Date uploaded in London – – 7 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 140 வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………
PART 15
xxxxx
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—15
XXXXX
xxxxx
141.நாதம் உண்டாக
ஒட்டை நெய்யை உண்டியுடன் உபயோகித்து வருவதாலும் மேற்படி நெய்யினால் பலகாரங்கள் செய்து தின்றுவருவதாலும் அபரிமிதமான இக் …யத்தை யுண்டாக்கும்
xxxx
142. வீக்கத்திற்கு
ஒட்டை லத்தியை சுரத்தால் கண்ட கால் வீக்கத்திற்கு மேற்படி லத்தியும் கொண்டுவந்து புதுச்சட்டியில் போட்டு வெதுப்பி கால்களில் கனமாய் அப்பிவைத்து துணிக்கந்தையால் அழுத்திக்கட்டிவைத்து மறுதினம் காலையில் அவிழ்த்து விடவும். இப்படி மூன்று காட்டுக்கு காட்டவும் தீரும்.
xxxxx
143. காது குத்தலுக்கு
ஒருதலைப்பூண்டை வெதுப்பி காதில் இரண்டோரு துளிகள் பிழியவும் தீரும். இப்படி 2-3 வேளை செய்யவேண்டும்.
xxxx
ஓ
144. பிரமியத்திற்கு
ஓரிலைத் தாமரையைஇடித்து சாறு பிழிந்து கொஞ்ச்ம சீனி சக்கரை கலந்து ஒரு வேளைக்கு அரைக்கால் படி வீதம் மூன்று நாள் கொடுக்கவும். சாந்தியாகும். இச்சாபத்தியம் .
xxxx
145. சுக்கில பிரமியத்திற்கு
ஓரிலைத்தாமரையும் நற் சீரகமும் சமனாய்க் கூட்டி அறைத்து ஒருவேளைக்குக் கொட்டைப்பாக்குப் பிரமாணம் கொடுக்கவும். இப்படி ஆறு வேளை கொடுக்க சாந்தியாகும். இச்சாபத்தியம்
xxxx
146. புள்ளின் தோஷத்திற்கு
ஓரிலைத்தாமரை வெந்தியம் விடத்தலை வேர் சுக்கு வால் மிளகு ஓரளவாயிடித்து கிஷாயம் செய்து கொடுத்துவரத் தீரும்.
xxxxx
147. உஷ்ணம் நீங்க
ஓணான்கொடி அல்லது கொழுந்து கொண்டுவந்து பாலில் அறைத்துக் கலக்கி உண்டுவந்தால் வெப்பம் தணியும் . வெள்ளை விழுதலும் நீங்கும்.
xxxx
148. அக்கினிமந்தத்திற்கு
ஓமம் சுக்கு சித்திர மூல வேரின் பட்டை இவைகள் சரியிடையாய் எடுத்து பொடித்து அதற்குச் சரியிடை கடுக்காய்ப்பொடி கூட்டி வஸ்திரகாயம் செய்து வேளைக்குத் திருகடிப் பிரமாணம் எடுத்து மோரில் கலக்கிப் புசித்து வந்தால் அக்கினி மந்தம் தீரும். பசியுண்டாகும்.
xxxx
149. புகையிருமலுக்கு
ஓமம் கடுக்காய் தோல் சுக்கு திப்பிலி மிளகு அரத்தை அக்கிராகாரம் தேசா வரம் இவைகள் சமநிடை கொண்டு சூரணித்து அதில் பாதி சக்கரை கூட்டி திருகடியளவு இருவேளையும் புசித்துவந்தால் நிவர்த்தியாகும்.
xxxx
150. வயிற்றுக் கடுப்பு கழிச்சலுக்கு
ஓமம் மிளகு வகைக்கு பலம் ஒன்று சட்டியிலிட்டு வெதுப்பிக்கொண்டு வெல்லம் ஒரு பலம் கூட்டி அறைத்து திருகடிப் பிரமாணம் பத்து நாள் கொடுக்க நிவர்த்தியாகும்.
—subham—
Tags- வயிற்றுக் கடுப்பு, திருகடிப் பிரமாணம், முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள் 15