Post No. 13.061
Date uploaded in London – — 4 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராம நாம மஹிமை பற்றிய சிறப்புக் கட்டுரைத் தொடரில் இது எட்டாவது கட்டுரை! வால்மீகி ராமாயணத்தில் வரும் அருமையான கருத்துக்களின் தொகுப்பும் கூட இது!
ராம நாம மஹிமை – 8
ச.நாகராஜன்
க்ருதாந்தஸ்ய கதி: புத்ர துர்விபாக்யா சதா புவி!
அயோத்யா காண்டம் 23 – 16
தெய்வத்தின் செயல் உலகில் என்றென்றைக்கும் அறிய முடியாது, குழந்தாய்!
**
இத்யேதைர்விவிதைஸ்தைரன்யபார்திவதுர்லபை: \
சிஷ்டைரமரிமேயைஸ்ச லோகே லோகோத்தரைர்குணைள: ||
தம் சமீக்ஷ்ய மஹாராஜோ யுக்தம் சமுதிதை: சுபை|
நிச்சித்ய சசிவை: சார்த யுவராஜமமன்யத||
அயோத்யா காண்டம் 1 – 41,42
சக்கரவர்த்தியார் இன்னுமிப்படியும் அவனை அந்த பல நல்ல குணங்களோடும் உலகில் வேறு எந்த மன்னனிடம் இல்லாதவைகளும் எங்கும் எவனிடத்தும் இல்லாதவைகளும் ஸர்வோத்கிருஷ்டமானவைகளும், அபூர்வ பிறப்பில் ஸ்வபாவ சித்தமாய் இருக்கின்றவைகளும், , அளவு கடந்தவைகளுமான அந்த சிறந்த குணங்களோடும் விளங்குகின்றவனாய் தன் மனதிற்குள் கவனித்து, மந்திரிமார்களோடு கலந்து பேசி அவர்கள் அபிப்ராயத்தை அறிந்து கொண்டு (ராமரை) இளவரசராய் நியமிக்க வேண்டும் என்று தனக்குள்ளேயே நிச்சயம் செய்து கொண்டார்.
**
சமர்தான் சம்ப்ரக்ருஹந்தி ஜனானபி பராநபி நராதிபா |
அயோத்யா காண்டம் 26 – 36
அரசர்கள் நலம் செய்யும் புத்திசாலிகளான,, ஒருவிதமான உறவுமில்லாத வேற்று மனிதர்களையும் கூட சேர்த்துக் கொள்கிறார்கள்.
**
பர்து பாக்யந்து நார்யேகா ப்ராப்நோதி புருஷர்ஷப |
அயோத்யா காண்டம் 27 – 5
புருஷோத்தம! மனைவி ஒருத்தி தான் கணவரின் வினைப்பயனை பகுத்துக் கொண்டு அனுபவிக்கிறாள்.
**
இஹ ப்ரேத்ய ச நாரீணாம் பதிரேகோ கதி: சதா |
பால காண்டம் 27-6
கணவரின் வினைப்பயனில் மனைவி மட்டுமே எப்போதும் பங்கெடுக்கிறாள்.
**
சர்வாவஸ்தாகதா பர்து: பாதச்சாயா விஷிஷ்யதே |
பால காண்டம் 27-8
எல்லா நிலைகளிலும் கணவனே மனைவியின் ஒரே புகலிடம்.
**
பதிஹீனா து யா நாரீ ந சா ந ஸா ஷஸ்யதி ஜீவிதும்
அயோத்யா காண்டம் 29 – 7
ஏதேனும் ஒரு குலமகள் கணவனை விட்டுப் பிரிந்து விட்டவளாய் ஆகின்றாள் எனில் அவள் உயிருடன் பிழைத்திருக்க உரியவள் ஆகாள் (என்று இப்படி தேவரீரால் எனக்கு உபதேசிக்கப்பட்டருக்கிறது)
**
ந ஹி க்ஷுப்யதி துர்கர்ஷ: சமுத்ர: சரிதாம் பதி:
அயோத்யா காண்டம் 34 – 46
நதிகளுக்கு பதியாகிய ஆழ்கடல் கலக்கமுறுவதில்லை. கலங்கச் செய்ய முடியாததன்றோ அது!
**
பிதா ஹி தைவதம் தாத தேவதானாமபி ஸ்ம்ருதம் |
அயோத்யா காண்டம் 34 – 52
தந்தையே! தந்தை தான் தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமென்று சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது.
**
பர்துரிச்சா ஹி நாரீணாம் புத்ரகோட்யா விசிஷ்யதே |
அயோத்யா காண்டம் 35 – 8
பெண்களுக்கு கணவனின் மனம் கோணாது நடத்தல் புத்திரப் பேறின் பெருமையை விட மேலானது.
***