Date uploaded in London – – 5 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 130 வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………
PART 14
xxxxx
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—14
XXXXX
ஏ
131.செம்மேகத்திற்கு
ஏரழிஞல் சமூலமும் கார்போக அரிசி சித்திரை மூலம் சிறுதகரை சமூல ….. ரம் வித்து இவைகளை கிரமப்படி குழித்தயிலமிறக்கி பூச நிவர்த்தியாகும்.
XXXX
132.காணாமேகத்திற்கு
ஏரழிஞல்/ ஏரழிஞ்சில் சமூலம் கொண்டுவந்து நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திர …. செய்து சக்கரை சமன் கூட்டி அந்திசந்தி திருகடி பிரமாணம் தின்று மிள…. யம் சாப்பிட்டு வரவும். . உடம்பிலுள்ள மேகம் முதலிய காணா வியாதிகள் போகும்; பத்தியமில்லை.
XXXX
133.சொறிசிரங்குக்கு
….லம் கார்கோலரிசி கெந்தகம் கற்பூரம் பிராயன் பட்டை வகைக்கு வராகன் எடுத்து பொடியாயிடித்து அரைக்கால்படி நல்லெண்ணெயில் போட்டுக் காலையில் உடம்பில் தேய்த்து , மாலையில் சீயக்காயரப்பு தேய்த்து உடம்புகு…. … தீரும் .
XXXX
134.பருவுகளுக்கு
…..ண்டையிலையை விளக்கெண்ணெய் தடவி வதக்கி பருவுகள், கட்டிகளுக்கு கட்ட இரண்டு மூன்று காட்டில் பழுத்து உடையும் .
XXXX
ஐ
135. மேகத்திற்கு
ஐவேயிலை அதாவது ஐவிரலி என்றும் பெயர் உண்டு. அதைக்கொண்டுவந்து அதிகாலையில் பரலில் அறைத்துக்கலக்கி சாப்பிட்டுவந்தால் மேகம், மேக ஒழுக்கு யாவும் தீரும்
.XXXX
136.லிங்கம் கட்ட
ஐவேலியின் பிரயோகத்தினால் லிங்கத்தை சுத்தி செய்து செந்துரித்து ரோகிகளுக்கு உபயோகித்தால் வெண் மேகம் செம்மேகம் இவைகள் தீரும். இது பெரியோர்களால் தெரிந்து கொள்ளவேண்டியது.
XXXX
137.ஐங்கூட்டு எண்ணை
ஐங்கூட்டு எண்ணையினால் ஸ்நானம் செய்துவந்தால் ஜன்னி, சுரம், பின்யிசுவு , வாய்வு, ஜயம் இவைகள் நிவர்த்தியாகும். ஐங்கூட்டு எண்ணையைக் கூட்டும் முறை அதாவது பாகம் கணக்கு இவைகளை பார்வதி பரணீயத்தில் சொல்லப்படும் .
XXXX
ஓ
138.இரத்த பேதிக்கு
ஓதியம் பட்டையை இடித்து புளிப்புத் தயிர்விட்டு பிசைந்து ஊறவைத்து மறுதினம் இடித்து சாறு பிழிந்து கொஞ்சம பால் விட்டுக் கலக்கிக் கொடுக்க இரத்த பேதி இரத்தக் கடுப்பு தீரும்
XXXX
139.கிராணிகளுக்கு
ஓதிய மரத்தின் வேரின் பட்டையை ஆர்க்கப் பொடி செய்த தூள் கால் பலமும் கடுக்காய் பூவின் தூள் இரண்டு சிட்டிகையும் கலந்து பால் விட்டறைத்துப் பாலில் கலக்கிக் கொடுத்தால் சீதா பேதி இரத்த பேதி கடுப்பு கிராணி இதுகள் தீரும். இரண்டு மூன்று வேளை கொடுக்கவும்.
XXXX
140. தீராத புண்களுக்கு
ஓதியம்பட்டையை ஆர்க்கப் பொடி செய்து வேப்பம் எண்ணெயில் கலந்து புண்களுக்கும் தீராத ரிணங்களுக்கும் பூசி வந்தால் ஆறிப்போகும்.
—SUBHAM—
TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 14, ஐவிரலி, ஏரழிஞ்சில்