Post No. 13.064
Date uploaded in London – — 5 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ககன் ஜன் ஜனா ரஹா, , அறம் காத்த தேவியே!, இடி மின்னல் சீறுதே
ச. நாகராஜன்
ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்கள்!
அது ஒரு பொற்காலம்!
ஹிந்தி திரைப்படங்களில் மலர்ந்த அருமையான மெட்டுக்களில் உருவான பாடல்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தன. அவற்றை தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குநர்கள் நிர்பந்தத்தாலோ அல்லது இசை அமைப்பாளர்கள் தாம் பெற்ற உத்வேகத்தாலோ அதே மெட்டில் பாட்டை அமைப்பது வழக்கம்.
பாடலாசிரியர்கள் மெட்டுக்குத் தக்கபடி பாடலை உருவாக்கி விடுவார்கள்.
இப்படி ஆங்கிலத்திலிருந்து ஹிந்தி, ஹிந்தியிலிருந்து தமிழ், அல்லது தமிழிலிருந்து ஹிந்தி என மெட்டுக்கள் தாவி உருவான பாடல்கள் சுமார் ஆயிரம் இருக்கும்.
இதை அந்தக் காலத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். இன்றைய யூ டியூப் காலத்திலோ மிக மிக சுலபம்.
இந்த வகையில் ஒவ்வொரு மெட்டாகப் பார்த்து காப்பி அடிக்கப்பட்ட அல்லது இன்ஸ்பிரேஷனால் அல்லது யாரோ ஒருவரின் நிர்பந்தத்தினால் மலர்ந்த பாடல்களை தேர்ந்த ரசிகர்கள் பலர் இனம் கண்டு அவற்றைப் பற்றி விமரிசனங்களை எழுதுகின்றனர்.
எடுத்துக்காட்டிற்கு ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்களைப் பார்ப்போமா!
நாஸ்திக் – ககன் ஜன் ஜனா ரஹா
1954இல் ஹிந்தியில் வந்த ஒரு படம் நாஸ்திக் (NASTIK)
ஹிந்தி திரைப்பட உலகில் பிரபலமான ஐ.எஸ் ஜோஹர் அவர்களால் கதை வசனம், எழுதி இயக்கப்பட்ட படம் இது.
1954-ம் ஆண்டு வெளியான படம் இது.
இதில் நடித்தவர்கள் நளினி ஜவந்த், அஜித், உல்ஹாஸ், ராஹ் மெஹ்ரா ஆகியோர்.
இந்தப் படைத்தின் இசை அமைப்பாளர் பிரபலமான சி. ராமச்சந்திரா ஆவார். இதில் லதா மங்கேஷ்கரும் ஹேமந்த் குமாரும் பாடிய ஒரு பாட்டு தான் ககன் ஜன் ஜனா ரஹா.
கதாநாயகி இடிமின்னல் காற்றுடன் கூடிய புயலில் ஒரு தோணியில் செல்லும் போது சிக்கித் தவிக்க அவர் இறைவனை நோக்கித் துதித்து
அபயம் வேண்டுகிறாள்.
அதற்காக இந்தப் பாட்டை எழுதியவர் கவி ப்ரதீப். ஆன்மீகப் பாடல்களில் தனி ஒரு முத்திரையை ஹிந்தி உலகில் பதித்தவர் இவர்.
பாடல் இது தான்:
गगन झनझना रहा
ओ ओ ओ ओ
पावैं सनसना रहा
ओ ओ ओ ओ
गगन झनझना रहा
पावैं सनसना रहा
लहर लहर पे आज है तूफ़ान
हो नैया वाले हो सावधान
गगन झनझना रहा
पावैं सनसना रहा
लहर लहर पे आज है तूफ़ान
हो नैया वाले
हो सावधान सावधान (ओ ओ ओ)
हे ब्रह्मा हे विष्णु
हे शंकर सर्व शक्तिमान
हे ब्रह्मा हे विष्णु
हे शंकर सर्व शक्तिमान
रक्षा करो रक्षा
करो हे दया निधान
मेरे पत् राखो भगवन
मेरे पत् राखो भगवन (ओ ओ आ आ)
ओ ओ ओ आ आ आ आ
हिम्मत न हार प्रभु को पुकार
हिम्मत न हार प्रभु को पुकार
वह ही तेरी नैया लगाएगा पार
वह ही तेरी नैया लगाएगा पार
तनिक भी तिलमिलाना न
ज़रा भी दिल हिलाना न
हज़ार हाथ वाला
है भगवन हो नैया वाले हो
सावधान सावधान (ओ ओ आ आ)
हे गोविन्दा हे मुकुन्दा
संकट में आज मेरे प्राण
हे गोविन्दा हे मुकुन्दा
संकट में आज मेरा प्राण
रक्षा करो रक्षा
करो हे दया निधान
मेरे पत् राखो भगवन
मेरे पत् राखो भगवन
हे भगवन हे भगवन (ओ ओ ओ)
हे भगवन हे भगवन (ओ ओ ओ)
हे भगवन हे भगवन (ओ ओ ओ)
हे भगवन हे भगवन (ओ ओ ओ)
ஹே பகவான், ஹே பகவான் என்றும் ஹே கோவிந்தா, ஹே முகுந்தா, சங்கடமான சமயத்தில் என் உயிரைக் காப்பாற்று என்றும் பாடும் இந்தப் பாடல் பிரபலமானது.
ஹே, பிரம்மா, ஹே விஷ்ணு, ஹே, சங்கர் சர்வ சக்திமான் ரக்ஷா கரோ, ரக்ஷா கரோ தயா நிதான் என்று பாடுகின்ற போது மனம் உருகி விடாதா என்ன?
மஹேஸ்வரி – அறம் காத்த தேவியே!
1955-ம் ஆண்டு வெளி வந்த மஹேஸ்வரி என்ற திரைப்படத்திலும் இதே மெட்டுடன் ஒரு பாடல் வந்தது.
பாடலை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பாடல் இது தான்:
ஆண் : அறம் காத்த தேவியே!
குலம் காத்த தேவியே!
அறிவின் உருவமான ஜொதியே
கண் பார்த்தருள்வாயே!
அன்னையே!அன்னையே! (அறம்)
பெண் : ஹே மாதா! என் தாயே!
உன் பாதம் நம்பினேன் அம்மா!
சத்தியமே லட்சியமாய்ச்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா!
ஆண் : துன்பம் இல்லாமல் எல்லோரும் மனம்
ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம்
நம் மனதில் உறுதியாகவே
மலிந்த கொடுமை நீங்கவே- இம்
மனித வாழ்வில் உயர்வு காணவே
நீ வாழ்த்திடுவாயே தேவியே! தேவியே!
பெண் : ஹே! பவானி லோகமாதா!
ஏழைகளின் வாழ்வில் சுகம்தா
சத்தியமே லட்சியமாய்ச்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா!
பாடல் மிகவும் பிரபலமானது. இந்தக் காட்சியில் நடித்துப் புகழ் பெற்றார் நடிகையர் திலகம் சாவித்திரி. இசை அமைத்தவர் ஜி.ராமநாதன் .ஜிக்கியும் ஏ.எம். ராஜாவும் பாடலைப் பாடியுள்ளனர்.
சத்தியமே லட்சியமாய்ச் சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா! என்ற வார்த்தைகள் அனைவரது மனத்தையும் கவர்ந்தது.
மடாதிபதி மகள் – இடி மின்னல் சீறுதே
இதே பாடலின் மெட்டை 1962-ம் ஆண்டு வெளிவந்த மடாதிபதி மகள் என்ற படத்தில் வந்த இடி மின்னல் சீறுதே என்ற பாடலிலும் கேட்கலாம்.
கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் (பிறப்பு 13-5-1920 மறைவு 4-11-1994) இயற்றிய பாடல் இது.
இடி மின்னல் சீறுதே
விண்ணில் மீறுதே
நிதானமுடன் போ தோணியில்
என்று தோணியில் போகும் போது உள்ள பாடலை இயற்றிய அவர் நிதானமுடன் போ புயல்
நிதானமுடன் போ
என்று கூறி விட்டு ஹே கண்ணா கார் வண்ணா நீ சர்வ சக்திமான் காத்தருள்வாய் காத்தள்வாய் என்று இறைவனைத் துதிக்கிறார்.
திருச்சி லோகநாதனும் லக்ஷ்மி சங்கரும் பாடலைப் பாடியுள்ளனர்.
இந்தப் பாடல்களை யூ டியூபில் உடனே கேட்கலாம்.
***