प्रवरं मुनीनां पतञ्जलिं प्राञ्जलिरानतोस्मि॥“

முனிவர்களில் முன்னணியிலுள்ள பதஞ்சலியை நான் இரு கைகூப்பி வணங்குகிறேன்.

யோகத்தின் மூலம் அவர் மன அழுக்கை நீக்கினார்; சொற்களின் மூலம் இலக்கண அழுக்கை நீக்கினார் ; உடல் அழுவுக்கிணை மருந்துகள் மூலம் அகற்றினார்

xxxx

மேலை நாடுகளில் இயற்கை என்று சொன்னால் புகழ்பெற்ற டாபோடில்ஸ் மலர் கவிதை எழுதிய வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் (Daffodils by William Wordsworth) ஒருவர் பெயரை மட்டுமே சொல்லுவார்கள் .ஆனால் இந்துக்களை எடுத்துக்கொண்டால் நூற்றுக் கணக்கான ரிஷி முனிவர்களையும் புலவர்களையும் சொல்ல முடியும் . இந்த இயற்கை தரும் பாடங்களை உபநிஷத் காலத்திலேயே காண முடிகிறது . “ஏ மாணவனே! அதோ அந்த ஆலம் பழத்ததைக் கொண்டு வா ; அதைப் பிரி;   எத்தனை சிறிய விதைகள்; அதிலுள்ள ஒரு சிறிய விதையிலிருந்து எவ்வளவு பிரம்மாணடமான ஆல மரம் உருவானது எப்படி என்று சொல்லி பெரிய தத்துவக் கருத்துக்களை உதிர்த்துள்ளனர் . காகத்திலிருந்து ஆறு குணங்களைக் கற்றுக்கொள் என்று ஸம்ஸ்க்ருதப் பாடல் சொல்கிறது ; கொக்கு, ஆமை முதலியவற்றிலிருந்து என்ன கற்கலாம் என்று வள்ளுவனும் மனுவும் பாடுகின்றனர் ; அவர்களுங்கு எல்லாம் முன்னதாக பாகவதத்தில் தத்தாத்ரேயர் 20, 30 இயற்கைப் பொருட்களைக் குறிப்பிட்டு என்ன என்ன கற்றுக்கொண்டேன் என்று சொல்லுவதைக் காண்கிறோம்  ; ரிக் வேதத்தில் நூற்றுக்கணக்கான பறவைகளையம் மிருகங்களையும் தாவரங்களையும் ரிஷி முனிவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் .

xxxx

ஒரு பல்கலைக் கழகத்துக்கு கேள்வித்தாள் தயாரித்துக் கொண்டு இருந்தோம் ; ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வித்தாள் தயாரிக்கும் பணி . எங்கள் ஒருவர் கழுகு பற்றிய ஒரு கட்டுரை எழுதிக்கொண்டு வந்திருந்தார் ; அதைப் படித்தபோது எனக்கு தூக்கிவாறிப் போட்டது . கழுகுகள் தனது குன்சுகளுக்கு எப்படி பறக்கக் கற்றுக்கொடுக்கிறது என்பதை அவர் விவரித்து இருந்தார். குஞ்சுகள் பறக்கும் நிலை வந்தவுடன் கூட்டை விட்டுப் போகாமல் , தத்தித் தத்தி தாவிக்கொண்டு இருக்கும் ; பெண் கழுகு என்ன செய்யும் என்றால் திடீரென்று அவைகளைக் கூட்டிலிருந்தோ அல்லது பாறை உச்சியிலிருந்தோ தள்ளி விடும் ; உடனே அவை பறக்கத் துவங்கிவிடும் ; இதை பதஞ்சலி முனிவர் 2200  ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லியிருக்கிறார் !! என்ன வியப்பு! என்ன அதிசயம்!.

இதை கேள்வித்தாளில் படிக்கும் வரை நான் அறியேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலி மஹாபாஷ்ய உரையைப் படிக்கையில் அவர் ஒரு இலக்கண விளக்கத்துக்கு பெண் கழுகு போல அவன் நடந்து கொள்கிறான் என்ற எடுத்துக் காட்டாகக் கூறியிருந்தார் ; இது என்ன பெண் கழுகு போல என்று தெரியாமல் மார்ஜினில் கேள்விக்குறி போட்டு வைத்திருந்தேன் ;பல்கலைக் கலக்கி மீட்டிங் முடிந்தவுடன் ஒடி வந்து மஹாபாஷ்ய உரையில் கேள்விக்குறி போட்ட இடத்தைப் படித்து மகிழ்ந்தேன்.

Even Eagles Need a Push Sometimes!

Even Eagles Need A Push! (Book by David McNally)

என்று ஆங்கிலத்தில் சொல்லுவதற்கும் இதுவே காரணம்.

காளிதாசன் காவியங்கள், ரிக் வேதம் போன்ற நூல்களுக்கு யாரும் குறிப்பிட்ட காலத்தைச் சொல்ல முடியவில்லை ; ஆயிரம் ஆண்டுகள் முதல் சில ஆயிரம் ஆண்டுகள் வரை வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு காலத்தைச் சொல்லுவார்கள். ஆனால்  பதஞ்சலிக்கு குறிப்பாக 2200  ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர் ;

பாணினி எழுதிய சம்ஸ்க்ருத இலக்கணம் ஒரு உலக அதிசயம் என்பதை பாரதியார் முதல் வெள்ளைக்கரன் வரை எல்லோரும் பாராட்டுகின்றனர் ; அந்த பாணினியின் அஷ்டாத்யாயீ நூலுக்கு மஹா பாஷ்யம் — பேருரை — எழுதியவர் பதஞ்சலி ; அதுமட்டுமல்ல யோக சூத்திரத்தையம் ஆயுர்வேதத்தையும் விளக்கி இரு நூல்களையும் எழுதியுள்ளார். ஆயுர்வேத நூல் நமக்கு கிடைக்கவில்லை !

கழுகுகள் குஞ்சுகளைத் தள்ளி விடுமா? விடாதா? என்று கூகுள் செய்து பார்த்தால் எதிரும் புதிருமாக உளறிக்கொட்டி இருப்பதைக் காணலாம் . உண்மை என்ன வென்றால் சில வகைக் கழுகுகள் மட்டுமே இந்த முறையில் குஞ்சுகளை வளர்க்கின்றன ; இதனால் ஆங்கிலத்திலும் கூட ஒரு பழமொழி உண்டு ; கழுகுகளையும் தள்ளிவிட்டாக வேண்டும்  வாழ்க்கையில் முன்னேற புஷ் PUSH ( உந்திவிடுதல்) வேண்டும் என்ற பொருளுடைத்து இது  .

xxxx

REFERENCES

பாணினி சூத்திரம் 6-3-36

பதஞ்சலி விளக்கம் மான் போன்று நடந்து கொள்கிறான் பெண் கழுகு போல நடந்து கொள்கிற

6-3-71

சூத்திரத்துக்கு விளக்கம் எழுதிய பதஞ்சலி, கழுகு கொண்டு வேட்டையாடுதல் என்ற உவமையை எடுத்துக் காட்டுகிறார் . இன்று அரபு நாடுகளில் இதை  தினமும் செய்வதைப் படத்தில் காண்கிறோம் சின்ன மீனைப் போட்டால்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம் , யானையை யானையால் யாத்தல் போன்ற உவமைகளை இது நமக்கு நிநைவுக்குக் கொண்டு வரும்;  இவைகளை 2200 ஆண்டுகளுக்கு முன்னரே பதஞ்சலி முனிவர் போகிற போக்கில் இலக்கணப் புஸ்தகத்தில் சொல்லி இருக்கிறார்.

எனது நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் ; நீச்சல் கற்றுத் தருகிறேன் என்று சொல்லி கிராமத்துக்கு வெளியே உள்ள கிணற்றுக்குள் கொட்டிச் செல்வார்களாம் ; இரண்டு மூன்று நீச்சல் வீர்கள் உள்ளே குதித்தபின்னரும் புதிதாக வந்த பையன் தயங்கிக்கொண்டே இருப்பானாம். திடீரென்று அவன் பின்னே சிலர் சென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டவுடன் அவர் தண்ணீரில் திணறும்போது முன்னர் குதித்த நீச்சல் வீரர்கள் அவருக்கு இப்படிச் அப்படிச் செய் என்று பிராக்டிகல் லெஸ்ஸன் கொடுப்பார்க்களாம். இதனால் அவன்  உடனே கற்றுக்கொண்டு விடுவான் ; கழுகுகள் செய்யும் பணியும் அத்தகையதே !

கழுகுகளில்  பருந்து, கருடன், வல்லூறு என்று பல வகைகள் உண்டு ;இலக்கியத்தில் வரும் கழுகுகளை அடுத்த பகுதியில் காண்போம்.

—subham—

Tags—பதஞ்சலி, கழுகு, பாணினி சூத்திரம், கழுகு அதிசயம், eagle push

Leave a comment

Leave a comment