யே ஜிந்தகி உஸீ கி ஹை,  ஜீவிதமே சபலமோ, என் சிந்தை நோயும் தீருமா (Post.13,075)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.075

Date uploaded in London – — 9 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

யே ஜிந்தகி உஸீ கி ஹை,  ஜீவிதமே சபலமோ,, என் சிந்தை நோயும் தீருமா,

 ச. நாகராஜன்

ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்கள்!

1953-ம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படம் அனார்கலி.

இது அனைவரும் அறிந்த ஒரு காதல் கதை. ப்ரதீப் குமார்(சலீமாக நடித்தார்) , பினா ராய் (அனார்கலியாக நடித்தார்) , குல்திக் கௌர், நூர்ஜஹான் ஆகியோர் நடித்த் இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் சி.ராமச்சந்திரா.

12 பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றன.

பாடல்கள் அனைத்தும் ஹிட்!

இந்தப் படத்தை இயக்கியவர் : நந்தலால் ஜஸ்வந்த்லால்.

இதில் இடம் பெற்ற ஒரு பாடல் அனைவரையும் கவர்ந்தது. பாடலைப் பாடியவர் லதா மங்கேஷ்கர்.

பாடலை யூ டியூபில் என்றும் கேட்கலாம். பாட்டின் நேரம் 4 நிமிடம் 11 வினாடிகள்

யே ஜிந்தகி உஸீ கி ஹை ஜோ கிஸீ கா ஹோ கயா

என்ற அந்தப் பாடலைக் கீழே பார்க்கலாம்:

yeh zindagi usi ki hai jo kisi ka ho gaya
pyaar hi mein kho gaya
yeh zindagi usi ki hai jo kisi ka ho gaya
pyaar hi mein kho gaya
yeh zindagi usi ki hain …

yeh bahaar yeh sama keh raha pyaar kar
kisiki aarzoo mein apne dil ko beqarar kar
zindagi hai bewafa loot pyaar ka mazaa
yeh zindagi usi ki hai …

dhadak raha hain dil to kya dil ki dhadkane na gin
phir kahaan yeh phursatein phir kahaan yeh raat din
aa rahi hain yeh sada mastiyon mein doob jaa
yeh zindagi usi ki hain …

do dil yahaan na mila sake, milenge us jahaan mein
khilenge hasaraton ke phul, maut ke aasman mein
ye zindagii chali gai jo pyar mein to kya huaa
ye zindagii …

sunaa rahii hai daastaan, shamaa mere mazaar kii
fizaa mein bhii khil rahii, ye kalii anaara kii
ise mazaar mata kaho, ye mahal hai pyaara kaa
ye zindagii …

ai zindagii ki shaama aa, tujhe gale lagaauun main
tujhii mein Dub jaauun main
jahaan ko bhuula jaauun main
basa ek nazar mere sanam, alvidaa, alvidaa
alvidaa …
alvidaa …
alvidaa …

ஜீவிதமே சபலமோ

இதே அனார்கலி கதை தெலுங்கிலும், தமிழிலும் 1955-ல் எடுக்கப்பட்டது.

அனார்கலியாக அஞ்சலிதேவியும், சலீமாக நாகேஸ்வரராவும் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். இசை அமைத்தவர் பி.ஆதிநாராயண ராவ். தெலுங்கில் பாடலை எழுதியவர் சமுத்ரலா. தமிழில் எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.

பாடலைப் பாடியவர் ஜிக்கி.

பாடல் இது தான்:

ஆ…. ஆ… ஆ…. ஆ…
ஜீவிதமே சபலமோ ஜீவிதமே சபலமோ என்
ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ
ப்ரேமை என்றால் மதுரமோ?
ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ
ப்ரேமை என்றால் மதுரமோ?
ஜீவிதமே சபலமோ

ஆசையாய்த் தேடுதே ஆர்வமோடு பாடுதே
ஆசையாய்த் தேடுதே ஆர்வமோடு பாடுதே
வண்டாக சூடும் காதல் மதுர மனமும் சுகமாய் மலர்ந்ததே
வண்டாக சூடும் காதல் மதுர மனமும் சுகமாய் மலர்ந்ததே
அனாரு பூவின் சொலையில் ஆ..ஆ..ஆ.
அனாரு பூவின் சொலையில் ஆசைக் கனவு காணுதே

ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ
ப்ரேமை என்றால் மதுரமோ?

வசந்த மதுர தேன்மலர் மன்றாடி ஏங்கும் வேளையே
வசந்த மதுர தேன்மலர் மன்றாடி ஏங்கும் வேளையே
காவின் தென்றல் வீசுதே யாவும் ப்ரேமை லீலையே
காவின் தென்றல் வீசுதே யாவும் ப்ரேமை லீலையே
விண்ணோடு பேசும் உறவிலே கண்ணோடு பேசும் ஆவலால்
விண்ணோடு பேசும் உறவிலே கண்ணோடு பேசும் ஆவலால்

ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ
ப்ரேமை என்றால் மதுரமோ?
ஜீவிதமே சபலமோ என் ஜீவிதமே சபலமோ

என் சிந்தை நோயும் தீருமா?

இதே ஹிந்தி மெட்டு மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் இடம் பெற்றது.

அற்புதமான இசையுடன் கூடிய இந்த சோகமயமான பாடலை 1955-ல் வெளியான காவேரி படத்தில் ஜிக்கி பாடினார். D. யோகானந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி கணேசனும் பத்மினியும் நடித்தனர். இதே படம் தெலுங்கில் விஜயகௌரி என்று படமாக்கப்பட்டது.

இசை அமைத்தவர் ஜி.ராமநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் சிதம்பரம் ஜெயராமன்.

இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் உடுமலை நாராயணகவி

என் சிந்தை நோயுந் தீருமா?

தீயன் சூழ்ச்சி மாறுமா?

ஸ்நேகம் ஒன்று சேருமா   (என்)

தாயில்லா ஏழை நான்

தரணிமீது வாழ்வெனோ?

சகாயம் தானில்லாது பெருமை

தாழ வீணில் மாள்வெனோ?

தந்தை அன்பைக் காண்பெனோ?

சாந்தி தேடிப் போவேனொ..?    (என்)

மனம் பெறாத மல்லிகை

மாண்பு குறைதல் போலவே

மாதும் நானும் சீரிலாப் பேதையாதல் ஞாயமோ?

மாசிலாத தெய்வமே

தேவியே கண் பாரம்மா!  (என்)

ஒரே ஹிந்தி மெட்டில் இரு தமிழ்ப் பாடல்கள். அனைவரும் ரசித்தனர்.

மூன்று பாடல்களுமே ஹிட் தான்.

காரணம் அதில் இருந்த இசை மெட்டு தான்!

உற்சாகமும் உத்வேகமும் அந்தக் காலத்தில் பல மொழிகளிலும் இருந்து பெறப் பட்டதை இந்த யூ டியூப் காலத்தில் பார்த்து வியக்க முடிகிறது.

பக்கத்திலேயே ஹிந்திப் பாடலையும் தமிழ்ப் பாடலையும் பார்க்கும் ஒரு அமைப்பு உருவாகும் என்று 1955-ல் சொல்லி இருந்தால் யார் தான் நம்பி இருப்பார்கள்?

இப்போதோ நூற்றுக் கணக்கான ஹிந்திப் பாடல்களையும் அதே மெட்டில் உள்ள தமிழ்ப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்க முடிகிறது!

ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கும், ஹிந்தியிலிருந்து ஆங்கிலம் மற்றும் தமிழுக்கும், தமிழிலிருந்து ஹிந்திக்குமாக இப்படி பல மொழி சஞ்சாரங்களைக் கொண்ட மெட்டுக்களை இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் கேட்டு, கண்டு பிரமிக்க முடிகிறது!

கேளுங்கள், மகிழுங்கள், திரைப்படப் பாடல் சரித்திரத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

**

Leave a comment

Leave a comment